கூட்டு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வந்தாலும் கூட்டு ஒப்பந்தத்துக்கான மாற்றுத் தீர்வுகளும் சாத்தியமானதென்றும் தோன்றவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பாரிய அங்கத்தை கூட்டு ஒப்பந்தம் பெற்றிருப்பதால் அவை தொடர்பான தெளிவுடன் அவ்விடயத்தை அணுகுவது சிறப்பானதாகும். இவ்வாறான நிலையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான இளையதம்பி தம்பையாவைச் சந்தித்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு;
கூட்டு ஒப்பந்தம்
கைத்தொழில் பிணக்கு சட்டத்தின் ஒரு சரத்திலே கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது. இந்த கூட்டு ஒப்பந்தமானது ஏற்கனவே அதே துறையில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கு என்ன நிபந்தனை இருக்கின்றதோ, அதைவிடவும் குறைவான விடயங்கள் எவையும் உள்ளடக்க முடியாது. சம்பள விவகாரமும் இதில் ஒன்றாகும். அந்த அடிப்படையிலேயே 1996 ஆம் ஆண்டிலிருந்து பெருந்தோட்டம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. 2003 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலேயே 6ஆவது சரத்தாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை மீளாய்வு செய்வது தொடர்பாக கூறப்படுகின்றது. அந்த அடிப்படையிலேயே 2003 தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதில் இடையிடையே ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்ட காலங்களில் நிலுவைச் சம்பளம் கொடுக்கப்பட்டது. ஒப்பந்தம் எப்போது நிறைவுறுகிறதோ அதற்குப் பின்
செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் அதற்கு அடுத்த நாளில் இருந்தே அமுலுக்கு வரும்.
இறுதியாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்
எனவே நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும், சம்பளம் அதிகமாக இருக்க வேண்டும். சம்பள மீளாய்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் வேலை நிபந்தனை வரமுடியாது. வேலை நிபந்தனை 2003 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருக்கின்றது. அப்படியென்றால் அவற்றை மாற்றவேண்டும் அதற்குள் தொழிலாளர் பறிக்க வேண்டிய கொழுந்து அளவு, தோட்டத்தை சுத்தமாக வைத்திருத்தல், விடுமுறை வேலை வழங்குதல், நிரந்தர உத்தியோகம் வழங்கல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டு செய்த ஒப்பந்தத்தின் பின் 2015மார்ச் மாதம் மீண்டும் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் 2016, அக்டோபர் வரையில் 18 மாதங்கள் இழுத்தடிப்பு செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் சம்பள உயர்வும் குறைவு. அதுவொரு பெருவாரியான குறைபாடு. ஊ.சே. நி/ ஊ.ந.நி சட்டத்தின் படி, சில இடங்களில் குழறுபடிகள் இருக்கிறது. அடிப்படைச் சம்பளத்திலேயே அறவிடப்படுகிறது. ஆனால் உண்மையில் முழுமையான வருமானத்திலிருந்தே அது சேர்க்கப்படவும் கழிக்கப்படவும் வேண்டும். இது பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்கனவே இருக்கவில்லை. இவை தொடர்பாக 2015 பெப்ரவரியில் தொழில் ஆணையாளருக்கு, கூட்டு ஒப்பந்தத்தில் சட்டத்துக்கு புறம்பான விடயங்கள் இருக்கின்றது. எனவே இவற்றை இழுத்தடிப்புச் செய்யாமல் மார்ச் மாதத்துக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தொழில் ஆணையாளரால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்பின்னர் சிக்கலான கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று பிரதான சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
1. வெளியாள் வேலை முறையை எதிர்காலத்தில் அறிமுகம் செய்தல்.
2. எதிர்கால கூட்டு ஒப்பந்தத்தில் உற்பத்தியின் அடிப்படையிலேயே சம்பளம்.
3. ஆகக் குறைந்தது 2 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த ஆகக் குறைந்தது 2வருடங்கள் என்று சொல்லப்படுவது, ஆகக் கூடுதலாக எத்தனை வருடங்களாகவும் இருக்கலாம். இந்த மூன்று சரத்துக்களும் பெருந்தோட்டத்துறையை முற்றுமுழுதாக மாற்றியமைக்கின்றன. வெளியால் வேலை முறை இப்போதே பல தோட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இடத்திலேயே கொழுந்து பறித்து கொடுக்கவேண்டும். இதை செய்யாவிடில் வேலை வழங்கமாட்டோம் எனக் கூறப்படுகிறது. இதனால் ஒருசில இடங்களில் தொழிலாளர்களுக்கு 10
நாட்களே வேலை கிடைக்கின்றது. இதனால் தொழிலாளர்கள் கிளர்ந்தெழ தொடங்கிவிட்டனர்.
ஆரம்பத்தில் 100 தேயிலை மரங்களைக் கொடுத்து பராமரியுங்கள் என்றவுடன் தொழிலாளர்களுக்கு சந்தோஷம். ஆனால், தேயிலை மரங்களே குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர காணியல்ல. தேயிலை மரமும் இறப்பர் மரமென்றே கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவற்றிலிருந்து பெறப்படும் கொழுந்து, இறப்பர்பால் என்பவற்றைக் கொடுக்க வேண்டும். இதன்போது அதற்கேற்ற பணம் மட்டுமே வழங்கப்படும். இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாது போகும். ஒப்பந்த அடிப்படையிலான வேலையானது தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருந்தது.
புல்வெட்டுதல், கவ்வாத்து வெட்டுதல் என்பன வேலைக்கு மேலதிகமாக வழங்கப்படும். இது வேலையை பாதிக்காது. இவ் ஒப்பந்தத்தில் அவ்வாறான அடிப்படைகள் எதுவும் இல்லாமல் வெளியாள் வேலை முறை உள்ளடக்கப் பட்டுள்ளது. வெளியாள் வேலை முறையானது தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டுமென்றுமில்லை. வேறு யாருக்கும் வழங்கலாம். இது தொழிலாளர்களுடைய இருப்பை பாதிப்பதாகவும் 2003 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட 300 நாள் வேலை என்பதையும் பறிக்கிறது.
அடிப்படை கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணாக சம்பள கூட்டு ஒப்பந்தம் வரமுடியாது. மற்றையது இலாபத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்குதல். அவ்வாறெனில் நாள் சம்பளம் இல்லை. சில வேளைகளில் மாதத்தில் 10 நாட்கள் நாள் சம்பளம், மிகுதி எடுக்கும் கொழுந்துக்கு சம்பளம் என்றால் பெரும் பிரச்சினை வரும். தொழிலாளர்களுக்கு தற்போது அதிகபட்சமாக பத்து ஆயிரம் கிடைக்கும். ஆனால் இம்முறையால் 2000-3000 ரூபாவே கிடைக்கும். பெருந்தோட்ட தொழில் துறையென்பது விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு கைத்தொழில் இதில் உழைப்பை விற்று வாழும் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது.
ஆனால் மேற்கூறிய நான்கு சரத்துக்களும் வருமாயின் தொழிலாளர்களுக்கு பிரச்சினையாக அமையும் இறுதி கூட்டு ஒப்பந்தமானது, அவசர அவசரமாக கையெழுத்தானது. ஆனால் வழமையாக கூட்டு ஒப்பந்தம் வர்த்தமானியில் பிரசுரமாக மாதக்கணக்காகும் ஆனால் இறுதி ஒப்பந்தம் மிக விரைவாக வர்த்தமானியில் வெளியானது. இந்த ஒப்பந்தத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானது, 730 ரூபா சம்பளம் என்பது மட்டுமே தெரியும். அதில் கூட ஒரு நகலை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இவற்றை தேடிநாங்கள் பெற்றுக் கொள்ள முன்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி முடிந்துவிட்டது. இவ்விடயங்கள் தொழில் சட்டத்துக்கு முரணானது, ஏற்கனவே தொழிலாளர்கள் அனுபவித்த உரிமையினைப் பறிப்பதாக இருக்கின்றது. தொழில் துறையின் உறவுகளிலுள்ள அம்சங்களை முழுமையாக மாற்றும் முறையாக இருக்கின்றது. இதுவரையும் தொழிலாளர்களாக இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருக்கும். இது தொழிலாளர்களுடன் கலந்துரையாடப்படாமல் மேற்கொள்ளப்படும் விடயம் என்ற அடிப்படையிலேயே தொழில் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
ஒப்பந்தத்துக்கெதிரான ரிட்மனு
இரு தரப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது. ஆனால் கூட்டு ஒப்பந்தம் வர்த்தமானியில் வெளிவர வேண்டும். வந்தாலே அது சட்டமாகும். அந்த சட்ட அந்தஸ்தை கொடுப்பவர் தொழில் ஆணையாளர். ஆகவே தொழில் ஆணையாளர் செய்த நடவடிக்கைக்கு எதிராக ரிட் மனு (ரத்து ஆணை) மேன் முறையீட்டு vநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் தொழில் ஆணையாளரின் வர்த்தமானியை இரத்துச் செய்யவும் அதில் திருத்தங்களை மேற்கொள்ள ஏவல் ஆணையையும் அதுவரையும் இவற்றைத் தடைசெய்யவும் மனுத் தாக்கல் செய்திருந்தோம்.
வர்ததமானியின் சட்ட அந்தஸ்த்துப் பற்றி தொழில் ஆணையாளரும் பிரதிவாதிகளும் கலந்துரையாடி மனுதாரருடன் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியுமா? என்று ஆராய வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இவர்கள் மாத்திரம் கூடினர். (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) வேறுயாரும் செல்லவில்லை. முதலாளிமார் சம்மேளனம் தீர்மானமில்லை என அறிவித்தது. மீண்டும் நீதிபதி ஒரு தீர்மானத்துக்கு வரமுடியுமா? என்று தெரிவித்திருந்தார். அதனால் அதற்கான தீர்மானத்தினை ஒப்பந்ததாரர்களே மேற்கொள்ள வேண்டும்.
அவர்களுடைய ஆட்சேபனைகளில், இதுவொரு தனிப்பட்ட ஒப்பந்தம். இந்தவிடயத்தை நாங்கள் சரியாகவே மேற்கொண்டுள்ளோம். நிலுவையைக் கேட்பதற்கு சட்டத்தில் இடமில்லை. தனிப்பட்ட தொழிற்சங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தம். தொழில் ஆணையாளர் உத்தியோக பூர்வமான ஒருவராக மட்டுமே இருக்கிறார். ஆகவே பொதுநலன் அக்கறையின் அடிப்படையில் ஒரு தனிநபருக்கு சவாலுக்கு உட்படுத்துவதற்கு அல்லது வேறொரு தொழிற்சங்கத்துக்கு, உறுப்பு இல்லாத தொழிற்சங்கத்துக்கு சவாலுக்குட்படுத்துவதற்கு சட்ட அந்தஸ்துக் கிடையாது.
மேன்முறையீடு
இதனை முதலாளிமார் சம்மேளனம் மட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மூன்று தொழிற்சங்கங்களும் குறிப்பிட்டுள்ளன. எழுத்து பூர்வமான சமர்ப்பணமாக இருதரப்பு சமர்ப்பணத்தையும் கேட்டு ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு இவ்வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தல். இதன்மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளது என்பதால் அவற்றுக்கெதிராக இருக்கின்ற ஒரேயொரு வழியாக உயர்நீதிமன்றமே இருக்கின்றது. மேன் முறையீட்டு
நீதிமன்றத்திலேயே எங்களுக்குப் பல இலட்சம் ரூபா செலவானது. உயர்நீதிமன்றத்தில் எவ்வளவு செலவாகப்போகிறது என்பது இல்லாமல் மேன்முறையீடு செய்திருக்கிறோம். ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்பு, வழக்கென்பது சட்டம், சாட்சியங்கள், தர்க்கம், நடுநிலையான நீதி இதற்குள்ளாகவே வரும். இதுவொரு விதமான போராட்டம் என்றே கூறியுள்ளோம். நிலுவையை வாங்கித் தருகிறோம் என்று நாங்கள் கூறவில்லை. இந்தக் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நாம் பேசத் தொடங்கிய பின்பு தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
உயர்நீதிமன்றத்தில் செய்திருக்கின்ற மேன்முறையீட்டில் ஒருவேளை பாதகமான தீர்ப்புகள் வரலாம். ஆனால் ஒரு கூட்டு ஒப்பந்தம் அநீதியாக இருக்கின்ற போது, தொழில் ஆணையாளர் அதற்குச் சட்ட அந்தஸ்தைக் கொடுப்பதை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியுமா என்பதே எமது பிரச்சினை. சவாலுக்கு உட்படுத்த முடியாது என்று தீர்ப்பு வழங்கப்படுமாயின் இலங்கையின் சட்டத்தில் அது முக்கியமானதொரு இடத்தில் இருக்கும். தலையிடலாம் என்று தீர்ப்பு வந்தால் அது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோரும் சார்பானது. இதனால் தொழிற்சங்கங்களும் தொழில் ஆணையாளரும் தான் தோன்றித்தனமாகச் செயற்பட முடியாது.
ஆகவே ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டமே தவிர எங்களுடைய அடையாளத்தை நிலைநிறுத்தும் விடயமல்ல. அடுத்து இதுவொரு முழுமையான தீர்வினைத் தருமென்றும்
நாங்கள் சொல்லவில்லை. இதுவொரு போராட்டத்தின் வடிவம். கூட்டு ஒப்பந்தம் என்பது ஒப்பீட்டு ரீதியாக, முதலாளித்துவ பொறிமுறைக்குள் ஒரு முற்போக்கான விடயம். அவ்வாறெனில், தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றதென்றால், ஆரம்பம் முதலே தொழிலாளர்கள் விடயத்தில் விட்டுக் கொடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாலும் இத்தொழிற்சங்கங்களுக்குத் தகுதியின்மையின்மையாலும் பொருளியல் விஞ்ஞான ரீதியில் இவ்விடயம் அணுகப்படவில்லை.
எந்தவகையிலான தொழிலாளர்கள்
இந்தத்தோட்டத்தொழிலாளர்கள் எந்தவகையிலான தொழிலாளர்கள். தனியார் துறை தொழிலாளர்களா? அல்லது அரசு துறை தொழிலாளர்களா? இலங்கை திறைசேரி பதிவுகளில் அரசு துறை தொழிலாளர்கள், தனியார் துறை தொழிலாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்ற வகை காணப்படுகிறது. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரச, தனியார் துறைக்குள் உள்வாங்கப்பட வில்லை. ஆனால் தனியார் துறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கான போராட்டம் கூட முன்னெடுக்கப்படவில்லை. அடுத்ததாக இவ்வழக்குத் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு ஒப்பந்தத்தில் கைச்சாந்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் பகிரங்கமாகவும் எங்களுடன் பேசும் போதும் இந்த வழக்கு தோல்வியடைந்ததில் நாங்கள் சந்தோஷமடையவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஏனெனில் எங்களுடைய பக்கத்தில் நியாயம் இருந்தது.
இவர்களுடைய ஆட்சேபனையில் எனக்குத் தகைமை இல்லையென கூறியிருக்கத் தேவையில்லை. உண்மையில் பிழையிருந்தது அவர்களுக்குத் தெரியும். இது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கைச்சாத்திடப்பட்டதென வடிவேல் சுரேஷ் கூறியிருக்கிறார். வேலாயுதம் எல்லாவற்றையும் பேசி முடித்திருந்தார். தேர்தலும் நெருங்கியிருந்தது. அதனால் படித்துப் பார்க்கவுமில்லை கைச்சாத்திட்டேன் என்று கூறியுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தேர்தல் மற்றும் தீபாவளி நெருங்குவதால் கைச்சாத்திட்டோம் என்று கூறியது. அதனால் இந்தவழக்கானது பிழையென்று கூறுவதற்கு இல்லை. இதனாலேயே எங்களுக்கு அதிகமான ஒத்துழைப்புக் கிடைத்தது. இதற்காகப் பொருளாதார உதவிகளை நாங்கள் எங்கும் பெறவில்லை. அச்சுப்பிரதிகளுக்கு மாத்திரம் இரண்டரை இலட்சம் வரையும் வழக்கு பதிவுக்கு மூன்றரை இலட்சம் வரையும் செலவானது. அதனை
நாங்களே ஈடுசெய்தோம்.
வாழ்க்கைச் செலவு புள்ளி
சம்பளம் பற்றிப் பேசுவதென்றால், கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளமொன்று இருக்கும். இருநூறு, இருநூறு ரூபாவில் அதிகரிக்காது. குறைந்தது 10 வீதமாவது அதிகரிக்க வேண்டும். அதற்குச் சட்டமில்லை. அலவன்ஸ் என்பது தனியார்துறைக்கு வாழ்க்கைச் செலவுப் படிகள் இருக்கிறது. அரசாங்கத் துறைக்கு வாழ்க்கைச் செலவுப் படிகள் ஒரு மாதத்திற்கு 7500 ரூபாவரையில் இருக்கிறது. கூட்டு ஒப்பந்தத்தில் ஒன்றிணைக்கப்பட்ட சம்பளத்தில் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும் வாழ்க்கைச் செலவுப் புள்ளிகள் சேர்க்கப்படாவிட்டாலும் வாழ்க்கைச் செலவுப் புள்ளிகள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் ஆரம்பம் முதலே இவை சேர்க்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு புள்ளி, அடிப்படைச் சம்பளம், ஏனைய அலவன்ஸ் என்பதை சேர்த்தால் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கும்.
ஒப்பந்தத்திலிருந்து விலகுதல்
இப்போதும் மூன்று வருடங்களுக்குப் பிறகும் அதே 1000ரூபா பற்றிப் பலர் பேசுகின்றனர். சம்பள சூத்திரமொன்று தோட்ட தொழிலாளர்களுக்கு அவசியம். ஏற்கனவே சொல்லப்பட்ட குறைபாடுகளும் புதிய சம்பள சூத்திரத்தையும் சேர்த்துக் கொண்டே புதிய கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும். அதில் நான் கூறிய நான்கு சரத்துகளும் இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றது. 2016 இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இவ்வருடம் அக்டோபர் வரையிலும் நடைமுறையில் இருக்கும். எனவே அக்டோபர் வரையும் இந்த ஒப்பந்தத்தை அனுமதித்துச் சென்றால் மீண்டுமொரு ஒப்பந்தம் செய்யும் போது, ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் வெளியாள் முறை, உற்பத்தி முறையில் சம்பளம், குறைந்தது 2 வருடத்தில் ஒப்பந்தம் அந்த அடிப்படையிலேயே ஒப்பந்தம் பற்றிப் பேசுவோம் என்ற நிலை ஏற்படும். தற்போது மூன்று தொழிற்சங்கங்களும் இன்னும் ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை. அதனால் அக்டோபர் மாதம் வரை இந்த ஒப்பந்தத்தில் இருந்தால் அதை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிவிடும். கூட்டு ஒப்பந்தத்தை பொறுத்தளவில் ஒருமாதத்துக்கு முன்பாக அறிவித்துவிட்டு வெளியேறமுடியும்.
அவ்வாறு வெளியேறுவதால் தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரையில் அதே சலுகைகள் கிடைக்கும். ஒரு கூட்டு ஒப்பந்தம் காலாவதியானவுடன் எவ்வாறு அடுத்த கூட்டு ஒப்பந்தம் வரை அதே சலுகைகள் கிடைக்கப் பெறுகிறதோ அதேபோலவே ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாலும் அவை கிடைக்கும். அதுவே சட்டம். நாங்கள் இதை வரவேற்கிறோம். எனவே இதிலிருந்து விலகி புதியதொரு வரைவை அனைவரும் சேர்ந்து முன்வைக்கலாம். கம்பனிகளிடம் முன்வைத்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கலாம்.
இதைவிட்டுவிட்டு கம்பனிகள் சொல்வதை ஏற்றுக் கொள்வதாலேயே பிரச்சனை. இதிலுள்ள தொழிற்சங்கங்கள் எல்லாமே அரசியல் சார்பானவை. எனவே அரசாங்கமும் நிர்பந்தத்தை ஏற்படுத்தலாம். கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சந்திரசேகரன் போராட்டத்தை முன்னெடுக்கும் போது அப்போதைய, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கம்பனிகளை இடையூறு செய்ய வேண்டாமெனக் கோரியிருந்ததாக நான் அறிந்தேன். அப்படியொரு நிர்ப்பந்தம் இன்றும் இருக்கக்கூடும். கம்பனிகளின் நலனே
இந்த முதலாளித்துவ அரசாங்கங்களின் நலன்.
கோப்ரட்டிவ் முறை
நாங்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கின்றோம். எந்த அணியுடனும் நாங்கள் இணைந்து செயற்படத்தாயார். கொழும்பில் இருப்பதால் இவற்றில் தலையிடக்கூடாது என்பது அர்த்தமில்லை. பெரும்பாலான தலைவர்கள் கொழும்பிலேயே இருக்கிறார்கள். நாடு தழுவிய அரசியலே எமது அரசியல். அதிலொரு பகுதி அரசியலே மலையக அரசியல். தொழிற்சங்கம் மலையகத்துக்கானது. அதனால் அங்கு வேலை செய்கிறோம். நாங்கள் மலையகத் தொழிலாளர்களை இலங்கையின் முக்கிய தொழிலாளர் வர்க்கமாகவே பார்க்கிறோம்.
அப்படியென்றால் இலங்கை பிரஜையல்லாத தஞ்சாவூர், புதுக்கோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களை இங்கு தலைவர்களாகவும் மாகாணசபை உறுப்பினர்களாகவும் மாற்றியிருப்பது நாங்கள் அல்ல. நாங்களும் ஒரு காலத்தில் இந்ததியாவிலிருந்து வந்திருந்தாலும் நாங்கள் இலங்கைப் பிரஜை. இதுதான் எமது நிலைமை. சீனா, கென்யாவில் தேயிலை தோட்டங்கள் கோப்ரட்டிவ் முறையில் இயங்குகிறது. அவற்றை நாம் பிரதி செய்ய வேண்டியதில்லை. அதுபோன்ற திட்டத்தை முன்னெடுக்கலாம். அரசாங்கம் கம்பனிகளுக்கு வழங்கும் மானியத்தை கோப்ரட்டிவ்குக்கு வழங்கினால் முதலில் தொழிலாளர்களுக்கு சிரமமானாலும் பின்னர் சுமுகமாக இருக்கும்.
இன்று தேயிலை பல உற்பத்திகளுக்காக வந்துவிட்டது. உரங்கள் பாவிக்கப்படாத தேயிலைகள் முக்கியத்துவமுடையன. இயற்கை இறப்பருக்கும் கேள்வி அதிகம். தேயிலை ஏற்றுமதியாளர்கள் தேயிலை ஒருபோதும் நட்டத்தில் இயங்குவதாகச் சொல்லவில்லை. உரிய சந்தை வெளிநாட்டில் எடுப்பதற்கு அரசாங்கம் உதவவில்லை என்றே கூறுகிறார்கள். எனவே நாம் குறைபாடுகளை நீக்கிப் பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக