கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 ஆகஸ்ட், 2018

பொறியியலாளரிடம் சிக்கிய சிறுமி

தலைவிதிக்கு ஏற்ப நான்கு பிள்ளைகளுடன் தனது வாழ்க்கையை தனித்து வாழ்வது, கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தனது கணவர் விட்டுச் சென்றதாலேயே. இதில் மூத்த பிள்ளை பெண் பிள்ளையாகும். அப்போது அவளுக்கு வயது 8. அவளுக்குக் கீழ் மூவரும் சின்ன சின்ன வயதுகளையுடைய ஆண் பிள்ளைகள். தமிழினத்தைச் சேர்ந்த அவளுக்கு
அந்த நேரத்தில் எவ்வித வாழ்வாதரமும் இன்றிப் போனது. அவளது வசிப்பிடம் தெனியாய ஆகும். இது கடந்த 2011 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இடம் பெற்றதாகும். குழந்தைகளை வாழ வைப்பதற்காகவும் நிரந்தர வீடு இன்றியும் காணப்பட்ட அவளுக்கு அவ்வாறான இடம் தொடர்பில் அறிந்து வைத்திருந்த ஒருவர் செய்தியொன்றைச் சொன்னார்.


அது அக்குரஸ்ஸ, தங்கஹஹேன தோட்டமாகும். வீதி அதிகார சபை, காலி அலுவலக பொறியியலாளருக்குச் சொந்தமான தோட்டமானது, இரண்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும். இங்கு தேயிலை, இறப்பர் மற்றும் கறுவாப்பட்டை என்பன பயிரிடப்பட்டுள்ளன. இவர் அசங்க விராஜ் ஏக்கநாயக்க என அழைக்கப்படுபவர். இவரது வீட்டுக்கு அருகாமையிலேயே சிறிய கொட்டில் போன்ற வீடொன்று அமையப் பெற்றுள்ளது. குறித்த வீட்டிலேயே இப்பெண் தனது 4 பிள்ளைகளுடன் தங்கினாள். கிட்டத்தட்ட சம வயதுகளையுடைய பிள்ளைகளுடன் அவள் அன்றிலிருந்து குறித்த பொறியியலாளரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தாள். பாடசாலை செல்லும் வயது வந்த போதிலும் அவர்களைப் பாடசாலைக்கு அனுப்பவில்லை. இவர்களின் வேலைக்கு போதுமான வருமானம் கிடைத்ததால். அது அவர்களுக்கு பாரிய உதவியாகவும் காணப்பட்டது.

45வயதை எய்திய குறித்த பொறியியலாளர் திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகளின் தந்தையாவார். ஆனாலும் தனது தோட்டத்தில் வசித்து வரும் குறித்த 3 ஆண் பிள்ளைகளையும் அவ்வளவாக அவருக்குப் பிடிக்காது. சிறிய தவறுக்கும் அடி உதைதான். ஆனால் மூத்த பெண் பிள்ளை மீது அவர் அதிக விருப்பம் கொண்டிருந்தார். அதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்துமிருந்தார். 8 வயது நிரம்பிய குறும்புத்தனம் கொண்ட அச்சிறுமியை எந்நேரமும் அங்குமிங்கும் தடவி அவளை அணைத்துக் கொள்ள எண்ணினாலும் அவள் நழுவிச் சென்று விடுவாள். பல தடவை குறித்த சிறுமி வலி தாங்காமல் கத்திய போதும் பொறியியலாளரின் மனைவி வந்து பார்க்குமிடத்து ஏதாவது சொல்லி தப்பித்து விடுவார். எப்படியாவது 3 ஆண்பிள்ளைகளையும் தோட்டத்திலிருந்து விரட்டி விட வேண்டும் என்ற ஆசை மிக நீண்டநாட்களாக அவரது மனதில் குடிகொண்டிருந்தது. அதனால் அவர்களை அடித்தும் காயப்படுத்தியும் துன்புறுத்தி வந்தார். இவற்றைப் பொறுக்க முடியாது ஆண்பிள்ளைகளில் மூத்தவன் தப்பி ஓடிவிட்டான். ஆனால் தாயையும் மகளையும் வைத்துக் கொள்வதில் அவர் அலாதிப் பிரியம் கொண்டிருந்தார். இரண்டாவது ஆண் பிள்ளையை கறுவாத்தோட்டத்தில் வேலை செய்யச் சொன்னதாக குறித்த பெண் தெரிவித்தார். 3ஆவது ஆண் பிள்ளையை பிக்குவாக்கியதாகவும் தெரிவித்தார். இவ்வாறு தோட்டத்துக்கு வேலை செய்ய வந்த சிறுபான்மையின பெண்ணின் 3 ஆண்  பிள்ளைகளையும் ஒருவாறு தோட்டத்திலிருந்து விரட்டியடித்தார் குறித்த பொறியியலாளர். அதன் பின்னர் வளர்ந்து வரும் பெண் பிள்ளையிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கத் தொடங்கினார். குறித்த பொறியியலாளரால் எனது மகளுக்கு தொல்லை என எனக்குத் தெரியும். இருப்பினும் நாங்கள் இருந்த நிலைமை அப்படி. வாய் திறக்க முடியாது. யாரிடமாவது இவற்றைப் பற்றிச் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டினார். அதனால் நானும் மகளும் பல ஆண்டு காலமாக இந்தத் துயரத்தை அனுபவித்து வந்தோம். தோட்டத்துக்கு வந்தும் 10 வருடங்கள் கடந்துவிட்டன. சின்னதாய் இருந்த மகளும் அழகான, வசீகரத் தோற்றத்தைக் கொண்டு பெரியாளாகிவிட்டாள். முடி கூட அழகாக, நீளமாக காணப்பட்டது. அவ்வாறே அதிகாரியின் தொந்தரவும் அதிகரித்துக் கொண்டே சென்றது. 2017 ஆம் ஆண்டில் மகள் 17வயதைப் பூர்த்தி செய்திருந்தாள். கடைசியாக மகள் வேலையொன்றை தேடிக் கொண்டு தோட்டத்திலிருந்து செல்வதாக எனக்குக் கூறினாள். நானும் அதற்கு சம்மதித்தேன். காரணம் இதிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை என்பதாலாகும். அதற்கிணங்க குறித்த யுவதி 2017 மே மாதத்தின் இறுதி நாளொன்றில் தோட்டத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டாள். அவள் தப்பித்துச் சென்ற செய்தி கேட்டதிலிருந்து பொறியியலாளர் பயப்பீதியடைந்து, என்ன செய்வதென்று தெரியாமல் அவளைத் தேட கடும் பிரயத்தனப்பட்டார்.

யுவதியின் தாயை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடொன்றை பதிவு செய்யுமாறு பணித்தார். முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் மே மாதம் 22 ஆம் திகதி பத்திரிகையொன்றூடாக குறித்த  யுவதியின் படத்துடன் செய்தியொன்றும் பிரசுரமாக்கப்பட்டிருந்தது. பொறியியலாளர் யுவதியை தேடித் தருமாறும் தான் யுவதியின் பாதுகாவலர் எனவும் தெரிவித்தே குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கிணங்க மஹரகம பொலிஸ் நிலையத்துக்கு குறித்த யுவதி தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. யுவதியைத் தேடிக் கண்டுபிடித்த பொலிஸார் மீண்டும் அவ் அரக்கனிடமே யுவதியை ஒப்படைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. மீண்டும் அழைத்துவந்த யுவதியை மேற்படி பொறியியலாளர், அடிக்கடி துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரின் அனைத்துவிதமான கொடுமைகளையும் அம்மாவும் பிள்ளையும் பொறுத்துக் கொண்டது அவரிடம் காணப்பட்ட பயத்தினாலாகும் எனத் தெரிவித்தார்.

உலகமும் சமூகமும் தெரியாது தோட்டத்துக்குள் சிறைவைக்கப்பட்டிருந்த யுவதியை வேலைக்குச் செல்ல பொறியியலாளர் அனுமதி வழங்கினார். தனது தோட்டத்துக்கு அருகாமையில் காணப்பட்ட ஆடை நிறுவனமொன்றுக்கே வேலைக்குச் சென்றாள். தோட்டத்துக்கு அருகாமை என்றாலும் சிறிய தூரம் பஸ்ஸிலே பயணிக்க வேண்டும். அதனால் யுவதிக்கு காவலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு அனுதினமும் யுவதியின் பின்னால் அப்பெண் செல்வது வழக்கமான விடயமாக மாறிப் போனது. அந்தப் பெண்ணும் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறாள். யுவதி பாதையில் செல்லும் போது யாருடன் கதைக்கிறாள், சிரிக்கிறாள், யாரைப் பார்க்கிறாள் என்பதை ஒன்றுவிடாமல் பொறியியலாளரிடம் தெரிவித்தாள். அதற்கேற்ப 2018 மார்ச் மாத நாளொன்றில் பஸ் நடத்துனர் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் பதிலுக்கு அவளும் (யுவதி) அவனைப் பார்த்ததாகவும் குறித்த அப்பெண்ணால் பொறியியலாளருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தால் பொறியியலாளர் கடுங்கோபத்திற்காளானார்.”எனது நீண்ட கூந்தலால்தான் என்னை எல்லோரும் பார்க்கிறார்கள்” என்பதாக தெரிவித்த அவர். எனது கூந்தலை கூரிய கத்தியொன்றினால் அறுத்து வீசினார். அதனால் எனது தலையிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் எனது அழகான முகத் தோற்றத்தாலும் என்னை எல்லோரும் பார்ப்பதாகச் சொல்லி முகத்திற்கு அசிட் வீசினார். அந்த அசிட் வீச்சு என்மேல் படாதவாறு நான் குனிந்துவிட்டேன். முதுகுப் பகுதிக்கே அசிட் வீச்சுப் பட்டது. முதுகுப் பகுதி முழுவதும் எரிந்து காயமாகியது. 1 1/2 மாதமாக காயத்துக்கு மருந்து போட்டேன். அதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் போனது. மீண்டும் மே மாதமே அவ்விடத்திற்கு வேலை செய்யச் சென்றேன்.

வேலைக்குச் சென்ற சில காலத்தில் அங்குள்ள தலைமைப் பெண்ணிடம் தனது கதையை சொல்ல யுவதிக்கு நேரிட்டது. அதற்கேற்ப தனது சோகக் கதையை அப்பெண்ணுக்கு தெரிவித்த யுவதிக்கு அப்பெண் அதிலிருந்து விடுபட முடிவொன்றைப் பெற்றுக் கொடுத்தாள். இது தொடர்பாக மாத்தறை வலய சிறுவர் மற்றும் மகளிர் அமைப்புக்குப் பொறுப்பான தலைவிக்கு முறைப்பாடு தெரிவிப்பதாகவும் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள தான் உதவி செய்வதாகவும் குறித்த பெண் யுவதிக்கு தெரிவித்தார். அதற்கேற்ப கடந்த 8 ஆம் திகதி ஒருவாறு தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு கதைத்த போது யுவதி சிறுவர் மற்றும் மகளிர் அமைப்பு தலைவியான வருணி போகஹவத்தவுக்கு பின்வருமாறு கூறினாள்.

நான் இருப்பது அக்குரஸ்ஸ, தங்கஹஹேன, பரதூவ தோட்டத்திலாகும். அத்தோட்ட அதிகாரி என்னை துன்புறுத்துகிறார். நீங்கள் தான் என்னைக் காப்பற்ற வேண்டும். ஆனால் தோட்டத்துக்கு வர வேண்டாம். நீங்கள் தோட்டத்துக்கு வந்தால் என்னை கொன்று விடுவார். அதனால் தோட்டத்துக்கு வராமல் என்னைக் காப்பாற்றுங்கள் என பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவிடம் கேட்டிருந்தாள். அதற்கேற்ப தொலைபேசி மூலம் கிடைத்த தகவல்களுக்கேற்ப விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனது தலைவரான வலய பொறுப்பதிகாரி, பொலிஸ்மா அதிபர் கயன்க மாரபனவுக்கு தெரியப்படுத்தினார். அதற்கேற்ப அவரின் அனுமதியுடன் மற்றும் மேற்பார்வையுடன் விசாரணைகளை ஆரம்பித்தார். பொலிஸ் பரிசோதகர் பொறியியலாளருக்கு தெரிவித்ததாவது, யுவதியின் முறைப்பாடு தொடர்பில் அவளின் தாயாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதனால் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அனுப்புமாறும் தெரிவித்தார். அதற்கிணங்க தாய் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாள். மேலும் தாயை கூட்டிச் செல்வது பொறியியலாளரின் மனைவியாவார். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சந்தேகம் ஏற்படாதவாறும் பயத்துடன் கதைக்க விடாமலும் பொறியியலாளரின் மனைவி குறித்த தாயின் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார். எப்படியிருப்பினும் தாயிடம் தனியாகக் கதைக்க வேண்டுமெனக் கூறி சந்தர்ப்பமொன்றையும் பொலிஸ் பொறுப்பதிகாரி பெற்றுக் கொண்டார்.

ஐயோ சாமி...எங்களைக் காப்பற்றுங்கள். நாங்கள் மிகவும் பயத்துடனேயே அங்கிருக்கிறோம். இது தொடர்பில் யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். தோட்ட அதிகாரி எனது மகளை துன்புறுத்துகிறார். வீட்டைவிட்டு வெளியேற இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட நடுராத்திரி அவர் என் மகளை தொந்தரவு செய்தார். அன்றிரவு என்னை அவர் வெளியில் அனுப்பிவிட்டார். மகள் நல்ல தூக்கத்திலேயே இருந்தாள். மகள் கண் விழித்துப் பார்க்கும் வேளையில் பொறியியலாளர் அருகில் இருந்துள்ளார். மகளின் சத்தம் கேட்டு நானும் ஓடிச் சென்றேன். நான் காலில் விழுந்து கெஞ்சினேன் எனது மகளை துன்புறுத்த வேண்டாமென்று. என்னை வாயை மூடுமாறு கூறிவிட்டு அடித்து உதைத்தார். பின்னர் மகள் யோசித்துவிட்டே மீண்டும் வீட்டிலிருந்து பாய்ந்து செல்வதாகத் தெரிவித்தாள். நானும் அதற்கு உடன்பட்டேன். உங்களுக்கு சொன்னதாக எனக்குத் தெரிவித்தாள். என்னை உங்களிடம் எல்லா தகவல்களையும் தெரிவிக்குமாறும் பணித்தாள் என சோகக் கதையை கூறி முடித்தாள் அந்தத் தாய்.

அவருடைய முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்ட பின்னர்,  தாயை அவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு பொலிஸ் பொறுப்பதிகாரி யுவதியிடமிருந்து தொலைபேசி அழைப்பை எதிர் கொண்டிருந்தார். நிறைய
நாட்கள் செல்லவில்லை. யுவதி பொலிஸ் பரிசோதகர் வருணிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாள். அவ்வேளை அவளிருந்தது அநுராத புரத்திலாகும். அங்கு வேலை செய்வதாகத் தெரிவித்த யுவதியிடம் மேலதிக விசாரணைகளையும் பெற்றுக் கொண்ட அவர், அந்த நிறுவனத்தின் முகாமையாளருடன் குறித்த யுவதி தொடர்பில் தெரிவித்துவிட்டு மீண்டும் நிறுவனத் தலைவரிடமும் பேசிவிட்டு யுவதியை பத்திரமாக மாத்தறைக்கு அழைத்து வரவே திட்டமிட்டிருந்தார். அதற்கேற்ப பொறியியலாளரிடமிருந்து தப்பிச் சென்று அநுராதபுரத்தில் இருந்த யுவதியை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர பொலிஸ் தலைமையதிகாரி திட்டமிட்டார். அங்கு வந்த யுவதி,
சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரியிடம் தனது 8 வயதிலிருந்து பொறியியலாளர் மூலம் தான்பட்ட துன்பங்களை விபரித்துள்ளாள்.

8வயதிலிருந்தே அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார் ஆனால் நான் என்னை காப்பாற்றிக் கொண்டேன். அவர் செய்வது என்னை
சங்கடத்துக்குள்ளாக்கும். சின்ன வயதில் அவரை கடித்து விட்டு ஓடியது அதற்காகத்தான். நான் பெரியாளாக வந்தவுடன் என்னையும் அம்மாவையும் கொன்று விடுவதாக மிரட்டினார். நான் தனியாக எங்கும் செல்ல முடியாதளவுக்கு என்னை அடைத்து வைத்தார். என்னிடம் நெருக்கமாக வந்தார். என்னை திருமணம் செய்வதாகவும் கூறினார். அவர் திருமணம் முடித்தவர். அவருடைய மனைவியும் அங்குதான் இருந்தார். என்னை விட ஓரிரு வயது குறைந்த 2ஆண் பிள்ளைகளும் இருந்தார்கள். யுவதியின் சகல தகவல்களையும் அறிக்கைப்படுத்திக் கொண்ட பொலிஸ் பரிசோதகர், இன்னும் யுவதி பற்றிய தகவல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்து யுவதியின் தாயை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்தது, அதன் மூலம் பொறியியலாளரை கைது செய்யும் நோக்கிலேயே 10 வயதிலிருந்தே
சிறுமியொருவரை துன்புறுத்தி வந்த குற்றத்திற்காகவும் கொடுமைப் படுத்தியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டார் கடந்த 19 ஆம் திகதியே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர், விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். தங்களுக்கு வாழ்வதற்கான எதுவித வாழ்வாதாரமும் இல்லையெனவும் இருப்பதற்கு வீடொன்று இல்லையென்பதாலும் அவர் செய்த அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டதாகவும் அதனாலேயே தோட்டத்தில் சத்தமின்றி அச்சத்துடன் வேலை செய்ததாகவும் தாய் மன்றில் தெரிவித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை வலய பொறுப்பதிகாரி பொலிஸ்மா அதிபர் கயன்க ஹசன்த மாரபனவின் பூரண தலைமைத்துவத்தின் கீழ் மற்றும் கட்டளையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வை. எல். லீலவங்சவின் மேற்பார்வையில் மாத்தறை வலய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் பரிசோதகர் வருணி கேஷலா போகஹவத்தவின் தலைமையின் பொலிஸ் கான்ஸ்டபிள் சுமதிபால, பொலிஸ் கொஸ்தாபல்களான சந்தன, சம்பத், பண்டார, குலரத்ன, பெண் பொலிஸ் கொஸ்தாபல் சுரேகா மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் சாரதி லியன்கே அடங்கிய  குழுவினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக