சனா
இயற்கை அனர்த்தங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயிருப்பதால் அவசரத் தேவையாக நிவாரணங்கள் பெற்றுக் கொடுப்பதே முக்கிய தேவையாக இருக்கிறது. அனர்த்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், மீண்டும் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு இடம்பெற்ற பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறு மண்சரிவு ஏற்படுவது இது முதற்தடவையல்ல. மலையகத்தில் பல்வேறு இடங்களில் இதற்கு முன் மண்சரிவால், ஏனைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னும் பாதுகாப்பற்ற சொந்த இடங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். தற்போது அரசினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் அவர்களுக்கும் உரித்துடையதல்லவா?
அவ்வாறெனில் மலையகத்தில் அனர்த்தப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள சகலரும் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான சூழலுக்குள் அனுமதிக்கப்படுவார்களா? இந்த திடீர் ஞானத்திற்கான காரணம் என்ன? மலையகத்தில் இதுவரை இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் தான் என்ன? தற்போது வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்கள் பெரும்பான்மை அரசியல் தலைமைகளுக்கும் உயர்பதவிகளை அலங்கரிக்கின்றவர்களுக்கும் உரித்தான அரசியல் பகுதி என்பதாலா இச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன?
மனிதாபிமான உதவிகள் என்று பெரும்வாரியாக பேசிக் கொண்டாலும் நிவாரணங்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. அவ்வாறே மலையக நிவாரணங்களிலும் அரசியல் கலந்திருக்கிறதா? மலையக மக்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் இதற்கு தக்கச்சான்று. மாவட்ட ரீதியாக பிரிக்கப்படாத வீடமைப்புத் திட்டமானது திட்டத்தை முன்னெடுக்கின்ற அரசியல் தலைமைகளின் செல்வாக்குமிக்க பகுதிகளுக்கே அதிகமான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதான குற்றச்சாட்டுகளே மேலோங்கியிருக்கின்றன. இதுவே அண்மைய கால மலையகத்தின் பிரதான கட்சிபொன்றின் உட்கட்சிப்பூசலுக்கு காரணமாக இருக்கின்றது.
வீடமைப்புத் திட்டங்களை அமுல்படுத்தும் போது மலையகத்தில் ஏற்கனவே நீண்டகாலமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு நிவாரணங்கள் முறையாக கிடைக்கப் பெறாமல் வாழ்ந்துவரும் குடும்பங்களை முதல் இலக்காகவும் தற்போது பாதிக்கப்பட்டு முகாம்களில் இருக்கும் மக்களை அடுத்ததாகவும் இத்திட்டத்துக்குள் உள்வாங்குவதே பொருத்தமானது. இன்று அதிகமான பெருந்தோட்ட மக்கள் வசதி குறைந்த லயன் அறைகளில் வாழ்ந்துவருவது தெரிந்ததானாலும் பாதுகாப்பற்ற இடங்களிலேயே பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விடங்கள் அமையப் பெற்றுள்ளமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிப்படியெனில் பெருந்தோட்ட மக்களில் அதிகமானோருக்கு பாதுகாப்பான வீடமைப்புத் திட்டம் அவசியப்படும்.
ஆனால் பிரச்சினை அதுவல்ல. தற்போது வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள 7 பேர்ச் காணியுடனான வீடமைப்புத் திட்டத்தில், காணியின் அளவு 7 பேர்ச்சை விடவும் குறைவான அளவீடே என்பதை பத்திரிகை கட்டுரையொன்றின் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆகவே காணி அளவீடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட மலையகத் தலைவர்கள் தெளிவு கொண்டிருக்கிறார்களா? அல்லது வீடமைப்பை பெற்றுக் கொள்கின்ற தொழிலாளர்கள் இவற்றை கணக்கிலெடுக்கமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை தலைமைகள் கொண்டிருக்கின்றனவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் மலையக மக்களுக்கு முழுமையான சலுகைகளை வழங்க எந்தவொரு அரசியல்வாதிகளும் தயாரில்லை என்பதை மட்டும் தெரிந்துகொள்ள முடிகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீரியபெத்தை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேசம் முழுவதும் வழங்கிய நிவாரணங்களில் உடனடியாகவே அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரக்கூடிய சூழ்நிலை காணப்பட்டும் பெரும்பாலான நிவாரணங்கள் இருந்த இடம் தெரியாமல் போனதால் அவை சாத்தியமில்லாமல் போய்விட்டன. அதுபோலவே சுனாமி அனர்த்தத்தின் போதும் பெரும்பாலான நிவாரணப் பொருட்கள் மாயமாகிவிட்டன. இந்நிலையில் தற்போதும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வந்து குவியத் தொடங்கிவிட்டன. ஆனால் அவை முறையாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு சென்றடைகின்றனவா என்பதும் வீடுகளே இல்லாத அவர்கள் நிவாரணங்களை எங்கு சேகரிப்பார்கள் என்பதுவும் சிந்திக்க வேண்டியதே.
அதேபோலவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களே இன்னும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. வெறும் உலருணவுகளை மட்டும் வழங்கிவிட்டு பாதிக்கப்பட்டவர்களை கைவிடும் நிலையே இதுவரை காணப்பட்டிருக்கிறது. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாததினால் அரசினால் தனியாருக்கு விடுக்கப்பட்ட 2,500 ரூபா சம்பளவுயர்வு தொடர்பான கோரிக்கையே இன்னும் இழுபறியில் இருக்கிறது. கடந்த வாரம் ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்ற த.மு.கூ. அமைச்சர்கள் மற்றும் தொழில் அமைச்சருடனான சந்திப்பில் எவ்விதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. ஆதலால் கடந்த 26 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் மக்களை உள்வாங்காமல் கூட்டணியே முன்னின்று செயற்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது 1,000 ரூபா சம்பளவுயர்வை கைவிட்டு இடைக்கால நிவாரணமான 2500 ரூபா சம்பளவுயர்வை அரசியல் தலைமைகள் கையிலெடுத்துள்ளனர். ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பளவுயர்வு பெறும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசினால் விடுக்கப்பட்ட 2,500 ரூபா சம்பளவுயர்வு கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக் கொள்வதற்குரிய தேவையோ, சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டிய நிர்ப்பந்தமோ சட்ட ஏற்பாடுகளில் காணப்படவில்லையென (22/05/2016 -ஞாயிறு தினக்குரல்) கூறப்படுகின்ற நிலையில், இவர்களின் போராட்டம் எந்தளவுக்கு பெருந்தோட்ட மக்களுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கப் போகின்றதென்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனாலும் இவர்கள் எவ்வளவுதான் போராட்டங்களை முன்னெடுத்தாலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை. வெண்ணையை கையிலெடுத்தாலும் அது வேறொருவரின் வாயிற்குள்ளேயே செல்லப்போகிறது. அதேபோல் இவ்விடயம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் எந்தவொரு சங்கமும் பெரிதாக அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. தேயிலை விலையில் வீழ்ச்சி என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஆக மலையகத் தலைமைகளின் அரசியல், தொழிலாளர்களின் சம்பளவுயர்விலேயே தங்கியிருக்கிறது. அவ்வப்போதாவது இவ்விடயம் தொடர்பில் அதிரடியை காட்டுவது போல் பாசாங்கு செய்தால் தானே மலையக அரசியல் சந்தையில் இவர்கள் விலை போவார்கள்.
28/05/2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக