தனது கள்ளக் காதலியின் மகளின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாகந்துர மதூஷின் கதை ஆரம்பமாகி இதுவரை 2 மாதங்கள் கடந்து விட்டன. இருப்பினும் தற்போது வரை நாட்டின் பிரதான தலையங்கமாக மதுஷவின் கைது காணப்படுகின்றது. மிலேச்சத்தனமாக நடந்து கொண்ட மதூஷைப் பற்றி அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைப்பது அதனால்தான். இவ்வாறு பிரபலமாக மதூஷ் கருதப்பட்டாலும் சிலருக்கோ அவனது பெயரைக் கேட்டால் இன்னும்
நெஞ்சு படபடக்கவே செய்கிறது. சிலர் அவனது பெயரை கேட்கவே விரும்புவதில்லை.
மதூஷ் உள்ளிட்ட குழுவினர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை பொலிஸார் அறிந்து கொண்டது அந்த சந்தர்ப் பத்திலேயாகும். இருப்பினும் அந்த நோடியிலிருந்து நடந்தது என்ன? சில பொலிஸ் அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் மதூஷின் கைதுக் கெதிராக கொந்தளித்ததும் உண்டு என்றே கூற வேண்டும். அந்தளவுக்கு மதூஷின் கவனிப்பு அவர்களுக்குக் கிடைத்தது எனலாம். கடைசியாக மதூஷின் கைது தொடர்பாக டுபாய் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் இராஜதந்திர உறவு ஏற்படும் வரை கதை நீண்டுகொண்டு சென்றது. இதனால் கைது செய்யப்பட்ட மதூஷ் மற்றும் ஏனையவர்கள் தொடர்பில் கூட பொலிஸாருக்கு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. சில பொலிஸார் டுபாய்க்குச் செல்லத் தயாரான போதும் கூட டுபாய் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை.
போதைப்பொருட்களால் இந்த நாட்டை நாசமாக்கிய மற்றும் தொலைபேசி மூலம் பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்திய பாதாளக்குழுத் தலைவன் வேறொரு நாட்டின் சட்டத்திட்டங்களுக்கேற்ப அங்கு தடுத்து வைத்திருப்பதென்பது அவன் வாழ்ந்த நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியாக கருதப்படுகின்றது. இதன் பிரதிபலனாக எந்வொரு விசாரணகளின் போதும் இலங்கை பொலிஸாரிடம் இது தொடர்பில் தகவல்கள் பெறப்பட்டிருக்கவில்லை. டுபாய் பொலிஸார் விசாரணைகள் மேற்கொள்ளும் போது இலங்கை பொலிஸாரோ வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம். இவ்வாறு பல இழுபறிகளுக்கு மத்தியில் நீண்டுகொண்டு சென்ற மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்ட கதை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அதற்கிணங்க டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதூஷ் உள்ளிட் 31 பேரில் 23 பேரை இலங்கைக்கு அனுப்ப டுபாய் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. எஞ்சியிருப்பது மாகந்துர மதூஷ் உள்ளிட்ட 8 பேரே.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட தினத்தன்று மதூஷால் தன்னை வெளியேற்ற வேண்டாமென்று கூறி டுபாய் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் மதூஷை வெளியேற்றுவதும் வெளியேற்றராதிருப்பதும் அந்நாட்டு நீதிமன்றப் பொறுப்பிலேயே தங்கியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பானது அடுத்த மாதம் (மே) வரை டுபாய் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அனைவரும் முடி வெட்டப்பட்டு மொட்டைத் தலையுடனேயே காணப்பட்டனர்.இது அந்நாட்டின் சட்டமாகும். இவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் அநேகமானோர் பாதாள பிரபலங்களே. அதிலும் பலபேர் மதூஷின் சகாக்களே. ஏனையோர் கஞ்சிபான இம்ரானின் சகாக்கள். இவ்வாறு டுபாயிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் முக்கியமானவர் பிரபல பாதாளக் குழுத் தலைவனான கஞ்சிபான இம்ரானே. இவன் இந்த நாட்டை போதைப்பொருட்களால் ஆட்சி செய்தவன். பெரிய கொலைகாரன் . தனது சட்டபூர்வ மனைவியைக் கூட கொலை செய்த பாவி. குடு வியாபாரம் மூலம் பலகோடி ரூபாக்களை சம்பாதித்தவன். கஞ்சிபான இம்ரான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்திலாகும். ஒரு சிலர் இவனுக்கு கஞ்சிபான என்ற பெயர் வரக் காரணம், இவன் ஆரம்பத்தில் கஞ்சி விற்பனை செய்தமையேயாகும் என்கின்றனர். வளர்ந்து ஆளான பின்னர் பாரியளவில் குடு போதைக்கு அடிமையாகிப் போனான் இம்ரான். இதிலிருந்து அவனை மீட்டது ரிஸ்வானே. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர். கொழும்பு நகரில் கெப் வாகன சேவையொன்றை நடத்தி வந்தபோது கொலைசெய்யப்பட்டவனே ரிஸ்வான். கஞ்சிபான இம்ரானும் ரிஸ்வானும் நெருங்கிய நண்பர்கள் என்றபடியால் வியாபாரியான ரிஸ்வான் , கஞ்சிபான இம்ரானை இந்தியாவுக்கு கூட்டிச் சென்று குடு போதையிலிருந்து அவனை விடுவித்தான். அந்த நொடியிலிருந்து கடுபோதையை கைவிட்ட இம்ரான் , முறையாக குடு வியாபாரத்தில் ஈடுபட்டு முன்னுக்கு வரலானான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மாளிகாவத்தை பாதாளக் குழுவின் இன்னுமொரு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மிரட்டலால் கஞ்சிபான இம்ரான் இந்தியாவிலிருந்து டுபாய்க்கு தப்பிச் சென்றான். இப்போது கஞ்சிபான இம்ரான் இலங்கை பொலிஸாரின் பொறுப்பிலேயே இருக்கின்றான். டுபாய்க்கு தப்பிச் சென்றதன் பின்னர் பாரியளவில் குடு வியாபாரம் மேற்கொண்டு பெரிய குடு வியபாரியாக பிரசித்தி பெற்றான். இருப்பினும் இன்றுவரை பொலிஸாரின் பொறுப்பிலுள்ள கஞ்சிபான இம்ரானின் பாரியளவிலாள குடு வியாபாரடம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனரா? தனது மனைவி உட்பட பல பேரைக் கொலை செய்த அநியாயக்காரன் இவன். பலபேரை கொலை செய்ததில் மிகவும் பிரசித்திபெற்றவன். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரா? டுபாயிலிருந்து எத்தனை பேரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருப்பான்? இவ்வாறு தொடர்புகளை மேற்கொண்டவர்களும் அவனோடு சேர்ந்து பல குற்றங்களை இழைத்தவர்களே. இல்லாவிடின் அவனின் எதிராளிகளே. யார் அவர்கள்? இதற்குள் தனது பாதாளச் செயற்பாடுகளுக்கு அரசியல்வாதிகளை பயன்படுத்திக் கொண்டானா? யார் அவர்கள் ? டுபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு இலங்கை பொலிஸாரின் பொறுப்பில் கஞ்சிபான இம்ரான் சுமார் ஒரு மாத காலமாக இருக்கின்றான். இருப்பினும் கேள்விகளுக்கான பதில் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.
கஞ்சிபான இம்ரான் இங்கு கொண்டுவரப்பட் பின்னர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபரால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் நாட்டின் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபரால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் நாட்டின் குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ள பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, வெகு காலமாக பாதாளம் மற்றும் குடு வியாபாரத்துக்கெதிராக கடுமையான செயற்பாடுகளை திட்டமிட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையதிகாரி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகிய அதிகாரிகள் உள்ளடக்கப்படவில்லை.
குடு வியாபாரம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தைக் கொண்டு இந்தியாவில் பல வியாபாரங்களை இம்ரான் மேற்கொண்டு வருவதாக இன்னொரு பக்கத்தில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும் இது தொடர்பில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் இம்ரானின் சொத்து தொடர்பிலும் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் மேற்கொள்ளப்படவேண்டிய விசாரணைகள் பல உள்ளன. இருப்பினும் அனைத்தும் மந்தகதியிலேயே சென்றுகொண்டிருக்கின்றன. இந்தத் தகவலை பல பொலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். விசாரணைக்குப் பதிலாக தற்போது நடப்பது இம்ரானை தாலாட்டும் செயற்பாடு என்றால் அது எந்தளவுக்கு அநியாயம்? இந்த அறிக்கையை நாம் முன்வைப்பது இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்குள்ளும் கதைத்துக்கொள்கிறார்கள் என்றபடியால்தான்.
உண்மை நிலைவரம் இதுவாகின், பேச்சுக்காவது மாகந்துர மதூஷை இலங்கைக்கு நாடு கடத்தினால் என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. களுத்துறையில் சிறைச்சாலை பஸ்ஸுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு சிறைச்சாலை அதிகாரிகளில் இருவர் மற்றும் பாதாளத் தலைவன் சமயங் உள்ளிட்ட குழுவினரை கொலை செய்த சந்தர்ப்பத்தில் மாகந்துர மதூஷின் குழுவுக்கு பொலிஸ் சீருடை எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் மதூஷிடம் கேட்க பொலிஸார் முன்வந்தனரா? அவ்வாறே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ உள்ளிட்டவர்களுக்கு பிலியந்தலையில் வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் ஒரு அதிகாரி உயிரிழந்ததோடு ரங்கஜீவ கடுங்காயங்களுக்காளான குற்றத்தின் திட்டமிடல் தொடர்பில் மதூஷிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனரா? மதூஷûடன் தொடர்புடைய ஏனைய சகாக்கள் பற்றிய தகவல்களைப் பெற ö பாலிஸார் முன்வந்துள்ளனரா?தனது குடு வியாபாரத்துக்குப் பயன்படுத்திய இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா? விசேடமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டத்தில் தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் டீ.ஐ.ஜீ. நாலக்க சில்வா மற்றும் மதூஷûக்கிடையிலிருக்கும் தொடர்பு பற்றி தேடியறிய மதூஷை இங்கு அனுப்பிவைத்தால் பொலிஸார் தக்க நடவடிக்கைகள் எடுப்பார்களா? இந்தக் கொலைக் குற்றச்சாட்டு திட்டமிடப்பட்டது மதூஷ் ஊடாகவே என அண்மையில் நாமல் குமார தெரிவித்திருந்தார். இவ்வாறு மதூஷை நாட்டுக்கு கொண்டு வந்தால் பல விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவைகள் மேற்கொள்ளப்படுமா? இந்தக் கேள்விகள் எமக்கானதல்ல. இந்நாட்டு பொதுமக்களால் கேட்கப்படும் கேள்விகளாகும். இதுவரை கஞ்சிபான இம்ரானிடம் இரகசியமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அனைத்தும் மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. தாங்கள் மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரவில்லை. மதூஷ் மற்றும் கஞ்சிபான இம்ரான் போன்ற பாதாளப் பிரபலங்களால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களில் பாதிக்கப்பட்டது அப்பாவிப் பொதுமக்களே. அதனால் நடந்தது மற்றும் நடப்பது தொடர்பில் அறிய அவர்களுக்கு உரிமையுண்டு. பொரும்பாலும் இவை எல்லாவற்றிற்கும் தீர்வாக அமைவது பொலிஸாரின் பொறுப்பிலுள்ள கஞ்சிபான இம்ரான் மற்றும் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மதூஷûக்கு எதிராக பல குற்றங்களை பிரயோகித்து அவர்கள் இருவரையும் சிறைச்சாலைக்கு அனுப்புவதேயாகும். அப்படிச் சென்றாலும் கூட முன்பை விட மிக நன்றாகவே சிறைக்குள்ளிருந்து அவர்கள் தங்கள் வியாபாரங்களை மேற்கொள்ளக்கூடும். அவர்களுக்குத் தேவைப்படுவது கைப்பேசியொன்றே. இவர்களுக்கு தொலைபேசியொன்றை பெற்றுக்கொள்வதென்பது மிகவும் சுலபமான காரியமாகவே இருக்கும். இவை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இவ்வாறு தெரிவிக்கிறார்.
மாகந்துர மதூஷûடன் அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான தகவலை அறிய வேண்டுமென்றால் மதூஷிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் மதூஷ் இன்னும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. கஞ்சிபான இம்ரான் உள்ளிட்ட மேலும் சிலரிடம் விசாரணைகள் மேற்கொண்டதில் அவ்வாறான எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த விசாரணைகள் மந்தக் கதியில் செல்வதாகக் கூறுவோரிடம் விசாரணைகள் மிகத் தீவிரமாகவே நடக்கின்றன என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இப்போது பொலிஸ் பொறுப்பிலுள்ள பிரபல குற்றவாளி கஞ்சிபான இம்ரானே. பொலிஸ் மா அதிபரால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அக்குழுவுக்குத் தேவையான அதிகாரிகளையும் தகவல்களையும் நாங்கள் தொடர்ந்தும் வழங்கிகொண்டுதான் வருகின்றோம். பல முக்கிய தகவல்களை விசாரணைக் குழு இதுவரை பெற்றுள்ளது.
இந்தக் குழுவுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் அரச புலனாய்வு சேவை, குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி ஆகியோரை உள்ளடக்காதது பாரிய தொகையில் அதிகாரிகளை அக்குழுவுக்கு இணைக்க முடியாததாலாகும். ஆனபோதும் அந்த உயர் அதிகாரிகளின் பங்களிப்பு இந்த விசாரணைக் குழுவுக்கு முழுமையாக் கிடைக்கின்றது. எது எப்படியான போதும் மிக விறுவிறுப்பாகவே விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எந்தவொரு முடிவும் தீவிர விசாரணைகளின் பின்னரே தெரிவிக்கப்படும். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் என்றபடியால்தான் இந்தத் தகவல்களை நான் உங்களுக்கு வழங்குகின்றேன். எல்லா நடவடிக்கைகளும் விசாரணைகளுக்கு எந்தவித தடங்கல்களுமின்றியே நடந்தேறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக