கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

23 ஜூன், 2015



உலகில் இன்னுமொரு முறை போர்மூழும் அபாய நிலை தோன்றுமாயின் அவை எண்ணிலடங்கா அழிவுகளை மட்டுமே எம்மிடம் விட்டுச்செல்லும், அந்த வகையில் அமெரிக்கா, சீனா, வடகொரியா ஆசிய நாடுகளிடையே மும்முனை போட்டி இடம்பெற்றுவருகிறது. சீனாவும் வடகொரியாவும் அமெரிக்காவுடன் முரண்பட்டு கொண்டு நிற்கின்றன. அதேபோலவே மூன்று நாடுகளும் அணுவாயுத நாடுகள். இதில் ஏனைய நாடுகளை விட வடகொரியாவின் துணிச்சல் அபாயகரமானது.
ஐக்கிய நாடுகள் சபையின் தடையினையும் தாண்டி தனது அணுவாயுத சோதனைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் அதிக ஆபத்தான நாடாக வடகொரியா இருக்கிறது. ஹிரோசிமா, நகசாகி அணுகுண்டு வீச்சுகளுக்குப்பிறகு சுமார் 2000 தடவைகள் வெவ்வேறு நாடுகளால் அணுகுண்டுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 1949 இல் சோவியத் ரஷ்யாவால் அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது. பின்பு 1950களில் ஐதரசன் குண்டுகளும் 1960களில் அணு ஆயுத ஏவுகணைகளும் தோற்றம் பெற்றன.

இன்று இவை சர்வதேச ரீதியில் பரந்து விரிந்த முக்கிய அபாயகரமான பிரச்சினையாக மாறிவிட்டது. இன்று உலக நாடுகள் அணு ஆயுதங்கள் மூலம் தமது பலத்தினை வெளிகாட்டுவதற்காக போராடுகின்றன. இதில் #வடகொரியா முக்கியமானது. ஏனைய நாடுகளில் அணு ஆயுதங்கள் காணப்பட்டாலும் கூட வடகொரிய ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கு ஏனையோரின் வாதங்களை தவிடுபொடியாக்கி விடுகின்றன.கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்திருந்தது. ஆனால் அத்தடையையும் மீறி நீர்மூழ்கி கப்பலின் மூலம் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரையில் தரையிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளை மாத்திரமே வடகொரியா உருவாக்கியிருந்தது. ஆனால் தற்போது அதன் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. தற்போது அணு ஆயுதங்களை ஏவுகணைகளில் பொருத்துவதற்கான உபாயங்களை கண்டுபிடித்து வருகின்றது. இவை மோசமான அழிவுகளை உருவாக்கக்கூடிய ஆயுதங்களாக எதிர்காலத்தில் தோற்றம் பெறலாம்.

தற்போது உலகில் 9 நாடுகளில் அதிகளவான அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 1980 ஆம் ஆண்டுகளில் 65,000மாக காணப்பட்ட அணு ஆயுதங்கள் தற்போது 10,000 அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன்படி அமெரிக்காவில் 5000 அணுஆயுதங்களும், ரஷ்யாவில்- 5000, பிரான்ஸ்- 300, சீனா-250, பிரிட்டன்-225, பாகிஸ்தான்-120, இந்தியா-110, இஸ்ரேல்-80 என்றளவில் அணுஆயுதங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் வடகொரியா தனது அணுஆயுத பலத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.அடுத்த ஆண்டின் இறுதிப்பகுதிக்குள் தமது அணுகுண்டுகளின் எண்ணிக்கையை இருமடங்காக்க உத்தேசித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற அணுசக்தி நிபுணர்கள் கூட்டத்தில் தற்போது வடகொரியாவிடம்  10-15 வரையான அணுகுண்டுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அணு ஆராய்ச்சி நிபுணர்களின் கருத்துப்படி வடகொரியாவிடம் தற்போது 20 அணு குண்டுகள் இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதன் எண்ணிக்கை 40 ஆக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் அதன் எண்ணிக்கை 100 ஆக காணப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அணுமீதான தடையினை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

1958 ஆம் ஆண்டுகளிலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nதஞிடூஞுச்ணூ Nணிண-கணூணிடூடிஞூஞு ணூச்tடிணிண கூணூஞுச்tதூ-Nககூ) வடகொரியா கைச்சாத்திட்டது. ஆனால் சர்வதேச அணுஆற்றல் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு 1992 ஆம் ஆண்டே இணக்கம் தெரிவித்திருந்தது. அதுவரை அமெரிக்காவின் அணுஆயுதங்கள் தென்கொரியாவிலேயே இருந்து வந்தன. இருப்பினும் அமெரிக்கா- வடகொரியாவுக்கிடையே ஒரு பரஸ்பரமற்ற நிலையே காணப்பட்டது. 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் ஒரு இணைப்பை ஏற்படுத்த முயற்சி செய்திருந்தது.

வடகொரியாவிற்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை தளர்த்தியும், மின் உற்பத்திக்கு தேவையான மென்னீர் அணுஉலைகளை அமைத்து தரவும் முன்வந்தது. ஆனால் அவ்விடயங்களும் இதுவரையும் நிறைவேற்றப்படவில்லை என்பது முக்கியமாகும். 2001 ஆம் ஆண்டு புஷ் பதவியேற்றதும் வடகொரியா மீதான அணுகு முறைகள் மாறியதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் #வடகொரியா மீது அணுக்குற்றச்சாட்டுகள் வலுத்ததை தொடர்ந்து, அணுநிபுணர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியதுடன், Nககூ ஒப்பந்தத்திலிருந்தும் வெளியேறியது தொடர்ந்து 2003-2005 ஆம் ஆண்டு வரை நீடித்த பேச்சுகள் பயன்தராமல் போகவே மீண்டும் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் அணுஆயுத சோதனையை வெற்றிகரகமாக நடத்தி முடித்தது. அன்று முதல் இன்றுவரை எந்தவொரு நாட்டுக்கும் கட்டுப்படாத வகையில் தமது அணுஆயுத நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இது அணுஆயுதப் போட்டிக்கும் முக்கிய காரணமாகும்.

அன்று தொடக்கம் வடகொரியா தமது அணுஆயுத நடவடிக்கைளை துரிதப்படுத்தி வருவதுடன் இதுவரையில் ஓN1,ஓN2, டொக்சா, ஹவசொங் 5, ஹவசொங் 6, நொடங் 1, டிபடொங் 1 போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாகவும் டிபடொங் 2, முசுதன் போன்ற ஏவுகணைகள் தோல்வியையும் சந்தித்திருக்கின்றன. அத்தோடு அதிகமான நாடுகள் வடகொரியாவின் #அணுஆயுதங்களையும் ஏனைய உள்ளூர் உற்பத்திகளையும் இறக்குமதி செய்து கொள்கின்றன. பாகிஸ்தான், எகிப்து, ஈரான், லிபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம், வியட்நாம், யேமன், நைஜீரியா போன்ற நாடுகள் இறக்குமதி செய்கின்றன.

தற்போது தென்சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான முறுகல் நிலை உச்சத்தை அடைந்த நிலையில் வடகொரியாவும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படுமென வெளிப்படையாக அறிவித்துள்ளது. தற்போது வடகொரியாவின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காகவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென்கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் பாதுகாப்புக்காகவும் என கூறி அமெரிக்கா அணுகுண்டு வீசும் போர் விமானங்களை கொண்டு கூட்டு இராணுவ பயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. தற்போது இவ்விமானங்கள் கொண்டுள்ள அணுகுண்டானது ஏற்கனவே ஜப்பானின் ஹிரோசிமா, நகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டைவிடவும் 75 மடங்கு அதிக ஆற்றல்கொண்டவையாகும்.இதுவே வடகொரியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொரிய தீபகற்பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது.

சோசலிஷ நாடு என்று சொல்லிக்கொள்ளும் வடகொரியாவானது, 2 1/2கோடி மக்கள் தொகையினை கொண்ட சிறிய நாடாகும். ஒருகட்சி இராணுவ சர்வாதிகாரத்துடன் அதிகாரவர்க்க முதலாளித்துவ ஆட்சியை  கிம்-ஜோன்-உன் தலைமையில் கொண்டுள்ளது. இந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் அச்சுறுத்தலை மக்களுக்கு காண்பித்து பொருளாதாரத்தையும் இராணுவ மயமாக்கியுள்ளனர்.

போர் அச்சுறுத்தல்களை கொண்டு அமெரிக்கா, வடகொரியாவின் ஆட்சியை கலைக்க முனைகின்றது. இதனாலேயே அணுகுண்டு தாக்குதல்களை நடத்தப்போவதாக வடகொரியா மிரட்டல் விடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே வடகொரிய தமது புதிய ஏவுகணைகளை அடிக்கடி ஒத்திகை பார்த்துவருகிறது. இராணுவ பலத்தை வெளிப்படையாக காட்டினாலும் அந்நாட்டின் பொருளாதாரம் மந்தமாகவே இருக்கிறது. இராணுவ ஆட்சியினால் மக்கள் கட்டுப்படவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலைமை எதிர்கால யுத்தத்தையே அறிகுறியாக காட்டுகிறது.

க.பிரசன்னா
31.05.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக