ஹக்மன பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிப்பவர் லொக்கு ஹக்குருகே சாந்த (53 வயது) இவர் அரசியல்வாதியாக அறிமுகமாவதற்கு முன்னர் சிறந்த வியாபாரியாக அனைவர் மத்தியிலும் அறிமுகமாகியிருந்தார். நிறைய பேர் அவரை ”மெனிக் சாந்த ” என்றே அழைப்பர். இவர் கடந்த பல காலங்களாக கம்புறுபிட்டிய ஹொரபாவிடவில் பிரசித்தி பெற்ற மாணிக்கக்கல் வியாபாரியான தர்மதாசவுடன் நெருங்கிய தொடர்பை பேணிக்கொண்டு வியாபாரம் செய்தவராவார். தர்மதாசவின் எழுதுவினைஞராக செயற்பட்டவர் சாந்த ஆவார். மாணிக்கக்கல் வியாபாரிகளின் கொடுக்கல் வாங்கல் கணக்குகள் மட்டுமன்றி தர்மதாசவின் அனைத்து விதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்தது சாந்தவே. தெற்கின் பிரபல பாதாளக் குழுத் தலைவனான மாகந்துர மதுஷ் ஆரம்பக் காலத்தில் தர்மதாசவுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது ஒரே ஊர் என்பதாலாகும் என சொல்லிக் கொள்கிறார்கள். தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் டெனி ஹித்தடியகேவை கொலை செய்வதற்கு முன்னர் மதுஷ் வேறு ஒரு குற்றத்துக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தான். அந்த நேரத்தில் தர்மதாச மதுஷûக்கு கப்பம் கொடுத்ததாக இரகசியத் தகவலொன்று உள்ளது. அந்த கப்பத் தொகையை எடுத்துச் செல்லும் வேலையை மதுஷின் சகோதரன் மேற்கொண்டதாகவும் தகவலொன்று உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் மதுஷின் ஒரே சகோதரன் மாத்தறை , நாதுகல பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் கொலைக்கு தேவையான தகவல்கள் வியாபாரி ஒருவர் மூலமே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மதுஷ் மனதில் சந்தேகமொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. இதன் காரணமாக 2007 ஆம் ஆண்டிலிருந்தே மாகந்துர மதுஷால் தர்மதாச முதலாளியைக் கொலை செய்வதற்காக பல சந்தர்ப்பங்களில் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
அக்குரஸ்ஸ , ஊருமுத்த பிரதேசத்தில் வாகனமொன்றை ஓட்டிச் செல்லும் வேளையில் தர்மதாசவைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியிருந்தார். அதன் பிறகு கம்புறுபிட்டிய நகரத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு மாணிக்கக்கல் கொள்ளைச் சம்பவமொன்று அரங்கேற ஏற்பாடாகியிருந்த சந்தர்ப்பத்திலும் அதிர்ஷ்டவசமாக தர்மதாச உயிர் பிழைத்தார். பொதுவாக மதுஷின் இலக்கு ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான் தவறும். அந்தளவுக்கு மிகவும் சூட்சுமமாகவும் திட்டமிட்டும் குற்றமிழைப்பதில் அபார திறமைசாலி இவன். தர்மதாச முதலாளி பாதுகாப்பு அங்கி அணிந்திருப்பதால் என்னவோ அவருக்கு துப்பாக்கிச் சூடு படுவதில்லை என மதுஷ் சந்தேகம் கொண்டான். எது எப்படியிருப்பினும் தர்மதாசவின் பயத்தைப் போக்கி அவரைப் பாதுகாப்பதில் அதிக கரிசனையை மெனிக் சாந்த கொண்டிருந்தான். இதை மதுஷûம் அறிந்து வைத்திருந்தான். இந்த சந்தர்ப்பத்தில் தான் மெனிக் சாந்தவுக்குச் சொந்தமான காணியொன்று ஹக்மன , கெம்பிலிய பொல பிரதேசத்தில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 5 1/2 ஏக்கர் பரப்பு கொண்ட அந்தக் காணியில் கறுவா பயிரிடப்பட்டிருந்தது. இதை 46 இலட்சம் ரூபாவுக்கு அவர் வாங்கியிருந்தார். வீட்டிலும் இந்தக் காணி விற்பனை பற்றிப் பேசப்பட்டதால் தர்மதாச மட்டுமன்றி குடும்பத்தவர்களும் குறித்த காணி பற்றிய விபரங்களை அறிந்து வைத்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் தர்மதாசவின் மகளின் நண்பியான கோதாவவில் வசிக்கும் பிரபோதா , காணியொன்றைத் தேடிக் கொண்டிருந்தாள். அக்காணியானது பிரபோதாவை திருமணம் முடிக்கவிருக்கும் தற்போது ஜப்பானில் வசிக்கும் இளைஞரொருவருக்காகும். அதற்கிணங்க தர்மதாச முதலாளி தனது எழுதுவினைஞரின் காணி பற்றி மகளின் நண்பியான பிரபோதாவுக்கு தெரியப்படுத்தியிருந்தார். இருதரப்பினரும் தொலைபேசி மூலம் விபரங்களை பகிர்ந்துக் கொண்டனர். ஜப்பானில் இருக்கும் இளைஞனும் ஒரு கோடியே 6 இலட்சம் ரூபாவுக்கு மெனிக் சாந்தவின் காணியை கொள்வனவு செய்ய இறுதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தான். அதன்படி குறித்த இடத்தைப் பார்ப்பதற்காக வேண்டி கடந்த 27 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தினமே மெனிக் சாந்த பாரிய வேலைப்பளு மத்தியிலேயே காணப்பட்டார். காரணம் அரசியலில் ஏற்பட்ட மாற்றமாகும். அந்த சந்தோஷத்தில் இருந்த மெனிக் சாந்த தனது தலைமையின் கீழ் பாற்சோறு தன்சல ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தான். அதன் காரணமாக குறித்த காணியை பார்வையிடச் செல்லும் வேலை வேறொரு நாளைக்கு பிற்போடப்பட்டது.
அடுத்தடுத்த சில நாட்களில் அதிக வேலைப்பளு காரணமாக கடந்த 4 ஆம் திகதி காணியை பார்வையிடச் செல்லலாம் என்று மெனிக் சாந்த குறித்த காணி கொள்வனவு செய்பவர்களுடன் தயாராகினார். அதற்கிணங்க தர்மதாச முதலாளியும் ஜப்பானில் இருக்கும் இளைஞனின் மனைவியான பிரபோதாவும் அவளின் தந்தையும் வருகை தந்திருந்தனர். பயணம்
செய்வதற்காக வேண்டி வாடகை வானொன்றையும் வரவழைத்திருந்ததோடு , சாரதியிடம் ஹக்மன நகருக்கு செல்ல வேண்டும் என்றே கூறியிருந்தனர். தர்மதாச முதலாளி , மெனிக் சாந்த, பிரபோதா மற்றும் அவளின் தந்தை ஆகியோர் வானில் சென்று கொண்டிருக்கும் சமயம் ஐப்பானிலுள்ள பிரபோதாவின் கணவன் அடிக்கடி தொலைபேசியில் வீடியோ அழைப்பை மேற்கொண்டு தகவல்களை கேட்டறிந்து கொண்டதாக பொலிஸ் தகவல்களில் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சந்தர்ப்பம் மட்டும் தாங்கள் இருக்கும் இடம், வானில் செல்பவர்கள் பற்றியும் கூறிக்கொண்டே வந்தாள். இது அந்த இளைஞர் மேல் பிரபோதா வைத்திருக்கும் அன்பில் எனவும் கூறலாம். பிரதான பாதையிலிருந்து 3 1/2 டுட் தூரம் இன்னொரு பாதையூடாக செல்கையில் இந்தக் காணி காணப்படுகிறது. வான் சாரதி தவிர ஏனைய 4 பேரும் காணிக்கருகில் சென்று காணியை பார்த்துவிட்டு கதைத்துக் கொண்டிருந்தனர். பிரபோதா ஜப்பானிலிருக்கும் தனது கணவனுக்கு வீடியோ அழைப்பை மேற்கொண்டு காணியை காண்பித்துக் கொண்டிருந்தாள். குறித்த காணி மலைப்பாங்காக காணப்பட்டதோடு கருங்கல் நிறைந்த இடமாகவும் காணப்பட்டது. சிறிது நேரத்தில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளொன்று அவ்விடத்துக்கு அருகாமையில் வந்ததோடு , யார் இவர்கள் என்று தர்மதாச முதலாளி மெனிக் சாந்தவிடம் கேட்டார். அதற்கு அவர் , போதை மாத்திரை அருந்தும் இளைஞர்கள் அடிக்கடி இவ்விடத்துக்கு வருவார்கள் என எந்தவித சலனமும் இல்லாமல் பதிலளித்தார்.
சில நிமிடங்களே சென்றன. காணியைப் பார்த்துவிட்டு தர்மதாச உள்ளிட்ட வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் நோக்கில் வானை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்தவேளை குறுக்கு வீதி வழியாக வெள்ளைநிற வான் ஒன்று வந்தது மட்டுமே. வானிலிருந்து முகமூடி அணிந்திருந்த சிலர் துப்பாக்கியுடன் முன்னுக்கு வந்தனர். இதற்கு முன் இரண்டு சந்தர்ப்பங்களில் மரணத்தின் பயத்திலிருந்து தப்பிய தர்மதாச திரும்பிப் பார்க்காது காட்டுப் பகுதிக்குள் நுழைந்து ஓடி விட்டார். அவரது பின்னுக்கு சாந்தவும் ஓடியவேளை இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிக் குண்டொன்று
சாந்தாவின் உடலை துளைத்துக்கொண்டு சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவ்வேளை தர்மதாச சிறிய குழியொன்றுக்குள் பதுங்கியிருந்ததைத் துப்பாக்கிதாரர்கள் கவனிக்கவில்லை. அதனால் தர்மதாசவை தேடிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. அத்துடனேயே மெனிக் சாந்தவின் கழுத்தை வெட்டிவிட்டு குற்றவாளிகள் தப்பித்து சென்றுவிட்டனர். இதேவேளை மேற்படி துப்பாக்கிதாரர்கள் பிரபோதாவையும் அவளது தந்தையையும் நோக்கி துப்பாக்கியைக் காட்டினாலும் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ” ஐயோ நாங்கள் அப்பாவிகள் . எங்களுக்கு ஒன்றும் தெரியாது . நாங்கள் காணியைப் பார்க்கவே வந்தோம்” என காலில் விழுந்து கெஞ்சினார்கள்.
வான் மற்றும் மோட்டார் சைக்கிளில் 6 சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் , அதுபற்றிய தகவல்கள் பொலிஸ் நிலையத்துக்கு செல்லும் முன்னரே எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. துப்பாக்கிச் சூடுபட்டதாலும் கழுத்து வெட்டப்பட்டதாலும் கடுங்காயங்களுக்குள்ளான மெனிக் சாந்த மாத்தறை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வேளையில் இவ்வுலகைவிட்டுச் சென்றிருந்தார். கொலைச் சம்பவத்தில் தர்மதாச என நினைத்து மெனிக் சாந்தவை துப்பாக்கிக்காரர்கள் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். என்னவோ தர்மதாச முதலாளியை விட நன்றாக உடுத்திக் கொண்டும் நிறைய ஆபரணங்களை அணிந்துக் கொண்டும் மெனிக் சாந்த இருந்ததால் இவர் தான் அவர் என நினைத்து சுட்டுவிட்டார்களோ தெரியவில்லை எனவும் சொல்லப்படுகின்றது. அது மட்டுமன்றி தர்மதாச முதலாளிக்கு துப்பாக்கிச்சூடு பட்டிருக்காது என்றெண்ணி சந்தேகம் கொண்டதால் என்னவோ கத்தியொன்றை எடுத்துக்கொண்டு அவரது தலையை சரி , உடலை சரி வெட்டி வீசும் நோக்கோடு சந்தேக நபர்கள் வந்திருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குற்றம் மதுஷின் தலைமையின் கீழ் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். காரணம் கொலை இடம்பெற்று 3, 4 மணித்தியாலத்துக்குப் பின்னர் தர்மதாசவின் தொலைபேசிக்கு வந்த அழைப்பொன்றாகும். ஹக்மன பொலிஸ் நிலையத்தில் இருக்கும்போதே அந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்புக்கு பதில் வழங்கியது தர்மதாசவின் மச்சான் உறமுறைக்காரரொருவரே. தன்னை மகாந்துர மதுஷ் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் இந்தத் தடவையும் தப்பித்துக் கொண்டாய்... எல்லோரையும் பழிவாங்குவேன் என மீண்டும் தர்மதாச முதலாளிக்கு மரண பயம் ஏற்படுத்தப்பட்டது.
இதே சந்தர்ப்பத்தில் தர்மதாச முதலாளியைப் போலவே கம்புறுபிட்டிய பிரதேசத்திலுள்ள இன்னுமொரு வியாபாரிக்கு மதுஷின் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதாவது , மதுஷின் தென் மாகாண பிரபல பாதாளக் குழு சகாவான கம்புறுப்பிட்டிய மானெல் ரோஹண என்பவர் கடந்த வாரம் பொலிஸ் விசேட அதிரடிப் படை பிரிவுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடு காரணமாக துப்பாக்கிச் சூடு பட்டு அக்குரஸ்ஸ வில்பிட பிரதேசத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அது தொடர்பாக பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகம் தெரிவித்தே அந்த வியாபாரிக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த வியாபாரியைக் கொலை செய்வதற்காக வேண்டி இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இருவர் சில தினங்களுக்கு முன்னர் முயற்சி செய்த போதும் துப்பாக்கி இயங்காத காரணத்தால் அந்த வியாபாரிக்கு வாழும் அதிர்ஷ்டம் கிட்டியது எனலாம்.
தர்மதாச முதலாளிக்கு அழைப்பை ஏற்படுத்தி மரண அச்சுறுத்தல் விடுத்த அதே தினத்தில் அந்த வியாபாரிக்கும் மதுஷ் என தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளும் வெளிநாட்டிலிருந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அதனால் இந்த இரு வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஒருவருக்கு நால்வர் வீதம் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டுமெனவும் மாத்தறை மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கயங்க ஹசந்த மாரப்பன தீர்மானித்தார். எது எப்படியிருப்பினும் இறுதியாக உயிரை பணயம் வைத்தது அரசியலில் எதிர்காலத்தில் முன்னுக்குச் செல்லக் கூடிய சக்தியைக் கொண்ட பிரதேச சபை மந்திரி ஒருவரேயாவார். எந்தவொரு குற்றத்தையும் புரியாதவர் என்பதால் முழு ஹக்மன பிரதேச மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தனர். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மதுஷால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடலில் முதலாவதாக மாட்டிக் கொண்டது மெனிக் சாந்தவே.
தென் மாகாணத்துக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் ரவி குணவர்தனவின் கட்டளைக்கிணங்க பொலிஸ் மா அதிபரான விஜித குணரத்ன , மாத்தறை வலய பொறுப்பதிகாரி கயங்க ஹசந்த மாரப்பன, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான புத்திக விஜேசுந்தர , துஷார தலுவத்த ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஹக்மன பொலிஸ் நிலைய அதிபர் நளின் வீரவர்தன , மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் ஜே.ஏ.சமன், வலய குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் ஜே. பத்திரத்ன, வலய புலன் விசாரணைப் பிரிவு தலைவர் எச். கே. கமல் ஆகிய அதிகாரிகள் அடங்கிய 5 விசேட பொலிஸ் குழுக்கள் இணைந்து இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக