தூர கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இவ்வருடம் மிகவும் சோகமான வருடமென்றே கூறவேண்டும்.
ஒருவருட நிறைவுக்குள் 3 மிகப்பெரிய விமான விபத்துகளை உலகம்
சந்தித்திருக்கின்றது. இவ்விமானங்கள் மட்டும் இதுவரை 696 உயிர்களை காவு கொண்டிருக்கின்றன. இவற்றில் இரு விமானங்களின் நிலையை இன்னும்
அறிய முடியாத மர்மநிலை தோன்றியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் மட்டும் 8 விமான விபத்துகள் நடந்திருக்கின்றன. பெப்ரவரி 11 இல் அல்ஜீரிய விமானம்
லாக்ஹீட் சி 130 ஹெர்குலஸ் முதல் தொடங்கிய விபத்து, டிசம்பர் 28 இல் இந்தோனேசிய விமானம் ஏர் ஏசியா 8501 வரை தொடர்ந்தது.
சி 130 ஹெர்குலஸ்
74 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என 78 பேருடன் அல்ஜீரியாவை நோக்கி சென்று கொண்டிருந்த சி 130 ஹெர்குலஸ் மோசமான வானிலை காரணமாக ஃபெர்டாஸ் மலைச் சிகரத்தில்
மோதி நொறுங்கியது. ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைத்தார். மற்ற 77 பேர் உடல்களாகக் கிடைத்தனர்.
விமானம் 183
அடுத்த ஐந்தாவது
நாளிலேயே நேபாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த உள்நாட்டு விமானமான ஏர்லைன்ஸ் விமானம் 183> நேபாளுக்கு 40 மைல் தொலைவில் திகுரா காடுகளில் உள்ள மலையில் மோதி
வெடித்துச் சிதறியது. பின்னர் வந்த கண்காணிப்பு ஹெலிகொப்டர்> இடிபாடுகளுக்கிடையில் எரிந்து போய்க் கிடந்த 18 உடல்களை அடையாளம்
காட்டியது.
எம்.எச். 370
மலேசியாவில் இருந்து
பெய்ஜிங் நோக்கி 12 மலேசிய ஊழியர்களைச் சேர்த்து 239 பயணிகளுடன் பயணித்த எம்.எச். 370 விமானம் என்னவானது என இன்றுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை.
பயணத்தை ஆரம்பித்த ஒரு
மணி நேரத்துக்குள்ளாகவே கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விலகிய விமானம், திட்டமிடப்பட்ட பாதையில் இருந்தும் விலகியது. ரேடரால் கண்காணிக்கப்பட
முடியாமல் மறைந்த எம்.எச்.370 இன் தேடுதல் பணிகள் கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறன. ஒருவேளை, பயணிகள் உயிர் தப்பியிருந்தாலும் இத்தனை நாட்கள் வெளி உலகத்தொடர்பு இல்லாமல்
அவர்கள் வாழ்வதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவுதான்.
எம்.எச்.17
கோலாலம்பூரில் இருந்து
ஜூலை 17 அன்று புறப்பட்ட எம்.எச்.17 ரஷ்ய- உக்ரைன் எல்லைக்கருகில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ரஷ்ய
சார்பு பிரிவினைவாதிகளால் இலக்கு நோக்கிப்பாயும் ஏவுகணையைக் கொண்டு சுட்டு
வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை 298.
விமானம் 222
ஜுலை 23 இல் தாய்வானின் உள்நாட்டு விமானமான ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 222> தரையிறங்கும்போது தன் கட்டுப்பாட்டை இழந்து பெங்கு தீவில் ஒரு கட்டிடத்தின்
மீது மோதியதில், 48 பயணிகள் உயிரிழந்தனர். 10 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
விமானம் 5017
ஜூலை 24 இல் அல்ஜீரியாவில் 118 பேர் விமான விபத்தால் இறந்தனர். ரேடரில் இருந்து
விலகிய இவ்விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
விமானம் 5915
சர்வதேச
எல்லைகளில்தான் விமான விபத்துக்கள் அதிகம் நடக்கிறன என்ற எண்ணம் முற்றிலும் தவறு
என்பதை அடுத்தடுத்து நிகழும் உள்நாட்டு விபத்துகள் நிரூபித்தன. ஆகஸ்டில்
டெஹ்ரானில் இருந்து ஈரானில் உள்ள டாபாஸ் என்ற நகரத்துக்குக் கிளம்பிய சீபஹன்
ஏர்லைன்ஸ் விமானம் 5915 புறப்பட்டவுடனேயே இயந்திரப் பழுது காரணமாக அஸாதி
ஸ்டேடியம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியின் மேல் விழுந்து நொறுங்கியது. இந்த
விபத்தில் 39 பயணிகள் இறந்தனர்.
விமானம் 8501
இந்தோனேஷியா ஜிவாண்டா
சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எயார் ஏசியாவிற்குச் சொந்தமான A 320 - 200 விமானம் டிசம்பர் 28 காலை 5.30 மணிக்கு புறப்பட்டுக் சென்று 7.24 மணியளவில் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையுடனான சகல தொடர்புகளும்
துண்டிக்கப்பட்ட நிலையில் மாயமானது. 155 பயணிகளுடனும் 7 ஊழியர்களுடனும்
பயணித்த விமானம் எவ்வித தடையங்களுமின்றி மாயமான நிலையிலுள்ளது. மலேஷிய MH 370 விமானம் மாயமான பிறகு பல்வேறு ஊகங்கள்>
வதந்திகள் என்பன விமான
பயணத்தை மறக்க வைத்திருந்தன.
அதிலிருந்து மக்கள்
மீண்டு வருவதற்குள் சோகத்துடன் பயத்தினையும் இச்சம்பவம் மேலும்
அதிகரித்திருக்கின்றது. சிங்கப்பூர் நோக்கிச் சென்ற விமானம் இந்தோனேஷியாவின் ஜாவா
தீவிற்கு மேலாக சென்ற போதே தொடர்புகளை துண்டித்திருந்தது. இதுவும் மேற்குலகின்
சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. MH 370 மலேஷிய விமானம் அமெரிக்காவால் சுட்டு
வீழ்த்தப்பட்டதாக அண்மைக் கால செய்திகள் கூறுகின்றன. பிரஞ்சு உள்ளூர் விமான
சேவையின் முன்னைனாள் அதிகாரியொருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு
பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
அதேபோலவே ஜூன்
மாதமளவில் மற்றொரு மலேஷிய விமானம் உக்ரேனிய வான்பரப்பில் வைத்து ரஷ்யாவினால்
சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது எயார் ஏசியா விமானத்தின் மாயம்
காணப்படுகிறது. இதற்கு முந்தைய விமானங்களின் விபத்தோடு ஒப்பிடும் போது இதுவுமொரு
சதித்திட்டம என்பது தொடர்பான சந்தேகங்கள் எழு வாய்ப்பில்லாமலில்லை.
விமானம் காலிமன்டான்
மற்றும் பெடலிங் தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் சென்ற போதே தொடர்பு
துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தேடுதல் பணிகளில் இந்தோனேஷிய அதிகாரிகளால்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான சி 130 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இந்திய கப்பல்களும்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 1 கப்பல் வங்க கடல்
பகுதியிலும் 2 கப்பல்கள் அந்தமான் கடல் பகுதியிலும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதுடன், உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் அவை தேடுதல்
நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விமானத்தில் 144 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள்>
சிங்கப்பூர், பிரிட்டன்> மலேசியா> பிரான்ஸை சேர்ந்த தலா ஒருவருமாக 7 ஊழியர்களுடன் விமானம் பயணித்துள்ளதுடன் இதில் 16 குழந்தைகள் மற்றும்
ஒரு பச்சிளம் குழந்தை உட்பட பயணத்தை மேற்கொண்டிருந்தனர். 32000 அடி உயரத்தில் பறந்து சென்ற விமானத்தை 38000 அடியாக உயர்த்த விமானி அனுமதி கேட்டதாக இந்தோனேஷிய
விமான போக்குவரத்து இயக்குநர் தெரிவித்துள்ளார். இடியுடன் கூடிய மழை காணப்பட்டதால்
50000 அடி வரை மேகக் கூட்டம் காணப்பட்டது.
மேகத்திலிருந்து விடுபடவே விமானி அவ்வாறு கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேஷிய
நகரான சுரபயாவிலிருந்து புறப்பட்ட 45 நிமிடங்களில் விமானம் மாயமாகியுள்ளது. குறைந்த
விலையில் விமான ரிக்கட்டுகளை வழங்கும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் என்றறியப்படும்
விமான நிறுவனங்களில் எயார் ஏசியா நிறுவனமும் ஒன்றாகும். மலேஷிய நிறுவனமான இந்த
எயார் ஏசியா நிறுவனத்தின் இந்தோனேஷிய துணை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான
விமானமே காணாமல் போயுள்ளது. இந்த விமான நிறுவனத்தில் இயங்கி வந்த விமானங்கள்
இதுவரையும் பாதுகாப்பாகவே இயங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேடுதல் பணிகள்
முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் சில விமான பாகங்களை அவுஸ்திரேலிய விமானம் கண்டு
பிடித்துள்ளதாக இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேடுதல்
பணியில் ஈடுபட்டுள்ள ஒரியான் விமானம் சில பாகங்களை கண்டுபிடித்துள்ளதாகச் செய்தி
வெளியிட்டுள்ளது. விமானம் பெலிலுங் தீவுப் பகுதியில் தென்கிழக்கு தன்ஜூங் பாண்ட்
பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் இருந்த வரை அதன் நிலை
உணரப்பட்டுள்ளது. அத்தோடு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள விமானம்> விபத்துக்குள்ளான விமானத்தின் உதிரிப்பாகங்களையும் 2 இடங்களில் விமானத்தின் எண்ணெய் படலங்களையும் ஜாவா
தென்கிழக்கு கடலிலுள்ள பெலிலுங் தீவு பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக
தெரிவித்துள்ளதுடன் இதனை இந்தோனேஷிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும்
விமானத்தில் பயணித்த எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும்
வெளியிடப்படவில்லை. இந்த விமானத்தின் தலைமை விமானி 6100 மணி நேரம் விமானம்
ஓட்டிய அனுபவமுள்ளவர். முதலாம் அலுவர் 2275 மணித்தியாலங்கள் விமானம் செலுத்திய அனுபவமிக்கவர்.
விமானம் அபாய கட்டத்தினை எட்டும் போது வெளியிடப்படும் அபாய சமிக்ஞையையும்
வெளியிடவில்லை. மலேசிய விமானமான ஆஏ 370 மாயமான சந்தர்ப்பத்திலும் எவ்வித சமிக்ஞைகளும்
வெளியிடப்படாமலேயே இருந்தது. ஆனால் விமானத்தை செலுத்திய விமானி மீதான சந்தேகங்கள்
வலுத்த நிலையிலும் பயனில்லாமல் போனது.
ஆனால் எயார் ஏசியா
விமானம் மாயமானது தொடர்பில் பயங்கரவாதம் செல்வாக்கு செலுத்துவது தொடர்பான ஊகங்கள்
கூட வெளியிடப்படாததால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என ஊகிக்க முடியும். இரு
மலேஷிய விமான விபத்தை தொடர்ந்து தற்போது எயார் ஏசியா விமான விபத்து இவ்வருடத்தின் 3 ஆவது மிகப்பெரிய விபத்தாக பதிவாகியுள்ளது. கடந்த 20 வருடங்களில் 532 இந்தோனேஷிய பயணிகள் விமான விபத்தில் இறந்துள்ளனர்
என்பதுடன் 116 பேரின் நிலை இதுவரை அறியப்படவில்லை.
எயார் ஏசியா விமான
விபத்துடன் சேர்த்து கடந்த 3 வருடங்களில் தொடர்ச்சியாக விமான விபத்துகளை
இந்தோனேஷியா சந்தித்து வருகிறது. 13 ஏப்ரல் 2013 ஆம் திகதி 100 பயணிகளுடன் பயணித்த போயிங் 737 - 800 எனும் புதிய விமானம் இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஓடு பாதையில்
விபத்துக்குள்ளாகி 24 பேர் வரை காயமடைந்திருந்தனர். மே 2012 ஆம் ஆண்டு ரஷ்ய தயாரிப்பான சுகாய்
சுப்ப ஜெட் - 100 மேற்கு ஜாவாவில் ப+கர் மலைப்பகுதியில்
விபத்துக்குள்ளானதில் 45 பேர் கொல்லப்பட்டனர். 2007 ஜனவரி போயிங் 737 விமான விபத்தில் 102 பேரளவில்
உயிரிழந்தனர். புதுவருட நிகழ்வுக்காக சுரபயா நகரிலிருந்து மண்டலா நகருக்கு சென்ற
போதே விமானம் விபத்துக்குள்ளானது.
அதேபோலவே மண்டலா எயார்
லைன்ஸ் விமான விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர். டிசம்பர் 1997 ஆம் ஆண்டு சில்க் எயார் விமான விபத்தில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
1997 ஆம் ஆண்டு கருடா இந்தோனேஷிய விமான விபத்தில் 234 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வருடம் மட்டும் 1320 பேர் உலகம் முழுவதும்
விமான விபத்தில் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் அதிகமான விமான
விபத்துகளை சந்தித்துள்ள இந்தோனேஷியா புதுவருடம் பிறப்பிற்கு முன்னதாக மீண்டும்
ஒருமுறை கொடிய விபத்தினை சந்தித்துள்ளது.
நாளை புதுவருட பிறப்பு
இடம்பெறவிருக்கும் தருவாயில் இந்தோனேஷிய மக்களுக்கு மிகவும் சோக தினமாக இன்றைய
நாள் அமைந்திருக்கிறது. இதுவரையும் எவ்விதமான தடயங்களையும் கண்டிராத இவ்விமான
விபத்து இவ்வருடத்தின் இறுதி மட்டுமல்ல இனியொரு முறையும் ஏற்படாதிருக்க
புத்தாண்டில் புதுயுகம் பிறக்க பிரார்த்திப்போம்.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக