எமது நாட்டில் தற்போது பரபரபபான நிகழ்வாக முகப்புத்தக (Facebook) களியாட்ட நிகழ்வு காணப்படுகிறது. பொதுவாக கடற்கரையோரங்களில் நடைபெறும் இக் களியாட்ட நிகழ்வுக்கு பெருமளவான இளைஞர், யுவதிகள் கலந்து கொள்வது வழமை. போதைப் பொருள், போதை மாத்திரை மற்றும் போதைத் தூள் ஆகியவற்றைக் கொண்டு நடத்தப்படும் இவ்வாறான களியாட்டங்கள் பணத்தை முதன்மைப்படுத்தியே இடம்பெறுகின்றன. போதைப் பொருட்களுக்கு அடிமையானோர் தங்களது ஆபரணப்பொருட்களை விற்றாவது இவ்வாறான களியாட்டங்களுக்குத் தவறாது சமூகமளிப்பர். இவ்வாறான விழாக்களில் இன்னுமொரு விடயமும் கட்டாயமாக இடம் பிடிக்கும். இவ்வாறான களியாட்டங்ளின் இறுதியில் சண்டை சச்சரவு, வெட்டுக் குத்து ஏன் கொலைகள் கூட இடம்பெற்றே நிறைவுக்கு வரும். கடந்த காலங்களில் நடந்த அனைத்து பேஸ்புக் களியாட்டங்களும் இதற்குச் சாட்சியாகும். கடந்த 4ஆம் திகதி வாதுவைப் பிரதேசத்தில் இவ்வாறான களியாட்டமொõன்று நடைபெற்றிருந்தது. நான்கு பேர் கொலை செய்யப்பட்ட பின்னரே அக்களியாட்டம் நிறைவுக்கு வந்தது. அது தொடர்பான மேலதிக தகவல்கள் இதோ..
அமில புண்ணியகுமார என்ற இளைஞர் மாலபே பிரதேசத்தில் வசித்தவராவார். ஹர்ஷன் எரந்த அவனது நண்பனாவான். எரந்த கொத்தட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்த இருவரும் சேர்ந்து விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்தனர். ஒருநாள் அமில தனது நண்பனிடம் யோசனையொன்றை முன்வைத்தான். யோசனை வருமாறு. ஹர்ஷன வேலையொன்று இருக்கிறது செய்வோமா? என்ன வேலையடா? அது உனக்குத் தேவையில்லை. முதலில் நீ விருப்பமா என்று சொல். நீ எதுவும் சொல்லாமல் நான் எப்படி சரி என்று சொல்வது? கொலை செய்ய கூப்பிடுகிறாயோ தெரியவில்லையே.. பைத்தியமா உனக்கு.. அவ்வாறான வேலையை நான் செய்வேனா? அப்படியானால் இழுத்துக் கொண்டு செல்லாமல் நேரடியாக விடயத்தைச் சொல். கடற்கரை களியாட்டமொன்றை ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளேன். தற்கால நடைமுறை அதுதான். நல்ல யோசனை.. பாரியளவில் பணத்தையும் தேடிக் கொள்ளலாம். அப்படியாயின் இருவரும் சேர்ந்து ஒழுங்கு செய்வோமா? கட்டாயம்.. காலத்தை வீணடிக்காமல் சீக்கிரமே வேலையைச் செய்வோம். உனக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா? ஆம்.. வாதுவ பேஸ்புக் களியாட்டம் நடந்தது என்ன? இதைப்பற்றி நான் தேடிப் பார்த்தேன். இதை பேஸ்புக் ஊடாகவே நாம் மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான களியாட்டங்கள் பேஸ்புக் ஊடாகவே பிரசாரம் செய்து மேற்கொள்ளப்பட்டன. அவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது எங்கு, எப்போது வைக்கலாமென்பதே பிரச்சினைக்குரிய விடயம். காலி, ஹிக்கடுவ, கல்கிஸ்ஸ, நீர்கொழும்பு போன்ற நகரங்களிலேயே இவ்வாறான களியாட்டங்கள் பெரும்பாலும் நடைபெறுகின்றன. அதென்றால் உண்மைதான்.. ஆனால் வேறொரு இடத்தில் வைத்தால் வித்தியாசமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அதுவும் நல்ல திட்டம் தான்.. காலி, ஹிக்கடுவ பிரதேசங்களில் செய்தால் அதற்கு வேறாகக் கப்பமும் கொடுக்க வேண்டும். வேறொரு இடமென்றால் யாருக்கும் பிரச்சினையில்லை. வாதுவப் பக்கம் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த மாகாண அரசியல்வாதியையும் எனக்குத் தெரியும். அவரிடமும் தேவையென்றால் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். பொலிஸாரிடமிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம். நல்ல யோசானைடா..
அரசியல் வாதியொருவரின் உதவி இருந்தால் என்னதான் செய்ய முடியாது? அப்படியானால் நாம் வாதுவையில் களியாட்ட நிகழ்வை நடத்த ஒழுங்குகளைச் செய்வோம். சனிக்கிழமை நாளொன்றில் இரவு வேளையில் இவ்விழாவை வைத்தால் பொருத்தமாக இருக்கும் அதற்கிணங்க ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்யலாமென இருவரும் கலந்துரையாடிக் கொண்டனர். அமிலவுக்கு வாதுவையில் ஹோட்டல் முகாமையாளர் நன்கு பழக்கப்பட்டவர் என்பதால் உடனே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டான். 4ஆம் திகதி எந்தவொரு உற்சவத்துக்கும் அந்த ஹோட்டலில் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. அதனால் 4ஆம் திகதியை ஒதுக்கிக் கொள்ள மிக இலகுவாகிப் போனது. ஒருவாறு ஹோட்டலின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட அமில, களுத்துறை மாவட்ட பிரபல அரசியல்வாதி ஒருவரைத் களியாட்ட நிகழ்வுக்கு உதவியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தொடர்பு கொண்டான். அந்த அரசியல்வாதியும் அதற்கு உதவி வழங்குவதாகத் தெரிவித்து குறித்த பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவரை அவர்களுடன் தொடர்பு கொள்ளச்செய்தார்.
இந்த நிகழ்வை அமிலவும் ஹர்ஷனவும் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்தாலும் மேலும் சிலரையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர். அவர்களும் மிகவும் உற்சாகத்துடன் நிகழ்வுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர். நிகழ்வு இடம் பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்
நண்பர்கள் இருவரும் மீண்டும் நிகழ்வு குறித்தான ஏற்பாடுகளைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினர். அவர்களின் உரையாடல் வருமாறு
அமில எல்லா ஏற்பாடுகளும் சரிதானே? ஆம் பிரச்சினை இல்லை.. எத்தனை பேர் வரையில் வருவர் என நினைக்கிறீர்? சுமார் 2000பேர் வரை வருவர் என நினைக்கிறேன். அப்படியா? ஆனால் சின்ன பிரச்சினையொன்று இருக்கிறது.. அது என்ன? அந்த மண்டபத்திற்குள் அவ்வளவு பேர் இருக்க முடியாது. அதைப் பற்றி பெரிதாக யோசிக்காதே.. எல்லோரும் போதை நிலையில் தான் இருப்பார்கள். அதனால் பிரச்சினை இல்லை. அதுவும் உண்மைதான்.. எதற்கும் அம்பியூலன்ஸ் வண்டியொன்றையும் அன்றைய தினத்தில் தயார்படுத்தி வைத்தோமென்றால் இன்னும் இலகுவாக இருக்கும். அவ்வாறு 4ஆம் திகதி இரவு வேளை அம்பியூலன்ஸ் வண்டிக்கும் ஏற்பாடு செய்தாயிற்று.
குறித்த நாளும் உதயமானது. குறித்த இடத்திற்கு இளைஞர், யுவதிகள் வரத் தொடங்கினர். அந்த நேரத்தில் கூட சிலர் போதைப் பொருட்களைப் பாவித்திருந்தனர். விழாவுக்குச் செல்லக் கட்டாயம் அனுமதி அட்டை இருத்தல் வேண்டும். இரண்டு விலைகளில் அனுமதி அட்டைகள் காணப்பட்டன. ஒன்ற 3000ரூபா பெறுமதியானது. மற்றையது 5000 ரூபா பெறுமதி வாய்ந்தது. 5000ரூபா அனுமதி அட்டைக்காரர்களுக்கு விசேட சலுகைகள் அங்கு காணப்பட்டன. சுமார் 1800பேர் வரை அந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர். இசை நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டது. விழா ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்தில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகினர். சிலர் பைத்தியக்காரர்கள் போல் நடந்து கொண்டனர். இன்னும் சிலர் போதைத் தூள், போதைமாத்திரை என்பவற்றை உட்கொள்ள ஆரம்பித்திருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னும் சிலர் வயது வந்தவர்களுக்கு மட்டும் திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு பல மணித்தியாலங்கள் சென்ற பிறகு ஏராளமானோர் மந்த கதியிலேயே செயற்பட்டனர். அவர்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் எங்கிருக்கிறோம் என்பது கூட தெரியாமல் காணப்பட்டனர்.
36அடி உயரமும் 28அடி நீளமும் கொண்ட அந்தக் கட்டிடத்தில் அளவுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் காணப்பட்டனர். அந்த நேரத்தில் பலர் புகைத்த புகை காரணமாக நிறையப் பேருக்கு மூச்சுத்திணறல் கூட ஏற்பட்டிருந்தது. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் அந்தக் கட்டிடம் விஷப் புகையினால் சூழப்பட்டிருந்தது. கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த எரந்த பெரேரா என்பவரும் தனது நண்பர்கள் சிலருடன் இந்தக் களியாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
அந்த நேரத்தில் மதுபோதையிலேயே அவர் இருந்தார். மூச்செடுப்பதில் சற்று
சிரமத்தை உணர்ந்தார். இது தொடர்பில் தனது நண்பனான ரவிந்துவிடம் எரந்த தெரிவித்தான். அவனோ இன்னொரு லோகத்தில் குடிபோதையில் மிதந்து கொண்டிருந்தான். அதனால் எரந்த கூறியதை அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
எரந்தவுக்கு நேரம் செல்லச் செல்ல மூச்செடுப்பது சிரமமானது. அவன் உரக்கச் சத்தமிட்டான். இருப்பினும் இசைக் கச்சேரியின் சத்தத்தால் எரந்தவின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை என்றே கூறலாம். அவனுக்கு எதுவும் செய்ய முடியாமல் போனது. அதனால் அமைதியாக வெளியேற நினைத்தான். அவ்வளவுதான் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது. வெட்டப்பட்ட வாழைமரம் போல் சரிந்து வீழ்ந்தான். ஏற்பாட்டாளர்கள் இந்த விழாவுக்காக வேண்டி சுமார் 50 தனியார் பாதுகாப்பு ஊழியர்களை நியமித்திருந்தனர். அதில் ஒருவர் எரந்த வீழ்ந்ததைக் கண்டார். விரைந்து செயற்பட்ட அவர் எரந்தவை வெளியே கொண்டு சென்றார். அத்தோடு ஏற்பாட்டாளர்களும் வருகை தந்தனர். எரந்தவின் நிலையோ கவலைக்கிடமாக இருந்தது. அவர்கள் அம்பியூலன்ஸ் வண்டியூடாக எரந்தவை பாணந்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எரந்தவின் இந்த நிலைமையிலும் கூட களியாட்டம் நிறுத்தப்படவில்லை. வெளிநாட்டு போதைப்பொருட்கள் பியர் சிகரெட் என்பவற்றூடாக களியாட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலும் சில மணித்தியாலங்கள் செல்லவே இன்னும் மூவர் மயங்கி வீழ்ந்தனர். அவர்களையும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஏதோ அசம்பாவிதம்
நடப்பதாக ஏற்பாட்டாளர்கள் யூகித்துக் கொண்டனர். அதனால் களியாட்ட விழாவை நிறுத்த முடிவு செய்தனர்.
போதையில் இருந்த பலர் களியாட்ட விழாவை நிறுத்த முடிவு செய்தமைக்காக ஏற்பாட்டாளர்களைத் திட்டித் தீர்த்தனர். பாதுகாப்புக்காக இருந்தவர்களினால் அவை கைகலப்பு அளவுக்குச் செல்லவில்லை. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களும் அன்றைய தினமே உயிரிழந்தனர். மற்றைய இளைஞன் அடுத்தநாள் அதாவது 6ஆம் திகதி உயிரிழந்தான். நான்கு பேர் இறந்தமையினால் வாதுவ களியாட்ட நிகழ்ச்சி பற்றி பலர் முணுமுணுக்கத் தொடங்கினர். இந்த வேளையில் வாதுவ பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பிக்கத் தொடங்கினர். வாதுவ பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பில் விழாவை ஏற்பாடு செய்தவர்கள் இருவரிடமும் குறித்த ஹோட்டல் உரிமையாளரிடமும் முகாமையாளரிடமும் மற்றும் இறந்து போனவர்களின் உறவினர்கள் என 25பேரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். அதில் வெளியான தகவல்களில் இறந்து போன இளைஞர்களில் ஒருவன் அரசியல் வாதி யொருவரின் பாதுகாப்புக் காவலாளியின் மகன் உள்ளடங்குவதாகவும் தெரியவந்தது. இறந்த நால்வரின் மரணம் தொடர்பில் விரிவான தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அவர்களின் இரத்தம், சிறுநீர் மாதிரி என்பவற்றை பரிசோதனைக்கு அனுப்பி மரணத்துக்கான காரணம் என்னவென்பதைத் தனக்குத் தெரிவிக்குமாறு நீதிமன்ற வைத்தியர் தெரிவித்தார்.
வாதுவ பேஸ்புக் களியாட்டம் அத்துடன் முடியவில்லை. பெருமளவானோர் இதைப்பற்றி கதைக்கத் தொடங்கினர். பிரபல அரசியல்வாதியொருவர் இதற்குப் பின்னால் இருப்பதாகவே அநேகர் பேசிக் கொண்டனர். இந்தக் கருத்தைப் பாராளுமன்ற அமைச்சர் ஜயந்த சமரவீர வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
இந்தக் களியாட்ட நிகழ்வுக்கு இளைஞர் யுவதிகள் சுமார் 1800பேர்வரை பங்கு பற்றியிருக்கின்றனர். அவர்களில் நான்கு பேர் இறந்திருப்பது உடம்பில் ஏதாவது விஷத்தன்மை பரவியிருந்தமையாலேயே. இத்தகவலை பாணந்துறை வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதிப்படுத்தியுள்ளார். அதனால் இந்த உயிரிழப்பு சம்பவம் கொலையாகக் கருதப்படுகிறது. களியாட்ட விழாவை ஏற்பாடு செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. காரணம் இதற்குப் பின்னால் பிரபல அரசியல்வாதியொருவர் இருக்கின்றமையேயாகும். (இப்பத்தி எழுதும் போது குறித்த ஏற்பாட்டாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்) இந்தக் களியாட்ட நிகழ்வின் ஏற்பாட்டுக்குப் பின்னால் களுத்துறை மாவட்ட பிரபல அரசியல் வாதியொருவர் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதனாலேயே யாரும் கைது செய்யப்படவில்லை. வாதுவ பொலிஸ் தலைமையதிகாரி லலித் வீரசிங்க இதற்கு முன்னர் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் சேவை செய்தவராவார். அங்கு வைத்து துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் அவர் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். எந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்படலேயே அவர் இடமாற்றப்பட்டிருந்தார். அதன் பிறகு மேற்சொன்ன பிரபல அரசியல்வாதியே இவரை வாதுவ பொலிஸ் தலைமையதிகாரியாக நியமித்திருந்தார். வாதுவ பொலிஸ் நிலையம் அ1 பொலிஸ் நிலையமொன்றாகும். அவ்வாறான பொலிஸ் நிலையத்துக்கு பிரதான. பொலிஸ் பரிசோதகர் ஒருவரே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசியல் வாதியின் தேவைக்காக துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரின் தலைமையிலேயே வாதுவ களியாட்ட நிகழ்ச்சி இடம்பெற்றிருக்கிறது. அவருக்கும் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறானவர்களால் எவ்வாறு நியாயபூர்வமாக நடந்துகொள்ள முடியும்? நான் கொலையென்றே இதைக் கூறுவேன். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கப்பம் பெற்றவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற அமைச்சர் ஜயந்த சமரவீர இவ்வாறு தெரிவிக்கையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன பின்வருமாறு தெரிவித்தார்.
நான்கு பேரின் உயிரைக் காவு கொண்ட வாதுவ பேஸ்புக் களியாட்டத்தின் பின்னணியில் பிரபல அமைச்சரொருவர் இருப்பதாக என்னையே குறிப்பிடுகின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான களியாட்டங்களுக்கு நான் அனுமதி வழங்கியது கிடையாது. களியாட்டத்தை
நடத்த ஜூன் மாதம் 21ஆம் திகதி வாதுவ பொலிஸால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கிய பொலிஸ் அதிகாரி தற்போது சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேற்கொள்ளப்படும்
எந்த விசாரணைகளுக்கும் நான் இடைஞ்சலாகவோ தொந்தரவாகவோ இருக்கப் போவதில்லை. எப்படியிருப்பினும் நால்வர் உயிரிழந்துள்ளனர். சட்டத்துக்கு மாறாக யார் செயற்பட்டிருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக