அதிக பனிமூட்டம் காரணமாகவும், கடுங்குளிர் காரணமாகவும் மலைகளால் சூழப்பட்ட சமனலவத்த பிரதேசத்துக்கு புதிய சூரிய வெளிச்சத்துடன் காலைப்பொழுது உதயமானது. ஹூனுவல் மலையும், ஹல் ஆறும் சமனலவத்த காட்டுப் பகுதியும் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமனலவத்த பிரதேசத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக நிற்கும் பொலிஸ் அதிகாரிகளையும் இராணுவ வீரர்களையும் கண்டுகொள்ள முடியாமற் போனது. அங்கு காணக்கூடியதாகவிருந்தது, கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட கிராமத்தவர்களை மட்டுமே. பல நாட்கள் கடந்திருந்தன. சகல செயற்பாடுகளும் வழமைபோலவே செயற்பட்டுக் கொண்டிருந்தன. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் இல்லாமல் இருந்தது அந்த சின்னஞ்சிறு பாலகன் மட்டுமே.
பிரதேசத்திலுள்ள ஒவ்வொருவரும் பாரிய கவலையுடன் காணப்பட்டனர்.
சிறுத்தையேதும் சாப்பிட்டு விட்டதா? அல்லது ஆற்றில் மூழ்கிப் போனானா? என ஒவ்வொரு இதயமும் படபடத்துக் கொண்டிருந்தது. பிரதேசத்திலுள்ள மூலை முடுக்கெங்கும் இந்தக் கதையே பரவலாக பேசப்பட்டிருந்தது. உண்மையாகவே சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை எவராலும் யூகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. அவனுக்கு என்ன நடந்தது என்று ’நினைக்கும்’ கதைகளும், ஊகங்களுமே பேசப்பட்டுக் கொண்டிருந்தன. பலாங்கொடை சமனலத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 10 வயது நிரம்பிய சஹன் குமார தர்மசிறி என்ற சிறுவன் காணாமல் போனது கடந்த 20 ஆம் திகதியே. அவன் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. எந்தவிதத் தகவலுமின்றி பல நாட்கள் கடந்து சென்றன. சஹன் காணாமல் போனதானது ஊர் மக்கள் மத்தியில் பாரிய ரகசியமாகவே காணப்பட்டது. அவன் காணாமல் போன கடந்த 20ஆம் திகதியானது வெள்ளிக்கிழமை நாளொன்றாகும். ஆகையினால் அவன் பாடசாலை சென்றுவிட்டு வீட்டுக்கு வழமைபோல் திருப்பியிருந்தான். அதற்கு அவனது அம்மா தீபிகா சாட்சி கூறினாள். தாய் கூறியதாவது;
வழமைபோன்று மகன் பாடசாலை சென்றுவிட்டு அன்றும் வீட்டுக்கு நடந்தே வந்தான். வந்து உடையை மாற்றிக் கொண்டவாறே சாப்பிட என்ன இருக்கிறது அம்மா எனக் கேட்டான். பருப்புக் கறியும் சோறும் இருப்பதாக நான் பதிலுக்குக் கூறினேன். பிறகு சாப்பிடுவதாக மகன் கூறினான். இரண்டு தோடம்பழங்களை அவன் வாங்கி வந்திருந்தான். ஒன்றை சாப்பிட்டுவிட்டு மற்றையதை அவனது தங்கையிடம் கொடுத்தான். பின்னர் வீட்டுக் கூரை மீதேறி சற்று நேரத்தின் பின்னர் இறங்கி விட்டான். இறங்கி வந்து அப்பா எங்கே என என்னிடம் கேட்டான். காட்டுக்கு விறகு தேடுவதற்காக சென்றுவிட்டார் என நான் கூறினேன். பின்னர் செருப்பை மாட்டிக் கொண்ட அவன் நானும் அப்பாவைத் தேடிச் செல்கிறேன் என மாலை 3 மணியளவில் வீட்டை விட்டு ஓடினான். அதற்குப் பிறகு 2, 3 மணித்தியாலங்கள் கழித்து அவனது தந்தை விறகுடன் வீட்டுக்கு வந்தார். ஆனால் சஹனைக் காணாததால் எங்கே மகன் என்று கேட்டேன்.
காட்டில் அவனை நான் காணவில்லையென்று அவர் கூறினார். நாங்கள் இருவரும் மிகவும் பயந்து போய் விட்டோம். அந்த நேரம் மாலை 5.30 என்றாலும் பனி மூட்டத்தினால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த நேரமே கணவர் ஊரிலுள்ள சிலரை அழைத்துக் கொண்டு மகனை தேடவென காட்டுப்பக்கம் சென்றார். முழு இரவும் தேடியும் கிடைக்கவில்லை. ஐயோ.. எங்களுக்கு எமது மகனைத் தேடித் தாருங்கள். அவன் இன்னும் சின்னப் பையன். தனியாக எப்படி இவ்வளவு பெரிய காட்டுக்குள் அவன் இருப்பான். இந்தக் காட்டில் சிறுத்தைகளும் காணப்படுகின்றன என தாய் அழுது புலம்பினாள். அவளின் அழுகைக்கும் புலம்பலுக்கும் ஓய்வில்லை. இன்னும் தனது மகன் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்பான் என்ற அவாவிலேயே தாய் காணப்பட்டாள்.
அன்றைய தினம் மகனைத் தேடிக்கொள்ள முடியாமல் போனதால் தந்தை பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு
செய்தார். அதற்கேற்ப 21 ஆம் திகதி பொலிஸ் குழுவொன்றும் பயிற்சியளிக்கப்பட்டு வரும் மோப்ப நாய்கள் சிலவும் சமனலவத்தை காட்டுக்கு சஹனை தேடவெனச் சென்றன. அன்று முழு நாளும் தேடியும் அவனைப் பற்றிய எந்தத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. அதிக பனியும் கடுங்குளிரும் இவர்களது தேடுதல் முயற்சிக்கு பாரிய இடையூறாகக் காணப்பட்டன. இதன் காரணமாக தேடுதல் முயற்சி அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. என்னுடைய மகன் அடிக்கடி என்னுடன் காட்டுக்கு வருவான் தனியாகவும் செல்வான் ஊரிலுள்ள ஏனைய பிள்ளைகளும் காட்டுக்கு விளையாடச் செல்வார்கள் ஆற்றில் குளிப்பார்கள். இந்தக் காட்டுப் பகுதி எமக்கு பழக்கப்பட்டவையே தவிர இவ்வாறான சம்பவமொன்று இதற்கு முன்னால் இங்கு இடம்பெறவில்லை. சம்பவதினம் என்னைத்தேடியே மகன் காட்டுக்கு வந்துள்ளான். இருந்தாலும் மகனும் நானும் சந்தித்துக் கொள்ளவில்லை. நாங்கள் காடு முழுவதும் தேடினோம். மகனைப் பற்றிய
எந்தத் தகவலும் இல்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் சிறு துணித் துண்டாவது கிடைத்திருக்கும் தானே. அப்படியும் இல்லை. எங்களுக்கு எப்படித் தெரியும் மகன் உயிரோடு இருக்கிறானா? இல்லையா என்று? அப்படி அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் எமது மனதை ஆற்றிக் கொள்ள அவனது சிறு உடைத் துண்டையாவது தேடித் தாருங்கள் என சஹனனது தந்தை பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டார்.
தாம் கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை இவ்வாறு காணாமல்போவது எந்தப் பெற்றோராலும் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாகும். இச் சம்பவமானது, இறந்து போன தனது பிள்ளையின் சடலத்தைக் கண்ணால் காணும் சம்பவத்தை விட மிகக் கொடுமையானதாகும். தனது பிள்ளை இறந்து விட்டதாக ஏதேனும் ஒரு சாட்சி கிடைக்கப் பெற்றால் கூட மனம் சிறிது ஆறுதலடையும். அவ்வாறில்லாமல் தனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் தவிப்பது என்பது பல நூறு தடவை இறந்து பிறப்பதற்குச் சமாந்தரமான ஒரு செயலாகும். இன்று சஹனின் பெற்றோரும் அவ்வகையான துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர்.
21ஆம் திகதி சஹன் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெறாமையால் 22ஆம் திகதி அந்தத் தேடுதல் வேட்டையானது மந்த கதியில் இடம்பெற்றது. பலாங்கொடை பொலிஸ் அதிகாரிகளின் தேடுதலுக்கு குருவிட்ட இராணுவப் பிரிவின் 35 ஆம் படைப் பிரிவின் 55 அதிகாரிகளும் 300க்கும் மேற்பட்ட கிராமவாசிகளும் இணைந்து கொண்டனர். அவர் அன்றைய தினம் சஹன் செல்லக்கூடிய இடங்களெனக் கருதப்படும் பல பகுதிகளுக்கும் சென்று தேடினர். மரங்கள், கற்பாறைகள், மலைப்பிரதேசங்கள் என சகல இடத்திலும் தேடினார்கள். இறுதியாக ஹல் தொலஹி என்ற இடத்திலிருந்து 2கிலோ மீற்றருக்கு அண்மித்ததாகக் காணப்படும் இடமொன்றில் கீழிறங்கிப் பார்த்தனர். அங்கும் எந்தத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. சற்றுத் தூரம் சென்றவுடன் புதரொன்றுக்குள் சிறுத்தையால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட மானொன்றின் உடற் பகுதியொன்று காணப்பட்டதை கிராமவாசிகள் கண்டனர். இந்தச் சம்பவமானது ஊர் மக்களை இன்னும் சந்தேகமடையச் செய்தது.
இவ்விடம் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் இடமாகும்.
நாங்களென்றால் பகல் வேளையில் மட்டுமே இந்தக் காட்டுப் பகுதிக்கு செல்வோம். இரவு நேரத்தில் எட்டியும் பார்ப்பதில்லை. நான்கைந்து
சிறுத்தைகள் ஒன்றாகச் சேர்ந்து புதர்களைத் தேடி பாதைக்கும் வருவதுண்டு. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட சிறுத்தையொன்று வலைக்குள் சிக்கியது. ஊரிலுள்ள மாடு, பன்றி, நாய் என்பவற்றையும் பிடித்துக் கொண்டு
போய்விடும். சஹன் பிள்ளைக்கும் அவ்வாறு ஏதும் நடந்திருக்குமோ என்றே
நாங்கள் பயப்படுகிறோம். இருப்பினும் பொலிஸாரும் இராணுவ வீரர்கள் சிலரும் அவ்வாறு சிறுத்தை கொன்றிருந்தால் வழியில் இரத்தக்கறை இருந்திருக்கும் எனத் தெரிவித்தனர். அல்லது அவனது ஆடையின் ஒரு பகுதியோ உடற்பாகத்தின் சிறு துண்டோ, செருப்பு என ஏதாவது ஒரு தடயம் கிடைத்திருக்கும். அவ்வாறு எதுவுமே கிடைக்கவில்லையே என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நேரத்தில் சஹனை ஹல்தொல ஆற்றுக்கு அருகில் கண்ட அவனது
நண்பர்கள் பின்வருமாறு தெரிவித்தனர். நாங்கள் குளித்துக் கொண்டிருக்கும் வேளையில் சஹன் ஆற்றோரம் நடந்து சென்றான். நாங்கள் அவனை நிற்கச் சொன்னோம். ஆனால் அவன் முடியாது என்று கூறிவிட்டு மேல் பாதை
நோக்கி ஓடினான். அவன் சிவப்பு நிற காற்சட்டையும் நீல நிற மேல்சட்டையையும் அணிந்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்பு
நாங்கள் குளித்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டோம் என நண்பர்கள் தெரிவித்தனர்.இவர்கள் இருவருமே சஹனை இறுதியாகக் கண்டவர்கள். அதன் பிறகு சஹனுக்கு என்ன நடந்தது என்பதை யாரும் அறியார். 22ஆம் திகதியும் தேடுதல் பூர்த்தியடையவில்லை. 23ஆம் திகதி முழு நாளும் தேடுதல் இடம்பெற்றது. ஊராரும் தங்களது வேலையை ஓரங்கட்டிவிட்டு சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அன்றைய தினமும் தேடுதலால் எந்தப் பிரயோசனமும் இல்லை.
இது மிகவும் ஆச்சரியமான சம்பவம். மிருகமொன்றிடம் மாட்டிக் கொண்டிருந்தால் சிறு உடைத்துண்டாவது காணப்பட்டிருக்குமே. இந்தக் காட்டு நிலவரம். பற்றி சின்னப் பிள்ளை கூட அறிந்து வைத்திருக்கின்றது. மருந்துகளைத் தேட, விறகு தேட என எல்லோரும் இக்காட்டிற்கே செல்கின்றனர். யாரும் ஹூனுகல்கந்த பகுதி பாரிய காட்டுக்குச் செல்வதில்லை. காரணம் சிறுத்தைகளின் நடமாட்டம் அங்கு அதிகமாகக் காணப்படுவதாலேயாகும். அப்படியிருக்கையில் சஹன் அங்கு சென்றிருப்பான் என்பதை எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. யாராவது வந்து சஹனை துஷ்பிரயோகம் செய்துவிட்டனரோ என சிலரும் முணு முணுத்தனர். இருப்பினும் அதை சிலர் மறுத்தனர். காரணம் காட்டிலிருந்து வெளியே செல்ல கிராமத்தினூடாகச் செல்லும் பாதை மட்டுமே காணப்படுவதாலாகும். அப்படியாயின் சஹனுக்கு என்னதான் நடந்திருக்கும் என பலரும் சிந்திக்கத் தொடங்கினர்.
24ஆம் திகதியும் தேடுதல் முழுமை பெறவில்லை. அன்றைய தினம் அதிக பனியும் கடுமையான குளிரும் காணப்பட்டதால் பாதியிலேயே சஹனைத் தேடும் முயற்சியை கைவிட்டனர். எந்தவொரு தடயமும் கிடைக்காமையும் இதற்குக் காரணமாக அமைந்தது என்று கூறலாம். சஹன் காணாமல்போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸாருக்கு 26ஆம் திகதி வேறொரு ஆதாரம் கிடைக்கப்பெற்றிருந்ததாகத் தகவல் அறிந்து வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. பிள்ளை காணாமல் போன அன்றைய தினம் பலாங்கொடை வைத்தியசாலைக்கு, கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போடவென ஒருவர் வந்திருந்தார். அக்காயம் தான் விழுந்ததாலேயே ஏற்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் யாரோ கடித்ததால் ஏற்பட்ட காயமே இதுவென வைத்தியர் கூறியதை செவிமடுத்த இன்னொருவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார். பிள்ளை காணாமல் போனதற்கும் இந்தச் சம்பவத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.
எந்தவொரு விடயமும் இரகசியமாக காண்பிக்கப்படுவது அந்த விபரத்தின் உண்மைத் தன்மை வெளிவராத காரணத்தினாலேயாகும். சஹனின் காணாமல் போதலும் எந்தவித தடயங்களும் கிடைக்காமை காரணமாக மௌனிக்கப்பட்டு விட்டதாகவே கிராம மக்கள் நினைத்தனர். சிலர் சஹன் சிறுத்தையின் பிடிக்கு சிக்கிவிட்டிருப்பான் என நினைத்தனர். இருப்பினும் இவை எல்லாம் அவரவரின் கற்பனையே. இவை உண்மை என்பதை நிரூபிக்க விஞ்ஞான பூர்வ சாட்சிகளை ஒப்படைப்பது அவசியமே. அப்படி முன்வைக்கப்படாவிடில் சஹனுக்கும் அவனது அப்பாவி பெற்றோருக்கும் சமனலவத்த கிராமத்தவர்களுக்கும் பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவே கருதப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக