இலங்கையிலும் அதேபோல் டுபாயிலும் கடந்த காலங்களில்
அதிகமாகக் பேசப்பட்டது 700 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல் பற்றியேயாகும். ஆசியாவிலேயே பாரிய கொள்ளைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. இந்த வைரக் கல்லின் இரகசியம் கடந்த வாரம் பாணந்துறையில் வைத்து அம்பலமானது. எம்பிலிப்பிட்டிய, எட்டிகல , பொரலுஹேனையில் வசித்து வந்த மாகந்துர மதூஷின் நீண்டகால சகாவான கெவ்மாவுடன் வைரத்தையும் சேர்த்து திட்டமிட்ட செயற்பாடு மூலமே கைப்பற்றிக்கொண்டனர். பார்க்கப்போனால் கெவ்மா பெரிய கோடீஸ்வரன் .பொரலுஹேன விகாரையின் புண்ணிய பூஜைக்காக மட்டும் 65 இலட்சம் ரூபாவை செலவு செய்திருந்தான். அவனிடம் காணப்படும் பணத்தைப் பார்க்கும் போது இந்தச் செலவானழ ஒரு சிறு துளியாகும். தனது கழுத்தில் அணிந்திருக்கும் பென்டனுக்கு மட்டும் 37 இலட்சம் ரூபாவை செலவு செய்திருந்தான். இந்தப் பென்டனை அணிய சிறப்பு பூஜைகளை இவன் செய்திருந்தான்.
இவ்வாறு பாரிய செலவுகளை மேற்கொள்ளும் இந்த கோடீஸ்வரப் பிரஜை கெலும் இந்திக சம்பத் ஆவார். பிட்டிகல , பொரலுஹேன இஹல வெஹவெஸ்ஸ இவனது பிறந்த இடமாகும். கெலுமின் தந்தை முன்னாள் பொலிஸ் அதிகாரியாவார். நல்ல குணம் கொண்டவர். இந்திக 10 வருட சிறைத்தண்டனை அனுபவித்தவன் என்பது ஊர்மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். அதன் பிறகு சிறந்த பிரஜையாக மாறியிருப்பான் என ஊர் மக்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். மதூஷின் அனைத்துக் குற்றங்களும் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் , சிறந்த நற்குணம் கொண்டவனாகவே இந்திக நடந்து கொண்டான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சாதாரண வருமானம் தரக்கூடிய வியாபாரமொன்றை மேற்கொண்டு வாழ்க்கையை கொண்டு செல்வதாக ஊர் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தான். மாகந்துர மதூஷாலேயே இந்திக பிரபல கோடீஸ்வரனானான். மதூஷின் வட்டாரத்துக்குள் மிகவும் நம்பிக்கைக்குரியவன் இந்திக என்பதை மறுக்க முடியாது. 700 கோடி ரூபா பெறுமதியான வைரத்தை கொள்ளையடிம்ம பிறகு அதைப் பாதுகாக்க கெவ்மாவிடமே அனுப்புகின்றனர். மதூஷவின் மீதிருந்த நம்பிக்கை காரணமாகவே அது இடம்பெற்றது.
பல காலமாகவே கெவ்மா , மறைந்திருந்தே வாழ்ந்து வரும் ஒருவனாவான். மதூஷின் குடு வியாபாரத்தில் பெருமளவானவற்றை கெவ்மே திட்டமிட்டு செயற்படுத்தி வந்தான். மதூஷின் வட்டத்துக்குள் மறைந்திருந்து திட்டங்களை மேற்கொண்டுவரும் ஒரு பிரஜை என்பதிலும் பார்க்க அந்தக் குழுவிலேயே உள்ள மிகவும் பழைமையான மற்றும் பிரசித்தமானவன் என்றால் அது கெவ்மா மட்டுமே. அதற்குக் காரணம் அவன் இருக்கும் இடத்தை அவனது உறவினர்களுக்குக் கூட தெரியாமல் வைத்திருப்பதாகும். 2005 ஆம் ஆண்டு தொடக்கம் சிறையில் தனது பயணத்தை ஆரம்பித்த கெவ்மா, 10 ஆண்டுகள் மதூஷûடன் சேர்ந்து சிறைவாசம் அனுபவித்தான். மாகந்துர மதூஷûடன் சேர்ந்து சகலவற்றையும் மேற்கொள்ளும் இவன், பஸ் நடத்துனர் வேலை செய்யும் போது அந்த பஸ்ஸின் சாரதி மதூஷாவான் . பாதாள உலகத்துக்குள் பிரவேசிக்க முன்பு பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டு பகுதி நேர வேலையாக கராஜ் ஒன்றில் வேலை செய்தான் மதூஷ். பின்னர் மாத்தறை வைத்தியசாலையொன்றில் சேவகராக பணிபுரிந்தான். அன்று சாதாரண குடும்பமொன்றில் பிறந்த மதூஷ் இன்று முழு உலகமும் பேசிக் கொண்டிருக்கும் பிரபல பாதாளக் குழுத் தலைவனாவான். போதைப்பொருள் வியாபாரம் , கப்பம் பெறல், கொந்தராத்து அடிப்படையில் மனிதக் கொலை போன்றவற்றை மேற்கொண்டு பிரபலமான மதூஷ் , கோடீஸ்வரனானது டுபாய்க்கு தப்பிச் சென்றதன் பின்னரேயாகும். நாடு பூராகவும் போதைப்பொருள் விநியோகிக்கும் சகல வியாபாரங்களோம் தொடர்புடைய மதூஷ், தனது குடு தொகையை கஞ்சிபான இம்ரான் உள்ளிட்ட குழுக்களுக்கு பிரித்துக்கொடுக்கும் பொறுப்பை கெவ்மாவிடமே ஒப்படைத்தான்.
கெவ்மாவே மதூஷின் நல்ல நம்பிக்கைக்குரியவன் . கம்புறுபிட்டி ஹர்ஷ என்ற மதூஷின் நெருங்கிய துப்பாக்கிதாரி நண்பனை போலவே கெவ்மாவும் மதூஷûக்கு விசுவாசம் கொண்டவனாக செயற்பட்டான். அதனால் மாதத்துக்கு 2 கோடி ரூபா மதூஷிடம் இருந்து கெவ்மாவுக்குக் கிடைத்தது. குடு தொகையோடு விநியோகம் செய்யப்பட்டது முதல் பணம் சேகரிக்கும் வரை மதூஷின் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது கெவ்மா என்பதாலேயாகும். இவ்வாறு கிடைக்கப்பெறும் பணத்தில் கெவ்மா ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தான். செய்கின்றபாவச் செயல்கள் அனைத்துக்கும் விகாரைகயில் இடம்பெறும் புண்ணிய பூஜைகளுக்கு பணத்தை வாரி இறைப்பதன் மூலம் புண்ணியம் தேடிக் கொள்வான். அவன் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம் அது இல்லையென்பதனாலாகும். ஊருக்கும் நகருக்கும் தலைவனாக விளங்கிய கெவ்மா , பாதாளக் குழு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தாலும் மறைமுகமாகவே இருந்து வந்துள்ளான். யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த வாரம் பேலியகொட குற்றத்தடுப்பு ஒன்றியத்தினால் கெவ்மா சுற்றிவளைக்கப்பட்டான். இதை அவனும் சற்றேனும் எதிர்பார்த்திருக்க மாட்டான் என்றே கூற வேண்டும். அதுவும் வெறுமனே கைது செய்யப்படவுமில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட 700 கோடி ரூபா வைரத்துடனேயே கைது செய்யப்பட்டான்.
வைரத்தை தேடிச் சென்ற பொலிஸ் குழு 1 1/2 கோடி ரூபா பணத்தையும் தேடிக் கண்டுப்பிடித்தனர். இந்தப் பணமானது , பிட்டிகல , பொரலுஹேனவிலுள்ள கெவ்மாவின் வீட்டுக்கு பின்புறத்திலுள்ள குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்தது. கெவ்மாவின் தாய் இந்த வீட்டியே லே வசித்து வந்தார். வைரக்கல்லானது , கெவ்மா மறைத்திருந்த பாணந்துறை , கெசல்வத்த வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த வீடானது வாடகை வீடாகும். பொறியியலாளராக காட்சிதந்த கெவ்மா தனது அலுமாரியில் வைரம் மற்றும் தனது தங்காபரணங்களை மறைத்து வைத்திருந்தான். அதில் மாலை , கைச்சங்கிலி மற்றும் சில மோதிரங்கள் என்பனவற்றின் நிறையானது சுமார் 40 பவுணுக்கும் மேலாகும். மேலும் அங்கு காணப்பட்ட பொதியொன்றில் 137 கைத்தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குற்றத்துக்காக பயன்படுத்தப்பட்டவையாகும். தனது பாதுகாப்புக்காக வேண்டி மொரட்டுவ , அல்விஸ் பெரேரா மாவத்தையில் இன்னுமொரு வீட்டை வாடகைக்கும் பெற்றிருந்தான் கெவ்மா . இந்த வீட்டில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட இராணுவச் சீருடை , துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் , ரவைகள் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தனது பாதுகாப்புக்காக பல வீடுகளை கெவ்மா வாடகைக்கு பெறறிருந்தான். இவ்வாறு மறைந்து வாழ்ந்து வந்த கெவ்மா பற்றிய தகவல் முதல் முதலாக தொடங்கியது , கெவ்மாவின் உறவினரொருவரின் மகன் தொடர்பில் களனி பொலிஸ் விசேட பிரிவுக்கும் கிடைக்கப்பெற்ற தகவல்களூடாக விசாரணைகளை ஆரம்பித்த பின்னரேயாகும். கசுன் மற்றும் ஹேமால் ஆகிய இருவரும் வலய குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் களனி விசேட பிரிவு என்பனவற்றால் கடுவலயில் வைத்து கைது செய்யப்பட்டனர். கெவ்மா கசுனின் சித்தப்பா ரனாலயை பிறப்பிடமாக க் கொண்ட வன் கசுன். இந்தப் பிரதேசமானது ரனால சமயங்வின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகும். கசுனை தனது வேலைகளுக்காக கெவ்மா பயன்படுத்தியது
இந்த உறவு முறையினாலாகும். மகன்- சித்தப்பா ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து மேற்கொள்ளும் இரகசியத் திட்டங்களுக்கு கடுவல ஹேமாலை புதிய உறவாக இணைத்துக்கொண்டனர்.
ஹேமால் கைத்தொலைபேசி திருத்தும் மற்றும் கணினி திருத்தும் கடையின் உரிமையாளராவான். கணினித்துறையில் நல்ல அறிவைக் கொண்டவன் ஹேமால். ரனால சமயங்கவுடன் ஒன்றாக கல்வி கற்ற ஹேமல் கடுவல பாதாளக் குழுவிலிருந்தவன். ஹேமாலின் திறமையை அறிந்துகொண்ட கசுன் , தனது எல்லா திட்டங்களுக்குöம் ஹேமாலை இணைத்துக்கொண்டது. எதிர்காலத்திட்டங்களிலும் அவனை சேர்த்துக்கொள்ளும் பொருட்டேயாகும். பொலிஸாரும் குற்ற விசாரணைப் பிரிவும் தொலைபேசி அழைப்பை கண்காணித்து சந்தேகநபர்களை கைது செய்வது உலகறிந்த விடயமாகும். அதனால் அதிலிருந்து தப்பித்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ஹேமாலின் உதவி கசுனுக்கு தேவைப்பட்டது. மேலும் மதூஷின் தந்தையின் இறுதி சடங்குகளை நேரடியாக பார்ப்பதற்கு கமரா பொருத்தியது ஹேமாலே என்பது களனி பொலிஸ் விசேட பிரிவு கான்ஸ்டபிள் ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலாகும். இதனால் இரகசியமாக கடுவலவில் வைத்து ஹேமாலை கைது செய்தது யாரென்று தெரியாமலேயாகும். தன்னால் தவறிழைக்கபட்டுவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட ஹேமால் , அனைத்தையும் கூறிவிட்டான்.
மரண வீட்டில் கமரா பொருத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஹேமால் வைரம் தொடர்பான தகவல்களையும் சொல்லத் தொடங்கினான். தன்னைக் கைது செய்தது வைரக் கொள்ளைச் சம்பவத்துக்கே என்றெண்ணிய ஹேமால் அது தொடர்பான சகல தகவல்களையும் கொட்டித் தீர்த்தான். ஹேமால் , கெவ்மா மற்றும் கசுன் என்போர் பிலியந்தலையில் இருக்கும் போது கொள்ளையடிக்கப்பட்ட வைரத்தை மாத்தளை மல்லிகெவ்மாவிடம் கொடுத்த போது , தனக்கும் கொஞ்சம் பார்க்கத் தாருங்கள் என ஹேமால் கேட்க, கெவ்மா கொடுத்தான். மீண்டும் கெவ்மாவிடம் வைரத்தை கொடுத்தான் ஹேமால். வைரக் கொள்ளைக்குச் சென்ற ஹேமாலை இதற்கு முன்னர் வெவ்வேறு பிரதேசங்களுக்கு குடு பணத்தை சேகரிக்க கசுனுடன் அனுப்பினான் கெவ்மா. இந்தளவுக்கு இரகசியமாக பணம் கொடுக்கல் - வாங்கல் இடம்பெறுவது குடு வியாபாரத்துக்கே என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். ”சித்தப்பா ஏதாவது இரகசியமாகச் செய்கிறீர்கள் தானே” என கடுவெல ஹேமால் கசுனிடம் இந்தக் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டான். கசுனுக்கு மறைக்கவும் தோன்றவில்லை. தனது சித்தப்பாவை விட்டு விலகிச் செல்ல ஹேமாலுக்கு முடியாமைக்கு காரணம் பணமே. மதூஷ் குழுக்கள் மேற்கொள்ளும் குற்றங்களுக்கு தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் கட்டளையதிகாரியாக செயற்பட்டது ஹேமாலே. இதற்காக வேண்டி 30 இலட்சம் ரூபாவை ஹேமாலுக்கு கெவ்மா வழங்குகிறான். யாருக்கும்
சந்தேகமின்றி தொடர்ந்து கைத்தொலைப்பேசிக் கடையை நடத்திச் செல்லும் பொருட்டே இப்பணம் கொடுக்கப்பட்டது. ”கசுன் எதிர்வரும் நாட்களில் கைத்தொலைபேசிகளில் வெற்றிப் பரிசுகள் கிடைக்கவிருக்கின்றன. பெருமளவு கொள்வனவு செய்தால் ஏதாவது பெரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். சித்தப்பாவிடம் கடனாக 30 இலட்சம் ரூபாவை வங்கித்தா என ஹேமால் தனது நண்பனான கசுனிடம் கேட்டுக் கொண்டான்.
இவ்வளவு காலம் தன்னுடன் எல்லா திருட்டு வியாபாரங்களுடனும் தொடர்புபட்ட கசுனுக்கு அவன் அகட்டதைச் செய்யாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஒப்புக்கொண்டான். கடனாகப் பெற்ற பணத்தை ஒரே தடவை மீளச் செலுத்த ஹேமாலுக்கு முடியாது. 15 இலட்சம் ரூபாவை மட்டுமே ஹேமாலால் திருப்பிக் கொடுக்க முடிந்தது. அதன் பின்னர் கெவ்மாவிடமிருந்து ஹேமாலால் தப்பிக்க முடியாமல் இருந்தது. மிகுதிப் பணத்தை செலுத்த முடியாமல் போனதால் கெவ்மா கூறும் அனைத்தையும் செய்ய வேண்டியதாயிற்று. ஒவ்வொரு கொடுக்கல் - வாங்கல்களுக்கும் ஹேமாலிடமே கைத்தொலைபேசிகள் கொள்வனவு செய்யப்பட்டன. வெவ்வேறு பெயர்களில் எல்லா கைத்தொலைபேசிகளையும் ஹேமால் பெற்றுக்கொடுத்தான். வைரக் கொள்ளையின் பாரிய பொறுப்பை ஹேமால் சுமக்க வேண்டியதாயிற்று. கெவ்மா கொள்ளைக்கு தயாராகுமாறு சுகனிடம் கூறிக் கொண்டிருந்தான். அந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு ஜீப் வண்டியோ அல்லது கெப் வாகனமோ மேலும் 2 கைம்தொலைபேசிகளும் தேவைப்படுவதாகவும் தெரிவித்தான். ஹேமாலிடம் உதவிப் பெறும் பொருட்டே இவற்றைக் கூறினான். இவ்வளவு நாட்களாக குடு விற்ற பணத்தை கொண்டுவருவதற்காக ஹேமால் மூலம் வாடகை வாகனங்களை விநியோகிக்கும் இடங்களில் வாடகைக்கு வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. வாடகை வாகனங்களை விநியோகிக்கும் போர்வையில் இருந்த ஹேமால் , தனது வாகனத்தையும் குடு வியாபாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டான்.
இலங்கையில் பாரியளவு குடுவை கடல் மத்தியில் வைத்து ஈரான் கப்பலொன்றுடன் சுற்றிவளைத்த போதைப்பொருள் மற்றும் பாதாளத்தினருக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்கும் திறமையான அதிகாரியொருவர் தான் வசித்து வரும் பகுதிக்குட்பட்ட நவகமுவ பொலிஸ் நிலையத்துக்கு வந்திருப்பதாக ஹேமால் அறிந்து கொண்டான். கைத்தொலைப்பேசியை புதுப்பித்துக் கொடுப்பதில் திறமையான இளைஞனாக கடுவலயில் பிரசித்தபெற்றிருந்த ஹேமால் பொலிஸாரினதும் கைத்தொலைபேசிகளை புதுப்பித்துக்கொடுத்து அவர்களது மனதிலும் இடம்பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டான். பொலிஸ் விசேட ஒன்றியத்தின் பாதாள ஒழிப்புப் பிரிவிலிருந்து கடுவலப் பாதாளத்தை ஒழிக்கவென நவகமுவவுக்கு அனுப்பிய பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள சில்வாவை சந்திக்க ஹேமால் செல்வது பொலிஸிலுள்ளவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கிலேயாகும். பாதாளத்துக்கும் போதைப்பொருளுக்கும் எதிராக நிற்கும் இந்த அதிகாரியிடம் ஹேமால் நெருங்குவதற்குக் காரணம் மதூஷின் வேண்டுகோளின் பேரிலா என்ற சந்தேகத்திலாகும். குடு வியாபாரத்துக்கு எதிரான இந்த பொலிஸ் அதிகாரியை கொலை செய்வதற்கு விளக்கமறியலில் இருந்த பாதாள உறுப்பினர்கள் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டது நீதிமன்றத்தில் வெளிச்சமாகியிருந்தது.
மாகந்துர மதூஷின் தந்தை இறந்துபோன நாளிலிருந்து இறுதிச் சடங்கு முடியும் வரை டுபாயிலிருந்து மதூஷûக்கு நேரடி ஒளிபரப்புச் செய்ய கமரா பொருத்தியது ஹேமாலே. அதற்குப் பணம் கொடுத்தது கெவ்மாவே. ஹெலிகொப்டர் மூலம் இறுதிச் சடங்கின் போது மலர் தூவியதற்கு மதூஷின் கட்டளைக்கிணங்க பணம் செலவழித்ததும் கெவ்மாவே. கடந்த வருடம் மதூஷின் தலையெழுத்தை தீர்மானிக்கும் கொள்ளைச் சம்பவமொன்று தெவுந்தரயில் இடம்பெற்றது. 138 கிலோ ஹெரோயின் கொள்ளையடிக்கப்பட்டது. பெறுமதி 138 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். இந்த ஹெரோயின் தொகை டுபாயிலிருக்கும் கிருலப்பனை குடு மெரில் உடையதாகும். மெரில் அனுப்பிய குடுத் தொகையை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் போல் சென்று கொள்ளையடித்தது மதூஷின் கட்டளைக்கிணங்கவேயாகும். இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு செல்வது ஐ.தே.க. வின் பிரதேச மந்திரியொருவர் உள்ளிட்ட குழுவினராவர். இந்தத் தகவலை அறிந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் அங்கு செல்லும் போது மதூஷின் குழுவினர் இவர்களுக்கு முன்பாகவே அந்த வேலையை செய்து முடித்துவிட்டனர். உண்மையான போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் அங்கு செல்வதற்கு முன்னரே மெரிலின் குடுத் தொகையை மதூஷின் திருட்டு பொலிஸ் குழுவினர் கொள்ளையடித்துவிட்டனர். அன்று கொள்ளையடிக்கப்பட்ட பாரியளவான குடுவை கொழும்புக்கு கொண்டுவந்தது கெவ்மா, கசுன் மற்றும் ஹேமால் ஆகிய மூவருமே மதூஷின் டுபாயிலுள்ள மனைவியின் ஆலோசணைக்கிணங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவை சுட்டுக் கொல்லும் திட்டத்தை தீட்டியதும் கெவ்மாவே. கெவ்மாவின் திட்டத்துக்கேற்ப பிலியந்தலையில் வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டது, மதூஷின் டுபாய் மனைவி அனுப்பிய உளவாளியின் தூண்டிலில் சிக்கியேயாகும். நீர்கொழும்பில் பெரோஸ் என்ற பாதாளக் குழுத் தலைவனின் குழுவிலுள்ள ஒருவனே இந்தத் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டான். மஹரகம கலு துஷாரவின் மனைவியான மதூஷின் இரண்டாவது மனைவி டுபாயிலிருந்து ரங்கஜீவவை கொலை செய்யத் திட்டமிட்டதும் துஷாரவிடம் பழிவாங்கும் எண்ணத்திலேயேயாகும். இந்த எல்லாச் சம்பவங்களினதும் பின்னால் மறைந்திருந்து செயற்படும் கெவ்மாவுக்கு வைரக் கொள்ளைச் சம்பவத்துக்கு உபதேசம் வழங்கியது மதூஷே. அந்த உபதேசத்துக்கிணங்க தனது ஒத்துழைப்புக்காக வேண்டி கசுன் மற்றும் ஹேமாலை கெவ்மா இணைத்துக்கொண்டான்.
பியகமவில் கெப் வாகனமொன்றை வாடகைக்குப் பெற்று ஹேமால் மற்றும் கசுனை அனுப்பி கொள்ளை தொடர்பாக இரகசிய தொழில்நுட்ப திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. புதிதாக என்ரேயிட் தொழில்நுட்பம் அடங்கிய கைத்தொலைபேசியை கொள்வனவு செய்தனர். அதற்கு வேறாக ச்ணீணீ பொருத்தி கைத்தொலைபேசி வைத்திருக்கும் நபர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஹேமாலின் உதவியுடன் திட்டமிடப்படுகிறமு. ஹேமாலின் தொலைபேசி ச்ணீணீ ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டம் தொடர்பாக அறிந்துக்கொள்வதுடன், வெடிகந்தையில் வேறாக கசுனை கண்காணித்துக்கொளண்டிருந்தான் மதூஷ். வெடிகந்தையில் கசுனுக்கு இருந்த வேலை , ஆயுதமொன்றை கொண்டு சென்று கொடுத்துவிட்டு கொள்ளைச் சம்பவம் ஒழுங்காக இடம்பெறுகிறதா என்பதை பார்வையிடுவதாகும். அதற்காக ஒரு இலட்சம் ரூபாவை மதூஷ் வைப்பிலிட்டான். வைரக் கொள்ளைக்கு ஒருவரையொருவர் தெரியாத ஆட்களையே மதூஷ் நியமித்திருந்தான். இவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இந்தக் கொள்ளையை இரசகசியமாகப் பாதுகாக்கும் பொருட்டே இவ்வாறு செய்யப்பட்டது. மாத்தறை மல்லி, நாலக்க உள்ளடங்கிய குழுவினரிடம் அவுஸ்திரேலிய பிரஜையொருவரை வைரக்கல் கொள்வனவு செய்யும் பொருட்டு இலங்கைக்கு அனுப்பினான். நீர்கொழும்பூடாக வெளிநாட்டுப் பிரஜையை கூட்டிக்கொண்டு செல்லும் வழியை ஹேமால் தீர்மானித்தான். பின்னர் மதூஷûக்கு தகவல் வழங்கப்பட்டது.
திட்டமிட்டப்படி பொலிஸ் சுற்றிவளைப்பு குழு போன்றுமாத்தறை மல்லி உள்ளிட்ட குழுவினரை அனுப்பி , பன்னிப்பிட்டியிலுள்ள வைர உரிமையாளரின் வீட்டுக்குச் செல்கின்றனர். மதூஷ் அனுப்பிய அவுஸ்திரேலிய பிரஜை மதூஷ் தந்த புரோக்கருடன் வைரத்தை பரிசோதித்துக்கொண்டிருக்கும் போது மாத்தறை மல்லி உள்ளிட்ட பிரதான கொள்ளைக்குழு வீட்டுக்குள் அத்துமீறி பாய்ந்தன. திட்டத்தின்படி கடந்த நவம்பர் 5 ஆம் திகதி வைரத்துடன் மேலும் அங்கு காணப்பட்ட ஒரு தொகுதி மாணிக்கற்களையும் கொள்ளையடித்த குழுவினர் , பொலிஸார் போன்றே தப்பிச் செல்கின்றனர். வெளிநாட்டுப் பிரஜையையும் பாதை காட்டவந்தவரையும் நடுத்தெருவில் இறக்கிவிட்டு கொள்ளைக் கும்பல் பிலியந்தலைக்குச் சென்றுவிட்டது. அங்கு வந்து கெவ்மாவிடம் வைரத்தையும் கொள்ளைக்கு பயன்படுத்திய மூன்று துப்பாக்கிகளையும் மாத்தறை மல்லி கொடுத்தான். அங்கிருந்து மதூஷின் திட்டமிடலுக்கு ஏற்ப கெவ்மா வைரத்தை எடுத்துக்கொண்டு ஹேமால் மற்றும் கசுனுடன் மொரட்டுவ நோக்கி கெப் வாகனத்தில் சென்றனர். போகும் வழியில் இடையிலேயே கெவ்மா வைரம் மற்றும் பையை எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டான். கெவ்மா தனது உறவுக்கார மகனுக்கோ ஹேமாலுக்கோ தான் இருக்கும் இடத்தை மறைக்கவில்லை. இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று டெக்சியின் மூலம் வீட்டுக்கருகில் சென்று மீண்டும் வீட்டுக்கு நடந்து செல்வது கெவ்மாவின் பழக்கமாகும். அந்தளவுக்கு கவனமாக தன்னைப் பற்றி யாரும் அறிந்து கொள்ளக்கூடாது என நினைப்பவன். அதன் பின்னரே முழு நாடும் பேசிக் கொண்டிருந்த கொள்ளைச் சமட்பவம் பற்றி விசாரணைகள் ஆரம்பமாகின. மஹரகம மற்றும் மிரிஹான பொலிஸ் விசேட ஒன்றியம் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நாலக்க மற்றும் மாத்தறை மல்லி ஈகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தெரிவித்ததாவது, கொள்ளையடிக்கப்பட்ட வைரக்கல் மற்றும் ஏனையவை பிலியந்தலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் தெமட்ட கொட சமந்தா திரையரங்குக்கு அண்மையில் வைத்து இன்னொரு குழுவிடம் கையளிக்கப்பட்டது என்றும் இத்தகவலுக்கு பின்னர் குறித்த வைரம் டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் மிரிஹான விசேட பிரிவு நீண்ட விசாரணையொன்றை ஆரம்பித்தது. தொலைபேசி உரையாடல்களுக்கிணங்க சந்தேக நபர்களான ரயன் , அமல் உள்ளிட்ட குழுவினரின் கைகளில் வைரத்தை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
மாகந்துர மதூஷ் இந்த வைரக்கல்லுக்குச் சொந்தக்காரனான வியாபாரியை தொடர்புகொண்டு வைரக்கல் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தான். மேலும் இந்த வைரக்கல்லை விற்பனை செய்து தங்களுக்கும் சாதாரண பங்கை தருவதாகவும் தெரிவித்தான். டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் வைரக்கல்லை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நம்பிக்கையான ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாக இந்த சந்தர்ப்பத்தில் மகவல் கிடைக்கப்பெற்றது. அந்த இரகசியத் தகவலில், பத்தரமுல்லையில் உள்ள ஒருவருக்கு ஒரு கோடி ரூபா கொடுப்பது போல இந்த வைரத்தை வெட்டுவதற்கு தேடுதல் வேட்டை மேற்கொள்வதாகும். ஹேமால் மற்றும் கசுனின் தகவல்களுக்கமைய நாவலப்பிட்டி தம்புள்ள மெனிக்ஹின்ன பிட்டிகல மொரட்டுவ போன்ற பிரதேசங்களில் இரவு- பகல் பாராது சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் குழுவால் இரகசியத் திட்டமொன்றின் மூலம் கெவ்மாவை சுற்றிவளைக்க முடிந்தது. கெவ்மாவை கைது செய்யும் நேரத்திலும் கூட வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 137 கைத்தொலைபேசிகளும் இரகஙசியத் திட்டங்களுக்காக வேறு வேறாக வைத்திருந்தமையாகும். விசாரணைகளை மேற்கொண்டதில் மாகந்துர மதூஷின் சகாவான கெவ்மா , குறித்த வைரக்கல் தொடர்பில் வித்தியாசமான தகவலைக் கூறினான்.
இந்த வைரமானது அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமானதாகும். இதன் பெறுமதி கூற முடியாததாகும். ஏல விற்பனையொன்றின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட வைரமாகும். இலங்கைக்கு கொண்டுவரம் போது மாட்டிக்கொள்ளத்தக்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டதால் குறைந்த நிலைக்கு குறித்த வியாபாரிக்கு விற்றுவிட்டான். குறித்த வைரக்கலுக்குச் சொந்தமான அவுஸ்திரேலியப் பிரஜை வைரக்கல் வியாபாரிகளூமாக தேடிக் கொண்டிருக்கையில், இலங்கையில் அந்த வைரம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பின்னரே இலங்கை பாதாளத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. டுபாயில் வைத்து மதூஷிடம் தொடர்பை ஏற்படுத்தி 350 கோடி தருகின்றேன். வைரத்தை மீட்டும் தருமாறு தெரிவிக்கப்படுகிறது. இது திருடப்பட்ட வைரக்கல். இதை நாம் எடுத்துக்கொண்டால் 350 கோடி எமக்கு கிடைக்கும் என மதூஷ் கூறினான். பின்னர் அந்த வேலையை மதூஷ் எடுத்துக்கொண்டு எங்களைவிட்டு வைரக்கல்லை எடுத்துக்கொண்டான். கொள்ளைச் சம்பவத்துக்கு வந்த வெளிநாட்டுப் பிரஜை அவுஸ்திரேலிய பிரஜையின் உதவியாளனாவான். அவனை அனுப்பியது ண்மையான வைரமா என்று பார்ப்பதற்கே. நாங்கள் வைரக்கல்லை கொள்ளையடித்த பின்னர் மதூஷ் அவுஸ்திரேலிய பிரஜைக்கு தொடர்பை மேற்கொண்டு வேலை சரி 350 கோடியைத் தரச் சொன்னான். ஆனால் வெளிநாட்டுக்காரனிடம் பணமில்லை. சென்றதும் தான் மதூஷ் வைரக்கல்லை வைத்துக்கொண்டான் என கெவ்மா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு கேள்விகேட்கும் போது புதிய தகவலை வெளியிட்டான்.
இந்தக் கல் தனக்குத்தான் சொந்தமெனக் கூறும் டேவிட், பொலிஸாரிடம் வேறொரு கதையைக் கூறுகிறான். தான் நாட்டிலிருக்கும் போது புற்கள் நிறைந்த பற்றைக்கருகாமையில் இருந்து இந்தக் கல் கிடைத்ததாகக் கூறினான். இந்தக் கல்லை எடுத்துவந்து மீன் தொட்டியில் போட்டு வருடக் கணக்கில் வைத்திருந்தாக தெரிவித்தான். ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்த பேராசிரியர் ஒரவர் மீன் தொட்டியில் உள்ள கல்லைக் கண்டு சுமார் 4 மணித்தியாலமாக அதைப் பரிசோதித்தார். அதன் பிறகே இது வைரக்கல் என அறிந்து கொண்டேன். 5,000 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என்பதை பின்னரே தெரிந்து கொண்டேன் என தெரிவித்தார்.
இப்படி ஒவ்வொருவரும் கூறும் கதைகள் உண்மையா பொய்யா மற்றும் வைரக்கல் உண்மையானதா என்பவை பொலிஸாரின் விசாரணைகளின் பின்பே தெரியவரும். இவர்கள் குறிப்பிடுவதைப் போன்று இந்த வைரம் அவ்வளவு பெறுமதி வாய்ந்தது என்றால் ,இதுவே ஆசியாவில் இடம்பெற்ற மிகப் கொள்ளைச் சம்பவமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக