இரண்டு இதயங்கள் மனப்பூர்வமாக ஒன்றுசேரும் போது அது உண்மையான காதலாயின் யாராலும் பிரிக்க முடியாது. அதே போன்றே சம்பந்தப்பட்ட இருவரின் பொய்யான காதலாலும் இரு இதயங்களும் செத்துப் போனாலும் அதற்கு உண்மையான காதலை குறைசொல்ல முடியாது. காதலி 15 வயதைக் கடந்த பாடசாலை மாணவி. அவள் ஹரிச்சந்திர வலிசிங்க ஆராச்சிலாகே ரொமேஷிகா சத்துராணியாவாள். பன்னல ஜயகமவை வசிப்படமாகக் கொண்ட அவள் இறக்கும்வரை ஒரு பாடசாலை மாணவியாவார். அவளது காதலனான கோரளகமகே நிஷாந்த என்பவர் 28 வயதுடைய இளைஞராவார். அவர் நாகொல்லா கொட தாரணவை வசிப்பிடமாகக் கொண்டவர். இந்த காதல் ஜோடியானது ஒரு திருமண வைபவத்தின் போதே அறிமுகமாகிக் கொண்டது. அச் சந்திப்பானது கடந்த 2 வருடங்களுக்கு முன்பே இடம்பெற்றது.
அப்போது 26 வயதான நிஷாந்த சத்துராணியை பார்த்த நொடியிலிருந்தே காதல் வயப்பட்டான். சத்துராணியும் காதல் மழையில் நனைந்தாள். இருவரது கண்களும் ஒரே நொடியில் சந்தித்துக் கொண்டன. காதல் என்பது உடம்பு, சதை, நாடி, நரம்பு எல்லாவற்றையும் துளைத்துக் கொண்டு உட்செல்லும் ஒரு அபூர்வ நிகழ்வாகும். இந்த காதல் ஜோடிகளின் நினைவுகளும் அவ்வாறே இறக்கை விரித்து பறந்தன. காதலி தன்னைவிட வயது குறைந்தவள் என்றபடியால் அவள் மீது நிஷாந்த ஒரு கண்ணை வைத்தபடியே இருந்தாள். அவன் அப்படி இருந்ததும் தப்பல்ல. ஏனென்றால் சத்துராணியின் செய்கையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அவனும் கதை கவனிக்கத் தவறவில்லை. இது சம்பந்தமாக அவளிடமும் இடைக்கிடை வினவினான். அவளது மாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவனாகவே ஒருநாள் அவளிடம் சொன்னான். ஒருநாள் அல்ல இரண்டு நாள் அல்ல தொடர்ந்தும் மறுபடியும் சத்துராணியை முன்புபோல் கொண்டுவர நிஷாந்த பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டான். 28 வயதுடைய இளைஞனான நிஷாந்த அன்றிலிருந்து பித்துப்பிடித்தவன் போலானான். வித்தியாசமான யோசனைகள் எழத் தொடங்கின. பின் ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்ட அவன் ஒருவாறு அவனைத் தேற்றத் தொடங்கினான். அவனுக்கு அவனாகவே சமாதானம் செய்து கொண்டான். அதன் பிறகு நன்கு யோசித்துவிட்டு இறுதி முடிவொன்றை எடுத்துக் கொண்டான்.
அதற்கிணங்க கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பன்னல நகரத்துக்குச் சென்ற நிஷாந்தன் அங்கு கூரிய கத்தியொன்றை கொள்வனவு செய்து கொண்டான். அதன் பின் தனது காதலியைச் சந்திப்பதற்காக அவளது வீட்டுக்குச் சென்ற அவன், யாருக்கும் தெரியா வண்ணம் கத்தியை இடுப்பில் செருகி இருந்தான். அவனது இடுப்பில் கத்தியும் கையில் பூங்கொத்து ஒன்றுடனும் தனது காதலியை சந்திக்கச் சென்ற அவன் அங்கு அவளை சந்தித்த பின்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதுவரை சத்துராணியின் தங்கை பாடசாலை சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து மதிய உணவை உட்கொண்டிருந்தாள். வீட்டுக்கு முன் பாரிய சத்தத்துடன் இருவர் கதைத்துக் கொண்டிருப்பது சின்னவளின் காதுக்கு எட்டியது. பின் அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெளியே வந்த வேளையில் தனது சகோதரியும் அவளது காதலனுமான நிஷாந்தவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அவள் நேரில் கண்ணுற்றாள்.
அந்நொடியானது காதலால் தோற்றுப்போன ஒருவரின் நொடியாகவே அவனுக்கு இருந்தது. ஒவ்வொரு நொடியும் அவளிடம் தங்களது தொடர்பை நிறுத்த வேண்டாம் என்று ஒரு வெறியுடனேயே நகர்ந்தது. கெஞ்சினான், மண்டியிட்டான், கடைசியில் அவளிடம் தோற்றுப்போனான். சத்துராணி ஒவ்வொரு தடவையும் அவனை வெறுத்துக் கொண்டே இருந்தாள். அவன் ஆசையாக வாங்கி வந்து கொடுத்த பூங்கொத்தையும் வீசியெறிந்துவிட்டாள்.
அந்த நொடி அவனால் என்ன செய்வதென்று தெரியாமல் போனது. நிலை தடுமாறினான். அவனை அவனாலேயே கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதுவரையிலும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்த நிஷாந்த, பிறகு கூர்மையான கத்தியால் தனது காதலியை சரமாரியாக குத்தினான். அவன் ஆவேசம் கொண்டவன் போலவே அந்நேரத்தில் காணப்பட்டான். வெறி பிடித்தவன் போல நடந்து கொண்டான். அதன்பின் அவன் கொண்டுவந்திருந்த கூரிய கத்தியால் அவனை அங்கும் இங்கும் குத்திக் கொண்டான். பின் வெட்டிவிடப்பட்ட வாழைமரம் போல் அவ்விடத்திலேயே சரிந்து வீழ்ந்தான். பிரதேசத்தில் வேறு வேறு இடங்களில் தும்புத் தொழிலை மேற்கொண்டு வந்த நிஷாந்த, தனது 15 வயதான பாடசாலை மாணவியை (காதலியை) மிகவும் வெறித்தனமாக குத்திக் கொலை செய்ததன் பின்னால் அவனின் ஆழமான காதல் இருக்குமென்பதையே பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். அது மாத்திரமன்றி அவளை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்க இயலாத தன்மையும் புலப்படுகிறது. எவ்வாறாயினும் அவனது கோபவெறியால் காதல் மட்டுமல்ல இரு உயிர்கள் கூட செத்து மடிந்தததே உண்மைக் கதை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக