உலகில் வருடந்தோறும் மில்லியன் கணக்கான விமான விபத்துக்கள் இடம்பெறும் நிலையில் இவ்வருடம் முதலாவது விமான விபத்து சம்பவமாக தாய்வான் விபத்து சம்பவம் அமையப்பெற்றுள்ளது. டிரான்ஸ் ஏசியாவிற்கு சொந்தமான A.T.R.72 என்ற விமானம் 58 பயணிகளுடன் தலைநகர் தைபே, சொங்ஷான் விமான நிலையத்திலிருந்து கின்மென் தீவை நோக்கி பயணித்தவேளை விபத்துக்குள்ளாகி கீலுங் ஆற்றில் விழுந்து நொறுங்கியுள்ளது. தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக காணப்படுவதுடன் 15 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளாகும் காட்சி நேரடியாக வீடியோவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். கீலுங் ஆற்றினையொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் விமானத்தின் பின்பகுதி மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது. எனினும், இப்பத்தி நிறைவுரும் வரையில் பலியானோர் தொகை 32 ஆகவே காணப்பட்டது. டிரான்ஸ் ஏசியாவிற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாவது இது முதற் சந்தர்ப்பமல்ல. இதற்கு முன்புக் கூட பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
டிரான்ஸ் ஏசியா எயார்வேஸானது சீனக்குடியரசின் தாய்வானில் நெய்கு மாவட்டத்தில் அமைந்துள்ள வான்வழி போக்குவரத்து நிறுவனமாகும். ஆரம்பத்தில் உள்ளூர் போக்குவரத்தை மையப்படுத்தியே தனது சேவையை வழங்கிவந்தாலும் தற்போது 15 பன்னாட்டு வழிதடங்களில் தனது சேவையை விஸ்தரித்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு மற்றும் வடகிழக்காசிய நாடுகளுக்கு தமது வான்வழி போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. 16 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இவ்விமான சேவையானது தனது முதலாவது விபத்தினை 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி சந்தித்திருந்தது.
தாய்பேயிலிருந்து மக்காவுக்கு பயணத்தை மேற்கொண்ட A.T.R.72-200 ரக விமானமானது பனி காரணமாக விபத்துக்குள்ளாகியது. மகுங் நகரத்தின் தென்மேற்கில் 17 கிலோமீற்றர் தொலைவில் இவ்விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது. விமானியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணமாக கூறப்பட்டது. தொடர்ந்து 2003, மார்ச் 21 ஆம் திகதி எயார்பஸ் அ 321 விமானம் தாய்பேயின் சொங்ஷான் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு தரையிறங்கும் போது சரக்கு விமானத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. எனினும், இதில் பயணித்த 175 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பி னர். இவ்விமானம் அதிகமாக சேதமடைந்ததால் கைவிடப்பட்டது.
பின்பு 2014 ஜூலை 23 ஆம் திகதி A.T.R..72 --50 என்ற விமானம் கேயோசியுங்கிலிருந்து 58 பயணிகளுடன் சென்று பெங்கு தீவில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 48 பேர் உயிரிழந்ததுடன் 11 பேரில் 7 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அதனைத் தொடர்ந்தே தற்போது இவ்விமான விபத்து இடம்பெற்றுள்ளது. தற்போதைய கணக்கின் படி விமானியுடன் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விமானத்தில் பயணம் செய்தவர்களில் 31 பேர் மத்திய சீனாவைச் சேர்ந்தவர்களாவர்.
இறுதியாக டிரான்ஸ் ஏசியாவிற்கு சொந்தமான விமானம் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 6.9 அடி உயரத்தில் பயணம் செய்திருந்தது. ஆனால் விபத்துக்குள்ளான இவ்விமானம் 3.3 அடி உயரத்திலேயே தனது பயணத்தை நிறைவுக்கு கொண்டுவந்தது. இதுவரை 17 பயணிகளின் உறவினர்கள் சடலங்களை அடையாளம் காட்டியுள்ளனர். இறந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு 38,160 அமெரிக்க டொலர்கள் நஷ்டஈடாக வழங்கப்படுவதுடன் காயமடைந்தோருக்கு 6,360 அமெரிக்க டொலர்கள் உடனடியாக வழங்கப்படுமென டிரான்ஸ் ஏசியா அறிவித்துள்ளது. இவ்விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதுடன், மொத்தம் 12 பேரின் நிலையை அறிய முடியாதுள்ளது.
விமானத்தை செலுத்திய விமானி 4,914 மணிநேர பயண அனுபவத்தையும் சக விமானி 6,922 மணிநேர பறப்பு அனுபவத்தையும் கொண்டவர்களாவர். எனினும், விபத்துக்கான காரணமாக விமானத்தின் பின்பகுதி பாலத்துடன் மோதி சிதைவடைந்ததே என கூறப்படுகிறது. விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டிருக்கும் வேளை விபத்துக்கான காரணத்தை அறியக்கூடியதாக இருக்கும்.
இதுவரை 2014 ஆம் ஆண்டே அதிகளவான விமான விபத்துக்களை சந்தித்த ஆண்டாக காணப்படுகிறது. இந்தாண்டு 2.3 மில்லியன் விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. 2013 ஆம் ஆண்டு1.91 விமான விபத்துக்களே பதிவாகியுள்ளன. இருப்பினும் உக்ரைனில் விபத்துக்குள்ளான மலேஷிய எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் கணக்கில் கொள்ளப்படவில்லை. இது யுத்தத்தால் ஏற்பட்ட இழப்பாகவே கருதப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு 1000 மக்களும் இதற்கு முன்னைய ஆண்டில் 700 பேரும் விமான விபத்துக்களில் உயிரிழந்திருந்தனர். ஆனால்1972 ஆம் ஆண்டு 2370 பயணிகள் விமான விபத்துக்களினால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, விமானப் போக்குவரத்து இலகுவானதாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானதாகவே காணப்படுகிறது. காலநிலை, தீவிரவாதம், விமானியின் அசமந்த போக்கு என்பன விமான விபத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற நிலையில், இனியாவது பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுமா?
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக