“நாங்கள் வீட்டுப் பணிப் பெண்களாக கொழும்புக்கு வேலைக்கு வரமாட்டோம்” என்று மலையகத்தவர்கள் சொன்னால், இங்குள்ள செல்வந்தர்களின் வீடுகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். செல்வந்த கணவர்களே குடும்பத்தை கவனிக்க வேண்டும். செல்வந்த மனைவிகளே தங்களின் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். வீடுகளும் தோட்டங்களும் அலங்கோலமாகிவிடும். இந்த நிலைமையை அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாது.
இதனால் கொழும்பு உள்ளிட்ட நகர்புற செல்வந்தர்களின் தேடல்கள் எப்போதும் எங்கள் மலையகத்து பக்கம் நிச்சயமாக இருக்கும். பெரும்பாலான செல்வந்தர்களின் வீடுகளில் உணவு இருக்கின்றதென்றால் அல்லது அவர்களின் பிள்ளைகள் வேளைக்கு உணவு உண்ணுகிறார்கள் என்றால் அங்கு பணிப்பெண்களாக இருக்கும் எங்களுடைய பெண்களே காரணம். பல செல்வந்த குடும்பங்களின் வீடுகளில் இவர்களுடைய அயராத உழைப்பாலேயே பராமரிக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களுடைய கல்வி படிப்பை நிறுத்தியும் தங்களது குடும்பத்தை பிரிந்தும் நகர்புறங்களில் வீட்டு வேலைக்காகச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அதிகம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக மலையகத்திலிருந்து செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் குரல் கொடுப்பது யார்? என்ற கேள்வியோடு இந்த கட்டுரைக்குள் செல்லலாம்.
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அம்சிகா என்ற மாணவி தொடர்பான செய்தி சகல ஊடகங்கள் முதல் பாராளுமன்றம் வரை கடந்த வாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறித்த மாணவி எதிர்கொண்டதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தனியார் வகுப்பில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கோரியும் கடந்த வாரத்தில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நாட்டில் சிறுமிகள் தொடக்கம் முதியோர் வரை பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த போராட்டம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு உந்து சக்தியாக எதிர்க்கட்சிகள் பலவும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன், பிரச்சினையின் தீவிரம் தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தன.
உயிரிழந்த மாணவி ஒரு மலையகத்தவர் என்ற அடிப்படையில் மலையகத்திலும் அவருக்கான நீதி கோரிய போராட்டங்களை முன்னெடுக்குமாறு அரசியல்வாதிகளால் வலியுறுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மலையகத்தில் பிறந்து கொழும்பில் பணியாற்றி மர்மமான முறையில் மரணித்துப் போன பெண்கள் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்ற நியாயம் என்ன?, மலையக அரசியல்வாதிகளால் இவர்களின் மரணத்துக்கு தொடர்ந்தும் குரல் கொடுக்க முடியாமல் போனது ஏன்? என்பது தொடர்பாகவும் கேள்வி எழுந்தது.
இவர்களுடைய மரணம் இடம்பெற்று இன்று பல வருடங்கள் கடந்துள்ள போதும் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளிக்கொண்டு வரப்பட்டு அவர்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. மலையகப் பகுதிகளிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாக செல்வந்தர்களின் வீடுகளுக்கு தரகர்கள் மூலம் அழைத்துவரப்படும் இவர்களுக்கு உரிய தொழில் மற்றும் ஏனைய பாதுகாப்பு இல்லையென்பது, இவர்களின் மரணம் மூலம் வெளிப்பட்டாலும் இதுவரை அவர்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.
பதுளை - தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி
தனது வீட்டில் பணிபுரிந்த போது தங்க நகையை திருடியதாக தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமார வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய 2023 மே மாதம் 11ஆம் திகதி பதுளை, தெமோதர பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தமைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைவாக ராஜன் ராஜகுமாரி கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஹிஷாலினி
பொன்னையா என்கின்ற 64 வயதுடைய தரகர் ஊடாக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வீட்டு வேலைக்கு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் டயகம் 3 ஆம் பிரிவைச் சேர்ந்த ஹிஷாலினி பணிக்கமர்த்தப்பட்டார். இச்சிறுமி 2021, ஜுலை மாதம் 3ஆம் திகதி அன்று அவரது உடலில் பலத்த தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 73ஆவது சிகிச்சை அறையில் அமைந்துள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு – 2 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 15.07.2021 ஆம் திகதி உயிரிழந்தார். பின்னர் வெளியான பிரேத பரிசோதனையின் தடயவியல் மருத்துவ அறிக்கையில், ஹிஷாலினி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் மனைவி உட்பட பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் இதுவரை மரணத்துக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லையென்பதுடன் மரணத்துக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

- சம்பவம் 1: 11.05.2023 – கொழும்பிலுள்ள நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றிய பதுளை - தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி பொலிஸ் காவலில் மர்ம மரணம்
- சம்பவம் 2: 19.08.2022 - மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 16 வயதான ரமணி, கம்பஹா உடுகம்பொல பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில், நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
- சம்பவம் 3: 15.07.2021 – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய தலவாக்கலை டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஹிஷாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம்.
- சம்பவம் 4: 03.02.2020 – மஸ்கெலியா சாமிமலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், மாலபே பகுதியில் வைத்தியரின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு
- சம்பவம் 5: 15.08.2009 - மஸ்கெலியா லக்சபான தோட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் சுமதி, மதுரைவீரன் ஜீவராணி ஆகிய இரு சிறுமிகள் கொழும்பு கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு வீடுகளில் பணிபுரிந்த நிலையில் பௌத்தாலோக்க மாவத்தை கழிவு நீரோடைப் பகுதியிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இவர்களுடைய மரணம் இடம்பெற்று இன்று பல வருடங்கள் கடந்துள்ள போதும் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளிக்கொண்டு வரப்பட்டு அவர்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. மலையகப் பகுதிகளிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாக செல்வந்தர்களின் வீடுகளுக்கு தரகர்கள் மூலம் அழைத்துவரப்படும் இவர்களுக்கு உரிய தொழில் மற்றும் ஏனைய பாதுகாப்பு இல்லையென்பது, இவர்களின் மரணம் மூலம் வெளிப்பட்டாலும் இதுவரை அவர்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.
பதுளை - தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி
தனது வீட்டில் பணிபுரிந்த போது தங்க நகையை திருடியதாக தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமார வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய 2023 மே மாதம் 11ஆம் திகதி பதுளை, தெமோதர பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தமைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைவாக ராஜன் ராஜகுமாரி கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஹிஷாலினி
பொன்னையா என்கின்ற 64 வயதுடைய தரகர் ஊடாக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வீட்டு வேலைக்கு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் டயகம் 3 ஆம் பிரிவைச் சேர்ந்த ஹிஷாலினி பணிக்கமர்த்தப்பட்டார். இச்சிறுமி 2021, ஜுலை மாதம் 3ஆம் திகதி அன்று அவரது உடலில் பலத்த தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 73ஆவது சிகிச்சை அறையில் அமைந்துள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு – 2 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 15.07.2021 ஆம் திகதி உயிரிழந்தார். பின்னர் வெளியான பிரேத பரிசோதனையின் தடயவியல் மருத்துவ அறிக்கையில், ஹிஷாலினி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் மனைவி உட்பட பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் இதுவரை மரணத்துக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லையென்பதுடன் மரணத்துக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.
மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 16 வயதான ரமணி
மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 16 வயதான ரமணி, கம்பஹா உடுகம்பொல பகுதியிலுள்ள வீடொன்றில் 6 மாத காலமாக வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில், 19.08.2022 ஆம் திகதி வீட்டு நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அரசியல்வாதியொருவரின் உறவினர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நீச்சல் தமாகத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மஸ்கெலியா - சாமிமலை பகுதியைச் சேர்ந்த பெண் மரணம்
மஸ்கெலியா - சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் மாலபே பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் எரிகாயங்களுடன் அவர் பணிபுரிந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டதோடு, அவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குறித்த பெண் தீமூட்டி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தீ வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற போர்வையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போதும், இதுவரை மரணத்துக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.
மஸ்கெலியா லக்சபான தோட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் சுமதி, மதுரைவீரன் ஜீவராணி
மஸ்கெலியா லக்சபான தோட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் சுமதி மதுரைவீரன் ஜீவராணி ஆகிய சிறுமிகள் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தைப் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர். கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு வீடுகளில் இந்த இரண்டு சிறுமிகளும் பணிபுரிந்துள்ளனர். 2009 ஆகஸ்ட் 15 ஆம் திகதி பௌத்தாலோக மாவத்தை கழிவு நீரோடைப் பகுதியிலிருந்து சடலங்களாக இவர்கள் மீட்கப்பட்டனர். சிறுமிகளின் மரணங்கள் தற்கொலை என பொலிசாரின் விசாரணையை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் முன்னர் தீர்மானம் வழங்கியிருந்தது.
சிறுமிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திடம் சிறுமிகளின் உறவினர்கள் முறைப்பாட்டைச் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக மலையகத்தைச் சேர்ந்த பத்து சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமின்றி நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இதனடிப்படையில், மஸ்கெலியா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு சிறுமிகளின் சடலங்களும் தோண்டியெடுக்கப்பட்டு கண்டி பிரதம சட்ட அதிகாரியின் மூலமாக பிரத்தியேகமாக பிரேதப் பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் நிசங்க ஹப்பு ஆரச்சி கருவாத்தோட்டப் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் மலையகத்திலிருந்து கொழும்புக்கு வந்து பணிப்பெண்களாக பணியாற்றி மர்மமான முறையில் உயிரிழந்த பெண்கள் தொடர்பானது. எனினும் இவற்றில் எந்த மரணத்துக்கும் இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை. மரணம் நிகழ்ந்த குறிப்பிட்ட காலத்தில் மாத்திரம் இவை தொடர்பில் பேசப்பட்டிருந்தாலும் அதன் பின்னர் அதன் நிலைமை தொடர்பில் இன்று வரை அறியமுடியவில்லை.
இதேவேளை மலையகத்திலிருந்து வீட்டு பணியாளர்களாக கொழும்பு உள்ளிட்ட நகர்புற செல்வந்தர்களின் வீடுகளுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ப்ரொடெக்ட் சங்கத்தின் உப செயலாளர் தமிழ்செல்வம் கிருஷாந்தினி கருத்து வெளியிடுகையில், “சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகமாக மலையகத்திலிருந்து செல்பவர்கள் வீட்டு பணியாளர்களாக பணிபுரிவதை அறியமுடிகின்றது. இவ்வாறு பணிபுரியும் பெண்கள் எவ்வித நேர கட்டுப்பாடுகளும் இன்றியும் தொழில் பாதுகாப்பு இன்றியும் பணிபுரிகின்றனர். முறைசார் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலை நேரம், மேலதிக நேரக் கொடுப்பனவு, ஊழியர் சேமலாப நிதி, ஓய்வு நேரம் என எவ்வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை மற்றும் பாரபட்சமான முறையில் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்குமிடம், பாவனை பொருட்கள் என அனைத்திலும் ஒதுக்கி வைக்கப்படும் நிலையை எதிர்கொள்கின்றனர்” எனவும் சுட்டிக்காட்டினார்.
“மேலும் இலங்கையில் வீட்டு வேலை என்பது தொழில் திணைக்களத்தால் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட வேண்டும். குறித்த தொழில் கண்ணியமான தொழிலாகவும் பார்க்கப்பட வேண்டும். பல வருடங்களாக வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றும் அவர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டுமென்பது தங்களின் கோரிக்கையாக இருப்பதாகவும்” அவர் மேலும் தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த மாணவி அம்சிகாவின் மரணத்துக்குப் பின்னர், மலையகத்திலிருந்து கொழும்பு வந்து பணிப்பெண்களாக பணியாற்றி மரணித்த இவர்கள் தொடர்பாகவும் பேச வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகள் குறித்த மரணங்கள் தொடர்பில் அப்போது கருத்து வெளியிட்டிருந்தாலும் இன்றுவரை நீதிக்கான அழுத்தத்தை அவர்களால் வழங்க முடியவில்லை.
குறித்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணங்கள் தொடர்பில் அப்போது அரசியல்வாதிகள் வெளியிட்ட கருத்துக்கள்
- ஆர்.ராஜகுமாரியின் உடல் உரிய விசாரணைகள் இன்றி புதைக்கப்பட்டுள்ளதாகவும் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, முறையான உடற்கூறாய்வு பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
- அப்போதைய ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, இந்த அப்பாவி சிறுமியின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பாக தாங்கள் திருப்தியடையவில்லை என தெரிவித்தார்.
- இதேவேளை ஹிஷாலியின் மரணத்தின் பின்னர், 15 வயது சிறுமியை பணிக்கமர்த்தியமை தொடர்பிலும் அவரின் மரணம் தொடர்பிலும் இரு விசாரணைகளை கோரியுள்ளதாகவும் மலையகத்திலிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எவரையும் தொழிலுக்கு அனுப்பக்கூடாதெனவும் அப்போதைய இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
- குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
இன்று மலையகத்தைச் சேர்ந்த அதிக ஆண் மற்றும் பெண்கள் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தொழில் பாதுகாப்பும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கான எந்த பொறிமுறையையும் எந்த அரசாங்கமும் இதுவரை முன்னெடுக்கவில்லை. மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பேசுவதற்கு முன்பாக அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இவ்வாறான சம்பவங்களால் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக