கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 ஆகஸ்ட், 2018

மிளகாய்த்தூள் வீசி பணம் கொள்ளை

கடந்த 28ஆம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் ஹொரணை- புளத்சிங்கள வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிகளின் ஏ.ரி.எம் தானியங்கி இயந்திரங்களிலுள்ள பணத்தை வானில் வந்த மர்ம நபர்கள் சிலர் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அந்த ஏ.ரி.எம். தானியங்கி இயந்திரங்களில் சுமார் இரண்டு கோடியே 25 இலட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த வானில் 3பேர் பயணித்துள்ளனர். இவர்கள் கொழும்பு- நாரஹேன்பிட்டி பிரதேச தனியார் நிறுவனமொன்றில் சேவை புரிபவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னால் உள்ள கடையில் ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போவோம் என அம்மூவரும் தெரிவிக்க, வான் சாரதி புளத்சிங்கள வீதியில் அமைந்துள்ள கோவின்னபஹல எனுமிடத்திலுள்ள உணவுக்கடையொன்றுக்கு முன்னால் வானை நிறுத்தினான். வானிலிருந்து இறங்கிய மூவரும் தங்களது களைப்பை போக்கிக் கொள்வதற்காக வேண்டி விரைந்து உணவு சாலைக்குள் நுழைந்தனர் அக்கா மூன்று தேநீரும் சாப்பிட ஏதாவதும் கொண்டு வாருங்கள் எனக் கூறிவிட்டு கதிரையில் அமர்ந்தனர்.


இவர்கள் உணவை முடித்துக் கொண்ட சந்தர்ப்பத்திலேயே மின்னல் வேகத்தில் வந்த ஜீப் வண்டி கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து நன்கு வாட்டசாட்டமான நான்கு பேர் ஒரேடியாக இறங்கினர். அவர்கள் உணவுச் சாலைக்குள் திடுதிப்பென்று பாய்ந்ததில் அதிலிருந்த எவராலும் என்ன நடக்கப் போகிறது என்பதை ஊகித்துக் கொள்ளக் கூட நேரம் வழங்கியிருக்கவில்லை. வானில் வந்தவர்கள் யார்? உடனடியாக வெளியே வராவிட்டால் இவ்விடத்தில் கொலை விழும் என கத்தி மிரட்டினார்கள். இவர்களின் கூச்சல் குழப்பத்தினால் மிரண்டு போன வானில் வந்தவர்கள் மூச்சு விடாமல் இருந்தனர். எந்த நேரத்திலும் தாம் கொலை செய்யப்படலாம் என எண்ணியே அவர்கள் மூச்சு விடாமல் இருந்தனர். செய்வதறியாது திகைத்த கொள்ளைக் கூட்டம் உணவுச்சாலையில் இருந்த மூன்று பேரின் மீது மிளகாய்த் தூளைத் தூவியது. என்ன நடக்கிறது என்பதை அறியாது கூட அவர்கள் மரண பயத்தில் விழித்துக் கொண்டிருந்தனர் ஐயோ கடவுளே! என மிளகாய்த் தூள் வீச்சுக்கு இலக்கான மூவரும் எரிச்சல் தாங்க முடியாது கீழே வீழ்ந்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய்த்தூள் பிரயோகத்தினால் நேராக நிற்பதற்குக் கூட சக்தி இல்லாமலே அவர்கள் காணப்பட்டனர். அந்த நேரத்தில் உணவுச் சாலையில் அருகில் காணப்பட்ட நீர்க்குழாயில் கைகளை கழுவிக் கொண்டிருந்த வான் சாரதி, அதுவரையிலும் உணவுச் சாலைக்குள் நடந்ததை அவதானித்திருக்கவில்லை. அந்த நேரமே கெட்ட நேரமாக அவருக்கு அமைந்தது. நொடிப்பொழுதில் அவரருகில் பாய்ந்த கொள்ளைக் கும்பல் அவரது முகத்திலும் மிளகாய்த்தூளை விசிறியது. அவரின் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. மிளகாய்த்தூள் பிரயோகத்துக்கு ஆளான வான் சாரதிக்கு நிற்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டு கீழே விழுந்தார். என்ன சத்தம் அது? என்ன உடைந்தது? எனக் கேட்டுக் கொண்டு உணவுச்சாலையின் உள்ளிருந்து அதன் உரிமையாளரான பெண் வந்தார். கண்ணாடிக் குவளை விழுந்த சத்தம் கேட்டு விரைவாக ஓடி வந்ததன் காரணம் என்ன நடந்த தென்று தெரிந்து கொள்ளும் ஆவலிலேயே  அவள் சொல்லிக் கொண்டு வந்ததை முடிக்கும் முன்பே அந்தோ அவளும் மிளகாய்த்தூள் பிரயோகத்துக்கு ஆளானாள். வெட்டிய வாழைமரம் விழுவதைப்போல எரிச்சல் தாங்க முடியாது அவளும் நிலத்தில் வீழ்ந்தாள். அதிக வேதனையுடன்  என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாதளவுக்குக் கூட அந்த நேரத்தில் அவளுக்கு நினைவு இருக்கவில்லை.

தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்ட கொள்ளைக் கும்பல் யாரென்று இன்றி எல்லோருக்கும் மிளகாய்த்தூளை தூவியதில் உணவுச் சாலை முழுவதும் யுத்தக் களமாக மாறி முழுவதும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. கொள்ளைக் கோஷ்டிகளின் இன்னும் சில அங்கத்தவர்கள் வானொன்றில் வந்து, ஜீப் வண்டியில் வந்த பணத்துக்கு பொறுப்பானவர்களில் ஒருவனை கட்டாயப்படுத்தி வானை நோக்கி இழுத்துச் சென்ற சம்பவம் இதற்கிடையில் ஏற்பட்டது. குறித்த நபரை வானுக்குள் தள்ளி கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அவரிடமிருந்து எப்படியாவது கைத்துப்பாக்கியைப் பறித்துவிட வேண்டும் என்றே எண்ணினர். பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியை வானிலேயே வைத்துவிட்டு தேநீர் குடிப்பதற்காக சென்றிருந்தார். வானின் பின்பக்கக் கதவை உடைத்த அவர்கள், அங்கு காணப்பட்ட பணப் பெட்டகத்தை திறக்க பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை. பின்னர் இரும்பொன்றைக் கொண்டு பூட்டை உடைக்க ஆரம்பித்தனர். கொள்ளைக் கூட்டத்தால் மிளகாய்த் தூள் தாக்குதலுக்குள்ளான வான் சாரதி உணவுச்சாலையின் பின்பக்கமாக பாதைக்கு ஓடிவந்தான். சீக்கிரம்.. சென்று கொண்டிருக்கும் ஜீப் வண்டியின் இலக்கத்தை குறித்துக் கொள்ளுங்கள் என பாதையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை இடைமறித்து அதில் வந்த யுவதியிடம் வான் சாரதி தெரிவித்தார். எங்களது வாகனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் செல்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

வாகனத்தை நிறுத்திய குறித்த யுவதி, விரைந்து அந்த ஜீப் வண்டியின் இலக்கத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து கொண்டாள். இருப்பினும் 2கோடியே 50இலட்சம் ரூபா பணத்தை லாவகமாக எடுத்துக் கொண்டு அக் கொள்ளைக் கும்பல் அதுவரையிலும் தப்பிச் சென்று விட்டது. அவர்கள் வந்த ஜீப் வண்டி அதி சொகுசு வாகனமொன்றாகும். அவ்வண்டியானது நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச்
சொந்தமானதாகும். அந்த வாகனத்தின் இலக்கத்தகடு போலியானதாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பணம் இடப்பட்டிருந்த 19 பைகளில் 12 பைகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர். எஞ்சியிருந்த பைகளில் ஒரு கோடியே 15 இலட்சத்து 62 ஆயிரத்து 600 ரூபா பணம் இருந்துள்ளது. அப்பணத்தை கடந்த 28 ஆம் திகதி பொலிஸார் தங்களது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்திருந்தனர். பொலிஸாரின் விசாரணைகள் மூலம் வான் சாரதி கடந்த 8வருட காலமாக குறித்த தனியார் நிறுவனத்தில் சேவை புரிந்திருந்தமை தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் வான் பாதுகாப்புக்காக இருந்த காவலாளி அந்த வேலைக்கு வந்தது கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே எனத் தெரிவிக்கப்படுகிறது. இக் காவலாளி முன்னாள் இராணுவ வீரர் எனவும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. விசேடமாக, பாதுகாப்புக் காவலாளி உட்பட அந்த நேரத்தில் வானில் பயணித்த அதிகாரிகள் இருவருமே புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கூர்ந்து அவதானித்தால் சிறு பிள்ளை கூட இவர்கள் தான் இந்த கொள்ளைச் சம்பவத்தை செய்திருக்கக் கூடும் என துல்லியமாகச் சொல்லி விடுவார்கள்.

இந்த பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் வான் சாரதியும் பாதுகாப்புக் காவலாளியும் கைது செய்யப்பட்டனர். இந்த இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 48மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இலங்கை வரலாற்றில் பல வருட காலமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அப்படியில்லாவிடில் இரு குழுக்களுக்கிடையில் கத்தி முனையிலேயே கொள்ளை இடம்பெற்ற சரித்திரம் உண்டு. இவ்வளவு காலமாக இல்லாத நடைமுறையில் மிளகாய்த்தூள் தூவி பாரியளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட முதல் சம்பவமாக இதை வரலாற்றில் பதிய வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் இக்காலப்பகுதியில் இவ்வாறான கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதானது அதிசயமானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது. எந்த முறையில் திருட்டை மேற்கொண்டாலும் அது திருட்டுச் சம்பவமாகவே கருதப்படும். மனசாட்சியின் படி அச்சம்பவத்தை நியாயப்படுத்த யாராலும் முடியாது. சாதாரணமாக நீதிக்குப் புறம்பாக இவ்வாறான ஒரு பாரிய தொகை கொள்ளை இடம்பெற்றதை சட்டத்தின் வாயிலாகவே தீர்க்க முடியும். சட்ட ரீதியாகவே அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். பாரிய தொகை பணத்தை கொள்ளையிடுவது அவ்வளவு பாரிய விடயமல்ல என்பதை சிறுபிள்ளையும் அறியும். இருப்பினும் கவலையான விடயம் என்னவென்றால். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் இது தொடர்பில் மௌனமாக இருப்பதேயாகும். இது தொடர்பில் எந்தவொரு உத்தியையும் அவர்கள் கையாளவில்லை என்பதை பாதுகாப்புக் காவலாளியின் நடவடிக்கை மூலம் கண்டுகொள்ள முடிந்தது.

பாதுகாப்புக் காவலாளியிடம் இருந்து துப்பாக்கியானது வானில் தவறவிடப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பில் அவர் எந்தவொரு கவலையும் இன்றிக் காணப்பட்டது பாரியதொரு பிரச்சினையாகும். அதுமட்டுமன்றி அத்துப்பாக்கி திருடர்கள் கையில் செல்லும் வரைகூட அது தொடர்பில் கவலையின்றியே அவர் காணப்பட்டார். பணத்துக்கு பாதுகாப்புக்காக வந்த பாதுகாப்புக் காவலாளி எந்தவித பொறுப்பும் இன்றி தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை வானில் வைத்துவிட்டு உணவுச்சாலைக்குச் சென்று சந்தோஷ உணர்வுடன் தேநீர் அருந்தியமையே எல்லோரும் அவர் மீது சந்தேகப்பட வைத்ததற்கான காரணமாக அமைந்தது. இந்தச் சம்பவத்துடன் ஒன்றுடனொன்று தொடர்புபட்டிருக்கும் விதத்தில் சாரதி மற்றும் பாதுகாப்புக் காவலாளி மீது பொலிஸார் தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்தினர். கணக்காளர்கள் இருவரினதும். தொலைபேசிகளை திருடர்கள் திருடிச் சென்றிருந்தனர். அதுவும் சந்தேகத்துக்கான காரணமொன்றாகக் கருதப்பட்டது. பணத்தைக் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களுக்கு தொலைபேசி ஏன் தேவை என்பது இன்னொரு
சந்தேகத்துக்கிடமான காரணமாகும்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகள் மூலம் இன்னொரு காரணம் வெளிச்சத்துக்கு வந்தது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் உணவுச்சாலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழுவினர் இதற்கு முன்பும் நிறைய தடவை இந்த உணவுச்சாலைக்கு வருகை தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட ஜீப் வண்டி இதற்கு முன் நுகேகொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு
சொந்தமானதாகும். பின்னர் அந்த ஜீப் வண்டியானது விற்கப்பட்டு விட்டதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் கூட்டமும் வானில் வந்த கூட்டமும் சேர்ந்து நல்ல நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பது இதன் மூலம் தெளிவாகின்றது. வானில் வந்தவர்களை கொள்ளையர் கூட்டம் திட்டமிட்டு நடிக்க வைத்திருப்பது இதன்போது அம்பலமாகியுள்ளது. மிளகாய்த்தூள் தூவி அரங்கேற்றப்பட்ட நாடகமானது இரு குழுக்களும் திட்டமிட்டு மேற்கொண்ட சதி என்பது பொலிஸாருக்கு புலனாகியது. குறித்த மிளகாய்த்தூள் சம்பவமானது பொலிஸாரின் பார்வையை திசைதிருப்பி விடுமென்றே அந்த இரு குழுவினரும் நம்பினர். எப்படியிருந்தாலும் இவ்வாறு திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றிய கொள்ளையர்கள் கூட்டம் இன்னும் இருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கேற்ற விதத்தில் அவர்கள் நடித்திருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்தும், பொலிஸாரின் பிடியிலிருந்தும் தப்பிக்க முடியாது. அவர்களின் சுயரூபம் தற்போது நாட்டுக்கு வெளிப்பட்டுவிட்டது.

நாடகத்தை பொலிஸார் கண்டுபிடித்து விட்டாலும் சம்பந்தப்பட்டோரை (இப்பத்தி எழுதும் வரை) பொலிஸாரால் இதுவரை கைது செய்ய முடியாமல் போய்விட்டது. இவர்களை கைது செய்யும் பொருட்டு களுத்துறை - பாணந்துறை பொறுப்பான பொலிஸ் அதிகாரி உபுல் ஆரியரத்ன, உதவி பொலிஸ் அதிகாரி பீ.பி.என். ஜயசிறி ஆகிய அதிகாரிகளின் கீழ் புளத்சிங்கள பொலிஸ் மா அதிபர், பொலிஸ் பரிசோதகர் கோசல ரங்க பெரேரா, குற்றப்பிரிவு தலைவர், உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்த மற்றும் கொஸ்தாபல்களான தரங்க, ரோஹித, ஸ்ரீமால், பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஜயகொடி ஆகிய பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக