கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

அடுத்த இலக்கு யார்?
தெற்கில் இன்னும் பாதாளக்குழுக்களின் அட்டகாசம் குறைவடையவில்லை. இக்குழுவுக்கு தலைமை தாங்கும் கொஸ்கொட சுஜி மற்றும் கொஸ்கொட தாரக ஆகியோரின் ஆவேசம் இன்னும் தனிந்தபாடில்லை. அடுத்து எங்கு துப்பாக்கி சத்தம் கேட்கும்? யார் அதற்கு இரையாவார்கள்? என்ற அச்சத்தில் தெற்கு மக்கள் தங்களது அன்றாட பொழுதைக் கழித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி சூரியன் உதயமாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நான்கு பேரின் தாக்குதலால் தெற்கு மறுபடியும் பீதியடைந்தது. அன்றைய தினம் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் யுதப்பிட்டிய, குருந்துகம்பியச, மெனிகம்மானய ஆகிய பிரதேசங்களில் மூன்று சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் தாக்கதலுக்குள்ளாகினர். இத்தாக்குதலில் ஐ.தே.க.யின் முன்னாள் பலபிடிய பிரதேச சபை உறுப்பினர் ஜகமுனி மகிந்தராஜா சொய்ஷா (வயது 50), அவரின் இரண்டு மகன்மார்களான ஜகமுனி ஹயேஷ் (வயது 21), ஜகமுனி துமிந்த விஷ்மிக (வயது 13) மற்றும் கபிலரத்ன (வயது 38) ஆகியோராவர்.
ஜகமுனி மகிந்தராஜா சொய்ஷா என்பவர் பாதாள குழுவின் தலைவர் சுஜியின் மாமாவாவார். அவர் கொஸ்கொட யுதப்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பவர். இவரின் நண்பரான கபிலரத்ன என்பவர் வசித்தது கொஸ்கொட மெனிக்கம்மான பிரதேசத்திலேயே. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொஸ்கொட தாரகவும் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் குழுவுக்கு அறியக்கிடைத்தது. அத்துடன் கொஸ்கொட தாரகவுடன் தேஷான் அபயசேகர என்ற இளைஞனும் வந்திருந்ததாக நேரில் கண்ட காட்சி ஒருவரின் மூலம் பொலிஸ் பரிசோதகர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
இத்தகவல்களுக்கு அமைய இச்சம்வத்திற்கு தேவையான சாட்சிகளையும் கொஸ்கொட தாரக மற்றும் தேஷான் அபயசேகர ஆகியோரை தேடி பொலிஸ் குழு தங்களது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொஸ்கொட பகுதியில் ஏற்பட்ட மேற்படி சம்பவத்தின் விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த தறுவாயில், சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்கள் கழியும் முன்பே படபொல ஈரியகஹஹால பிரதேசத்தில் மேலுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது. அக்கேடாபர் 31 ஆம் திகதி இரவு 7.15 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்படி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றனர். 5 பேர் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்வதே இவர்களின் இலக்காகவிருந்தது.
தாரகவின் மாமா, அவருடைய 3,7,13 வயதுகளையுடைய பிள்ளைகள் மூவர். மற்றும் கார்திருத்துனர் என்போர் மேற்படி சம்பவத்தில் கடுங்காயங்களுக்குள்ளானார்கள். கொஸ்கொடையில் வைத்து தனது மாமா மற்றும் பிள்ளைகள் தாக்கப்பட்டதற்கு பழி தீர்ப்பதற்காகவே மேற்படி தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் கொஸ்கொட சுஜியின் திட்டமிட்ட செயலெனவும் கூறப்படுகிறது. இவ்வளவு திட்டமிடல்களையும் அவர் தற்போது வசிக்கும் டுபாயிலிருந்தே மேற்கொண்டுள்ளார். மாமாவுக்கு மாமா, பிள்ளைகளுக்கு பிள்ளை என கொஸ்கொட சுஜி மற்றும் கொஸ்கொட தாரக என்போரால் மேற்கொள்ளப்படும் மேற்படி பழிவாங்களால் தெற்கு மக்கள் பீதியிலும் அச்சத்திலும் உள்ளனர். அதுமட்டுல்லாது தற்போது படபொல தாக்குதலாலும் அதிர்ந்து போயிலுள்ளனர். இந்த சம்வங்களால் முழு தெற்குக்குமே விசேட பொலிஸ் குழுவினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் நியமித்தார். இவரின் நிபந்தனைக்கமைய பொலிஸ் பரிசோதகர் ஜனக குமாரவின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் ஏனைய பொலிஸார் மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாளக்குழுவினர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாகவிருப்பவர்களை மடக்கிப் பிடிப்பதற்காக குழுவொன்றை அமைத்து தெற்குக்கு விரைந்தனர்.
அதுவரையில் இச்சம்பவம் பற்றி விசாரணை செய்ய காலிமாவட்ட விசேட பொலிஸ்மா அதிபர் சந்தன அழககோன், எல்பிட்டிய வலய பொறுப்பதிகாரி நிஹால் தல்துவவின் மேற்பார்வை மற்றும் முன்மொழிவுகளுக்கமைய தெற்கு மாகாண பொலிஸ் குழு பல விசேட சந்திப்புகளை மேற்கொண்டன. இக்குழுவின் முக்கிய கொள்கையாகவிருந்தது கொஸ்கொட தாரக உள்ளடங்களாக அவனுடைய கூட்டத்தையும் அதேபோல் கொஸ்கொட சுஜி மற்றும் அவனுடைய சகாக்களையும் கைது செய்வதாகும். இவ்வாறே பொலிஸ் குழுக்களின் அடுத்த இலக்காக தெற்கில் மேலும் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதுமாகவிருந்தது. அதனால் முழு தென் மாகாணத்திலுமே விசேட சோதனை நடவடிக்கைகள், விசேட போக்குவரத்து மார்க்கம், விசேட தொலைபேசி இலக்கம் என்பன அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொஸ்கொட தாரக மற்றும் அவரது சகாக்கள் மேற்படி சம்பவத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டதை குற்றத்தடுப்பு பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இருப்பினும் தாரக பற்றி எதுவித தகவல்களும் திரட்டிக் கொள்ள குற்றத்தடுப்புப் பிரிவினரால் முடியாமல் போனது. இதுவரையில் படபொலயில் 5 பேரை காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள குழுத் தலைவர் கொஸ்கொட சுஜியின் சகாக்கள் தொடர்பாகவும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு சரியான தகவலை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இது இவ்வாறிருக்க, மேற்படி நால்வரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கொஸ்கொட தாரகவின் நெருங்கிய நண்பரான தேஷான் அபேசேக்கர என்பவர் கொஸ்கொட பிரதேசத்திலுள்ள கட்டுவில எனும் இடத்தில் கருவாப்பட்டை தோட்டமொன்றில் மறைந்திருப்பதாக கொஸ்கொட பொலிஸாரொருவருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது. உடனடியாக செயற்பட்ட கொஸ்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் உதயசிரிமான்னவும், பொலிஸ் குழுவிலுள்ள பொலிஸ் பரிசோதகர்களான பாலேந்ரா, ஜயசூரிய, இரான், கீர்த்தி, பொலிஸ் கான்ட்ஸ்டபிள்களான தரங்க(72995), சந்ரசிறி(20307), கசுன்(85869), லஹிரு(85835) ஆகிய குழுக்கள் 3 குழுக்களாகப் பிரிந்து கட்டுவில கறுவாத் தோட்டம் அமைந்துள்ள பிரதேசத்தை நோக்கி கடந்த 12 ஆம் திகதி இரவு சென்றனர். எப்படியும் இரவு சாப்பாட்டுக்கு எப்படியாவது தேஷான் வெளியில் வருவான் என நுளம்புக் கடிக்கு மத்தியிலும் 3 பொலிஸ் குழுக்களும் பல மணித்தியாலங்களாக ஒவ்வொரு இடத்திலும் காத்திருந்தன. மத்திய இரவுக்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பொலிஸ் குழுக்களுக்கு யாரோ நடந்து வரும் பாதச் சத்தம் கேட்டது. வருவது தேஷான் என பொலிஸார் ஊகித்துக் கொண்டனர். அவன் வருவது அவர்களுக்கு நன்றாக விளங்கியது. கொண்டையொன்றையும் அவன் போட்டிருந்தான். அவனுக்காகவே காத்துக்கொண்டிருந்த பொலிஸார், உடனடியாக செயற்பட்டு அவனைக் கைது செய்தனர். பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக்கொள்வதற்காக எவ்வளவு போராடியும் அவன் கடைசியாக தோற்றுப்போய் சரணடைந்தான். தாக்குதல் நடந்து கடந்த 15 நாட்களுக்கு மேல் தேஷான் மேற்படி கறுவாத் தோட்டத்திலேயே பதுங்கியிருந்தான். அவனுக்குத் தேவையான சகல வசதிகளும் அவனது சகாக்கள் தயார் செய்து கொடுத்திருந்தனர்.
பிறப்புச் சான்றிதழின் பிரகாரம் அவனது பெயர் சுவாரிஸ் உதார தேஷான் அபேசேக்கர என பதிவிடப்பட்டுள்ளது. 22 வயதுடைய இவன் கொஸ்கொட நானதொட்ட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவன். அவனது மூத்த சகோதரர் கொஸ்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலுக்குள்ளானார். கொஸ்கொட லொக்கா, கொஸ்கொட தாரகவின் நண்பராவார். டுபாயிலிருந்தவாரே சுஜி கொஸ்கொட லொக்காவை பழி தீர்ப்பதற்கு திட்டமிட்டிருந்தான். அவனது திட்டமும் பலித்தது. அத்தாக்குதலுக்கு சுஜியின் இன்னொரு சகாவான ரணா என்பவனும் இன்னுமொருவரும் தாமே தாக்குதலை மேற்கொண்டோமென சரணடைந்தனர். தனது உயிர் நண்பரான கொஸ்கொட லொக்காவின் மரணத்துக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ள தாரக திட்டமிட்டுக் கொண்டிருந்தான். தனது அண்ணனை கொன்றவனை பழிதீர்க்க வேண்டுமென்றே வெறியோடு காத்திருந்த தேஷான், தாரகவுடன் கைகோர்த்தான். கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட தேஷான், மேற்படி துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பான முக்கியமான விடயங்களையும் சாட்சியையும் பொலிஸ் குழுவினருக்கு தெரிவித்தான்.
தாக்குதலுக்கிலக்கான கஜமுனி மஹிந்தராஜ சொய்சாவின் மூத்த மகனான 21 வயது நிரம்பிய கஜமுனி அயேஷ் 2014 ஆம் ஆண்டு லொறியொன்றை ஓட்டிக் கொண்டு வீடு நோக்கி வரும் வழியில் ஏற்பட்ட சிறுபிரச்சினையொன்று வாய்த்தக்கமாக மாறியுள்ளது. மேற்படி லொறியினால் பின்னால் வந்து கொண்டிருந்த ஆட்டோவொன்றுக்கு முன்னுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டோ சாரதி லொறிச் சாரதியான அயேஷை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளான். அன்று மேற்படி ஆட்டோவை ஓட்டி வந்தவர் தேஷான் அபய சேக்கர. இதைக் கேள்வியுற்ற கொஸ்கொட லொக்கா தனது தம்பியான தேஷானையும் மேலும் சிலரையும் அழைத்துக் கொண்டு மஹிந்தராஜாவின் வீட்டுக்குச் சென்று மஹிந்த ராஜாவையும் அவரது குடும்பத்தாரையும் தடிகளால் அடித்துவிட்டுச் சென்றிருந்தான். ஆனாலும் தன்னையும் தனது குடும்பத்தையும் தாக்கிய கும்பலை பிடித்துக் கொள்ள சொய்சாவால் முடியுமாகிப் போனது. மேற்படி குழுவந்த ஆட்டோவில் கைக்குண்டொன்று காணப்பட்டதையடுத்து அது சம்பந்தமான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. களுத்துறை வெலிகபன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற கொஸ்கொட லொக்காவின் இறப்புக்கு காரணமான டுபாயிலுள்ள சுஜிக்கு தகவல் கொடுத்தது மகிந்தராஜாவின் நண்பரான கபிலரத்ன என்பவரே என்பதை கொஸ்கொட தாரகவும் தேஷானும் அறிந்து கொண்டனர். அதற்கமைய 2014 இல் இடம்பெற்ற வாகனப்பிரச்சினை மற்றும் 2017 மே மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற கொஸ்கொட லொக்கா தாக்குதல் ஆகிய இருசம்பவங்களையும் மனதில் கொண்டு மஹிந்தராஜாவின் குடும்பத்தையே கொன்றொழிக்க வேண்டுமென்ற இலக்கோடு அக்டோபர் 29 ஆம் திகதி ஆயுதங்கள் சகிதம் யுதப்பிட்டிய பிரதேசத்துக்கும், மெனிக் பிரதேசத்துக்கும் மேற்படி முழுக் கூட்டம் பாயத் தொடங்கியது. மருதானை சொப்பெலா, நாவல நிஹால்லா, கடுவெல வசந்தலா உள்ளடங்களாக மற்றும் சிலருக்கு தாக்குதல் மேற்கொண்டது.
எவ்வாறிருப்பினும் பாதாளக் குழுவை அடியோடு இல்லாதொழிப்பதாயின் முழு குடும்பத்தையுமே குழிதோண்டிப் புதைக்க வேண்டும். இல்லாவிடின் பழிக்கு பழி அரங்கேறிக் கொண்டே இருக்கும். கொஸ்கொட தாரகவுக்கு பாதாளக் குழுவில் பெரிய மரியாதை இருந்தது. ஆனால் அந்த மரியாதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இல்லாமல் போனது. அப்படியாயின் பிலியந்தலை, அத்திடிய பிரதேசத்தில் தனியார் வங்கியொன்று கொள்ளையடிக்கப்பட்டது மற்றும் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரியை சுட்டது போன்றவற்றால் கொஸ்கொட தாரகவும் பாதாளக் குழுவில் தனது பெயரை நிலைநிறுத்திக் கொண்டான். இதுவரையிலும் அக்குழுவுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த மாகந்துரே மதுஷ் என்பவரும் தாரகவுடன் சேர்ந்து பல வேலைகளைச் செய்துவந்தவனாவான். கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய தெற்கில் இவ்வாறான அராஜக செயல்கள் இடம்பெறுவதற்குப் பின்னால் அரசியல்வாதியொருவர் இருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. கொஸ்கொட சுஜியின் பதிவுத் திருமணத்தின் போதும் பிரபல அரசியல் வாதி ஒருவரே கையொப்பமிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் மூலம் வரவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலில் சுஜியின் சகோதரியோருவர் களமிறக்கப்படுகிறார் என்ற தகவலும் சகிந்துள்ளது.
அவ்வாறே ரத்கம பிரதேச சபை முன்னாள் உறுப்பினரொருவரான மனோஜ் மென்டிஸும் தனது இறுதி முடிவுக்காக பாதாளக் குழுவை நோக்கியே செல்வார். இதுவரையிலும் கொஸ்கொட சுஜிக்கும், கொஸ்கொட தாரகவுக்கும் பெரும் மனப்பதற்றம் ஏற்பட்டிருகக்கூடும் என பொலிஸ் குழுவால் நம்பப்படுகிறது. எவ்வாறிருப்பினும் இந்த பாதாளக் குழுவின் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் தெற்கிலுள்ள பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பயத்தையும் பீதியையும் துடைத்தெறிவது குற்றப்புலனாய்வாளர்களின் பொறுப்பும் கடமையுமாகும். குற்றப்புலனாய்வாளர்களின் அடுத்த இலக்கானது கொஸ்கொட தாரக அடங்கலாக அவனது கூட்டத்தை பிடிப்பதும் சுஜி அடங்கலாக அவனது கூட்டத்தை கைது செய்வதுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக