கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

தொடரும் வேட்டை.....

கடந்த வாரத்தின் நாளொன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினூடாக பாதாளக்குழு ஒழிப்பு பிரிவுக்கு தகவலொன்று கிடைக்கப் பெற்றது. அந்த புலனாய்வு பிரிவு தகவலுக்கு அமைய, இவ்வளவு காலமும் டுபாயில் தலைமறைவாகியிருந்த மதுஷ் லக்ஷித அல்லது மாகந்துரே மதுஷ் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே அரசியல் பாதுகாப்பைக் கேட்டு சுவிற்சர்லாந்துக்கு தப்பிச் செல்ல மதுஷ் அதிக அக்கறை காட்டியிருந்ததாகவும் புலனாய்வுப் பிரிவினரால் ஊகித்துக் கொள்ள முடிந்திருந்தது.
தனக்கு இலங்கையால் பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக தெரிவித்தே மதுஷ் இவ்வாறு சுவிற்சர்லாந்துக்கு பாதுகாப்பு தேடிச் சென்றதாகவும் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியவந்துள்ளது இத்தாலிக்கு தப்பிச் சென்ற மாகந்துரே மதுஷ்க்கு பாதுகாப்பளித்தது. யாரெனவும் புலனாய்வுப் பிரிவினர் அறிந்து கொண்டனர். தெற்கில் நடைபெற்ற மனிதக் கொலை, கொள்ளையடிப்பு மற்றும் கப்பம் பெறல் ஆகிய சம்பவங்களுக்கு தலைமை தாங்கிய எஸ்.டி. எப். நதுன் இத்தாலியில் அமைந்துள்ள மிலான் நகரிலேயே வசித்து வருகிறான்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எஸ்.டி.எப். நதுன் மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோருக்கிடையில் பெரும் வைராக்கியமொன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இதுவரையில் அந்த வைராக்கியமானது மாறி நல்ல நட்பை இவர்களிருவரும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக பாதாளக்குழு ஒழிப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நட்பின் மூலம் நதுன் மதுஷை இத்தாலிக்கு அழைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்தாண்டு முழு தெற்குப் பகுதியையுமே அச்சத்தில் பீதியடையச் செய்த சம்பவமாக கருதப்பட்ட தெற்கு கொலைகளை அரங்கேற்ற நதுன் தனது சகாவான டுபாயில் வசிக்கும் கொஸ்கொட சுஜிக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது கொஸ்கொட சுஜியின் எதிரியான கொஸ்கொட தாரக மற்றும் அவனின் சகாக்களை கொல்வதற்காகவாகும். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இரவு 7.15 மணியளவில் பட்டபொல ஈரியகஹ தொல பிரதேசத்தில் கொஸ்கொட தாரகவின் உறவினர்கள் சிலரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. அத்துப்பாக்கிச் சூடானது நதுனின் சகாவான கொஸ்கொட சுஜியின் குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர் .
கொஸ்கொட சுஜியால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்குக் காரணம், நதுனின் நெருங்கிய உறவினரான பலபிட்டிய பிரதேச சபை முன்னாள் அமைச்சரான மகிந்தராஜா சொய்சா எனும் ஐ.தே.க. கட்சியைச் சேர்ந்தவரும் அவரின் இரு பிள்ளைகள் மற்றும் மேலும் நெருங்கிய ஒருவர் ஆகியோர் கொஸ்கொட தாரகவால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் படலமாகவே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இச்சம்பவமானது கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அதிகாலை வேளையில் முழு கொஸ்கொட பிரதேசத்தையே பயத்திற்குள்ளாக்கி இடம்பெற்றிருந்தது.
கடந்த ஆண்டின் இறுதிப் பகுதிகளில் தெற்குப் பகுதிகளில் இடம்பெற்றிருந்த தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், பொலிஸ் விசேட பாதுகாப்பு அதிகாரிகளின் தெற்குப் பகுதிக்கான விசேட பாதுகாப்பின் பின்னரே சற்று தணிந்திருந்தன. கொஸ்கொட தாரக தெற்குப் பகுதியை தனது ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்து விடுவான் என்ற பயத்தினடிப்படையிலேயே கொஸ்கொட சுஜி அதை இல்லாமல் செய்வதற்கு எஸ்.டி.எப். நதுனின் உதவியை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நதுன் இத்தாலி மிலான் நகரில் சுகபோக வாழ்க்கையை மேற்கொண்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பாதாளக் குழுவில் அங்கம் வகித்திருந்த ‘குடு லால்’ என்பவரைப் பற்றி புலனாய்வுப் பிரிவுக்கு புதிய தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. கம்பஹா பிரதேச முன்னாள் பாராளுமன்ற அமைச்சரொருவரின் சகாவான குரு லால், கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதாளக் குழு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குப் பின்னர் தனது பாதுகாப்புக்காக வேண்டி இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றான். அங்கு சென்ற அவன் அந்நாட்டுப் பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் எமது நாட்டில் இடம்பெறும் ஹெரோயின் வியாபாரத்தில் அவனது தலையீடு காணப்படுவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தெரிவிக்கின்றனர். குடு லால் இங்கிருக்கும் போது மாளிகாவத்தை பிரதேசத்தையே தனது பிடிக்குள் வைத்திருந்தான். அவ்வாறே மோதர பிரதேசத்தை தன்வசம் வைத்திருந்த ‘தொட்டலங்க சாகல’ என்பனவும் பிரபல அரசியல்வாதியொருவரின் துணையோடு பாதாளக் குழு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தான். வெல்லே சுரங்க பிரின்ஸ் கொலமிஸின் சகாவான சமந்த மற்றும் பிரான்ஸிலிருந்து ஹெரோயின் விற்பனையை மேற்கொண்டிருப்பவனுமான ரூபன் ஆகியோர் குடு லாலின் நண்பர்களாவர்.
இங்கிலாந்தில் வசித்துவரும் குடு லால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இத்தாலி மிலான் நகருக்கு வருகை தந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரால் பாதாள ஒழிப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. குடு லாலை இங்கிலாந்தில் இருந்து தான் வசிக்கும் மிலான் நகருக்கு எஸ்.டி.எப். நதுனே அழைத்திருந்ததாக பாதாள ஒழிப்பு பிரிவினர் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமன்றி இத்தாலி , மிலான் நகரில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலொன்றிலேயே குடு லாலினதும் நதுனினதும் சந்திப்பு இடம்பெற்றிருந்தது என்றும் பாதாள ஒழிப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
மாகந்துர மதுஷ்வை இத்தாலிக்கு வரவழைத்ததன் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்காகவே மேற்படி சந்திப்புடனான விழாவுக்கு நதுன் தனது சகாவான குடு லாலுடன் இணைந்ததாக பாதாள ஒழிப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விழாவுக்கு வெவ்வேறு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாதாளக் குழுத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதான பாதாளக் குழுத் தலைவர்களான மாகந்துரே மதுஷ், எஸ்.டீ.எப். நதுன் மற்றும் குடு லால் ஆகிய மூவரும் ஒன்றிணைந்திருப்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமென பாதாளக்குழு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெனி ஹித்தெட்டிய கொலையில் சம்பந்தப்பட்ட மாகந்துரே மதுஷ்க்கு இதுவரையிலும் தேசிய பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கையொன்றும் விடுக்கப்பட்டிருக்கிறது. தேசிய பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் அவனை கைது செய்வதற்குரிய அதிகாரம் அவன் வசிக்கும் நாடுகளின் பாதுகாப்புப் பிரிவினருக்கு இல்லை. சிவப்பு எச்சரிக்கை என்பது குறித்த நபர் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதேயாகும். இருப்பினும் தேசிய பொலிஸாரூடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவரை அவர் வசிக்கும் நாடுகளிலுள்ள பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்து தேசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.
பிரபல பாதாளக் குழு உறுப்பினர்களில் இதுவரையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது டுபாயில் வசிக்கும் கொஸ்கொட சுஜிக்கு மட்டுமே. மாகந்துரே மதுஷ்க்கு எதிராக நம் நாட்டின் விசாரணைகளுக்குப் பின்னர் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தேசிய பொலிஸாரூடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கவென தேவையான சட்ட ரீதியான விடயங்களை பாதாள ஒழிப்புப் பிரிவினர் இதுவரையிலும் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியை பாதாளக் குழுக்களில் வென்றது அருண தமித் உதயங்க பத்திரண அல்லது ‘ரணாலே சமயங் ’ என்பவராவார். கராத்தே தம்மிக்க, கடுவெல வசந்த ஆகிய பாதாளக் குழு தலைவர்களைக் கொண்ட கடுவெல பிரதேசத்தையே தன்வசம் வைத்திருந்த சமயங் தனது எதிரியை கொலை செய்த பின்பு அவனது அதிகாரமானது மேலும் ஓங்கியிருந்தது. மேலும் அவனின் எதிரிகளாகிய இருவர் அதாவது அங்ககொட லொக்காவின் நெருங்கிய சகாவான அங்கொட ரதத்ரன் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி ‘சமயங்’ வின் கூட்டத்தினரால் கொலை செய்யப்பட்டிருந்தான். மற்றையவரான அத்துருகிரியே லெடியாவின் நெருங்கிய ந்ணபரான அத்துருகிரியே பண்டா என்பவர் அங்கொட ரத்தரனின் கொலை இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் அத்துருகிரிய சிகையலங்கார நிலையத்தில் வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததுருந்தாலும் உங்களை நான் கொல்லாமல் விட மாட்டேன் ’ என்பது களுத்துறை சிறைச்சாலையில் இருந்த சமயங்கால் அங்கொட லொக்காவுக்கு தொலைபேசி மூலம் வழங்கப்பட்ட தகவலாகும். இதனால் பயப்பீதிக்காளான அங்கொட லொக்கா மற்றும் அத்துருகிய லெடியா என்போர் தங்களது பரம எதிரியை பரலோகம் அனுப்பவென 2017 பெப்ரவரி 27 ஆம் திகதி திட்டமொன்றை தீட்டினர். அத்திட்டமானது டுபாயிலிருந்த மாக்கந்துர மதுஷால் தீட்டப்பட்டிருந்தது.
சிறைச்சாலை பஸ்ஸில் கடுவெல நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயங் மற்றும் அவனது நண்பர்கள் நால்வரும் சிக்காக்கோ முறைக்கு ஏற்ப துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு களுத்துறை எத்தனமடவல பிரதேசத்தில் வைத்து அங்கொட லொக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சமயங்கவை கொலை செய்த அங்கொட லொக்கா மற்றும் அத்துருகிரிய லெடியா ஆகியோர் இரகசியமாக கப்பல் மூலம் மாகந்துர மதுஷால் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது வரையிலும் அவர்களிருவரும் பதுங்கியிருப்பது இந்தியாவிலேயே. அங்கிருந்து டுபாய்க்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் இவர்களிருவரும் அந்நாட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். இருப்பினும் மாகந்துர மதுஷின் ஆலோசனைக்கு ஏற்ப அந்த தடுப்பு மையத்திலிருந்து இவ்களிருவரும் தப்பிச் சென்று விட்டனர். இதுவரை நமது நாட்டிலிருந்த பிரபல பாதாளக் குழுக்களின் தலைவர்கள் இத்தாலி, டுபாய் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலேயே தலைமறைவாகியிருக்கின்றனர். மீண்டும் சில நாட்கள் கழிந்த பின்னர் ட்ரனில் பண்டார தர்மஸ்ரீ அல்லது அத்துருகிரிய பண்டாவை கொலை செய்வதற்கு சமயங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிகையலங்கார உரிமையாளரான ருக்மல் பிரதேசத்தில் வசித்த மஞ்சுளா சந்துனி அபேரத்னவை இரண்டு துப்பாக்கிதாரர்களின் ஒத்துழைப்போடு கொன்றனர்.
அன்றிலிருந்து தலைமறைவாகிய மதுஷின் குழு, தலங்கம விமலதிஸ்ஸ மாவத்தையில் வாடகை வீடொன்றில் சமயங்கின் சகா ஒருவர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் பொருட்டு கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதாளம் என்றால் என்னவென்றே தெரியாத கிறிஸ்ரின் பெர்னாண்டோ என்பவர் கொல்லப்பட்டார். மற்றும் அவரது மனைவி கடுங்காயங்களுக்குள்ளானார். மற்றும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பெரல்ல பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பிரசாத் குமார என்பவரை இலக்கு வைத்து இவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் படுகாயமடைந்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாகந்துரே மதுஷின் நெருங்கிய நண்பரான ஹர்ஷ யசஸ் ஸ்ரீ என்பவர் ராஜகிரிய ஒபேசேகர புர பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தின் போது பிரசாத்குமார அச்சம்பவத்தின் போது அங்கு வந்திருந்ததற்காகவே பழிதீர்க்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மாகந்துரே மதுஷை மேலும் காயப்படுத்துவதற்காக மீண்டுமொரு முறை சமயங்கின் குழுவினரால் மதுஷின் சகோதரரைப் போன்றவரும் கொழும்பு ‘ஈணூணிணீட்ஞு’ வாடகை வாகன உரிமையாளருமான அப்துல் ரஹீம் மொஹமட் ரிஸ்கான் என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அளுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிகளின் அருகாமையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த பழியை தீர்த்துக் கொள்வதற்காகவே மாகந்துரே மதுஷ் தனது நண்பர்களுடன் இணைந்து ரிஸ்கானின் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட மேட்டார் சைக்கிளை வழங்கியமைக்காக பண்டிதகே சாந்த குமார அல்லது கொஸ்மல்லி என அழைக்கப்பட்டவர் மார்ச் மாதம் 7 ஆம் திகதி அங்குணுகொலபொலெஸ்ஸ, கோதாபய பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். பின் அவரது தலை மாத்திரம் கெசல் வத்த, பண்டாரநாயக்க மாவத்தையில் குப்பை போடும் இடமொன்றில் கறுப்பு பொலித்தீனால் சுற்றப்பட்டு போடப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
கொழும்பு பாதாளத்தில் இந்த கொலைச் சம்பவங்களோடு சேர்ந்து மார்ச் 9 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் வைத்து டிலான் மதுசங்க என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது கெசல்வத்த தினுக என்பவரின் பேரிலேயே என்பதை பாதாள ஒழிப்புப் பிரிவினர் இதுவரையிலும் கண்டறிந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி அத்துருகிரிய கல்வருசா பாதையில் மதுஷ்கவின் குழுவினரால் சமயங்கின் சகாவான நிமல்சிறி பெரேரா அல்லது சுதுமல்லி என்றழைக்கப்படுபவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அன்றைய தினமே கொட்டாஞ்சேனை பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தனி ராஜ் என்பவரே அதில் பலியானார். அத் துப்பாக்கிப் பிரயோகமானது மதுஷில் மேற்கொள்ளப்பட்டதாகவே பாதாள ஒழிப்புப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அங்கொட லொக்காவின் தலைமையின் கீழ் மீண்டும் மார்ச் 25 ஆம் திகதி சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் ரொஷான் பிரேமலால் அல்லது பொலி ரொஷான் என்பவர் கொலை செய்யப்பட்டார். பணப் பிரச்சினை ஒன்றினாலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதாள ஒழிப்புப் பிரிவின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மார்ச் 26 ஆம் திகதி அதிகாலை வேளையில் மாலபே ஜோதிபால மாவத்தையிலமைந்துள்ள இரு மாடி வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வீட்டின் உரிமையாளர் ரணில் ஆட்டிகல ஆவார். இவர் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றி வருபவர். அந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை. மேலும் மேற்கொண்டவர்கள் தொடர்பிலும் பாதாள குழு பிரிவுக்கு எந்தத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கப்பெற்ற தகவலுக்கேற்ப இறுதி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மாளிகாவத்தை பிரதேசத்திலாகும். அது கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இரவு வேளையாகும். அந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சாவுல் ஹமீட் மொஹமட் நிப்ராஸ் அல்லது நிப்பு என்பவரே கொல்லப்பட்டார். இதுவும் மாகந்துரே மதுஷின் வேலையாகுமென்றே பாதாள ஒழிப்புப் பிரிவினர் நம்பிக்கை கொள்கின்றனர்.
இவ்வாறு மாறிமாறி பழியெடுப்பு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ‘கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு’ என்பதற்கிணங்க இவர்களின் நடவடிக்கை காணப்படுகிறது. இவ்வாறான தொடர்ச்சியான கொலைகளால் பாதாள தலைவர்களின் எழுச்சி மீண்டும் ஆரம்பமாகின்றதோ என்று மக்கள் கவலை கொள்ள வேண்டியுள்ளது. கொழும்பு மீண்டும் பாதாள தலைவர்களின் கைகளுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சநிலையிலேயே வாழ்நாளை கழிக்க வேண்டிய நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக