
மன்னராட்சி நிலவும் ஸ்பெயினில் கடந்த 18 ஆம் திகதி புதிய மன்னராக இளவரசர் பிலிப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த 69 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டை முதலாம் ஜூவான் கார்லோஸ் ஆண்டு வருகிறார். இவரின் மனைவி சோபியா 1975 ஆம் ஆண்டு முதல் மகாராணியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையிலேயே இளைய தலைமுறையினரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் முகமாக கார்லோஸால் கடந்த தினத்தில் தன் மகனும் இளவரசருமான பிலிப்பிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பிலிப் மன்னராக பதவி ஏற்ற நிலையில் மகாராணியாக அவரின் மனைவி லெடிஜியா முடிசூட்டிக் கொண்டார். அவர் பதவியேற்று ஒரு வாரகாலமே நிறைவேறும் தறுவாயில் மகாராணியின் உருவத்தை அரைநிர்வாண படமாக கிய+பாவின் புகழ்பெற்ற ஓவியர் வால்டோ வரைந்து வெளியிட்டுள்ளார்.
கையில் எரியும் விளக்கேந்திய வகையில் அமைந்த இவ்வோவியம் மகாராணி லெடிஜியாவின் உருவமேந்தியே அமைந்துள்ளது. மகாராணியான லெடிஜியா முன்னர் 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது 31 வயதாகும் லெடிஜியா செப்டம்பர் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் (9ஃ11), ஈராக் யுத்தம் என்பவற்றின் செய்தி சேகரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒயில் பெயின்டிங்கால் ஆன அந்த ஓவியத்தை வரைந்தவர் லெடிஜியாவின் நெருங்கிய நண்பரான வால்டோ ஆவார்.
வால்டோவால் வரையப்பட்ட மேலாடை அற்ற லெடிஜியாவின் நிர்வாணப்படமானது அவரை நேரடியாக வைத்து வரையப்பட்டதல்ல. அவை முழுவதும் கற்பனையே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு லெடிஜியாவின் 24 ஆம் வயதில் அவர் மெக்சிக்கோவில் மெக்சிக்கோ பத்திரிகையான சிக்லோ ஙீஙீஐ (குடிஞ்டூணி ஙீஙீஐ) இல் பணியாற்றி வந்திருந்தார். அப்போதிலிருந்தே அவர் வால்டோவின் நெருங்கிய நண்பராகவுமிருந்தார். லெடிஜியா இளம் வயது பத்திரிக்கையாளராக இருக்கும் போது வால்டோவின் ஓவியக் கண்காட்சியில் பங்குபற்றி ஸ்பானிஷ் பத்திரிகையான உடூ ட்தணஞீணி வுக்கு செய்திகளை சேகரித்திருந்தார்.
அப்போதிலிருந்தே வால்டோ, லெடிஜியா மீது காதல் வயப்பட்டிருந்தாலும் அதை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இவை தொடர்பில் அன்ருவ் மோர்டன் என்பவர் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுமிருந்தார். வால்டோவின் நண்பரும் பாடகருமான பெர்னாண்டோ ஒலிவரை நேர்காணலுக்காக சந்தித்திருந்த லெடிஜியா தன்னை லெடி என்ற செல்லப்பெயர் கொண்டு அறிமுகப்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு மத்திய காலப்பகுதியில் அதிகமான தொடர்புகள் ஏற்பட்டிருந்தவேளை வால்டோவுக்கு தோன்றிய உத்தியை பயன்படுத்தி நிறைய ஓவியங்களை வரைந்ததுடன் அவற்றில் மறைந்த ஓவியர்களான பிகாஸோ, கோயா ஆகியோரின் பாதிப்பும் இருந்திருந்தது.
மெக்சிக்கோவில் ஓவியக் கண்காட்சியில் சந்தித்துக் கொண்ட வால்டோவும், லெடிஜியாவும் மீண்டும் புவனஸ் அயர்சில் சந்தித்துக் கொண்டனர். வால்டோ தன்தொழிலின் நிமித்தமாக சுற்றுலாவை மேற்கொண்டு புவனஸ் அயர்சுக்கு வந்திருந்த போதே இருவரும் மறுபடியும் சந்தித்துக் கொண்டனர். அதன்பிறகு வால்டோ அதிகமான சந்திப்புகளில் ஸ்பெயினின் எதிர்கால இளவரசி என்பதை அறியாமல் லெடிஜியாவிடம் பேசியிருந்தார். இச் சந்தர்ப்பத்தில் ஓவியத்தொழிலில் அதித ஈடுபாட்டைக் கொண்டிருந்த வால்டோ லெடிஜியாவின் முகத்தை தன் தொழிலுக்காக பயன்படுத்தியிருந்தார். அத்தோடு சில கவிதை தொகுப்புகளுக்காகவும் இவருடைய முகத்தை பயன்படுத்தியிருந்தனர்.
அவர் மீண்டும் ஸ்பெயின் நாட்டுக்கு திரும்பியதும் அவருடைய தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது வால்டோவுக்கு. ஆனால் இன்று லெடி இளம் பத்திரிகையாளர், தொலைக்காட்சி நட்சத்திரம் என்பதைத்தாண்டி அவர் ஸ்பெயின் நாட்டு இளவரசி. ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியான ஆஸ்ட்ரியட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லெடிஜியா. இவர் பிலிப்பை 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். தற்போது லியோனர் (8 வயது), சோபியா (7 வயது) என இரு பிள்ளைகள் உள்ளனர். மான்றிட்டில் உள்ள சாண்தா மரியா தேவாலயத்தில் இவர்கள் திருமணம் இடம்பெற்றது.
2002 ஆம் ஆண்டு பிலிப்பும், லெடிஜியாவும் ஒரு சில மாதங்களே சந்தித்துக் கொண்ட நிலையில் 2004 ஆம் ஆண்டு திருமணம் இடம்பெற்றமை குறிப்படத்தக்கது. அத்தோடு லெடிஜியாவும் ஸ்பெயினின் தேசிய செய்தித் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பதவி உயர்வு பெற்றார். தனது தொழிலில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையிலேயே ஸபெயின் அரச குடும்பத்திலிருந்து திருமணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
லெடிஜியா கார்ச்சாரதி குடும்பத்தினரின் மூத்த மகளாவார். இவர் தனது தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை அரச உயர்நிலைப் பள்ளியில் கற்றதோடு மன்றிட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பத்திரிகைத் துறையில் முதுகலைப் பட்டம்பெற்ற இவர் தற்போது ஸ்பெயின் இளவரசியான பின் ஸ்பெயின் மற்றும் உலகில் தலைசிறந்த ஆடைகளை மட்டுமே தேர்வு செய்து அணிந்து வரும் நபராக மாறியுள்ளார்.
தற்போது இவர் ஸ்பெயின் அரச பரம்பரையின் மிகப்பெரிய அந்தஸ்தை எட்டியுள்ள நிலையில் ஓவியர் வால்ட்டோவை தன் பணியினை இத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுள்ளனர். ஆனால் இவர் ஒருபோதும் தன் லெடியை மறக்கவில்லை. அத்தோடு அவருக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதோடு லெடியின் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அவருக்கு நான் ஒரு செய்தியே அல்ல. இன்றும் அவளுக்கு நான் ஒரு நண்பனே என்பது வால்டோவின் கருத்து. ஆனால் இவ்விடயம் தொடர்பில் ஸ்பெயின் அரசகுடும்பத்தார் எவ்வித கருத்துகளையும் இன்னும் வெளியிடவில்லை.
க.பிரசன்னா
25/06/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக