நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் பொய்க்காரர்கள் கொள்ளையர்கள் ஏமாற்று பேர்வழிகள் இருப்பதை கண்டுமுள்ளோம். ஏனையோர் சொல்வதை கேட்டுமுள்ளோம். இவர்களின் வலையில் சிக்கி தங்களது காணிகளையும் பணத்தையும் இழந்த பல பேரின் கதைகளையும் கேட்டிருப்போம். எங்களைச் சுற்றி திருடர்கள் ஏமாற்றுக்காரர்கள் இருப்பதை பலர் அறிந்திருந்தாலும் அவர்களிடம் மாட்டிக் கொண்டு அப்பாவிகளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
சக்விதி எனும் பெயர் கொண்ட பிரசித்த நபரொருவர் கடந்த காலங்களில் பல நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இவனொரு மகா திருடன் என்பதை அறிந்துகொள்ள பல நாட்கள் சென்றன. இவனிடம் ஏமாந்துபோன பலருக்கு இன்னமும் நியாயம் கிடைத்தபாடில்லை. கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கென பல ஏமாற்றுப்பேர்வழிகளிடம் ஏமாந்தோர் எண்ணிக்கை மிக அதிகம் . வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளும் கனவுடன் பணங்களை அறியாத தெரியாதவர்களிடம் கொடுதத்துவிட்டு ஏமாந்துபோன பல அப்பாவிகளைப் பற்றி அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தாலும் அதிலிருந்து மீளாதவர்களில் பலர் எம்மத்தியில் இன்னும் காணப்படுகின்றனர் என்பதே கவலையான விடயம் . சில வாரங்களுக்கு முன்னர் இவ்வாறான திருட்டுச் சம்பவம் ஒன்று பற்றி குற்ற விசாரணை>த் திணைக்களத்திற்கு முறைப்பாடொன்று தெரிவிக்கப்பட்டிருந்தது. டிலானி டி சில்வா என்றழைக்கப்பட்ட இந்தத் திருடி பல அப்பாவி மக்களை கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறியே ஏமாற்றியுள்ளாள். ஒருவர் இருவர் அல்ல 52 பேர் இவளின் வஞ்சகச் சொல்லைக் கேட்டு ஏமாந்து போயுள்ளனர். இவர்களெல்லோரும் தங்களுக்கொரு நியாயத்தை பெற்றுத்தர வேண்டுமென்றே அண்மையில் குற்ற விசாரணைத் திணைக்களத்தை நாடியிருந்தனர். டிலானிக்கு எதிராக வழங்கப்பட்ட அனைத்து முறைப்பாடுகளையும் சி ஐ டி யினர் ஏற்றுக் கொண்டனர் . சி ஐ டி அதிகாரிகள் அப்பாவி பொதுமக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த வீடு அத்துருகிரிய , ஹபரகட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர் மகிந்த புஸ்பகுமார எலபாத்த ஆவார். இவரின் அன்பான மனைவி தில்ஹானி பெரேரா அல்லது வருணியாவார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் . சரிவர வேலையொன்றைச் செய்யாத எலபாத்த கிடைக்கும் எந்தவொரு வேலையையும் செய்து கொண்டு வருமானத்தை தேடிக்கொண்டார். இவரின் வீட்டிலுள்ள சில அறைகள் வாடகøக்கு விடப்பட்டுள்ளன. அதில் வரும் வருவாயை வைத்து ஓரளவு தனது குடும்பக் கஷ்டத்தை போக்கிக் கொண்ட எலபாத்த குடும்பத்தினர் மிகவும் கஷ்டமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்திலேயே எலபாத்தவின் வீட்டறையொன்றை டிலானி வாடகைக்குப் பெற்றுக்கொள்கிறாள். டிலானி பார்ப்பதற்கு மிகவும் வசதியான முக்கியமான பெண்ணாக காணப்பட்டதால் எலபாத்த தனது வீட்டிலுள்ள அறைகளிலேயே பெரிய அறையை டிலானிக்கு கொடுத்தார். சுமார் 7, 8 ஆயிரத்துக்கு வழங்கும் அறையை டிலானி 40,000 ரூபா கொடுத்து வாங்க விருப்பப்பட்டதால் எலபாத்த குடும்பமே ஆச்சரியப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதனால் நீங்கள் அறையை மட்டுமல்ல முழு வீட்டையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று எலபாத்த தெரிவித்ததோடு , இந்த வீட்டை உங்களது வீடாக நினைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதையும் இங்கேயே கழிக்கலாம் எனவும் கூறியுள்ளார். ஒரு அறைக்காக 40,000 ரூபாவை கொடுக்க ஒத்துக்கொண்டதில் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற எலபாத்த முழு வீட்டையும் டிலானிக்கு கொடுக்க ஒத்துக்கொண்டார்.
திலக் ஜயவீர என்பவரே எனது வீட்டுக்காரர் . அவர் நடிகர் அவர் சிலகாலம் இலங்கையின் கட்டழகராகவும் இருந்தவர் என எலபாத்தவிடம் தனது கணவரைப் பற்றி கூறிய டிலானி அவ்வீட்டில் வசிப்பதற்கு வந்து சேர்ந்தாள். அன்றிலிருந்து எலபாத்த குடும்பத்தாருக்கு தங்களைக் காப்பாற்ற வந்த தெய்வமாகவே டிலானி தென்பட்டார். அவள் மூலம் தங்களது பல கனவுகள் நிறைவேறும் என எண்ணினர். வீட்டுக்கு வந்து சில காலத்திலேயே எலபாத்த குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக டிலானி பழகத் தொடங்கிவிட்டாள் . அவளின் கணவனாக அறிமுகப்படுத்தப்பட்ட திலக் ஜயவீரவும் அடிக்கடி வீட்டுக்கு வந்து போகத் தொடங்கினார். பின்னர் அங்கு வந்து தங்கவும் தொடங்கினார். இந்த வீடு நிறைய காலமாக பூச்சு பூசாமலேயே இருக்கின்றதல்லவா ...அதனால் முழு செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.... எலபாத்த அவர்களே இந்த வீட்டுக்கு பூச்சு பூச தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள் என டிலானி தெரிவித்தார். அதற்கிணங்க டிலானியின் செலவில் எலபாத்தவின் மவீடு பூச்சு பூசப்பட்டது. அந்த நேரத்தில் டிலானி தெய்வம் என எலபாத்த குடும்பத்தினர் போற்றினர். மேலும் லெபாத்த வீட்டின் சகல செயற்பாடுகளும் டிலானியின் விரும்மபு வெறுப்புகளுக்கேற்பவே இடம்பெற்றன.
இந்த வீட்டிலுள்ள அனைத்து தளபாடப் பொருட்களும் பழைமையாகிவிட்டன .இவற்றை இப்போது யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த வீட்டுக்குத் தேவையான அனைத்து வகையான தளபாடப் பொருட்களையும் தான் வாங்கித் தருவதாக டிலானி பொறுப்பேற்றுக் கொண்டாள். மேலும் வீட்டுக்குத் தேவையான சகல இலத்திரனியல் பொருட்களையும் வாங்கித்தர முன்வந்தாள். வேலையில்லாமல் வீட்டிலிருக்கும் ஒருவருக்கு இவ்வளவு பாரிய தொகை பணம் எங்கிருந்து கிடைக்கிறது மற்றும் ஏன் இவ்வளவு செலவை தங்களுக்காகச் செய்கிறாள் என்ற சந்தேகம் எலபாத்தவுக்கு ஏற்படத் தவறவில்லை. கோவித்துக்கொள்ள வேண்டாம் மிஸ் உங்களுக்கு இவ்வளவு பணம் ஏது ? ஏன் இந்தளவு செலவு செய்கிறீர்கள் என ஒருநாள் டிலானியிடம் எலபாத்த கேட்டுவிட்டார். அதற்கு அவள் ,
எனது அக்கா கனடாவில் இருக்கிறார். அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துள்ளார். எனக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் அனுப்புவாள். நானும் சில காலம் கனடாவில் தான் இருந்தேன். அந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் இலங்கைக்கு வந்துவிட்டேன் என டிலானி கனடாவிலுள்ள தனது சகோதரி பற்றி பெருமையாக கூறினாள். மேலும் கனடாவில் எந்தவொரு விடயத்தையும் அக்காவால் செய்ய முடியும். எனது எல்லா உறவினர்களையும் கனடாவுக்கு அனுப்பி விட்டேன். அவர்களெல்லோரும் நல்ல தொழில் செய்து கொண்டு அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். டிலானி கூறியவற்றை எலாபத்த உட்பட குடும்பத்தினர் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிட்டனர். கனடா பற்றிய கனவிலேயே இருந்த எலபாத்த குடும்பத்தினர் இலங்கையை விட்டுச் செல்ல முடிவெடுத்தனர்.
அதற்கிணங்க டிலானி மிஸ் எங்களை கனடாவுக்கு அனுப்புங்கள் இந்த நாட்டிலிருந்து எந்தப் பிரயோசனம் இல்லை. பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலமும் இல்லை. நாங்கள் இங்குள்ள எல்லாவற்றையும் விற்றுவிட்டு கனடா செல்ல தயாராகிறோம் என எலபாத்த குடும்பத்தினர் டிலானியிடம் தெரிவித்தனர். ஐயோ அது சின்ன விடயம் . எனக்கு ஒரு சதமேனும் தேவையில்லை. உங்கள் எல்லோரையும் நான் கனடாவுக்கு அனுப்புகிறேன். உங்கள் பயணம் வெற்றியென நினைத்துக் கொள்ளுங்கள் என டிலானி தெரிவித்தாள். அதற்கேற்ப எலபாத்த குடும்பத்தினர் இலவசமாக கனடாவுக்குச் செல்ல டிலானி பொறுப்பேற்றுக்கொண்டாள். மேலும் எலபத்தவிடம் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தால் சொல்லுங்கள் .எல்லோரையும் கனடாவுக்கு அனுப்புகிறேன். என எலபாத்தவின் பரம்பரையையே கனடாவுக்கு அனுப்புவதாக டிலானி உறுதியளித்தாள் . அதற்கு எலபாத்த , டிலானி மிஸ் எனது நிறைய நண்பர்கள் கனடாவுக்கு செல்ல ஆர்வமாகவுள்ளார்கள் . அவர்களை இலவசமாக கனடா அனுப்பத் தேவையில்லை அவர்களிடம் ஒரு தொகையை பெற்றுக்கொண்டு வேலையை செய்துகொடுப்போம் என்றார். காரணம் டிலானியின் யோசனையை தமக்கு வருமான மார்க்கமாக பயன்படுத்தும் நோக்கிலேயாகும். எலபாத்த நீங்கள் விரும்பமானதை செய்யுங்கள் . கனடாவில் வேலை வாங்கித் தரும் வேலையை நான் பார்க்கிறேன் என டிலானி தெரிவித்தாள். அதற்கிணங்க எலபாத்தவின் யோசனைக்கு டிலானி விருப்பம் தெரிவித்தாள். எலபாத்தவோ தனக்கு தெரிந்த எல்லோரிடமும் டிலானி பற்றி சொல்லத் தொடங்கிவிட்டார். டிலானி வாழும் சுகபோக வாழ்க்கை பற்றியும் டிலானியின் கணவரைப் பற்றி முழு நாடும் நன்றாக தெரிந்து வைத்திருப்பதாலும் எலபாத்த கூறியதை எல்லோரும் நம்பினர். எலபாத்தவும் அவரது மனைவியும் நாலாபுறமும் கனடா செல்ல ஆட்களை தேடிக் கொண்டிருந்தார்கள் சில காலம் செல்வதற்கு முன்னரே சுமார் 100 பேரை கனடா செல்ல எலபாத்த குடும்பத்தினர் தயார்படுத்திக் கொண்டனர். கனடாவில் வேலை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடனும் எலபாத்த வீட்டுக்கு அனுதினமும் வெவ்வேறு நபர்கள் வரங்தொடங்கினர்.
இதை நான் வியாபாரமாகச் செய்யவில்லை. எல்பாத்தவின் வேண்டுகோளுக்கிணங்கவே நான் இந்த உதவியைச் செய்கிறேன். எனக்கு பணம் தேவையில்லை. எனது அக்கா எனக்குத் தேவையான பணத்தை அனுப்புகிறார். சொல்லப்போனால் அந்த பணத்தை செலவழிக்க எனக்கு நேரம் இல்லையென டிலானி கூறிய அனைத்துக் கதைகளையும் கனடா சென்று வேலை பெற்றுக்கொள்ள காத்திருந்த அனைவரும் நம்பினர். எனது வீட்டை திருத்திக்கொடுத்ததும் டிலானி மிஸ்தான் . அதுமட்டுமல்ல ... வீட்டுக்குத் தேவையாள அனைத்து வகையான இலத்திரனியல் மற்றும் தளபாடப் பொருட்களையும் அவரே வாங்கித் தந்தார். இப்படியொருவர் எங்கள் வீட்டுக்கு வந்தது எமது அதிர்ஷ்டமே. இன்னும் சில நாட்களிலேயே நாங்களெல்லோரும் கனடாவிற்கு செல்லப்பபோகிறோமென எலபாத்த டிலானி பற்றி வந்தவர்களிடம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
நீங்கள் பாஸ்போர்ட் செய்வதற்கு வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும் . அதுவும் அரசாங்க வங்கியில் தேவைப்பட்டால் வங்கிக்கணக்கில் ஒரு தொகையை உயரதிகாரிகளுக்கு காட்ட நேரிடலாம் . இவற்றை செய்துகொண்டு விசாவுக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள் . ஒரு மாதம் செல்வதற்கு முன்னர் கனடா செல்ல முடியும். உங்களைப் பற்றி நான் கனடா அக்காவுக்குச் சொல்லியுள்ளேனென டிலானி கூறியதைக் கேட்டு அனைவரும் பிரமித்துப் போயினர். இதற்கிணங்க கனடா செல்ல ஆர்வமாகவுள்ள அனைவரும் முதலில் வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரøத்தை தயார்படுத்திக் கொண்டனர் . பின்னர் அரச வங்கியொன்றில் கணக்கை ஆரதம்பித்து அதில் சுமார் 5 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டனர். அதற்கான ஏ ரி எம் அட்டையையும் பெற்றுக்கொண்டனர். டிலானி மிஸ்ஸை சந்தேகப்பட முடியாது. வேறு யாருமென்றால் முதலில் பணத்தையே கேட்பர் . இவர் அதைப்பற்றி பேசவேயில்லை. எமது பேரில் கணக்கொன்றை ஆரம்பித்து அதற்கே பணத்தை சேமித்துக்கொள்ள முடியுமென்றே சொன்னார் என டிலானியைப் பற்றி அனைவரும் பேசத் தொடங்கினர். 52 பேர் கனடாவுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டனர். இந்த 52 பேரும் நிறைய சந்தர்ப்பங்களில் எலபாத்த வீட்டுக்குச் சென்று தேவையான தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்திலேயே விசாவும் தயாரானது.
அடுத்த வாரமளவில் நாமெல்லோரும் கனடா தூதரகத்துக்குச் செல்லவிருக்கிறோம். அதன்போது உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும் . எதற்கு பயப்பட வேண்டாம். கேள்வி கேட்கும் போது என்னைப் பற்றி கூறுங்கள் . அப்படிக் கூறினால் எந்தப் பிரச்சினையும் வராது என டிலானி கனடா செல்வோரிடம் தெரிவித்தாள். மேலும் மீண்டும் வரும் போது பாஸ்போர்ட் வங்கிப் புத்தகம் ஏ.ரி. எம். கார்ட் மற்றும் இரகசிய இலக்கம் விசா பிரதிகள் சிலவற்றையும் கொண்டுவருமாறு தெரிவித்தாள். அவற்றை நாம் தூதரகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தாள். அதற்கிணங்க டிலானி மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்த வேலையாட்கள் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து கொடுத்தனர்.
சில நாட்கள் சென்றன. வேலையாட்களின் வங்கிக் கணக்கிலிருந்து அடிக்கடி பணம் மீளப் பெற்றுக்கொள்ளும் குறுஞ்செய்தி அவர்களது கைத்தொலைபேசிக்கு வந்து கொண்டேயிருந்தன. இது தொடர்பில் நிறைய பேர் எலபாத்தவிடம் வினவினர் . விசா எடுக்க பணம் தேவைப்படும் தானே . மற்றது தூதரக அதிகாரிகளுக்கும் ஒரு தொகை பணத்தை கொடுக்க வேண்டும். அதற்காக டிலானி மிஸ் பணம் எடுத்திருப்பாரென எலபாத்த அவர்களுக்கு கூறினார். அதனால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. வேலை ஆர்வத்தில் இருந்த அனைவரும் கனடா வெளிநாட்டு நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமாகினர். அங்கு செல்லும் போது முக்கியமானவர்கள் போல செல்ல வேண்டுமென டிலானி ஏற்கனவே அறிவித்திருந்தாள். அதனால் நிறைய பேர் புதிய ஆடைகளை கொள்வனவு செய்தும் தயாராகினர். கடந்த 14 ஆம் திகதி மாலை 2 மணியளவில் அனைவரும் புதிய கனவுகளுடன் கனடா வெளிநாட்டு நிலையத்துக்குச் சென்றனர்.
இந்த நேரத்தில் தூதரகம் மூடியுள்ளது. விசா விண்ணப்பம் நாளை காலையே பொறுப்பேற்கப்படும் . அதனால் நாளை காலை வாருங்களென நிலையத்தின் முன்னால் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கூறி அவர்களை தடை செய்தனர். இன்று 2 மணிக்கே எங்களை வரச் சொன்னார்கள். டிலானி மிஸ்தான் எங்களை அனுப்பினார். தூதரகத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவிப்பதாகக் கூறினார் என வேலையாட்கள் டிலானியின் பெயரைப் பயன்படுத்தியது அப்போதாவது தங்களை உள்ளுக்குள் அனுப்புவார்கள் எனும் நோக்கிலேயே எந்த டிலானி ? அப்படி யாரும் இங்கு கதைக்கவில்லை. இங்கு நீங்கள் நினைக்கிற மாதிரி செல்ல முடியாது. தயவு செய்து இங்கிருந்து செல்லுங்கள். இல்லையென்றால் பொலிஸாரை அழைக்க வேண்டி ஏற்படும் எனக் கூறி பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து அனுப்ப முயற்சி செய்தனர். அங்கு சென்ற பலர் டிலானியோடு தொடர்பை ஏற்படுத்திய போதும் டிலானியின் கைத்தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.
இவள் எங்களை ஏமாற்றிவிட்டாளோ ... எங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணமும் எடுக்கப்பட்டுள்ளது என கனடா செல்ல ஆர்வமாக இருந்தவர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் ஒரு சதமேனும் மீதம் வைக்காது டிலானி எடுத்திருந்தாள். உடனடியாகவே அவர்கள் எலபத்தாவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினர். எங்கே அந்த டிலானி எங்களை தூதரகத்திற்குள் செல்லவிடாமல் துரத்திவிட்டனர். இன்றைக்கு யாரையும் வரச்சொல்லியிருக்கவில்லை. டிலானியை இங்கு யாருக்கும் தெரியாதாம் என அவர்கள் எலபாத்தவை ஏசித் தீர்த்தனர். எலபாத்தவும் கதிகலங்கிப் போனார். டிலானி மிஸ் தூதரகத்துக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்று விட்டார். அவர் தற்போது வீட்டிலில்லை என எலபாத்த அவர்களுக்கு கூறினார்.
கனடாவுக்கு செல்ல ஆயத்தமானவர்கள் அனைவரும் எலபாத்த வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். டிலானி மிஸ் வீட்டை விட்டு போய்விட்டார் போல. அறையில் பெறுமதியான அவரது பொருட்கள் எதவுமே இல்லை. நாம் இப்போது என்ன செய்வோம் என எலபாத்த கேட்டார். அவரது உடல் முழுவதும் வியர்வையால் நனைந்துவிட்டது. அந்தளவுக்கு பயந்துபோய்விட்டார். நீங்களிருவரும் தான் எங்களை கஷ்டத்தில் போட்டீர்கள் . இரண்டு பேரும் இப்போதே குற்ற விசாரணை த் திணைக்களத்துக்கு எங்களோடு வாருங்கள் “என கணவன் - மனைவி இருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சென்றனர். கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 2 கோடிக்கும் அதிகமான தொகையை கொள்ளையிட்டமைக்காக எலபாத்த மற்றும் மனைவியை குற்ற விசாரணைத் திணைக்களம் கைது செய்தது.
சேர் டிலானி மிஸ் கூறியதைப் போன்று இவர்கள் கணக்கிலுள்ள பணத்தை நான் தான் எடுத்துக்கொடுத்தேன் . நான் இவள் இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவாள் என்றே எண்ணினேன். நானும் டிலானிக்குத் தெரியாமல் கொஞ்சம் பணத்தை எடுத்துள்ளேன். இவள் இவ்வாறு ஏமாற்றுவாள் என கனவில் கூட நான் நினைக்கவில்லையென எலபாத்த இரகசிய பொலிஸார் முன்னிலையில் புலம்பத் தொடங்கினார். குற்ற விசாரணைத் திணைக்களத்தின் தலைமை முறைபாட்டு விசாரணைப் பிரிவால் டிலானியை கைது செய்வதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் செல்வதற்கிடையில் டிலானி இருக்கும் இடத்தை சிஐடி யினர் கண்டுபிடித்துவிட்டனர். அதற்கிணங்க பன்னிப்பிட்டிய கலல்கொட பிரதேசத்தில் இன்னுமொரு வாடகை வீட்டில் மறைந்திருந்த டிலானியை இரகசிய பொலிஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக