2018 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்ட பின்னர் மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது. இதில் அம்பகமுவ பிரதேச சபையானது மூன்றாகப் பிரிக்கப்பட்டு நோர்வூட், மஸ்கெலியா, அம்பகமுவ பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட நகர் பகுதியில் அமைந்துள்ள மஸ்கெலியா பொது மைதானமானது பல்வேறு பிரச்சினைகளை அண்மையில் எதிர்கொண்டிருந்தது. பண்டிகை காலங்களில் மைதானங்களை குத்தகைக்கு விடுவதால் விளையாட்டு வீரர்கள் பாதிப்படைவதாகவும் அவர்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்துடன் அண்மையில் விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளுக்குப்பின்னர் முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தினால் மைதானத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது மைதானம் பிரதேச சபையினால் பூட்டப்பட்டது. ஆனால் இம்மைதானத்தில் நடைபெறவிருந்த கால்பந்தாட்டப்போட்டிக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமையினாலேயே மைதானம் மூடப்பட்டதாகவும் குறித்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவேண்டுமாகவிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் சில தினங்களுக்கு முன்பாக மஸ்கெலியா பிரதேச சபையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டுமென பிரதேச சபையின் தலைவி தெரிவித்திருந்தார்.
பின்னர் பிரதேசசபை உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகளையடுத்து மைதானம் திறக்கப்பட்டிருந்தது. புதிய பிரதேசசபை உருவாக்கத்தின் பின்னர் தோற்றம் பெற்ற முதல் மைதானப் பிரச்சினையாக இது அமைந்தது. தற்போது மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பொது இடங்கள் பிரதேசசபையின் கட்டுப்பட்டுக்குள் வருவதாலும் அவையே வருமான மார்க்கமாக இருப்பதாலும் அவற்றை பராமரிப்பதும் அனுமதிகள் வழங்குவதும் பிரதேச சபையின் கடமையாகும். மஸ்கெலியா விளையாட்டு மைதானமானது பண்டிகைக்காலங்களில் வியாபாரங்களுக்கும் களியாட்டங்களுக்கும் குத்தகைக்கு விடப்படுவது வழமையான செயற்பாடாகவே இருந்து வந்திருக்கின்றது. அதற்கு முன்னர் இம்மைதானம் அம்பகமுவ பிரதேசசபைக்குட்பட்டதாக காணப்பட்டபோதும் குத்தகைக்கு விடப்பட்டதுடன் எவ்விதமான பராமரிப்புகளும் இன்றியே காணப்பட்டது. மைதானத்தினை வருடத்துக்கொருமுறை குத்தகைக்கு விடுவதாலேயே பிரதேசசபைக்கு வருமானம் கிடைக்கப்பெறுகின்றது என்பதுடன் அதன்மூலமே பிரதேச அபிவிருத்திகளையும் முகாமைத்துவத்தையும் மேற்கொள்ள முடிகின்றதென்பதும் முக்கியமான விடயமாகும்.
மஸ்கெலியா பிரதேச சபையினால் மைதானத்தை குத்தகைக்கு விடுவதால் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம், செலவுகள் பிரதேசசபையினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பிரதேச சபையினால் தோட்டபுறங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் (பதிவிலக்கம் 201906 மற்றும் 201905) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இதன்படி 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மஸ்கெலியா பிரதேச சபையினால் மஸ்கெலியா பொது மைதானத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்காலிக வியாபார நிலையங்களுக்கான இடங்களை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் 1,397133 ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குத்தகையினை பெற்றுக்கொள்வதற்கு 160 பேர் விண்ணப்பித்திருந்ததுடன் 300 ரூபா விண்ணப்பக்கட்டணத்தின் அடிப்படையில் 48 ஆயிரம் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் குத்தகையினை பெற்றுக்கொள்வதற்கு 79 பேர் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலங்களில் மாத்திரமே பெரும்பாலும் பிரதேச மக்களின் வருகையும் கொள்வனவும் அதிகமாக காணப்படும். அதனால் வியாபாரத்தை நம்பியிருப்பவர்கள் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி விற்பனையை மேற்கொள்வது வழமையானதொரு செயற்பாடாகும். அதுபோலவே பொருட்கள் விற்பனையும் களியாட்ட நிகழ்வுகளும் ஒரே இடத்தில் மக்களுக்கு கிடைப்பதும் சிறப்பானதாகும். இவற்றினை பயன்படுத்தி பிரதேசசபைக்கான வருமானத்தை பெற்றுக்கொள்வதும் முக்கியமானதாகும். இவ்வாறானதொரு செயற்பாடே கடந்த தீபாவளி பண்டிகையின்போது மஸ்கெலியா பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது மஸ்கெலியா பிரதேசசபைக்குட்பட்ட தோட்டப்பகுதிகள் பலவற்றில் விளையாடுவதற்கான மைதானங்கள் இல்லாத பிரச்சினை அதிகமாக காணப்படுகின்றன. அவை தொடர்பாகவும் பிரதேசசபை உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். மஸ்கெலியா பொது மைதானத்தை பாதுகாப்பதும் பராமரிப்பதும் வருமானம் பெறுவது மாத்திரமே மஸ்கெலியா பிரதேச சபையின் கடமையல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
தற்போது மஸ்கெலியா பிரதேச சபைக்கான வருமான மார்க்கமானது பின்வருமாறு காணப்படுகின்றது. வரிப்பணம், ஏக்கர்வரி ,செயற்றிட்ட வரி, வாகனம் (துவிச்சக்கரவண்டிக்காக),விசேட அனுமதிப்பத்திர கட்டணம் ,பதிவு செய்தல் சான்றிதழ், விநியோகத்தர் பதிவு செய்தல், பற்றாணைக்கட்டணம், (வீத வரி மற்றும் ஏக்கர் வரி) தண்டப்பணம், விற்பனை ஏக்கர் வரி, வீத வரி, பெயர் மாற்ற விண்ணப்பம் செயற்பாட்டு, வருமானம் முத்திரை நிர்வாக, மீள்பெருகை, மொத்த மானியம், விசேட வரி, (மலசலட குத்தகை), வியாபார வரி, (1மூ வரி உட்பட),
சிவனொளிபாதமலை விளம்பர பலகை கட்டணம், சுற்றுச்ழல் அனுமதிப்பத்திரம் அறவிடக்டிய கட்டணம், (குப்பக்கூளங்களை அகற்றுதல்), குத்தகைக்கு விடல், மஸ்கெலியா மைதானம் வாடகைக்கு, விடல் வாடகைக்க விடல், (நல்லத்தண்ணி பொது மலசலகூடம் வாகன நிறுத்துமிடம்) ,முச்சக்கரவண்டி வேன் லொறி நிறுத்துமிடம், அபாயகரமான மரங்களை அகற்றுதல், கட்டிட பரிசீலணை கட்டணம், நீர் வழங்கல் அறவீடக்டிய கட்டணம், சேவகர் கடன் வட்டி விற்பனை, நீர் விண்ணப்பம் வியாபாரஸ்தாபனம் (கடை வாடகை) விற்பனை, உரிமையை குத்தகைக்கு விடல் அறவிடக்டிய கட்டணம் தீபாவளி காணி வாடகை விசேட சேவைக் கட்டணம் வாரச்சந்தை பற்றாணைக்கட்டணம் கடையறை நீதிமன்ற தண்டப்பணம், கேளிக்கை வரி, நூலக தண்டம் பழைய சஞ்சிகை விற்பனை உட்பட 38 விடயங்களின் மூலம் வருமானம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
தற்போது மஸ்கெலியா பிரதேச சபையானது அம்பகமுவ பிரதேச சபையின் உப காரியாலயம் இயங்கி வந்த கட்டிடத்தில் இயங்கி வருவதுடன் மாதாந்த பொதுச்சபை கூட்டங்கள் நடைபெறும் கட்டிடத்துக்கு மாத்திரம் மாதாந்த வாடகையாக 10 ஆயிரம் ரூபா செலுத்தப்படுகின்றது. மஸ்கெலியா பிரதேச சபைக்கென புதிய கட்டிடம் அமைப்பதற்கான அமைச்சின் நிதியொதுக்கீடுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கடந்த அரசாங்கத்தினால் புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்கான வளங்கள் முறையாக பெற்றுக்கொடுக்கப்படவில்லை. வளப்பற்றாக்குறையுடனேயே பிரேதசசபைகள் இயங்கவேண்டிய சூழல் காணப்படுகின்றது.
இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச சபையின் மூலம் பொது மக்கள் பின்வரும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கல், கழிவகற்றல் நடவடிக்கைகள், உரிமைச்சான்றிதழ் வழங்கல், உரித்தாக்கப்படாத சான்றிதழ், பெற்றுக்கொள்ளல் ஆதன வரிநிலுவையை அறிந்து கொள்ளல், நீர்வரி நிலுவையை அறிந்து கொள்ளல், சனசமூக நிலையத்தை ஒதுக்கிக்கொள்ளல், பொது விளையாட்டு மைதானத்தை ஒதுக்கி கொள்ளல், விளம்பரம்பெனர் காட்சிப்படுத்தலுக்கு அனுமதி பெற்றுக்கொடுத்தல், நலன்புரி சேவையை பெற்றுக்கொள்ளல், பொது மயானபூமியை ஒதுக்கி கொள்ளல், நூலக அங்கத்துவ அட்டை வழங்குதல், வீதி எல்லை சான்றிதழை பெற்றுக்கொள்ளல், ஆதன வரி நிலுவையை அறிந்து கொள்ளுதல், மக்களின் முறைப்பாடுகளுக்கு பதில் வழங்குதல் ஆயர்வேத வைத்திய வசதிகளை பெற்றுக்கொடுத்தல், (தற்போது வைத்தியர் இன்மை காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ரிக்காடன் கழிவு முகாமைத்துவ நிலையத்தை பராமரித்தல், பொதுமக்களால் முன்வைக்கப்படும் பொது வசதிகள் தொடர்பான சகல முறைப்பாடுகளுக்கும் அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளல்.
அத்துடன் அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை நீடித்தல் புதிய நீர்சேவையை பெற்றுக்கொள்ளல், நீர்சேவையினை பெயர்மாற்றம் செய்து கொள்ளல், வருடாந்த அனுமதிப்பத்திரம் நீடித்தல், ஆபத்தான மரங்களை அகற்றுதல், கட்டிட நிர்மாண அனுமதி வழங்குதல், தற்காலிக மற்றும் நடமாடும் வியாபாரங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கல், மற்றும் பரிசீலணை செய்தல் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி ஆட்டிறைச்சி மீன்கடைத் தொகுதிகளை முறையாக பராமரித்தல், பொது சுகாதார பரிசோதகர்கள் மூலம் உணவு விற்பனை நிலையங்களை பரிசோதித்தல், மற்றும் தரப்படுத்தல் பிரதேசசபைக்கு உரித்தான வீதிகள் வடிகாண்கள் பொதுக்கழிப்பறைகள் பஸ் நிலையங்கள் ஏனைய பொது இடங்களை பராமரித்தல், அபிவிருத்தி செய்தல், வீதி விளக்குகளை பொருத்துதல், அவற்றை பராமரித்தல், சிறுவர் பூங்காக்களை பராமரித்தல், மற்றும் அபிவிருத்தி செய்தல் சிவனொளிபாதமலை பருவகால யாத்திரிகர்களுக்கு தேவையான சகல பொது சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுத்தல், சிவனொளிபாதமலை அடிவாரத்திலிருந்து ஊசிமலை வரையான கழிவகற்றல், பாதையினை துய்மைப்படுத்தல், வேலைகளை மேற்கொள்ளல் போன்ற 32 வகையான சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே நமக்கு கிடைக்கப்பெற்றுள்ள பிரதேச சபையினை பயன்படுத்தி மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் மற்றும் அபிவிருத்திகள் அதிகமாக இருக்கின்றன. அதைவிடுத்து விளையாட்டு மைதானத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு விமர்சனங்களை முன்வைப்பதை தவிர்க்க வேண்டும். தற்போது மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளின் காணப்படும் பொது இடங்கள் பிரதேச சபைக்கு சொந்தமானதாக காணப்படுகின்றமையினால் அதனை பராமரிப்பதும் அபிவிருத்தி செய்வதும் இதன் கடமையாகின்றது. மஸ்கெலியா பிரதேச சபையின் ஆட்சியினை யார் கைப்பற்றுவது என்ற விடயத்தில் மிகவும் மோசமான செயற்பாடுகள் மஸ்கெலியாவில் அரங்கேறியிருந்தன.
அதனபின்னரான ஒவ்வொரு அபிவிருத்திகளும் மக்கள் சேவையுடன் முன்வைக்கப்படுவதைவிடவும் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. இந்நிலைமையானது எதிர்கால வளர்ச்சிக்கு தடையாகவே அமையும். எதிர்வரும் கட்டுரையில் மஸ்கெலியா பிரதேச சபையினால் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக