பெலியத்த மற்றும் தம்முல்ல, பல்லத்தர பிரதேசங்கள் துப்பாக்கிச் சம்பவங்களுக்கு மிகவும் பிரசித்திபெற்ற இடங்களாக விளங்குகின்றன. கடந்த காலங்களில் இப்பிரதேசங்களுக்குச் செல்லகூட பொதுமக்கள் அச்சப்படுவர் அந்தளவுக்கு அந்த பிரதேசங்களில் சட்டவிரோத துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பாவனையில் இருந்து வந்தன. ஒரே நாளில் இரண்டு மூன்று பேர் கூட பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு குடும்பத்திலுள்ள குழுவினரே இந்தத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தங்களது கட்டளைகளுக்கிணங்கவே செயற்பட வேண்டும் என்ற உத்தரவாதத்தைப் பிறப்பித்து, அராஜகம் புரிந்து வந்தனர். இந்தக்கொலைக்கும்பலிலுள்ள ஒருவருக்கொருவர் அவர்களுக்குள்ளே வெட்டிக்கொத்திக் கொண்டு இறந்த பின்னரே குறித்த பிரதேசங்கள் அமைதியாகின அங்குள்ளவர்களும் நிம்மதியாக வாழ்ந்தனர்.
பல்லத்தரயில் வசித்து வந்த கபில பிரியதர்ஷன அமரகோன் தனது பாடசாலைக் கல்வியின் பின்னர் வியாபார உலகத்துக்குள் நுழைகின்றான். ஆசிரியரான தனது தந்தையால் நடத்திச் செல்லப்பட்ட கருங்கல் குழிக்குள் வேலைகளை செய்துகொண்டு சென்றான். அவருக்கும் தனது மகனால் அவரது வேலையும் இலகுவாக்கப்பட்டது. ஆசிரியரான தந்தை அதிபரான பிறகே ஓய்வு பெற்றார். தந்தை ஓய்வு பெற்றுக்கொண்டதும் அவரின் வேலையை தனது தலையில் சுமத்தி கபில செவ்வனே செய்துகொண்டு சென்றான். வியாபாரமும் அமோகமாக நடத்திச் செல்லப்பட்டது. அதன் காரணமாக கபிலவின் கரங்களில் பெருமளவான பணம் விளையாடத் தொடங்கியது. பணம் இருந்தால் சூழ பலபேர் இருப்பார்கள் என்றதற்கமையவே கபிலவைச் சுற்றியும் நண்பர்கள் வட்டம் சூழத் தொடங்கியது. இதில் பெருமளவானவர்கள் கபிலவிடம் இருந்த பணத்தினாலேனே அவனை சூழ்ந்திருந்தனர். அதற்கேற்றாற் போல கபிலவும் வஞ்கசமில்லாது செலவழித்து வந்தான்.
கபிலவின் வியாபார நடவடிக்கைகள் வெற்றிபெற்றிருந்தாலும் குடும்ப வாழ்க்கையோ குதூகலமாக இல்லையென்றே கூற வேண்டும். திருமண வாழ்க்கையில் கபிலவுக்கு இரு பிள்ளைகள். ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டிபோட இந்த நிலைமை வித்திட்டது எனலாம். அதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பெலியத்த பிரதேச சபையில் பல்லத்தர வலயத்தை முன்னோடியாகக் கொண்டு போட்டியிட்டான் கபில. கிராமத்தில் தனக்கிருந்த அமோக ஆதரவினால் தேர்தலில் கபில வெற்றிபெற்றான். இதனால் பெலியத்த பிரதேச சபையில் உறுப்பினரான கபில எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டான்.
கபிலவின் வீடு பெலியத்த -வலஸ்முல்ல வீதியில் தம்முல்லவைத்தாண்டி சில தூரம் செல்லும் போது காணப்படும் பல்லத்தர கிராமத்திலேயே அமைந்துள்ளது. பிரதான வீதிக்கு கொஞ்ச தூரத்திலேயே கபிலவின் புதிய வீடு அமைந்துள்ளது. பிரதான வீதிக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடையின் ஒரு அறையில் பில்டர் தண்ணீர் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரம் கபில மூலம் மேற்கொள்ளப்பட்டு நடத்திச் செல்லப்பட்டது. பொதுமக்கள் குறைந்த விலையில் சுத்தமான தண்ணீரை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த வியாபாரத்தை கபில நடத்திச் சென்றான். அங்கு சேவை புரிவதற்காக யுவதியொருவரை சேவையில் இணைத்துக்கொண்டான் கபில. கடந்த 20 ஆம் திகதி காலை 7 மணியளவில் கபிலவின் தூங்கும் அறையிலிருந்து கேட்ட துப்பாக்கிச் சத்தம் காரணமாக அந்த நேரம் வீட்டிலிருந்த தந்தை இரு பிள்ளைகள் மற்றும் தாய் ஆகியோர் கபிலவின் அறையை நோக்கி பதற்றத்துடனும் பயத்துடனும் விரைந்து ஓடிச் சென்றனர். அங்கு இரத்த வெள்ளத்தில் பாரிய காயங்களுடன் தனது மகன் மெத்தையில் கிடப்பதை பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். என்ன செய்வதெனத் தெரியாது பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதைப் போல் கூறி பக்கத்து உறவினரொருவர் மூலம் கபிலவை வாகனமொன்றில் ஏற்றி தங்கல்ல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இந்தச் சந்தர்ப்பத்திலேயே இச் சம்பவம் தொடர்பான இரகசியம் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் வைத்தியசாலை தகவல்கள் மூலமே ஆரம்பிக்கப்பட்டன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வீட்டிலுள்ள யாரும் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தாமை, வீட்டில் கபிலவின் அறையிலுள்ள ஜன்னல்கள் பூட்டப்பட்டிருந்தமை, வெளியிலிருந்து யாரும் வந்ததற்கான அறிகுறி இல்லாமை, வீட்டில் வெவ்வேறு இடங்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்தமை , 4 ரவைகள் கபிலவின் மெத்தைக்கடியிலிருந்து கிடைக்கப்பெற்றமை , மெத்தைக்கடியில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டமை ஆகிய அநேக விடயங்கள் பொலிஸாரின் விசாரணைகளின் போது அவர்களின் சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாய் இருந்தன.
தங்கல்ல வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கயை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. தங்கல்ல பொலிஸ் அதிகாரி லக்சிறி கீதாவின் வழிகாட்டலில் அவரால் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய தங்கல்ல உதவிப் பொலிஸ் அதிகாரி அபேராஜ் கம்லத்தின் மேற்பார்வையில் பெலியத்த பொலிஸ் தலைமையதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான மஞ்சு லலித் விக்கிரமசிங்க சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தார். இவர்களைப் போலவே தங்கல்ல வலயத்துக்குப் பொறுப்பான குற்றப்பிரிவு அதிகாரிகளும் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு பகுதியையும் சுற்றியுள்ளவைகளையும் கண்காணித்தனர். ஏதாவது முக்கியமான தடையப்பொருள் கிடைக்கப்பெறுமா என்ற கோணத்திலேயே தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் அனைவரும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்த கபிலவின் தூங்கும் அறையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், கபிலவின் மெத்தைக்கடியிலிருந்து போர 12 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 4 ரவைகளை கண்டுபிடித்தனர். மேலும் சோதனை மேற்கொண்டதில் கட்டிலுக்கடியிலிருந்து இலங்கையில் தாயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றையும் பொலிஸார் மீட்டனர். இவைகள் காரணமாக பொலிஸாரின் விசாரணை வேறுபக்கம் திசை திரும்பியது. வேறு கோணத்தில் விசாரணை ஆரம்பித்தனர்.
துப்பாக்கிச் சூடு பட்டு கடுங்காயங்களுக்குள்ளான எதிர்க்கட்சித் தலைவர் கபிலவின் மெத்தை நனைகின்ற அளவுக்கு இரத்தம் வழிந்தோடியிருந்தது. அவ்வாறே வீட்டு வராந்தையிலும் அதிகளவான இரத்தக்கறைகளை காணமுடிந்தது. அந்த இடத்திற்கு வருகை தந்திருந்த பெலியத்த பொலிஸ் அதிகாரிகள் , தங்கல வலய குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வீடு மற்றும் சுற்றியுள்ள இடங்களின் சந்துபொந்துகளில் எல்லாம் தேடுதல் வேட்டையை நடத்தினர். எப்படியாவது ஏதாவது சாட்சியப் பொருள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அலசி ஆராய்ந்தனர். அவர்களுக்கு வீட்டுத் தோட்டத்தில் சில சில இடங்களில் இரத்தக் கறைகள் இருந்ததை அவதானிக்க முடிந்தது. இதனை வைத்துப் பார்க்கும் போது சூட்டுக் காயத்துக்குள்ளான கபில வெகு நேரம் இந்த இடத்தில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கபிலவின் தாய் , தந்தை , இரு பிள்ளைகள் மற்றும் இன்னொரு பெண்ணொருவரும் இருந்ததாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் புலனாகியிருந்தது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கபில உயிரிழக்கும் வரை தன்னிலை மறந்÷ த இருந்தான். அதன் காரணமாக பொலிஸாரால் கபிலவிடம் எந்தவித விசாரணையையும் மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. இது பொலிஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு பாரிய தடையாக இருந்ததென்றே கூறவேண்டும். கபிலவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோரும் இதுவரை -(இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை) பொலிஸ் நிலையத்துக்குச் சென்றோ அல்லது அறிவித்தல் வழங்கவோ இல்லையென பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தகவல்களுக்கமையவே பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதொன்றல்லவென்றே தெரிவிக்கப்பட்டது. இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு குறித்த துப்பாக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இரகசியமாக இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க எண்ணியதில் வீட்டிற்குள்ளும் சுற்றுபுற வளவுக்குள்ளும் பல இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் இரத்தக் கறைகள் காணப்பட்டன. மேலும் இரத்தம் தோய்ந்த நிலையில் காயங்களுக்குள்ளான கபில வெகு நேரமாக சம்பவ இடத்தில் இருந்திருக்கக்கூடும் எனவும் அதன் காரணமாகவே அவரைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் என்றும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பல இடங்களில் இரத்தக்கறை காணப்பட்டதே. பொலிஸாரின் சந்தேகத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. எது எப்படியிருப்பினும் மிகவும் திறமை வாய்ந்த பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களில் இருக்கும் வரை இவ்வாறான குற்றங்கள் மற்றும் விசாரணைகளை காலந்தாழ்த்தும் சம்பவங்கள் இடம்பெறாது என்பதற்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. தங்கல்ல மற்றும் மாத்தறை மாவட்ட பொறுப்பதிகாரி விஜித குணரத்னவின் கட்டளைக்கிணங்க தங்கல்ல பொலிஸ் அதிகாரி லக்சிறி கீதால் உதவிப் பொலிஸ் அதிகாரி அபேராஜ் கம்லத் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் பெலியத்த பொலிஸ் தலைமையதிகாரி , பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சு லலித் விக்கிரமசிங்க , குற்றப்பிரிவுத் தலைமையதிகாரி ஏ. டீ. லக்மால் சில்வா ஆகியோரும் தங்கல்ல வலயத்துக்குப் பொறுப்பான குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் தயானந்த எதிரிசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் வெவ்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதோடு குறித்த கொலை சம்பவத்தின் பின்னணி தொடர்பில் உண்மைகளை வெளிக்கொணர்ந்து நியாயத்தை நிலைநாட்டுவதாகவும் உறுதி பூண்டனர்.
இவ்வாறான பொறுப்புள்ள சில அதிகாரிகள் மூலம் சட்டம் நிலைநாட்டப்படுகின்றது என்பது தெளிவாகிறது. இவர்களைப் போன்ற குற்றம் புரியும் ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களது குற்றங்களை உணர்ந்து திருந்துவார்களாயின் நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் குறையும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். மேலும் குறித்த சம்பவமானது கொலையா? தற்கொலையா ? என்பது பூரண விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனப் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக