க.பிரசன்னா
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 10,000 இற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகின்றன. ஆண், பெண் என்ற பேதமின்றி சகலரும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் நிலை இலங்கையில் தற்போது பலருக்கும் தோன்றியுள்ளது. அவ்வாறானதொரு சம்பவம் கடந்த மாதம் நம் நாட்டில் பதிவாகியிருக்கின்றது. பல கனவுகளுடன் பாடசாலை வாழ்க்கையை கடந்து செல்லும் உயர்தர மாணவியின் வாழ்க்கை கண்ணீர் கதையாய் இங்கு எழுதப்படுகிறது.
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 10,000 இற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகின்றன. ஆண், பெண் என்ற பேதமின்றி சகலரும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் நிலை இலங்கையில் தற்போது பலருக்கும் தோன்றியுள்ளது. அவ்வாறானதொரு சம்பவம் கடந்த மாதம் நம் நாட்டில் பதிவாகியிருக்கின்றது. பல கனவுகளுடன் பாடசாலை வாழ்க்கையை கடந்து செல்லும் உயர்தர மாணவியின் வாழ்க்கை கண்ணீர் கதையாய் இங்கு எழுதப்படுகிறது.
ஆகஸ்ட் 23, நண்பகல் 12 மணியளவில் கிரிபாவ கிழக்கு, இலக்கம் 02, சுதர்மராம மாவத்தை, சாலிய அசோகபுரவில் வசித்து வந்த 17 வயது மாணவி ஏக்கநாயக்க முதியன்சலாகே சந்யா மதுஷானி ஏக்கநாயக்கவின் இறுதித் தருணம் மிக கொடூரமாகவே அமைந்திருந்தது. பல்கலைக்கழகம் செல்லவேண்டுமென்ற கனவோடு உயர்தரப் பரீட்சையை எதிர்கொண்டிருந்த சந்யாவின் இறுதி நொடிகள் மனித மிருகத்தால் மோசமானதாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. பல மணித்தியாலங்களாக புத்தகத்தினுள் மூழ்கியிருந்த சந்யா, சிறிய இடைவேளையை எடுக்க விரும்பி தொலைக்காட்சி முன் அமர்ந்தாள். மிகவும் சத்தமாக ஒளித்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் மத்தியில் கொலைச் சந்தேக நபர் தனது வாழ்க்கையை இறுதிநொடிக்கு கொண்டுசென்றுவிடுவார் என்ற நிலைமை அறியாமல், நபரை நோக்கி சிறிய புன்னகையை உதிர்த்திருந்தாள்.
ஆனால், சந்தேக நபருக்கு அவளுடைய புன்னகை, மனமாற்றமாக அமையவில்லை. பதிலாக அவளுடைய சொந்த படுக்கையறையிலே பலியாகிப்போனாள். ஆனால், தனது இறுதிநிமிடங்களில் தனது தாய், தந்தை, சகோதரனின் பெயரை உச்சரித்து அழைக்க முயன்றபோதும் ஒரு துண்டுத் துணியினால் அவளுடைய வாய் இறுக அடைக்கப்பட்டதால் அவளுடைய உதவிக்கான அழைப்பும் தொலைக்காட்சிப்பெட்டியோடு மாயமாகிப்போனது. பொலிஸார் சந்யாவின் உடலை கண்டெடுக்கும்போது, அவளுடைய உடலில் இருந்த அடையாளங்கள் அவள் வல்லுறவுக்கு உட்பட்டிருப்பதை அடையாளப்படுத்தின. அவளுடைய வாழ்க்கை மிக குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இவளுடைய 17 வருட கால வாழ்க்கையில் அனுபவித்த சந்தோஷங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்துமே அஸ்தமனமாகி போய்விட்டன.
சம்பவத்தின் சிலமணிநேர இடைவெளியில் சந்யாவின் தந்தை வயலில் வேலை முடித்து வீடு திரும்பியிருந்தார். சகோதரன் தொழில் நிமித்தம் நகருக்குச் சென்றிருந்தான். தாய் விற்பனையகத்தை மூடிவிட்டு அன்றையதினம் வேளைக்கே வீடு திரும்பிவிட்டாள். ஆனால், ஏதோ விபரீதமொன்று நடந்திருப்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை. தாய் வேளைக்கே விடு திரும்பியிருந்தாலும் மகளுக்கு அது பிந்திய நேரமாகவே இருந்தது. தனது மகள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாள். சந்யா உணர்விழந்தவளாய் படுக்கையில் கிடந்தாள். உடனடியாக அயலவர்கள் மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக களத்தில் இறங்கிய கிரிபாவ பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கே.வி.பி.ரி. தீபால் மற்றும் மீகலேவ, கல்கமுவ பொலிஸார் சந்யாவின் வீட்டினை வந்தடைந்தபோதும் அவளை உயிருடன் மீட்பதில் தோல்வியே கண்டிருந்தனர். ஆனால், உடனடியாக புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த விடயம் சாலிய அசோகபுர முழுவதும் பரவ பதறிய நெஞ்சங்களோடு மக்கள் சந்யாவின் வீட்டை சுற்றி குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரும் சந்யாவை நினைத்து புலம்பினார்கள். சந்யா அவளது பாடசாலையில் திறமையான மாணவியும் கூட. 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தாள்.
சந்தேகநபர் தனது கிராமத்தை விட்டு பஸ் மூலம் தப்புவதை உணர்ந்த பஸ் நடத்துனர், உடனடியாக சந்தேக நபர் தொடர்பாக கிரிபாவ-பலுவேவ சந்தி முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்திலுள்ள இளைஞனுக்கு அறிவித்திருந்தார். விரைந்து செயற்பட்ட இளைஞனால் பஸ்ஸினை பலுவேவ சந்தியில் நிறுத்த முடிந்தது. சந்யாவின் வாழ்க்கையினை சீரழித்த சந்தேகநபரை முச்சக்கரவண்டிச் சாரதி பொலிஸாரிடம் ஒப்படைத்தார். பொலிஸார், சந்தேகநபர் 31 வயதுடைய ஹர்சன சமன் குமார எனும் திருமணமாகாதவரென உறுதிப்படுத்தியிருந்தனர். இதன்பின்னர் விசாரணைகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டது. சந்யாவின் வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி மஞ்சள் நிற டேப் சுற்றப்பட்டது. வீட்டின் சகல கதவு, ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டன. யாருமே வீட்டுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
சந்தேக நபர் போதைக்கு அடிமையானவரென அங்கிருந்தவரால் கிசுகிசுக்கப்பட்டதுடன் இச்சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரின் தாயும் தந்தையும் அப்பகுதியைவிட்டு வெளியேறியிருந்தனர். அவர்களுடைய வீடு உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் சந்தேகநபரின் கைத்தொலைபேசியிலிருந்து 300 ஆபாச வீடியோக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. கிரிபாவ பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன் சந்யாவின் உடல் பிரதேச பரிசோதனைக்காக அனுராத போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கல்கமுவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வல்லுறவு மற்றும் கொலைக்குற்றம் பதிவுசெய்யப்பட்டதுடன் சந்தேகநபரை செப்டெம்பர் 4 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
சந்யாவின் வீடு அவளின்றி வெளிச்சமிழந்தது. குடும்பத்தார், நண்பர்கள் அவள் இன்றி வாடுகின்றனர். சந்யாவின் இறுதி கிரியையின் போது சந்தேக நபரின் தாய் அனுப்பிவைத்த கடிதமொன்று தேரரினால் வாசிக்கப்பட்டது. அதில் எனது மகனைத் தூக்கிலிட்டாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது. சந்யாவின் கொலையாளிக்கு நீதிமன்ற மூலம் உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இலங்கையில் 2014ஆம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,315 சம்பவங்களும் 2015இல் 10,732 சம்பவங்களும் 2016 ஜூலை வரையில் 6,548 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வல்லுறவு சம்பவங்களினால் சிறுவர்களின் மகிழ்ச்சியான உலகம் காமுகர்களினால் தட்டிப்பறிக்கப்படுகின்றது. பாடசாலை, வீடு, சுற்றுச்சூழல் என சகலதும் இவர்களுக்கு பாதுகாப்பற்ற தளமாகவே இருக்கின்றது. ஆண், பெண் பேதமின்றி சிறுவர்கள் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். மாணவி வித்தியாவின் கூட்டு வன்புணர்வு நீதி கிடைக்காமல் இழுபட்டு வரும் நிலையில் சந்யாவின் வழக்கு பதிவாகியிருக்கிறது. நீதிமன்ற வழக்குகளின் நிலுவைகள் குறைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனைகள் உறுதிப்படுத்தப்பட்டு சிறுவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக