கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மிக அவசரமாக பலாலி விமான நிலையம் (தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. மூன்று கட்டங்களாக விமான நிலையத்தில் அபிவிருத்திகள் முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட அபிவிருத்திகள் நிறைவடைந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பலாலி விமான நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட போது பொதுமக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகள் இன்னும் வழங்கப்படாமலிருப்பதும், தற்போதைய விமான நிலையத்தில் நிரப்பப்பட்டுள்ள பணியிடங்களுக்கு வடமாகாணத்திலுள்ளவர்களுக்கு முக்கியத்துவமளிக்கபடுமென வழங்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை போன்ற விமர்சனங்கள் விமான நிலைய திறப்பு விழாவின்போது முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்னாட்களில் அவை சத்தமின்றி அமர்ந்து போனதும் முக்கியமானதாகும். இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலங்கை அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாவையும் இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுற்றுலாத் தொழிலின் மேம்பாட்டிற்காக உள்ளக வர்த்தக விமான சேவைகளை செயற்படுத்தும் பொருட்டு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கால அட்டவணைக்கு அமைவாக உள்ளக வர்த்தக பயணிகள் விமான சேவையினை செயற்படுத்துவதற்காக பலாலி விமான நிலையத்தின் தேவையான அபிவிருத்தி பணிகளை 1950 ரூபா முதலீட்டில் இலங்கை விமானபடையின் ஊடாக துரிதமாக மேற்கொள்வதற்கு (முன்னாள்) பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு 2019.01.29 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானங்கள் மற்றும் விமான சேவைகளின் விபரங்கள் தொடர்பில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையிடமும் (LB/08/09/23) இருந்துவிமான நிலையத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ள ஆளணியினர் மற்றும் செலவு விபரம் தொடர்பில் இலங்கை விமான நிலையம் மற்றும் வான்துறை சேவைகள் நிறுவனத்திடமும் (RTI/AASL/70) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையிடம் 17 அக்டோபர் 2019 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் நிர்மானப்பணிகளுக்காக 17.10.2019 வரை 525,181,076.42 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இவ்விமான நிலையத்தின் உருவாக்கத்துக்காக எவ்வித காணி சுவீகரிப்பும் இடம்பெறவில்லையெனவும் இலங்கை விமானப்படையின் கட்டுக்காப்பில் காணப்பட்ட நிலமே உபயோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையினால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு எவ்வித ஆளணியினர் உள்வாங்கலும் நடைபெறவில்லையெனவும் இலங்கை விமான நிலையம் மற்றும் வான்துறை சேவைகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆளணியினர் உள்வாங்கல் விபரங்களை அந்நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் 30.10.2019 நிலவரப்படி ஏ.டி.ஆர் - 72 மற்றும் கியூ - 400 போன்ற விமானங்களை இயக்க, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமானது பிராந்திய விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எயார் இந்தியா கூட்டமைப்பு (Air India Alliance) விமான நிறுவனம் முதலாவது பரீட்சார்த்த விமான சேவையை மேற்கொள்ளவுள்ளது. வாரத்தில் மூன்று நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் இந்த விமான சேவை இடம்பெறும். தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் இந்த விமான சேவை அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது கட்டத்தின் கீழ் விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடுபாதை 950 மீற்றர் புத்தாக அமைக்கப்பட்டுள்ளது. நடுத்தர அளவிலான யு-320, டீ-337 விமானங்களை கையாளக்கூடிய வகையில் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் தொழில் வெற்றிடங்களுக்காக 18 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் வான்துறை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் கண்டியைச் சேர்ந்த ஒருவர் செயற்பாட்டு முகாமையாளராக (ஒப்பந்த அடிப்படையில்) பணியாற்றுவதுடன் விமான நிலைய சேவைகள் முகவர்களாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்து பேரும் வவுனியாவைச் சேர்ந்த மூவரும் மன்னார், மானிப்பாய், பொயின்ட்பெட்ரோவைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் ஆண் தாதியாக காங்கேசன்துறையைச் சேர்ந்த ஒருவரும் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முக்கிய மைல்கல்லாக அமையவேண்டுமென்ற நோக்கிலேயே அபிவிருத்தி செய்யப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்டம் நிறைவடையும் வேளையில் சகல விமானங்களையும் இயக்கக்கூடிய சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும். அச்சந்தர்ப்பத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகள் அதிகம் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமானது, பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கான ஊதியம், மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், வாகனங்கள் இயக்கத்துக்கான கட்டணம், பராமரிப்பு நடவடிக்கைகளுக்கான கட்டணம், ஊழியர்களுக்கான தங்குமிடம், ஏனைய சேவைகளுக்கான கட்டணம் போன்றனவே யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் செலவுகளாக காணப்படுகின்றன. விமானங்களின் தரையிறக்கம் மற்றும் தரிப்பிட கட்டணம், மேலதிக பரப்புக்கான கட்டணம், விமானத்துக்கு தரை கையாளுதல் சேவைகளை வழங்குதல், வரிகளற்ற விற்பனையகங்களுக்கான வாடகை (எதிர்காலத்தில்) போன்றன விமான நிலையத்தின் வருமானமாக காணப்படுகின்றன.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக காணி சுவீகரிப்பு காணப்படுகின்றது. 1950 - 2020 ஆம் ஆண்டு வரையும் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேற்படி காணி உரிமையாளர்களில் தற்போது பலர் உயிருடன் இல்லை. பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்தி பணி விரிவுபடுத்தலுக்காக 1950 - 1960 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 349 ஏக்கர் பொதுமக்கள் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. 716 பேர் இக்காணிகளுடைய உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில் அவர்களில் 215 பேருக்கு மாத்திரமே இழப்பீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இக்காணிகளின் உரித்தானவர்களுக்கு உரிய உறுதிப்படுத்தல்கள் இன்மையால் இழப்பீடுகளை பெறுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டு வருகின்றது.
அத்துடன் பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 1984 ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டதாகவும் இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இதவரையிலும் இவ் இழப்பீடுகள் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிலையத்தின் புதிய நுழைவாயில் அமைப்பிற்காக மேலும் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எவ்விதமான காணி சுவீகரிப்புகளும் நடைபெறவில்லையெனவும் இலங்கை விமானப்படையின் கட்டுக்காப்பில் காணப்பட்ட நிலமே உபயோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. தற்போதைய விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள நிலப்பகுதி போதாமையின் காரணமாக காங்கேசன்துறை பழைய சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள காணியில் 18 ஏக்கர் காணியும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
1950 - 1960 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முதல் கட்ட அபிவிருத்தி பணிகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் செயற்பாட்டில் தற்போதைய மதிப்பீடுகளின் படி 215 பேருக்கான இழப்பீடுகள் பெற்றுக்கொடுப்பதற்கான உறுதிப்பத்திரங்கள் காணப்படுவதாகவும் மீதமுள்ள 501 பேருக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு பிரதேச செயலர் மூலம் இவர்கள் குறித்த இடங்களில் வசித்துள்ளார்கள் என்பதற்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுமாயின் இதற்கான இழப்பீடுகளை வழங்க முடியுமெனவும் காணிகளை வகைப்படுத்தும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லையெனவும், அச்செயற்பாடுகள் நிறைவுக்கு வந்தவுடன் அந்த செயற்பாடுகள் நிறைவுக்கு வருமென 2019, செப்டெம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் முன்னாள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். (பாராளுமன்ற ஹன்சார்ட் தொகுதி 274)
எயார் சிலோன் நிறுவனத்தின் முதலாவது பயணம் 1947 டிசம்பர் 10 இல் இரத்தமலானை விமான நிலையத்தில் இருந்து பலாலி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இந்நிலையத்தினூடாக தென்னிந்திய நகரங்களுக்கும், கொழும்புக்கும் சேவைகள் இடம்பெற்றன. 1990 களின் ஆரம்பத்தில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, அங்கு குடியிருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 1990 - 1995 வரை வலிகாமம் பகுதியில் அரசுக்கட்டுபாட்டில் இருந்த ஒரே உயர் பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் 1996 ஆம் ஆண்டு வலிகாமம் இரணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து லயன் எயார் தனியார் நிறுவனத்தினால் கொழும்புக்கான போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இரு வருடங்களின் பின்னர் மொனரா எயார் சேவையும் பயணிகளுக்கான விமான சேவையை ஆரம்பித்தது. பின்னர் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்துக்குப் பின்னர் மீண்டும் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 2002 - 2010 வரையிலான காலப்பகுதியில் எக்ஸ்போ எயார் சேவையினை ஆரம்பித்தது. 2013 இல் விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்பட்டது. பின்பு இதனை தேசத்தின் 3 ஆவது சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதை நோக்காகக் கொண்டு 2019 இல் மீள் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் ஐந்து பிரதான விமான நிலையங்களுக்கான மொத்த பயணிகள் எண்ணிக்கை 2013 - 2018 காலப்பகுதியில் துரிதமாக அதிகரித்துள்ள நிலையில் பயணிகளுக்கு மாற்று தெரிவொன்றை வழங்கி பிரயாண நெரிசலை குறைப்பதற்காகவும் செலவுகளை குறைக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கை சிவில் வான் போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக, துஐயு இனது அல்லது குறைவாக இருக்கை வசதி கொண்ட விமானங்களை தரையிறக்கும் விதமாக ஓடுபாதை நீடிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை விமான நிலையம் மற்றும் வான் போக்குவரத்து சேவைகளினது பணிப்புரையின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது புதிய ஏற்றிடம், டெக்ஸி ஒழுங்கை மற்றும் ஓடுபாதையின் சீரமைப்பு போன்றவற்றை மேற்கொண்டதுடன், கட்டுப்பாட்டு கோபுரம், முனையக் கட்டிடம், தீயணைப்பு வசதிகள், அலுவலக கட்டிடத் தொகுதி மற்றும் வானியல் கண்காணிப்பு முறைமைகளின் உருவாக்கம் என்பவற்றையும் மேற்கொண்டது.
முதல் கட்டம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் 2020 - 2022 வரையான இரண்டாம் கட்டத்தில் ஓடுபாதை 2400அ வரை அதிகரிக்கப்படவுள்ளதுடன் மேலதிக வழிகாட்டல் கருவிகள், டெர்மினல் கட்டிடத்தின் இட அளவு என்பன அதிகரிக்கப்படும், 150 இருக்கை எயார்பஸ் யு320ளஐ கையாளும் விதமாக விமான நிலையம் தரமுயர்த்தப்படும். மூன்றாம் கட்டமாக 2022 முதல் ஓடுபாதை 3200அ வரை தரமுயர்த்தப்படுவதுடன் 200 இருக்கை எயார்பஸ் யு321ளஐ கையாளும் விதமாக விமானநிலையம் தரமுயர்த்தப்படும். அதனால் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கும் தொழில்வாய்ப்புகளுக்கும் இவ்விமான நிலையம் வாய்ப்பாக அமையும். விமான நிலையத்தில் பணியாற்றும் அனைத்து பாதுகாப்பு மற்றும் இடர்காப்பு ஊழியர்களில் பெரும்பாலானோர் விரிவான அனுபவம் மற்றும் சிறப்பாக பயிற்றுவிப்பவர்களாக காணப்படுகின்றனர். இவ்விமான நிலையத்தில் இலங்கை விமான நிலையம் மற்றும் வான் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் சான்றழிக்கப்பட்ட வான்வழி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவம், விமானபடை மற்றும் பொலிஸ், பிணை மீட்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, அரச உளவு சேவைகள், பொலிஸ் போதைப்பொருள் செயலகம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தாவர மற்றும் விலங்குத் தொற்று தடைகாப்பு மற்றும் இலங்கை சுங்கம் என்பவற்றின் பாதுகாப்பையும் கொண்டதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே யாழ்ப்பான விமான நிலையமானது நாட்டினதும், குறிப்பாக வட மாகாணத்தினதும் அபிவிருத்திக்கு எதிர்காலத்தில் பாரிய பங்களிப்பு செலுத்தும் நிலை காணப்படுகின்றது. இனால் விமான நிலையம் அபிவிருத்தி ஏற்படும் வகையில் காணிகளின் சுவீகரிப்பும் அதிகரிக்கும் நிலை தோன்றுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகள் கடந்த 60 வருடங்களாக வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் நிலையில், விமான நிலையத்தின் அபிவிருத்தி மூலம் இவற்றை மூடி மறைத்துவிடமுடியாது. எனவே அபிவிருத்திகள் எவ்வளவு முக்கியமானதோ அதுபோலவே பாதிக்கப்படும் மக்களுக்கான இழப்பீடுகளும் முக்கியமானது. எனவே காணிகள் சுவீகரிக்கப்பட்டதின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளை துரிதகதியில் வழங்குவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக