மலையக மக்களின் கனவுகளை நிஜமாக்குவதில் இன்னும் பாரிய
முன்னேற்றங்கள் ஏற்பட்டு விட்டதாக கருதமுடியவில்லை. சொந்த காணியில் சொந்த வீடுகளை பெற்றுக்கொள்வதே இவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இற்றை வரையும் லயன் அறைகளில் தங்களது வாழ்நாளை கழித்து வருவதாலும் லயன் அறைகளை தங்களது சொந்த செலவில் புனரமைத்துக் கொண்டதாலோ அவை அவர்களுக்கு சட்ட ரீதியான உரித்துடைய சொத்தாக கருதமுடியாத நிலை காணப்படுகிறது. அந்த லயன் அறைகளுக்கான உறுதிகள் எவையும் அங்கு வசிப்போரிடம் கிடையாது . நடைமுறையில் லயன் அறைகள் அனைத்துமே தோட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
இவ்வாறான கட்டுப்பாடுகளை கொண்ட லயன் முறை வாழக்கையிலிருந்து விடுவிப்பதற்காகவே தனிவீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை காலமும் உருவாக்கப்பட்டுள்ள தனிவீடுகளில் எத்தனை வீடுகளுக்கான காணி உறுதிகளை பெருந்தோட்ட மக்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவில்லாத தன்மையை கொண்டிருக்கின்றது. தனிவீடுகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டாலும் அவர்களுக்கான உறுதிப்பத்திரங்கள் திறப்புவிழாக்களின் போது கையளிக்கப்படுவதில்லை. மாறாக அவை வேறொரு சந்தர்ப்பத்தில் தனி விழாக்களாக அறிமுகம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
120 சதுர அடியினைக் கொண்ட லயன் அறைகளில் 200 வருடத்துக்கும் மேற்பட்ட காலத்தினை பெருந்தோட்ட தொழிலாளர்கள் கழித்து வருகின்றனர். இந்த 200 வருட காலப்பகுதியில் 20 வருடங்கள் மாத்திரமே அரச பொறுப்பில் தோட்டங்கள் இருந்துள்ளன. 1972 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டம் அமுலுக்கு வரும் வரை பிரித்தானியரே தோட்டங்களை நடத்தி வந்திருந்தனர். எனவே காணியின் உரிமையும் அவர்களின் வசமே இருந்திருந்தது. 1992 ஆம் ஆண்டு மீளவும் பிராந்திய கம்பனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தோட்டங்கள் நிர்வகிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 1972 - 1992 க்கும் இடைப்பட்ட காலத்தில் அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை ஆகியவற்றின் ஊடாக காணி மீளமைப்பு ஆணைக்குழு தோட்டக் காணிகளை ஒப்படைத்து தேயிலை , இறப்பர் கைத்தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.
மீண்டும் 1992 ஆம் ஆண்டு தோட்டங்கள் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்ட போது அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை ஆகியன குத்தகைக்கு வழங்கியுள்ளன. ஆதலால் இன்று பெருந்தோட்ட நிலங்களின் உரிமை யாருக்கு என்ற குழப்ப நிலை காணப்படுகின்றது. இன்று மலையக மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தனி வீடுகளை அமைப்பதற்கு பெரும்பாலான தோட்ட நிர்வாகங்கள் காணி வழங்காமையும் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது.
இவ்வாறான சூழலில் பெருந்தோட்ட மக்களுக்கு 1994 ஆம் ஆண்டு காலத்தின் பின்னர் தனிவீடுகள் அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகின. அப்போது தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சராக இருந்த பெ.சந்திரசேகரன் 20, 000 வீடுகள் அமைக்கும் நோக்குடன் செயற்பட்டிருந்தாலும் 6,000 வீடுகளே கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்காக 600 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீடுகளுக்கும் 300,000 ரூபா கடன் வழங்கப்பட்டதுடன் 15 வருடத்தில் மீள் செலுத்தியவுடன் காணிக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும் இன்று வரையும் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் 7 பேர்ச் , 15 பேர்ச் என்றளவில் ஆங்காங்கே வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு பெருந்தோட்ட மக்களுக்காக 100 நாள் வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட்ட 300 வீடுகளுக்கும் மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட 75 வீடுகளுக்குமான காணி உறுதிப்பத்திரங்கள் அவ்வருடம் மே 10 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டிருந்தன .ஆனால் அப்பத்திரங்கள் பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொண்டிருந்தன. அதன் பின்னர் ” எங்கள் நிலத்தில்- எங்கள் காணி ” என்ற திட்டத்திற்கமைவாக ”பசுமை பூமி” காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதில் முதல் கட்டமாக நுவரெலியா வூட்வில் தோட்டத்தில் 71 குடும்பங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும் (9.2.2017) இரண்டாம் கட்டமாக மாத்தறை உலந்தாவ தோட்டத்தில் 25 குடும்பங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் (17.8.2017) காணி உறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் மூன்றாம் கட்டமாக 2864 காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அட்டனில் 2017 அக்டோபர் 29 அன்று வழங்கிவைக்கப்பட்டிருந்தன . மேலதிகமாக 3, 760 வீடுகளுக்கும் காணி உறுதியினை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்தில் 338 வீடுகளும் 2016 இல் 1,361 வீடுகளும் 2017 இல் 2,507 வீடுகளும் புது வாழ்க்கை வீட்டுத்திட்டத்தில் 1,129 வீடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் 2018 இல் 1,657 வீடுகள் அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரையும் 6,654 தனிவீடுகள் உறுதியான நிலையில் 6,720 பயனாளிகளுக்கு காணி உறுதிகள் வழங்க முடிவாகியுள்ளது. இவை கடந்த மூன்று வருடங்களில் சாத்தியமான நிலையில் சகல பெருந்தோட்ட மக்களும் தனிவீடும் காணி உறுதியும் பெற்றுக்கொள்வது என்பது நினைத்து பார்க்க முடியாத விடயமாகவே இருக்கின்றது.
புதிய வீடமைப்புத் திட்டத்தில் ஏழு பேர்ச் காணியுடன் காணியுறுதிகளுடன் , 550 சதுர அடிப்பரப்பளவில் இரண்டு படுக்கையறை , ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை , ஒரு குளியலறை என்பவற்றை கொண்டதாக தலா 12 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது. காணி சீர்திருத்த சட்டத்தின் பிரிவு 3(3) ஆ பிரகாரம் தோட்ட காணிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு கையேற்கும் போது லயன் அறைகள் மற்றும் குவாட்டஸ்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1/8 ஏக்கருக்கு மேற்படாத அதாவது 20 பேர்ச்சுக்கும் மேற்படாத காணியை குடியிருப்புக்கு ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டே குறித்தளவு காணி , தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் 20 பேர்ச் காணியில் வீடுகளை கட்டிக்கொள்ள சட்ட ரீதியான உரிமையினை கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் அமைக்கப்படுகின்ற வீடுகளுக்கு 20 பேர்ச் காணியே வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் பெருந்தோட்டங்களில் 7 பேர்ச் காணியே வழங்கப்படுகின்றது. அவற்றிலும் பல்வேறு அளவுச் சிக்கல்கள் காணப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டுக்குள் 50,000 வீடுகள் அமைக்கப்படுமென உறுதிமொழி வழங்கியிருக்கும் நிலையில் 50, 000 காணி உறுதிகள் வழங்கும் தேவையும் காணப்படுகின்றது. ஆனால் அவை நடைமுறையில் சாத்தியமற்ற விடயமாகவே தென்படுகின்றது.
இன்று நகர வாழ் மக்களில் 82.9 சதவீதமானோரும் கிராமத்தில் 94.03 வீதமானோரும் சட்ட ரீதியான உரிமங்களுடன் சொந்த வீடுகளில் வாழ்கின்றனர். ஆனால் மலையகத்தில் 21.5 சதவீதமானோர் மட்டுமே இவ்வாறு வாழ்கின்றனர். இலங்கையின் சட்டவாக்க சபையான பாராளுமன்றுக்கே 40 வருடங்களுக்கு பிறகே காணி உறுதிப்பத்திரம் கடந்த வாரம் வழங்கிவைக்கப்பட்டது. 1979 ஜூலை 4 இல் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவால் 18 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் புதிய பாராளுமன்றம் அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டு 1982 ஏப்ரல் 29 இல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபைக்கே 40 வருடங்களுக்கு பிறகே காணி உறுதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கான தனிவீடுகளையும் அதற்கான காணி உறுதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு எத்தனை வருடங்கள் செல்லுமோ தெரியவில்லை. தற்போது பெருந்தோட்டங்களில் லயன் அறைகளில் வசிப்போர் மற்றும் சுயமுயற்சியால் தனி வீடுகளை அமைத்துக்கொண்டோர் அத்துடன் அவர்களால் உரிமை கோரப்படும் நிலங்கள் என எவற்றுக்கும் காணி உறுதிகள் கிடையாது.
இவை தொடர்பாக பெருந்தோட்ட மக்களுக்கும் எவ்வித விழிப்புணர்வுகளும் காணப்படாமையினால் அவர்களும் இவை தொடர்பாக பெரிதாக அலட்டிக்கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களால் உரிமைகொள்ளப்படுகின்ற நிலங்கள் பரம்பரை வழியாகவே அவர்களுக்கு சொந்தமானதே தவிர சட்ட ரீதியான பதிவுகள் எவற்றையும் கொண்டவையல்ல. எனவே பெருந்தோட்ட மக்கள் தங்களது காணிப்பதிவுகளை எவ்வாறு மேற்கொள்வது? அவற்றிலிருக்கின்ற சட்ட சிக்கல்கள் தொடர்பாக சமூக ஆர்வலர்களும் சட்ட வல்லுனர்களும் குரல் கொடுக்க வேண்டும்.
தற்போது அரசாங்கத்தால் தனிவீட்டுத் திட்டத்திற்கு வழங்கப்படுகின்ற காணி உறுதிப்பத்திரங்களை தவிர வேறெந்த ஆவணங்களையும் தங்களது நில உரிமைக்காக பெருந்தோட்ட மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறான விடயங்களால் எதிர்கால சந்ததியினர் நில உரிமை விடயங்களில் ஏதேனும் சவால்களை எதிர்நோக்க வேண்டிய தேவை ஏற்படுமா? பரம்பரை வழியான உரிமை கோரல்கள் சட்டத்திற்கு முன் செல்லுபடியாகுமா? போன்ற பல விடயங்கள் பெருந்தோட்ட மக்கள் முன் கேள்விகளாகவே நிற்கின்றன. இவற்றுக்கான தீர்வுகளை வழங்கப்போவது யார்?
எனவே ”பசுமை பூமி” திட்டத்தின் மூலம் காணி உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற அரசாங்கம் மக்கள் உரிமை கோருகின்ற நிலங்களுக்குமான உரித்துகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் .1972 ஆம் ஆண்டின் நில சீர்திருத்த சட்டத்தின் மூலம் நிலச் சீர்திருத்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும் தனியார் உரிமை கொண்டிருக்கும் நிலங்களுக்கு உச்சவரம்பு கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் பெருந்தோட்ட நிலங்களாக இருந்தால் 50 ஏக்கரும் மற்றைய நிலங்களாக இருந்தால் 25 ஏக்கர் மட்டுமே தனியார் ஒருவர் வைத்திருக்கலாம் என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பார்த்தால் பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை கோரலுக்கு எந்த சிக்கலும் எழ வாய்ப்பில்லை. ஆதலால் எதிர்கால இலக்கை கருத்திற்கொண்டு பெருந்தோட்ட மக்களின் நில உரிமைகளுக்கு ஏற்ற வகையில் காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக