கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 ஏப்ரல், 2019

கடல்வழி கடத்தல்

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருநாள் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகருக்கு போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது.  இந்த உப பொலிஸ் பரிசோதகர் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கு பெயர்போன அதிகாரியொருவராவார். உப பொலிஸ் பரிசோதகருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போதைப்பொருள் வியாபாரி மாகந்துர மதூஷின் ஹெரோயின் வியாபாரக் குழுவுக்கு எதிரான குழுவொன்றின் உறுப்பினராவான். ”சேர் ..... மதூஷின் இன்னொரு ஒரு தொகை குடு இலங்கைக்கு கொண்டுவரப்பவிருக்கின்றது. இப்போது இந்த குடுத் தொகை பாகிஸ்தானில் ரோலர் கப்பலில் ஏற்றப்பட்டுவிட்டது.  இன்னும் இரு வாரங்கள் கடப்பதற்குள் குறித்த ரோலர் கப்பல் இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்து விடும்...” என்றான்.  தகவலைத் தந்தவன் எந்த இனத்தைச் சேர்ந்தவனாயிருப்பினும் அவன் வழங்கிய தகவல் மிகவும் முக்கியமானதாகும். இதற்கு முன்னரும் எத்தனையோ தடவை இந்த வியாபாரியால் வழங்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் சரியாகவிருந்தததால் அவன் தந்த தகவல் நம்பக்கூடியதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் முளியளவும் இல்லை.

”சேர்... இந்த குடுத் தொகையை கொண்டுவருவது ஈரான் நாட்டுக் குழுவினராவர். 500 கிலோவுக்கு அதிகமான ஹெரோயின் இதில் காணப்படுகின்றது. காலிக்கும் ஹிக்கடுவைக்கும் இடையில் காணப்படும் கடல் மட்டத்தில் வைத்தே இந்த குடுத்தொகை இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது....” என்றா. ஹெரோயின் வியாபாரி , மாகந்துர மதூஷûக்குச் சொந்தமான ஹெரோயி தொகை பற்றி சகல தகவல்களையும் மிகவும் சரியான வகையில் பெற்றுக்கொடுத்தான். ஹெரோயின் வியாபாரிகள் பற்றியும் அதேபோல் ஹெரோயின் தொகை பற்றியும் பொலிஸாருக்கு பெருமளவான தகவல்களை வழங்குவது ஹெரோயின் வியாபாரிகளே கடந்த காலங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்டை மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு என்பன  ஒன்றிணைந்து கைப்பற்றிய 1000 கிலோவுக்கும் அண்மித்த ஹெரோயின் தொகை தொடர்பில் பெருமளவான தகவல்களை எதிர்த்தரப்பு ஹெரோயின் வியாபாரிகளே வழங்கியிருந்தனர்.


யாரிடமிருந்து தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன என்பது முக்கியமல்ல. தகவலில் இருக்கும் உண்மைத்தன்மையே முக்கியமாகும். இந்தச் சுற்றிவளைப்புகளில் பொலிஸார் கைக்கொள்ளும் முக்கிய விடயம் முள்ளை முன்னாள் எடுக்கும் விடயமே அதாவது குற்றவாளிகளை குற்றவாளிகள் மூலமே கண்டுகொள்வதாகும். இங்குள்ள போதைப்பொருள் வியாபாரிகளிடத்தில் பாரிய போர் முனையே காணப்படுகின்றது.  அதன் காரணமாகவே ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கின்றனர். இந்தக் காட்டிக் கொடுப்பை பயன்படுத்திக்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும்  போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட விசேட வேலைத்திட்டங்கள் அனைத்துமே சாதகமாகவே அமைந்தன. கடந்த ஒரு வருட காலத்துக்குள் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் போதை ஒழிப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் 1000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் தொகையை கைப்பற்றிக்கொள்ள முடியுமாகிப்போனது. இந்த சுற்றிவளைப்புகளின் பெருமளவான தகவல்கள் பொலிஸ் விசேட அதிரப்படையின் உப பொலிஸ் பரிசோதகர்  மூலமே கிடைக்கப்பெற்றன. உண்மையாகவே இந்த அதிகாரி பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு மட்டுமன்றி முழு பொலிஸ் திணைக்களத்துக்குமே கிடைத்த மாபெரும் பொக்கிஷமாவார். இந்த பொலிஸ் பரிசோதகரின் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்காவிட்டால் நாட்டுக்குள் சுமார் 1000 கிலோ போதைப்பொருள் விநியோகம் இடம்பெற்றிருக்கும். இவர் தனக்குக் கிடைத்த அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் விசேட அதிரடிப்டையின் கட்டளை அதிகாரி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் , போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நிறைவேற்று அதிகாரி சஜீவ மெதவத்த ஆகியோருக்கு தெரிவித்திருந்தார்.

சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பற்றிய உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. செயற்றிட்டத்தின் பொறுப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மிகவும் பழக்கப்பட்ட திறமையான பொலிஸ் அதிகாரியான ரத்தனபிட்டியவுக்கு ஒப்படைக்கப்பட்டது. திட்டத்தை மிகவும் சூட்சுமமான முறையில் செய்து முடிக்க வேண்டும். கடலின் மத்தியில் வைத்தே சந்தேகநபர்களையும் ஹெரோயின் தொகையையும் கைப்பற்ற வேண்டுமென்றே அதிகாரிகள் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தனர். அதற்காக கடற்படை இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லதீப், நிறைவேற்று அதிகாரி  சஜீவ மெதவத்த மற்றும் கடற்படை இராணுவ உயர் அதிகாரிகள் குழுவினர்களுக்கிடையில் திட்டத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த எல்லா சந்திப்புகளும் மிகவும் இரகசியமான முறையிலேயே இடம்பெற்றன. ஏதாவதொரு வகையில் இந்த சுற்றிவளைப்பு தொடர்பான தகவல்கள் ஹெரோயின் வியாபாரிகளின் காதுகளுக்குச் சென்றுவிட்டால் தங்களது அனைத்து திட்டமிடல்களும் வீணாகிப் போய்விடுமென்பதை சகல அதிகாரிகளும் அறிந்து வைத்திருந்தனர். பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்படவிருந்த குடுத் தொகை மாகந்துர மதூஷûக்குச் சொந்தமானது என கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடொன்று ஏற்படிருந்தது. அதாவது  , தகவல்கள் கிடைக்கப்பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னிருந்தே ”மதூஷ் கைது செய்யப்பட்டிருக்கும்  போது எப்படி இருந்த வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது?” என்ற சந்தேகம் உயர் அதிகாரிகளுக்கு ஏற்பட்டதில் இது தொடர்பில் தேடிப்பார்க்க முனைந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே அதாவது மதூஷ் கைது செய்யப்படுவதற்கு  முன்னரே இந்த ஹெரோயின் தொகை பெறுவதற்கு ஆணை வழங்கப்பட்டிருந்தது. அதற்கான பணத்தையும் முன்கூட்டியே அவன் வழங்கியிருந்தான். அதேபோன்று , ஹெரோயினை கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்றிருந்த ஈரான் நாட்டுக்காரனுக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை மதூஷ் வழங்கியிருந்தான்.

இந்த வேலைத்திட்டத்திற்காக ”சுரனிமல” இராணுவக் கப்பலை பெற்றுக்கொடுக்க கடற்படை இராணுவ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.இந்தக் கப்பலுடன் சேர்த்து அதிவேக படகு 5 திட்டத்திற்காக வேண்டி பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்த விசேட திட்டத்துக்கு விசேட   அதிரடிப்படை , போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் கடற்படை இராணுவ அதிகாரிகள் குழுவொன்று ஒன்றிணைந்தது. போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் குழு எதற்கும் தயார் நிலையிலேயே எப்போதும் இருக்கும் என்பதை அதிகாரிகள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். வியாபாரிகள் தங்களை நோக்கி வரும் எந்த இலக்கையும் சமாளித்துவிட்டு தப்பித்துச்செல்லவே முயற்சி செய்வர். அதன் காரணமாக வியாபாரிகளிடமிருந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் முகங்கொடுக்க தயாரான நிலையிலேயே பொலிஸ் அதிகாரிகள் இருந்தனர்.  கடந்த 23 ஆம் திகதி அதிகாலை வேளை காலி துறைமுகத்திலிருந்து சென்ற சுனிமல இராணுவ கப்பல் தனது திட்டத்தை ஆரம்பித்தது. இலங்கை கடல் எல்லையைத் தாண்டி சர்வதேச கடல் எல்லைக்குள் கப்பல் சென்றுக்கொண்டிருந்தது. இலங்கையிலிருந்து 300 கடல்மைல் தூரம் அளவில் ஆழமான கடலில் ஹெரோயினுடன் வந்துக்கொண்டிருந்த ரோலர் கப்பலை சுற்றிவளைக்க முடியுமாகிப்போனது.

இராணுவ கப்பலிலிருந்து தப்பிச் செல்ல ஈரானியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அதி வேகமாக சென்ற படகுகளைத் தாண்டிச் செல்ல அவர்களால் முடியாமல் போனது. பல மணித்தியால போராட்டத்தின் பின் ஈரானியர்கள் சகிதம் குறித்த முத்துறை அதிகாரிகள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து சேர்ந்தனர். சர்வதேச கடலில் வெளிநாட்யட கப்பலொன்றை கைது செய்ய கடற்படை இராணுவத்துக்கு அதிகாரமில்லை. அதன் காரணமாக ஈரான் கப்பல் கைது செய்யப்பட்டது. இலங்கை கடல் மட்டத்துக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரேயாகும்.  அது வரை ஈரானியர்கள் ரோலர் இயந்திரப் படகிலிருந்த 500 கிலோ ஹெரோயின் பொதியை கடலுக்குள் வீசி விட்டனர். ஈரான் ரோலர் படகின் ஐஸ் களஞ்சிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிரோ ஹெரோயின் கொண்ட 4 பொதிகளை கடற்படை இராணுவத்தினரின் விசேடக் குழு கண்டுபிடித்தது. அந்த சந்தர்ப்பத்தில் ரோலர் படகிலிருந்த 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 17-40 வயதுக்கிடைப்பட்டவர்கள். இவர்கள் பகுதிநேர தொழிலாகவே ஹெரோயின் விநியோகத்தை மேற்கொள்கின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு இந்த ஹெரோயின் தொகையை கடல் எல்லையைத் தாண்டிக் கொண்டு சென்று கொடுப்பதற்கு 30 இலட்சம் ஈரான் ரியால் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஈரான் கப்பல் , சந்தேக நபர்கள் மற்றும் ஹெரோயின் தொகை என்பனவற்றை கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டு வந்ததில் பாரிய திட்டமொன்றை வெற்றிகொண்ட சந்தோஷம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இந்த ஹெரோயின் தொகையை பாகிஸ்தனிலுள்ள ஹெரோயின் தயாரிப்பு தொழிற்சாலையொன்றே வழங்கியிருந்தது.  11 ஹெரோயின் விநியோக தொழிற்சாலைகள் பாகிஸ்தானில் அமைந்துள்ளன.  ஆப்கானிஸ்தானிலேயே இந்தப் பாரிய தொகை ö
ரோயின்கள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு தயாரிக்கப்படும் ஹெரோயின் தொகைகளை பாகிஸ்தானிலுள்ள 11 நிறுவனங்களே கொள்வனவு செய்கின்றன. ஹெரோயின் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து கொடுக்கல் - வாங்கல்களும் டுபாயிலிலுருந்தே இடம்பெற்றன. பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்யப்படும் ஹெரோயின் தொகையை உரிய நாடுகளுக்கு விநியோகம் செய்வது ஈரானிலுள்ள குழுவொன்றாகும். இலங்கைக்கு ஹெரோயினை கடத்தும் ஈரானியர்களைக் கொண்ட 9 குழுக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இதுவரை 5 குழுக்கள் போதைப்பொருள் ஒழிப்புப் பரிவு , கடற்படை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை என்பனவற்றால் அடிக்கடி கைது செய்யப்பட்டுள்ளன

ஈரான் நாட்டவர்களுடன் சேர்த்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை ”999”  என அறியப்பட்ட பாகிஸ்தான் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்றும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹெரோயின் தொகை 50 கிலோ கொண்ட பொதிகளாக பொதி செய்யப்பட்டு காணப்பட்ட நிலையில், அந்த ஒவ்வொரு பொதிகளிலும்  ”999” என்ற அந்த நிறுவனத்தின் இரகசிய இலக்கம் பதியப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த ஹெரோயின் தொகையை மாகந்துர மதூஷ் கொள்வனவு வெய்வதற்கு முன்னர் அவற்றின் மாதிரி டுபாய்க்கு கொண்டுசெல்லப்பட்டு அதன் பாவனை தொடர்பில் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. டுபாயில் மதூஷ் கைது செய்யப்படுவதற்கு 5 தினங்களுக்கு முன்னர் இந்த ஹெரோயினுக்கான முழுப் பணமும் செலுத்தப்பட்டது.

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் பேருவளை கடற்கரையில் 231 கிலோ ஹெரோயின் கைது செய்யப்பட்டிருந்தது. பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை இராணுவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியன ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை மேற்கொண்டிருந்தன. இதன்போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் தொகை , பாகிஸ்தானில் ஹெரோயின் தயாரிப்பு நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகும். இந்த ஹெரோயின் தொகையானது இலங்கை கடல் எல்லைக்கு அண்மித்ததாக ஈரானியர்கள் சிலரால்  ரோலர் படகு மூலம் கொண்டுவரப்பட்டிருந்தன. இலங்கை ஹெரோயின் வியாபாரிகள் சிலரால் கடலின் மத்திய பகுதியில் வைத்து ஈரானியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஹெரோயின் பேருவளை கடற்கரையை நோக்கி எடுத்துவரப்பட்டபோது பாதுகாப்புப் பிரிவினரிடம் வசமாக மாட்டிக் கொண்டது . சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வியாபாரம் எந்தளவுக்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது என்பதை நினைத்தும் பார்க்க முடியாது .

இந்த ஹெரோயின் ஆப்கானிஸ்தானிலேயே தயாரிக்கப்படுகின்றது. இவை கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவது பாகிஸ்தானில் அமைந்துள்ள அமைப்புகள் மூலமாகும். ஹெரோயி>ன் வியாபாரத்துக்குத் தேவையான பணம் கொடுக்கல் - வாங்கல் இடம்பெறுவது டுபாயிலிருக்கும் சர்வதேச ஹெரோயின் வியாபாரிகள் மற்றும் இடைத்திரகர்கள் மூலமேயாகும். அவ்வாறு இடம்பெறும் ஹெரோயின் கொடுக்கல் வாங்கல்களில் அவற்றை ஒவ்வொரு நாட்டுக்கும் விநியோகிக்கும் பணியை ஈரானியர்களே மேற்கொள்கின்றனர். இவ்வாறு நான்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கொள்ளப்படும் சர்வதேச ஹெரோயின் வியாபாரத்தை முற்றாக இல்லாதொழிப்பது ஒன்றும் வியாபாரத்துக்கு எதிராக பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு என்பன தமது உயிர்களை பணயம் வைத்து போராடுவது உண்மையில் பாராட்டத்தக்க விடயமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக