கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 ஜனவரி, 2019

சட்டவிரோத மிருக வேட்டை


கடந்த 9 ஆம்  திகதி காலை  8.30 மணியளவில் இருக்கும்  மத்துகம - பதுரலிய  பிரதான  பாதையில்  மத்துகம நோக்கிச்  சென்று கொண்டிருந்த  வெள்ளை  நிற  நவீன ரக  காரொன்று லத்பந்துர  சந்தியை  தாண்டி சிறிது தூரம் சென்றுக்கொண்டிருக்கையில்  ,எதிரே  காணப்பட்ட வாகன சோதனைச் சாவடியில்  இருந்த பொலிஸார் காரை  நிறுத்துமாறு சாரதிக்கு  சமிக்ஞை  காட்டினர்.  அதற்கு கட்டுப்பட்டு  சாரதியும்  காரை நிறுத்தினான்.  சோதனை  செய்த  பொலிஸார்  சாரதிக்கு மேலதிகமாக  காரின்  பின் ஆசனத்தில்  இன்னொருவர்  அமர்ந்திருப்பதையும்  அவதானிக்கத்  தவறவில்லை.

இந்தச்   சம்பவம் இடம்பெறுவதற்கு முதல்  நாள்  இரவு   விசேட  பொலிஸ்  புலனாய்வுப் பிரிவு  அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய குறித்த டொயோட்டா  ரக  மோட்டார்  காரை  சோதனை   செய்தனர்.   இச்சோதனையை மேற்கொண்டது  களுத்துறை  வலய சட்ட அதிகாரப் பிரிவின் பொலிஸ்  அதிகாரிகளேயாவர்.  அந்தப்  பிரிவின்  பொலிஸ் கொஸ்தாபல்  குணவர்தன  (44817)  வுக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய அந்தக்  காரை  பரிசோதித்த  பொலிஸ்   அதிகாரிகள் காரின்  பின்கதவுப் பகுதியில்   (டிக்கி) மிகவும்  சூட்சுமமான  முறையில்  மறைத்து  வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை  வேட்டையாடிய  இறைச்சியை  கண்டுப்பிடித்தனர்.  பொலிஸ்  கொஸ்தாபல்  குணவர்தனவுக்கு சம்பவத்துக்கு முதல்  நாள் இரவு  பெயர் குறிப்பிட விரும்பாத  ஒருவரால்  இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டிருந்தது. அத்தகவலுக்கிணங்கவே  பொலிஸார்  இந்த  தேடுதலை  மேற்கொண்டனர்.  உண்மையைக்  கண்டறிந்த பொலிஸார் அதன் பின் காரில் சென்ற  இருவரிடமும் விசாரணைகளை  மேற்கொள்ள ஆரம்பித்தனர்.    வேட்டையாடப்பட்ட  இறைச்சிகளைக் கொண்டு விசாரணையை  ஆரம்பித்த  பொலிஸார்  குறித்த  காரில்  பயணித்த   இருவரிடமும்  இந்த  இறைச்சிகள் அவர்களுக்கு  எவ்வாறு கிடைக்கப்பெற்றன என்பது தொடர்பிலேயே  கேள்வி  எழுப்பினர்.  இருப்பினும்   அவ்விருவரும் பொலிஸாருக்கு  நம்பிக்கை  தரக்கூடிய  பதிலை  சொல்லியிருக்கவில்லை.  வேட்டையாட  பயன்படுத்தப்பட்ட  துப்பாக்கி  எவ்வகையைச் சேர்ந்தது என்பதே  பொலிஸாரின்  அடுத்த கேள்வியாக அமைந்தது.  இதற்கும் குறித்த  இருவரினால்  ஒழுங்கான  பதில்  வழங்கப்பட்டிருக்கவில்லை .

இந்த  நவீன  ரக  காரின்  உரிமையாளரான  பின்னாசனத்தில் அமர்ந்திருந்த  நபரிடம்  அடுத்தடுத்து கேள்விகளைக்  கேட்ட பொலிஸ்  அதிகாரிகள் அதன்  பின்னர்  இந்த “இருவரையும்  உடல் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்தனர்.  ஆரம்பத்தில்  அதற்கிணங்காத கார் உரிமையாளர்  தான்  பேருவளை  பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல  மாணிக்கக்கல்  கோடீஸ்வரர் என  பொலிஸாரிடம்  தெரிவித்திருந்தார்.  மேலும்  வேட்டையாடப்பட்ட இறைச்சியானது  இறந்து  கிடந்த  மானொன்றின்  இறைச்சியெனவும்  இதற்கு அதிக  கிராக்கி  காணப்படுவதால்  நண்பரொருவருடன்  பதுரலிய  பிரதேசத்துக்கு கொண்டு செல்வதாகவும்  தெரிவித்தார்.

அந்தப் பதிலில்  திருப்தியடையாத  பொலிஸ் அதிகாரிகள்  , மேற்படி முஸ்லிம்  வர்த்தகரின் விருப்பமில்லாமலேயே  அவரை  சோதனை  செய்தனர்.  அதன்போது அவரது உடைமையில் இருந்த  போர 12 ரக துப்பாக்கியொன்றையும்  இரு  ரவைக் குண்டுகளையும்  கண்டுபிடித்தனர்.  மேலும்  இதனூடாக  மேலதிக  விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டனர்.  கார்  உரிமையாளரிடம்  அடுத்தடுத்து கேட்ட பல கேள்விகளில் இந்த மிருகத்தைக் கொன்றவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி  மற்றும் அதன்  உரிமையாளர் யார்  என்றே பொலிஸாரால்  கேட்கப்பட்டது.  அந்த  சந்தர்ப்பத்தில்  குறித்த  முஸ்லிம்  வியாபாரி  எத்தனையோ  தடவை  தானொரு பிரபல கோடீஸ்வர  வியாபாரி  என்பதை  தெரிவித்து  தனது  அதிகாரத்தைப் பயன்படுத்தி  பொலிஸாருக்கு பணம் ஒரு தொகையைக் கொடுத்து தன்னை கைது செய்வதிலிருந்தும் காப்பாற்றிக்  கொள்ளவே  நினைத்தார். அதற்காக  தான் எவ்வளவு  தொகை  பணம்  தரவும் தயாரெனவும்   அவரால்  பொலிஸாருக்கு  பல தடவை  கூறப்பட்டது.

சட்டத்தின் படி செயற்படும்  பொலிஸ் அதிகாரிகளோ  பணத்துக்காக  தங்களது பதவியை  ஒருநாளும்   அகௌரவப்படுத்த எண்ணியதில்லை.  பொலிஸ்  அதிகாரிகளின்  ஒரே  குறிக்கோளாகவிருந்தது  எப்படியாவது  இந்த  சந்தேகத்துக்குரிய  சம்பவத்துடன்  தொடர்புடையவர்களை  சட்டத்தின்  முன் கொண்டு வந்து  தண்டனை  பெற்றுக்கொடுப்பதாகவே  இருந்தது. அதற்கேற்ப சந்தேக  நபர்கள்  இருவரையும்  கைப்பற்றப்பட்ட காரையும்  அதற்குள்  மறைத்து  வைக்கப்பட்டிருந்த  இறைச்சியையும்  மத்துகம  வலய  சட்ட அதிகார  பொலிஸ் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.  அப்பிவிரின்  தலைவரும்  உப  பொலிஸ்  பரிசோதகருமான  திலங்க  சஞ்ஜீவ  அடங்கிய அதிகாரிகள்  குழுவொன்று அவ்வேளையிலிருந்து முஸ்லிம் வர்த்தகரிடம்  விசாரணைகளை மேற்கொள்ள  ஆரம்பித்தது.  உண்மையை சொல்வதைத் தவிர  தனக்கு வேறு வழியில்லை  என்று தெரிந்து கொண்ட  முஸ்லிம் வியாபாரி  குறித்த  மிருக  வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தன்னுடையதென்றும்  அதை  தங்களிடம்  ஒப்படைக்க  தான் தயாரெனவும் விசாரணை மேற்கொண்ட பொலிஸாரிடம் தெரிவித்தார்.  விசாரணை  மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இத்தகவல்  மிக  முக்கியமானதாக  அமைந்தது. அதற்காக  துப்பாக்கியை கொண்டுவரும் நோக்கில்  வியாபாரியுடன் பேருவளை  பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்ல  பொலிஸ் அதிகாரிகள் தயாரான  சந்தர்ப்பத்தில்  அதற்கு  வியாபாரி  மறுப்புத் தெரிவித்திருந்தார்.  அதற்குக் காரணமாக  பேருவளை  பிரதேசத்தில்  தானொரு  பிரசித்தி பெற்ற கோடீஸ்வரர் எனவும்  அதனால்  அங்கு சென்று துப்பாக்கியை  கொண்டுவந்தால்  தனது புகழுக்கு  களங்கம்  ஏற்படுமென்றும் , எனவே  இன்னொருவரிடம்  கூறி   துப்பாக்கியை  எடுத்து  வருவதற்கு தனக்கு சந்தர்ப்பத்தை  பெற்றுக்கொடுக்குமாறு வியாபாரி பொலிஸாரிடம்  கோரியிருந்தார்.

இந்த  வேண்டுகோளை  ஏற்க  மறுத்த  சோதனைக் குழுவினர்  தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை  மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதற்கேற்ப  கைது  செய்யப்பட்ட முஸ்லிம்  வியாபாரியை  அழைத்துக்கொண்டு  அவரது வீடு  அமைந்துள்ள பேருவளை  பிரதேசத்துக்கு விரைந்த  பொலிஸ் அதிகாரிகள்  , வியாபாரிக்குச் சொந்தமான  இருமாடி வீட்டை பரிசோதிக்க ஆரம்பித்தனர்.   பொலிஸ் தகவல்  பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற செய்திக்கிணங்க  குறித்த  வீடானது  பேருவளை  பிரதேசத்தில் வசித்த  முஸ்லிம் வியாபாரி  ஒருவரின்  பரம்பரை  வீடாகும்.  கைது செய்யப்பட்டவர்   அந்த முஸ்லிம்  வியாபாரியின் பேரன் என  கண்டறிந்தனர்.  பிரதேசத்தின்  மிகவும்  முக்கியமான பரம்பரையைச் சேர்ந்த அந்தவீட்டை பரிசோதனை  செய்ய ஆரம்பித்த  பொலிஸ் அதிகாரிகளிடம் கைது செய்யப்பட்ட வியாபாரி தெரிவித்திருப்பதாவது  இந்த வீட்டை சோதனை செய்வது பற்றி வெளியார் தெரிந்து  கொண்டால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட இடமுண்டு எனவும் அதே போல் தனது  வியாபாரத்துக்கு பெரும்  இழப்பு  ஏற்படுமெனவும்  சோகத்துடன் தெரிவித்திருந்தார்.

குற்றமிழைத்த  ஒருவரை  சட்டத்துக்கு முன் கொண்டுவருவதற்கு தராதரம் பார்க்காத பொலிஸார் உடன்  விரைந்து இரண்டு மாடி  வீட்டை  சோதனை  செய்ய ஆரம்பித்தனர்.  வீட்டிலுள்ள  ஒவ்வொரு  அறையையும்  சல்லடை போட்டுத்  தேடிய  பொலிஸார்  இறுதியாக  வியாபாரியின் படுக்கை அறையை  சோதனை செய்ய திட்டமிட்டனர்.   இவரது அறையில் தங்களுக்கு தேவையான  ஏதாவதொரு தடயப் பொருள்  கிடைக்கப்பெறும்  எனும் நோக்கிலேயே அவ்வறையை அலசினர்.  அங்கு சோதனை  மேற்கொண்ட  பொலிஸ் அதிகாரிகள் குழுவில்  ஒரு  அதிகாரி  அவரின்  கட்டில் மெத்தைக்கடியில்  தேடிய போது நவீன  ரக  துப்பாக்கியொன்று இருப்பதை  கண்டுள்ளார். தேடுதலை  மிகவும்  தீவிரப்படுத்திய  பொலிஸ்  அதிகாரிகள் முழு வீட்டையும்  சோதனை  செய்ததில்  வெவ்வேறு வகையான  பல்வேறு  துப்பாக்கிகளையும்   துப்பாக்கிகளின் பல  பாகங்களையும்  அவ்வாறே  துப்பாக்கி ரவைகள் பலவற்றையும்  கைப்பற்றியிருந்தனர்.  மேலும்  சோதனை  செய்ததில்  இன்னும் பல ஆயுதப் பொருட்களையும்  கண்டுப்பிடித்தனர்.

வீட்டை  சோதனை  செய்த  பொலிஸ் அதிகாரிகளிடம்  முஸ்லிம் வியாபாரி கூறிய கதைகள் அனைத்தும் பொய்யாகி போய்விட்டன. பரிசோதனைக் குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக க் காணப்பட்டது,  பாரிய தொகை  துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏனைய ஆயுதப் பொருட்கள் எவ்வகையைச்   சேர்ந்தவை  என்பதை சந்தேகமின்றி  கண்டுப்பிடிப்பதாகும்.  பொலிஸார் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்  போது அன்றைய தினம்  கோடீஸ்வர  வியாபாரியின் வீட்டுக்குள் இருந்த  பொலிஸாரின்  பொறுப்புக்கு எடுக்கப்பட்ட துப்பாக்கி  மற்றும்  ஆயுதப்  பொருட்களில்  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மினி  ஊசி வகையைச் சேர்ந்த பிரபுக்களின்  பாதுகாப்பு துப்பாக்கியொன்று  , வெளிநாட்டில்  தயாரிக்கப்பட்ட போர  12 ரகத்தைச்  சேர்ந்த 8  துப்பாக்கிகள்  , 2.2 மில்லிமீற்றர் அளவுடைய 2 துப்பாக்கிகள், போர 12 ரக துப்பாக்கிகளுக்கு செலுத்தக்கூடிய 100 ரவைகள்  ,  2.2 மில்லிமீற்றர் அளவுடைய வெளிநாட்டு   800 ரவைகள்  , வெளிநாட்டில் தயாரிப்பான  நவீன  ரக  வில் மற்றும்  அதற்குரித்தான  அம்பு 17 ,  இரு குழல் துப்பாக்கியொன்றின் பகுதிகள்,  இலக்கு வைக்கப்பட்டு  துப்பாக்கிச்சூடு  மேற்கொள்ளப்படும் போது  பயன்படுத்தப்படும்  உபகரணமொன்று , குண்டுகள்  நிரப்பும்  குழுவினர்  பயன்படுத்தும்  ஈயத்  துண்டுகள்  ஒரு தொகை,   வாயு துப்பாக்கிகள் இரண்டு , வெளிநாட்டில் தயாரிக்கப்படும்  கெட்டேரியொன்று , இரண்டு  வெட்டுக்கத்தி  மற்றும்  20 மில்லிகிராம்  ஹெரோயின்  என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.

மொஹமட்  ஜெபர்  அப்துல்  என்ற  மேற்படி  கோடீஸ்வர வியாபாரி  40 வயதுடைய  திருமணமாகாதவராவார். பேரு வளையிலிருந்து  பதுரலிய  பிரதேசத்துக்கு வேட்டையாடச் சென்றுவிட்டு வந்து கொண்டிடிருந்த  குறித்த  நபர்  பொலிஸாரால்  கைது செய்யப்படும் தறுவாய்  வரை சுகபோக  வாழ்க்கை வாழ்ந்தவராவார். கடந்த  8 ஆம் திகதி இரவு தனது  நண்பரொருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட தனக்குச் சொந்தமான  நவீன ரக  காரில் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியுடன் அவரது  உடைமையில்  காணப்பட்ட பாரிய  தொகை  துப்பாக்கிகள் மற்றும்  ஆயுதப் பொருட்களுடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போது நீதிமன்றத்தால்  அவரை  தடுப்புக் காவலில் வைத்து  விசாரிக்க  தீர்ப்பு வழங்கப்பட்டதைத்  தொடர்ந்து   தொடர்ந்தும் பொலிஸார் மூலம் விசாரணை இடம்பெற்று வருவது  குறிப்பிடத்தக்கது  . விசாரணையின் போது  சந்தேக  நபர்  வெளிநாட்டில்  தயாரிக்கப்பட்ட பிரபுக்கள்  பாதுகாப்பு  துப்பாக்கி மற்றும்  2.2 மில்லி மீற்றர் துப்பாக்கி என்பவை  கடந்த  2 1/2  வருடத்துக்கு முன்னர்  இறந்துபோன முஸ்லிம்  ஒருவரால் தனக்குப் பரிசாக  வழங்கப்பட்டவை  எனக் கூறினார்.  அவரிடம் காணப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் மற்றும்  ஆயுதப்  பொருட்கள்   தொடர்பில்  தெளிவான  பதிலை  வழங்க  மறுப்புத் தெரிவித்திருந்த சந்தேகநபர் தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலுமொரு உண்மைத் தகவலை  தெரிவித்திருந்தார்.

அத்தகவலின் படி  சந்தேக நபரான  முஸ்லிம் வியாபாரி கைது செய்யப்பட்டு 3 தினங்களுக்குப் பின்னர் அதாவது கடந்த  12 அம்  திகதி பதுரலிய  பிரதேசத்தில் வைத்து  வியாபாரிக்குச் சொந்தமான  இன்னொரு துப்பாக்கியை கைப்பற்ற பொலிஸாரால்  முடியுமாகிப்போனது. போர 12   ரகத்தைச் சேர்ந்த அத்துப்பாக்கியைப்  பயன்படுத்தி  குறித்த  நபர் மூலம்  மேலே  கூறப்பட்ட வேட்டை இடம்பெற்றிருக்கலாமென  பொலிஸாரால்  சந்தேகம்  வெளியிடப்பட்டது. இந்த பாரிய  தொகை  துப்பாக்கிகள் என்ன  காரணத்துக்காக  குறித்த  வியாபாரியின் உடைமையில் இருக்கின்றன என்ற நோக்கிலும்  இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி இவர்  மற்றும்  குழுவினர் ஏதோ பாரியளவிலான குற்றமொன்றை புரிந்திருக்கலாம்  என்ற நோக்கிலும்   பொலிஸார் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வியாபாரியின் உடைமையில் இன்னும் ஆயுதங்கள் பல இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டனர். மேலும் பொலிஸ் தேடுதல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதப் பொருட்கள் அனைத்துமே மிகவும் நல்ல நிலைமையில் இருப்பது விசேட அம்சமாகும்.

துப்பாக்கியொன்று எந்த நிலையில் இருந்தாலும் அதற்குள் குண்டு போடப்பட்டால் பாரிய விபத்தே ஏற்படும். மனிதர்களானாலும் சரி, மிருகங்களானாலும் சரி துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுவதானது அநியாய மரணமாகும். இந்தக் கோடீஸ்வர வியாபாரியிடம் காணப்பட்ட பெருமளவு துப்பாக்கிகள் தொடர்பில் இதுவரை விதவிதமான கட்டுக்கதைகள் பரவுகின்ற அதேவேளை, இன்னும் சிலரோ இந்த வியாபாரியால் பொழுதுபோக்குக்காக வேண்டி இந்தப் பாரிய தொகை துப்பாக்கிகளை ஒருசிலர் நடத்திச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் நீதிக்கு முன்னால் இவ்வாறான சில்லறைக் கதைகள் இனிமேலும் செல்லுபடியாகாது. நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களில் வெவ்வேறு பிரிவினர் தங்களுக்கேற்ற விதத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தலைதூக்கியுள்ளது. இன்னும் சிலர் பட்டப்பகலில் நடுவீதியில் ஆட்களைக் கொல்லும் பொருட்டு துப்பாக்கியை பயன்படுத்துவதையும் காணக்கூடியதாகவுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் அனுமதியின்றி ஆயுதக் களஞ்சியசாலைகள் காணப்படுவதையும் குறிப்பிட முடியும்.

அதிகாரம், பணபலத்துக்கு முன்னால் தங்களின் குறிக்கோளை இழக்காத பொலிஸ் அதிகாரிகள் பாராட்டப்படக்கூடியவர்களே. களுத்துறை வலய சட்ட அதிகாரப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளின் அதீத திறமை காரணமாக பேருவளை துப்பாக்கிக் களஞ்சியசாலையில் மேலும் ஒருதொகை துப்பாக்கிகளும் ஆயுதப் பொருட்களும் நிரம்புவது தடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய அநீதிகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.

களுத்துறை மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உபுல் நில்மினி ஆரியரத்னவின் மேற்பார்வையின் கீழ் மத்துகம பொலிஸ் அதிகாரி ஐ.சஞ்ஜய இரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தச்  சிக்கலான விடயத்தைக் கையாண்டது. களுத்துறை வலய சட்ட அதிகாரி ஒன்றியத்தின் தலைவர்-, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க சஞ்ஜீவ, பொலிஸ் சார்ஜன்ட் இந்திக்க (3457), பொலிஸ் சார்ஜன்ட் சமன் (27118), பொலிஸ் சார்ஜன்ட் ரத்னாயக்க (37109), பொலிஸ் கொஸ்தாபல் குணவர்தன (44817) , பொலிஸ் கொஸ்தாபல் ஜயரத்ன (48256),  பொலிஸ் கொஸ்தாபல் சரத் (49251) , பொலிஸ் கொஸ்தாபல் பிரியந்த (755),  பொலிஸ் கொஸ்தாபல் சாரதி கருணாரத்ன (80776) ஆகிய பொலிஸ் அதிகாரிகள் குழுவேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக