நிவ்டன் என்றவர் 7,8 வருடங்களுக்கு முன்னர் அங்குலான பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தலைமையதிகாரியாகச் செயற்பட்டு வந்தவர் . இவர் அன்றிலிருந்து இன்றுவரை காட்டுமிராண்டித்தனமாகவே செயற்பட்டு வருகிறார். ஓய்வு பெறும் வயதை எட்டியிருந்தாலும் இன்னும் இளைஞன் என்ற நினைப்பு அவரை விட்டு துளியும் மாறவில்லை. காலையிலிருந்து இரவுவரை முழு போதையில் தனது கடமைகளை மேற்கொண்ட நிவ்டன் , அங்குலான பிரதேசத்திலுள்ள பெண்களிடம் தனியான அன்பையும் அந்நியோன்யத்தையுமே காட்டிவந்தார். லதா என்ற பெண் நிவ்டனின் காதலி என்பதை முழு அங்குலான பிரதேசமுமே அறிந்து வைத்திருந்தது. நிவ்டனும் காதலை ஏற்படுத்திக் கொண்டிருந்த லதாவுக்கு பொலிஸ் பலமும் அதிகமாகவே இருந்தது. இந்த பலத்தை பயன்படுத்தி அங்குலான பிரதேச அப்பாவிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் லதா வைத்திருந்தாள். ஒருநாள் அங்குலான பிரதேச இளைஞர்கள் இருவர் லதாவிடம் விளையாட்டாக ஏதோ சொல்லிச் சென்றனர். அது அவளை சீண்டுவதற்காகவே . இந்தத் சீண்டலுக்கு லதாவுக்கு கோபம் வரவில்லை. தன்னிடமுள்ள முழு பொலிஸ் பலத்தையும் சிறிதும் யோசிக்காமல் முடியுமானளவு பிரயோகித்து வந்தாள்.
தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட லதா , குறித்த இரு இளைஞர்கள் தொடர்பில் முறைப்பாடு தெரிவித்ததுடன், வாழ்க்கையில் மறக்க முடியாத பாடத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். அந்த சந்தர்ப்பத்தில் நிவ்டனோ முழு போதையில் இருந்தார். நிவ்டனுக்கு சேவைச் செய்யக்கூடிய ஒருசிலர் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இருந்தனர். நபரொருவரால் முறைப்பாடு தெரிவிக்கும் பட்சத்தில் , அதை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் பழக்கம் நிவ்டனுக்கு துளியேனும் கிடையாது. தொலைபேசி மூலம் லதா தெரிவித்த முறைபாட்டுக்கமைய நிவ்டன் செயற்படத் தொடங்கினார். தனது காதலிக்கு முன்னால் தான் ஒரு நடிகன் எனக் காண்பித்துக்கொண்டு சண்டித்தனம் செய்து அந்த இரு இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கினான். இருந்தும் திருப்தியடையாத நிவ்டனும் பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்.
லதாவை சீண்டிய பாரிய குற்றத்துக்காக குற்ற முறைப்பாடு இரு இளைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்தது. அங்குலான பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து நிவ்டனாலும் உதவியாட்களாலும் அந்த இரு இளைஞர்களும் நையப் புடைக்கப்பட்டனர். அப்போதும் திருப்தியடையாத நிவ்டன் இருவரையும் கடற்கரையோரத்துக்கு இழுத்துச் சென்றார். கடற்கரையோரத்தில் வைத்து இருவரையும் சுட்டுத்தள்ளிய நிவ்டன் அடங்கிய குழுவினர் , அவர்களது உடல்களை கடலில் வீசிவிட்டு இந்தச் சம்பவம் கடலிலேயே முடிந்து போய்விடும் என்றெண்ணி மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கே சென்றனர். லதாவை சீண்டியவர்களுக்கு இதுதான் தண்டனை என எண்ணினார். நிவ்டன் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களினதும் சடலங்கள் கடலில் அடித்துச் செல்லப்படவில்லை. நிவ்டனும் உதவியாட்களும் இந்தச் சம்பவத்தை மக்கள் சில நாட்கள் சென்றதும் மறந்து விடுவார்கள் என்றே எண்ணிக்கொண்டிருந்தனர். இருப்பினும் இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்குலான பிரதேசமெங்கும் கொளுத்துவிட்டெறிந்தது. கடும் கோபமடைந்த அங்குலான பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து நிவ்டன் உள்ளிட்ட குழுவினரை நோக்கி கற்கள் வீசியும் தாக்கியும் களேபரம் செய்தனர். மக்களின் கொந்தளிப்பினால் பொலிஸ் திணைக்களம் தனது கண்களைத் திறந்தது. காட்டுமிராண்டியாகச் செயற்பட்ட நிவ்டன் மற்றும் குழுவினருக்கெதிராக குற்ற விசாரணைகளை ஆரம்பித்தது.
இரு இளைஞர்களையும் இவர்கள் கொலை செய்தது விசாரணைகளின் மூலம் அம்பலமானது . இவர்கள் செய்த இச் செயலானது , பொலிஸ் திணைக்களத்தின் புகழுக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணியுள்ளது. தனது காதலிக்கு ஏற்பட்ட அவமானத்தை ஈடுசெய்ய மேற்கொள்ளப்பட்ட இந்தப் பாரிய குற்றம் தொடர்பில் பல மாதங்களாக தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அங்குலான பிரதேச இரு இளைஞர்களை கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் சண்டி நிவ்டன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதுவரை இவர்கள் 7 பேரும் விளக்கமறியலிலேயே இருக்கின்றனர். நிவ்டனுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கப்பெற்றது. அதுபோவலே இயற்கையாகத் தாக்கியதில் தனது இரு கால்களையும் நிவ்டன் இழந்து விட்டார். நிவ்டனின் உதவியாட்களோ சிறையில் வழங்கப்படும் அனைத்துவிதமான தண்டனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.
பொலிஸ் திணைக்களத்திற்கு ஏற்பட்ட இந்த கறை படிந்த சம்பவம் மக்கள் மனங்களிலிருந்து இன்னுமே நீங்காத நிலையிலேயே இவ்வாறானதொரு அநியாயச் சம்பவம் ரத்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவமானது முழு பொலிஸ் திணைக்களத்தையும் பாரிய குழிக்குள் தள்ளிவிட்ட சம்பவமாக பதிவாகியுள்ளது. ரத்கம சம்பவமும் அங்குலான சம்பவத்துக்கு நிகரானதொரு குற்றமாகும். இருப்பினும் இச்சம்பவமானது அங்குலானயில் இடம்பெற்றது போன்று பெண் சம்பந்தப்பட்ட விவகாரமல்ல. ரசித் சிந்தக்க, ரத்க ரத்ன உதானகமவில் வசிப்பவர். மொத்த விலைக்கு மீன்களை விற்கும் பாரிய வியாபாரத்தை மேற்கொண்டு ரசித் மிகப்பெரும் சொத்துகளுக்கு சொந்தகாரராவார். 3 பிள்ளைகளின் அன்பான தந்தை. அதுமட்டுமன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டவிரோத செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர். இதனாலேயே ஊர் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்று திகழ்ந்தார். ரசித்தின் வீட்டுக்கருகிலேயே மஞ்சுள அசேல குமார வசித்து வந்தார். மஞ்சுள கோழி இறைச்சி விற்பனை பாரியளவில் மேற்கொண்டுவரும் வசதியான வாழ்க்கையை வாழ்பவராவார். ஒரு பிள்ளையின் தந்தையான மஞ்சுள மக்கள் மனதில் நல்லெண்ணத்தை பிடித்த ஒருவராக காணப்பட்டார்.
ஜனவரி 23 ஆம் திகதி பகல் வேளையில் ரத்கம ரத்ன உதாகம பிரதேசத்துக்கு கே. டி.எச். ரக வாகனமொன்று வெள்ளை நிற மோட்டார் சைக்கிளொன்றும் அதிரடியாக நுழைந்தன . இந்த இரு வாகனங்களிலும் 13 பொலிஸ் அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ரசித்தின் வீட்டுக்கே முதலாவதாக சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் காலி துறைமுகத்துக்குச் செல்ல ரசித் தயாராகிக் கொண்டிருந்தார். கொள்வனவு செய்த மீன் தொகைக்கு பணம் செலுத்தும் பொருட்டு பணம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்திந்ருதார். ரசித்தின் வீட்டுக்குள் அதிரடியாக பாய்ந்த பொலிஸ் அதிகாரிகள் அவரைத் தாக்கி வானுக்குள் தூக்கி போட்டனர். பின்னர் ரசித்தின் வீட்டுக்கு அருகாமையில் இருந்த மஞ்சுளவையும் பொலிஸ் குழுவினர் கைது செய்தனர். இரு இளைஞர்களையும் மாத்தறைக்கு கடத்திச் சென்றனர். இவர்களை கைது செய்ய வந்திருந்தது தென் மாகாண விசேட குற்றத்தடுப்பு ஒன்றியத்தின் அதிகாரிகளாவர். இந்தக் குழுவுக்கு தலைமைதாங்கியது பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த சில்வாவே . இவர் சில காலம் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் சேவை புரிந்தவராவார். பல்வேறு குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டதால் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பொலிஸ் மா அதிபர் எம் .ஆர். லதீப் இவரை பணியிலிருந்து இடைநிறுத்தினார். விசேட அதிரடிப்படையிலிருந்து நீக்கப்பட்ட கபில நிஷாந்த சில்வா காலி வலயத்துக்குள் கடமை புரிந்தார்.
காலியிலும் அதிக நாட்கள் இவரால் சேவை செய்ய முடியாமல் போயிற்று. இங்கும் இவர் மீது சுமத்தப்பட்ட பாரிய குற்றச்செயல்கள் காரணமாக காலி பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக் கோன் இவரை சேவையிலிருந்து இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இறுதியாக மாத்தறையிலேயே இந்த அதிகாகாரிக்கு ஓரளவு நீண்ட சேவை கிடைக்கப்பெற்றது. தென் மாகாண விசேட குற்றத்தடுப்புப்பிரிவுடன் இணைந்து சேவையாற்றிக் கொண்டிருக்கும் போது மாத்தறை நிறைவேற்றதிகாரி பொலிஸ் மா அதிபர் விஜித குணரத்ன இவருக்கு எதிராக அடிக்கடி எச்சரிக்கைப் பத்திரத்தை தயார்ப்படுத்திக் கொண்டே இருந்தார். அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்த இரு இளைஞர்களையும் ஏன் கைது செய்தனர் என பிரதேச உயர் அதிகாரிகளோ மற்றும் வேறு யாருமோ அறிந்திருக்கவில்லை. இவர்கள் இருவரையும் மாத்தறைக்கு ஏன் கடத்திச் சென்றனர் என்பதை அங்கு சென்ற அதிகாரிகளே அறிவர். மாகந்துர மதூஷின் பாதாளக் குழுவுக்கு ஆயுதக் கொள்வனவு செய்யும் நபர்கள் பற்றி தென் மாகாண விசேட குற்றத்தடுப்புப் பிரிவு ஒன்றியத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவது தொடர்பில் நிறைவேற்றதிகாரி பொலிஸ் மா அதிபர் அறிந்திருந்தார்.
மஞ்சுளவையும் ரசிதவையும் ஆயுதம் தொடர்பான விசாரணைக்கே அழைத்து சென்றனர் எனவும் ஒரு சிலரால் கூறப்படுகிறது. மாத்தறையிலுள்ள தென்மாகாண விசேட குற்றத்தடுப்புப் பிரிவு ஒன்றியத்தின் வதைமுகாமுக்கு இளைஞர்கள் இருவரையும் கூட்டிச் சென்று மேற்படி அலுகோசு அதிகாரிகள் முடியுமானளவுக்கு தங்கள் பலத்தைக் கொண்டு அவர்களை தாக்கத் தொடங்கினர். பின்னர் தென் மாகாண நிறைவேற்றுப் பணிப்பாளர் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு அண்மையில் காணப்பட்ட பாழடைந்த வீட்டுக்குள் அவர்களை கொண்டு சென்றனர். தங்களுக்கும் தெரியாத ஆயுதம் பற்றி கேட்டால் எப்படி பதில் சொல்வது? பாவம் அவர்கள் நிர்குலைந்து போயினர். இருப்பினும் இந்த இளைஞர்களது வாயாலேயே எப்படியாவது உண்மையை வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அலுகோசு பொலிஸ் அதிகாரிகள் தீவிரமாக அவர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். ஒரு மனிதன் தன்னால் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கும் போது தனது கஷ்டத்தையும் மீறி ஏதாவதொன்றைச் சொல்லி தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளவே பார்ப்பான். மேலும் செய்யாதவொன்றை செய்ததாக ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு எமது நாட்டு பொலிஸார் திறமையானவர்களும் கூட . இன்றுவரை அந்த வழிமுறைகளையே கையாண்டு வருகின்றனர். இளைஞர்களை தாக்கியதில் எந்தவொரு பதிலும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை. அதனால் கொடூரமான 32 தண்டனைகளில் ஒன்றை இளைஞர்களுக்கு வழங்க அலுகோசு பொலிஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். சந்தேக நபர்களிடம் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக விதவிதமான உபாய மார்க்கங்களை பொலிஸார் கையாள்வர்.
சந்தேக நபர்களை இரு கால்களையும் மேலே கட்டி தொங்கவிட்டு நினைவிழக்கும் வரை தாக்குதல், சந்தேக நபர்களை நீட்டி வைத்து அடிப்பாதம் வெடிக்கும் வரை தாக்குதல், கை, கால்களை கட்டிவிட்டு பெற்றோல் ஊற்றி பொலித்தீன் பையொன்றினால் முகத்தை இறுக்கமாக மூடுதல் உள்ளிட்ட கடுமையான வழிமுறைகளை சந்தேகநபர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க பொலிஸார் கையாள்கின்றனர். வோட்டர் கொஸ் எனும் இன்னுமொரு முறை காணப்படுகிறது. அதாவது சந்தேக நபரை தலைகீழாக தொங்கவிட்டு கை , கால்களை கட்டி அவரின் மூக்குக்குள் தண்ணீர் ஊற்றுவதே அந்த கடுமையான தண்டனையாகும். ரத்கமையில் இருந்து இந்த முறையே பயன்படுத்தப்பட்டது. இந்த வழிமுறையானது தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாகும். இரு இளைஞர்களில் ஒருவரை இந்த முறையில் கேள்வி கேட்க பொலிஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். நல்ல போதையில் இருந்து இந்த அலுகோசு பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உயிரின் பெறுமதி தெரியாமல் போய்விட்டது. இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாத அவ்விளைஞன். கத்திக் கதறுவதைக் கண்டு அவர்கள் சந்தோஷமடைந்தனர். அதிக நேரம் செல்லவில்லை. வோட்டர் கொஸ் முறைக்கு இலக்காகி இளைஞன் திடீரென இறந்துபோனான். அந்த நேரத்திலேயே பொலிஸ் அதிகாரிகள் திக்கு முக்காடிப் போயினர்.
தனது அயல் வீட்டு இளைஞன் இவர்களிடம் சிக்கி வேதனை அனுபவித்து இறந்துபோனதை மற்றைய இளைஞன் கண்டான். தனது கண்முன்னே அந்த இளைஞன் இறந்து போனதை எண்ணி தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்தான் மற்றைய இளைஞன். அடுத்ததாக தனக்கு இந்தக் கதிதான் என்று அவனுக்குத் தோன்றியது. இளைஞன் இறந்து போனதை அவனது நண்பன் கண்டுவிட்டதை அறிந்த பொலிஸார் மேலும் களேபரமடைந்தனர். அத்துடன் பீதிக்கு ஆளாகினர். தாங்கள் செய்த இந்தத் தவறை என்றாவது ஒருநாள் இந்த இளைஞன் அம்பலப்படுத்திவிடுவான் என்பதை பொலிஸ் அதிகாரிகள் நன்கு தெரிந்து கொண்டனர். இதனால் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமென எண்ணி மற்றைய இளைஞனையும் பரலோகம் அனுப்ப முடிவு செய்தனர். முடிவு செய்தபடி அந்த இளைஞனையும் வேறு இடத்துக்கு கொண்டு சென்று காட்டுப்பகுதியொன்றில் வைத்து எரித்து விட்டனர். எந்த தடயமுமில்லாமல் தங்களுக்கும் இக்கொலைக்கும் சம்பந்தமில்லை என்றளவுக்கு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
ரத்கம ரத்ன உதான கமயில் வசித்துவந்த இரு இளைஞர்களை பொலிஸ் அதிகாரிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதுவரை பிரதேசத்தில் சூடுபிடித்திருந்தது. மஞ்சுள மற்றும் ரசித்தின் குடும்ப உறுப்பினர்கள் நியாயமொன்றை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ரத்கம பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர். இருந்தும் ரத்கம பொலிஸ் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. கடத்திச் செல்லப்பட்ட இருவரும் திரும்பி வரும் வரை காத்திருக்குமாறு பொலிஸார் கூறினர். இருப்பினும் இரு குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க கடத்தப்பட்ட இரு இளைஞர்கள் தொடர்பான முறைப்பாட்டை பொலிஸாரால் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. அப்பாவியான இந்த இரு குடும்பங்களினதும் உறுப்பினர்கள் காணாமல் போன இளைஞர்களை காலி முழுவதும் தேடத் தொடங்கினர். இருந்த போதும் அவர்களுக்கு எந்தவிதத் தகவல்களும் கிடைக்கவில்லை. ரசித் மற்றும் மஞ்சுளவை யார் கடத்திச் சென்றது என்ன காரணத்துக்காக கொண்டு சென்றனர் என்பது பல நாட்கள் சென்றும் எதுவிதத் தகவல்களும் கிடைக்கவில்லை. பொலிஸாரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுமில்லை. கடைசியாக ரத்கம பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து பிரதான வீதியை மறித்து போராட்டம் செய்ய முடிவு செய்தனர். அப்படியாவது ஏதாவது நியாயம் தங்களுக்கு கிடைக்கும் என்றெண்ணியே. காலி உதவி பொலிஸ் அதிகாரி சதீஷ் கமகே போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்து ஒருவாரம் கழியும் முன்னர் காணாமல் போன இளைஞர்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுத்தருவதாக குடும்ப உறுப்பினர்களுக்கு உறுதிமொழி வழங்கியதால் போராட்டமானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
காணாமல் போன இளைஞர்களை தேடுவதற்குப் பதிலாக இடைக்காலமாக இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கவே முற்பட்டனர். இருப்பினும் எவ்வளவு நாள் தான் இதை மூடி மறைக்க முடியும்? கடத்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்களால் நாளுக்கு நாள் தொந்தரவுகள் அதிகரித்துக்கொண்டே சென்றன. இதன்போது காலி நிறைவேற்று பொலிஸ் மா அதிகாரியின் உத்தரவுக்கமைய இரு இளைஞர்கள் காணாமல் போனது தொடர்பில் விசாரணை முன்னெபுக்கப்பட்டது. காணாமல் போன இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டு குறித்த விசாரணை அறிக்கையை குற்ற விசாரணை திணைக்களத்துக்கு சமர்ப்பிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் கடந்த 6 ஆம் திகதி காணாமல் போன இரு இளைஞர்களாலும் வீட்டுக்கு மொட்டை கடிதம் இரண்டு கிடைத்தன. அந்தக் கடிதங்களில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. உங்களது வீடுகளில் இருந்த மஞ்சுள மற்றும் ரசித் ஆகிய இருவரும் 2019 .01.23 ஆம் திகதி கறுப்பு நிற கே.டி . எச் வானொன்று மற்றும் வெள்ளைநிற காரொன்றில் கூட்டிச் செல்லப்பட்டனர். அதைப்பற்றி தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். அவர்களிருவரும் மாத்தறை நூப்ப சந்தியில் இருக்கும் தென் மாகாண நிறைவேற்று பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் அமைந்துள்ள விசேட ஒன்றியத்தின் ஓ. ஐ .சி. ரோஹண மற்றும் ஐ.பி. நிஷாந்த உள்ளடங்கிய குழுவினராலேயே அழைத்து செல்லப்பட்டனர். அதில் ஒருவர் தாக்குதல் மேற்கொள்ளும் போது இறந்துவிட்டார். அதை மற்றையவர் பார்த்துவிட்டார். அதனால் அவரையும் கொன்று விட்டோம். இதுவரை இருவரையும் எரித்துவிட்டோம்.
கறுப்பு நிற கே .டி .எச். வான் ஐ .பி .நிஷாந்தவின் நண்பரான அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரசித்திபெற்ற மணல் வியாபாரி ஒருவருக்குச் சொந்தமானது. இவர் சட்டவிரோதமாக மணல் வியாபாரத்தில் ஈடுபடுபவராவார். அதனால் அக்மீமன பகுதி எங்கும் இவரை நன்றாகத் தெரியும் . எந்த பொலிஸாருக்கு அந்தக் கடிதத்தை காட்ட வேண்டாம். தகவல்களை திரட்டிகொண்டு ஜனாதிபதிக்கோ சம்பந்தப்பட்டவருக்கோ முறைப்பாடு செய்யுங்கள் யாராக இருந்தாலும் நபரொருவரை கொல்வதற்கு நாங்கள் விரும்புவதில்லை. நாங்கள் மாத்தறை நூப்ப காரியாலயத்தின் பொலிஸ் அதிகாரிகள் . இரு இளைஞர்களதும் வீட்டுக்கு இந்தக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றதும் அவர்கள் தாங்கமுடியாத வேதனையை அனுபவித்து அழுது புலம்பினர். இந்தக் கடிதங்களை எடுத்துக்கொண்டு இரு இளைஞர்களதும் குடும்ப உறுப்பினர்களும் குறித்த உதவிப் பொலிஸ் அதிகாரி சதீஷ் கமகேவை சந்தித்து குறித்த மொட்டை கடதாசிகளை காண்பித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் காணாமல் போன விடயம் முழு நாட்டுக்கும் தெரிந்துவிட்டது. இது தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்காதது மிகப்பெரும் தவறாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன் பின்னரே காணாமல் போன இளைஞர்கள் தொடர்பில் குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. நிறைவேற்று பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன , நிறைவேற்று பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேக்கர ஆகிய அதிகாரிகளின் பூரண தலைமைத்துவத்தின் கீழ் திறமையான பழக்கப்பட்ட உதவிப் பொலிஸ் அதிகாரியான இந்திக்க லொக்கு ஹெட்டி அடங்கிய அதிகாரிகள் குழுவினர் இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நாட்கள் செல்லும் முன்னரே இளைஞர்களை கடத்திய கே .டி .எச். வானை கண்டுப்பிடித்தனர். அதன் சொந்தக்காரர் பொலிஸாரின் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். இளைஞர்களை கடத்திய குழுவுக்கு தலைமை தாங்கிய பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த சில்வா அதன் பின்னரே கைது செய்யப்பட்டார். சந்தேகபர் சிறையிலடைக்கப்பட்டார். இதன் போது இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட முக்கியமான பல தகவல்களை குற்ற விசாரணை திணைக்களம் தேடிக் கண்டிறிந்துள்ளது. இளைஞர்களை கடத்திச் செல்லும் காட்சி தொடர்பான சிசிரிவி பதிவுகள் கூட அவர்கள் வசம் இருந்தன. குற்றச் செயலிலிருந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒருபோதும் தப்பிக்க முடியாது. அதேவேளை கொல்லப்பட்ட இருவரின் உறவினர்களுக்கு 5 இலட்சம் ரூபா கப்பமாக கொடுத்தால் இருவரையும் விடுதலை செய்வதாக தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
மனிதாபிமானமில்லாத இந்தச் செயலால் ஒன்றுந் தெரியாத அப்பாவித்தனமான 5 பிள்ளைகள் தங்களது தந்தைகளின் அன்பைத் தேடித் திரிகின்றனர். இன்னும் தங்களது தந்தைமார் வருவார்களென்ற நம்பிக்கையில் வீதியோரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இனி ஒருபோதும் தங்களது தந்தைமார் வீடுகளுக்கு வரமாட்டார்கள் என்பதை அப்பாவி குழந்தைகள் அறிந்திருக்கவில்லை. பின்னர் அதுபற்றி அறிந்து கொண்டாலும் ஒருபோதும் அவர்கள் அதை நம்பவில்லை. ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் சீருடையை தரித்த பின்னர் தாங்கள்தான் சர்வ வல்லமையும் கொண்டவர்கள் என நினைத்துக் கொள்கின்றனர். தாங்களும் ஏனைய மனிதர்களைப் போன்று சாதாரணமானவர்களே என இந்த அதிகாரிகள் நினைப்பதில்லை. இது பற்றி புரிந்து கொள்வதும் இல்லை. இவ்வாறான ஒரு சில கேவலங்கெட்ட அதிகாரிகளாலேயே நேர்மையாகவும் உண்மையாகவும் சேவை செய்யக்கூடிய அதிகாரிகளின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுகின்றது.
பொலிஸ் திணைக்களத்துக்குள்ள சிறந்த மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் அவ்வாறே நாட்டின் சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் பொலிஸ் அதிகாரிகள் செய்யும் புனிதமான சேவை விலை மதிக்க முடியாதவையாகும். நாட்டு பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான சேவைகளைச் செய்யும் போது குற்றமிழைப்போர் மேலும் மேலும் குற்றங்களை இழைக்கும் போதும் நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் துணிந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சாதாரண பொதுமக்கள் எவ்விதமான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது. இவ்வாறான திணைக்களங்களின் பேரும் புகழும் அருகிலுள்ள ஒரு சில அதிகாரிகளால் நாசமாக்கப்பட்டால் அது பொலிஸ் நிலையத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக