தெற்கு பாதாளத்தின் அநியாயங்கள் முன்னரை விட தற்போது அதிகரித்தே காணப்படுகின்றன. காரணம் பணம் அளவுக்கதிகமாக இவர்களிடம் விளையாடுவதாகும். ஒரு காலத்தில் கொஸ்கொட சுஜி , மாகந்துர மதுஷ் என்போரிடம் ஹெரோயின் வியாபாரத்தில் இணைந்து பணியாற்றியோர் பலர். அதற்கேற்ப இன்று கையோங்கியிருப்பது தெற்கு பாதாளக்குழுவின் தலைவனாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹிக்கடுவ பொடி லெசியாவான். சிறையிலிருந்து இவன் வழங்கும் ஆணைக்கேற்ப தெற்கு பாதாளத்திலுள்ள பலர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அறியாத வயதிருக்கும் போது தாம் இப்படியொரு பாதாளக் குழுவில் இணைந்து ஒருவரையொருவர் தாக்கியும் காயப்படுத்தியும் முரண்பட்டும் கொள்வோமென நினைத்திருக்க மாட்டார்கள் போலும்.
தெற்கு , கரன்தெனிய , மீட்டியகொட , கொஸ்கொட மற்றும் ஹிக்கடுவ போன்ற பிரதேசங்களிலுள்ள மக்களின் பணங்களை சூறையாடிக்கொண்டே அரசியல்வாதிகளின் பலத்துடன் இவர்கள் இவ்வாறான பாதகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது பாதாள அதிகாரத்தை தன்னகத்தே கொண்டவர்கள் பற்றியும் அவர்கள் மேற்கொள்ள முயற்சி செய்யும் கொலைகள் பற்றியும் நாம் நோக்குவோம்.
பொதுவாகவே பாதாளக் குழுவில் இடம்பெறுகின்ற கொலைகளெல்லாம் பழிக்கு பழி வாங்கும் செயற்பாடுகளாகும். பொடி லெசி பற்றி அவனது சகாக்கள் பின்வருமாறு கூறுகின்றனர். அவனது தந்தையைக் கொன்றவனை பழி தீர்ப்பதே பொடி லெசியின் எண்ணமாக இருந்தது. மற்றபடி நல்ல மனது கொண்டவன். அம்மாவையும் அப்பாவையும் சுட்டதையும் அவனது தந்தை இறந்ததையும் கண் முன்னே கண்டான். பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்கள் தாய், தந்தையைப் பற்றி கேட்டால் அழுவான். ஒருநாள் விளையாடிக்கொண்டிருக்கும் போது , இனியும் பொறுக்க முடியாது. அப்பாவைக் கொன்றவனை தேடிப் பார்த்து கொன்றேயாக வேண்டும் எனத் தெரிவித்தான் . அவனது தாயே முதலில் துப்பாக்கியொன்றை தேடிக்கொள்ள உதவி புரிந்தாள். துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சைக்கிளில் உரிய இடத்துக்குச் சென்றான். கொலை செய்யவேண்டியவன் கடையொன்றில் இருந்தான். கடைக்குள் சென்று ஏதாவது வாங்கும் வகையிலேயே அவனை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டினான். எதையும் கொள்வனவு செய்ய கையில் 10 ரூபா கூட அவனிடம் இருக்கவில்லை. ஒருவாறு 10 ரூபாவை தேடிக்கொண்டான். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்று இல்லாத பொருட்களை கேட்டுக் கொண்டிருந்தான். அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கியை இயக்கிக் கொண்டான். சென்ற இருவரில் நீ சுடு நான் சுடவில்லை. என்று மாறி மாறி கூறிக்கொண்டிருந்ததில் ஒருவாறு யாரே ஒருவர் சுட்டு அவன் இறந்துவிட்டான். கொலைக்குப் பின்னர் இருவரும் கிரிக்கெட் விளையாடச் செல்கின்றனர். இருவருக்கும் சின்ன வயதுதான். விளையாடிக் கொண்டிருக்கும் போது பொலிஸார் வந்து பொல்லுகளால் தாக்கி இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இப்படிப் போனவந்தான்.... கடைசியாக தெற்கு பாதாளக் குழுவின் தலைவனாகி நிற்கிறான். இதுதான் பொடி லெசி பாதாளக் குழுவில் காலடி எடுத்து வைக்க முக்கியமான காரணமாக அமைந்தது எனலாம்.
அன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹெரோயின் வியாபாரம் தொடர்பாக மீட்டியகொட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வருஷ விதானவுக்கு நெருங்கிய மற்றும் நம்பிக்கை பேணக்கூடிய தகவல் பிரிவிவொன்று மூலம் தகவல் கிடைக்கப்பெறுகின்றது. விரைந்து செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் வருஷ , தலைமையதிகாரி மஞ்சுள துசாரவுடன் தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்ததுடன் , பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மைக்ரோ ரக தராசில் ஹெரோயினைப் பிரித்து சிறு பொதிகளாக்கி கொண்டிருந்த போது இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் , 6 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இல.18 மஹவெல மீட்டியாகொடையைச் சேர்ந்த தேமுனி விஜித் ஆனந்த சொய்சா (36 வயது) மற்றும் அம்பலன்கொட மாதம்பாகமவைச் சேர்ந்த அகம்பொடி சஜித் சமன் பிரியந்த (20 வயது) ஆகிய இருவராவர் . இவர்களிருவரும் ஆனந்த வீட்டில் வைத்தே கைது செய்யப்படுகின்றனர். முதலாவது சந்தேக நபரின் உடைமையில் காணப்பட்ட 3200 மில்லிகிராம் ஹெரோயினையும் இரண்டாவது சந்தேக நபரின் உடைமையில் காணப்பட்ட 3100 மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையது மட்டுமன்றி பாதாளக்குழு உறுப்பினர்களாகவும் காணப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி இவர்களை கைது செய்யும் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த விசேட நபர் ஒருவரால் பொலிஸாரின் விசாரணை மேலும் தீவிரமாகியிருந்தது.
சந்தேக நபர்கள் இருவரும் தெற்கு பாதாளக் குழுத் தலைவன் கொஸ்கொட சுஜியின் நம்பிக்கைக்குரியவனான பொடி லெசியின் சகாக்களாவார்கள். இவர்களை கைது செய்த சதந்தர்ப்பத்தில் அங்கிருந்த விசேட நபர் காலி சிறைச்சாலையிலுள்ள ஜெய்லர் ஒருவராவார். இவர் எந்த காரணத்துக்காக அங்கிருந்தார் என பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணையில் தான் கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காகவே வந்திருந்ததாக ஜெய்லர் தெரிவித்திருந்தார்.
பொலிஸாரின் தேடுதலில் அவ்வீட்டுக்கு அருகாமையில் எந்த கோழி இறைச்சி கடையும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அம்பலன்கொட , இடன்தொட்டவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் , தான் வசிக்கும் இடத்திலிருந்து 15 ஓட் தூரத்திலுள்ள இவ்வீட்டுக்கு வந்தமை மற்றும் ஹெரோயின் விற்பனையாளரின் வீட்டுக்கு அருகாமையில் நின்றிருந்தமை என்பன பொலிஸாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தின இந்த ஜெயிலர் 2011 ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையிலேயே கடமை புரிந்தார். அந்தவேளை ஆனந்த சொய்சா வேறு ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு களுத்துறை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தான். அங்கு சுகயீனமுற்ற ஆனந்தவை வைத்தியசாலையில் சேர்த்தமை , பார்க்க வரும் உறவினர்களை பார்வையிட உதவி செய்தமை மற்றும் இதர பல உதவிகளை இந்த ஜெய்லரே மேற்கொண்டிருந்தார். இதனால் ஏற்பட்ட இணைவினால் இங்கு வந்திருக்கலாமோ என பொலிஸார் சந்தேகம் கொண்டனர். இந்த விசாரணைகள் அடங்கிய அறிக்கையொன்றை சிறைச்சாலை அதிகாரி ஜெனரல் நிஷான் தனசிங்கவிடம் ஒப்படைக்க கடந்த 22 ஆம் திகதி பொலிஸார் தீர்மானித்திருந்தனர். மேலும் காலி சிறைச்சாலை அதிகாரியின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் மீட்டியகொட பொலிஸார் முன்வந்திருந்தனர். அந்த வேளையில் அவரிடம் பேதைப்பொருள் ஏதும் இருக்கின்றதா என பொலிஸார் சோதனை செய்த போதும் அவ்வாறான எதுவும் அவரிடம் காணப்படவில்லை. அதனால் விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் தேவைப்படும் பட்சத்தில் அவரை கைது செய்யவும் பொலிஸார் தீர்மானித்திருந்தனர். எது எவ்வாறாயினும் 2014 ஆம் ஆண்டிலிருந்து 22.09.22 ஆம் திகதி வரை............... சிறையில் பிரதான ஜெயிலராக இவரே கடமையாற்றியுள்ளார். இந்தக் காலப்பகுதியில் சிறைச்சாலைக்குள் தொலைபேசி பாவனை, போதைப்பொருள் மற்றும் வேறு எந்த சட்டவிரோத செயலுக்கும் இடம்கொடுக்காமல் நேர்மையாக சேவை செய்த ஒரு அதிகாரி என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தான் , பலவிட்டிய பிரதேச தேவாலயமொன்றில் நடைபெற ஏற்பாடாகியிருந்த விழாவொன்றுக்காக உணவுக்குத் தேவையான கோழியிறைச்சியை கொள்வனவு செய்யவே மீட்டியாகொட மற்றும் வேரகொட பிரதேசங்களுக்குச் சென்றதாக ஜெயிலர் பொலிஸாருக்கு கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில்;
முதலாவதாக சென்ற இடத்தில் காணப்பட்ட கோழியிறைச்சி கடை மூடப்பட்டுவிட்டதாகவும் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேரகொடயில் காணப்பட்ட கோழியிறைச்சிக் கடைக்கு செல்ல ஆயத்தமான சந்தர்ப்பத்திலேயே இரு பொலிஸார் வந்து ”இங்கு என்ன செய்கிறீர்கள் ? எனக் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். ஊடகங்கள் தன்னைப்பற்றி அவதூறாகக் கூறியதன் மூலம் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் தான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஒரு கிராமுக்கு அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருப்பது பாரிய குற்றச்செயலாகும். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் ஏவிவிட்டவர்கள். தற்போது வரை காலி சிறைச்சாலையிலேயே இருக்கின்றனர். அதனால் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மாத்தறை நிலேகா ஜூவல்லரியை கொள்ளையிட்ட குற்றத்துக்காக வேண்டி கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரகவும் அவனது சகோதரனான மதுக நிர்மால் பெரேரா விஜேசேகர ஆகிய இருவரும் அங்குணுகொலபெகலஸ்ஸ சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். பொடி லெசியும் ஜயலத்தும் கொஸ்கொட சஜியின் குழுவை இலக்கு வைக்க கொஸ்கொட தாரகவே மாகந்துர மதுஷ் குழுவை இலக்கு வைத்தான். இதன் காரணமாகவே சிறைச்சாலைக்குள் ஏதும் பிரச்சினைகள் ஏற்படும் என்ற பயத்தில் இவர்களை வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர்.
ஹிக்கடுவவில் வசித்துவந்த வசந்த , தனுஜா என்பவரை மணம் முடித்தான். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் . இருவரையும் செல்லமாக லெசி , பொடி லெசி என்று அழைத்தனர். வளர்ந்த பின் இவர்களே லொக்கு லெசி , பொடி லெசி என்று அழைக்கப்பட்டனர். இப்பிரதேசத்தை ஆக்கிரமிப்பில் வைத்திருந்த வசந்த (40 வயது) 2018.10.09 ஆம் திகதி கொலை செய்யப்பட்டான். வசந்த தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இருவருக்கும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் தனுஜாவின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச் சூடுபட்டு இரத்தம் தோய்ந்து விழுந்தாள். இந்தச் சம்பவத்தை மேற்கொண்டதாக மனோஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. பொடி லெசிக்கும் மனோஜுக்கும் இந்தக் கொலையுடனேயே போர் ஆரம்பமாகிறது.
ஒரே குடும்பத்தில் தாய் , தந்தை , மகன் என மூவரின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக பொடி லெசி கைது செய்யப்பட்டு காலி சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளான். இந்த கொலைகள் ஈஸிகேஷ் மூலம் ஹெரோயின் வியாபாரம் இடம்பெற்றமையின் இழுபறியே என பொலிஸார் சந்தேகம் கொள்கின்றனர். அம்பலன்கொட இடன்தொட்ட திரிபுல்கல கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கலுதேவ உதார சம்பத் , லக்ஷ்மன் ஹேனே கெதரகே , பென்தர மல்ல வாராச்சி , ரோஹண மஞ்சுள , தேமுனி விஜித் , ஆனந்த சொய்சா , மாரம்பகே மதுசங்க , தேமுனி சிந்தக மதுரங்க , செந்தர ஹந்தி சரத் டி சில்வா , இமேஷ் பிரியங்கர , மித்ர பால டி சொய்சா ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்கள் நேரடித் தாக்குதலொன்றை மேற்கொண்டவர்களென பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தேமுனி விஜித் ஆனந்த சொய்சா 5 ஆவது சந்தேக நபராவார். அவரின் உடைமையில் காணப்பட்ட 9 ட்ட் ரக ரவைக் குண்டுகள் இடக்கூடிய நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் 9 ட்ட் ரவைக் குண்டுகள் ஐந்தும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் கரன்தெனியவிலுள்ள டாக்டர் பிரியங்க பிரசாத் ஜயமசிங்கவை 2011 .09.25 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபராகக் காணப்படுகின்றான். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐயலத் டி சில்வாவாகும். 2016.01.09 ஆம் திகதி அம்பலாங்கொடையிலிருந்து கலகொட வரை செல்லும் பாதையில் கெலேபெத பிரதேசத்தில் இடன்தொட்ட யுனர் லைட் ஹோட்டலின் பின்பக்க வீதியில் வைத்து கிரிந்த கமகே சுசந்த மென்டிஸ் (24 வயது) அல்லது ’சுசா’ என அழைக்கப்பட்டவரின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறி ஜயலத் டி சில்வாவும் அவனது சகோதரனுமான சனத் டி சில்வா (33 வயது) அல்லது ராஜூ என அழைக்கப்படுபவன் மற்றும் வசந்த சொய்சா , அகம்பொடி சஜித் சமன் பிரியந்த ஆகிய நால்வரை பொலிஸார் கைது செய்திருந்தனர். இவர்களுள் சமன் கடந்த 19 அம் திகதி ஹெரோயினுடள் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபராவான் . வைத்தியர் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட சகோததர்களுடன் சிந்தக்க ருவன் ஜயசேன மற்றும் இராணுவ கப்ராலான சந்தன விக்கிரமசிங்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். குறித்த இரு சகோதரர்களும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களாவர்.
அம்பலன்கொட மீட்டியாகொட சந்தியில் 2016.12.12. ஆம் திகதி மரக்கறி , பழ வியாபாரியான மஹவத்தல, மீட்டியாகொடவில் வதியும் ஹிக்கடுவ பல்லியகுருகே விபுல் பிரியந்த (45 வயது) என்பவரை கொலை செய்ததன் பின்னணியில் இந்த இரு பாதாளக் குழுக்களின் முரண்பாடுகளே காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2017. 05.06 ஆம் திகதி பொடி லெசியின் குழுவினரால் இமதுவ , திக்கும்புர சந்தியில் வைத்து கொலை செய்யப்பட்ட தேமுனி சுதத் பிரியந்த , மனோஜ் மென்டிஸின் குழுவின் ஒருவனாவான் . தேமுனியின் ஒரு கையில் மனோஜ் மென்டிஸின் உருவப்படம் பச்சை குத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பொடி லெசியின் குழுவினரால் 2018. 09 .23 திகதி ஹிக்கடுவ தபால் நிலையத்துக்கருகில் நல்லாஹந்தி ஜனித் நிஷாந்த என்பவர் கொலை செய்யப்பட்டார். இவர் பாதையை மாற முற்பட்ட சந்தர்ப்பத்தில் மேட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்டவரின் சகோதரனால் 2015.03.23 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட ஹிக்கடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மென்டிஸின் நெருங்கிய நண்பரொருவர் என ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். இக்குற்றவாளி இதுவரை பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி வாழ்ந்து வருவதாகவும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் ஹிக்கடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பாதாளக் குழுவினருக்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளும் சிறைச்சாலைக்குள்ளே கிடைக்கப்பெறுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சிறையில் வைக்கப்பட்டுள்ள அநேக பாதாளக்குழுத் தலைவர்கள் இன்றுவரை நிறைய கொலைச் சதித் திட்டங்களை சிறையில் இருந்துகொண்டே தொலைபேசியூடாகவே தீட்டுகின்றனர். இதற்காக வேண்டி தேவையானளவு தொலைபேசிகள் சிறைச்சாலைகளுக்குள் காணப்படுகின்றன. சிறைச்சாலைக்குள் சாதாரண தொலைபேசிகள் 50,000 -75,000 வரையிலும் ஸ்மார்ட் தொலைபேசிகள் 100,000 -200,000 ரூபா வரையிலும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவைகள் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்படும் பிரதான மார்க்கமாக சிறைச்சாலை அதிகாரிகள் காணப்படுவதோடு இதற்கான பணத்தை ஈஷிகேஷ் மூலமே செலுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. இன்றுவரை சாதாரண குற்றமொன்றுக்காக சிறையிலடைக்கப்பட்ட இளைஞர்கள் பாதாளக் குழுத் தலைவர்கள் மூலமாகவே பிணையில் வெளிவருகின்றனர். இவ்வாறு வெளியேவருபவர்கள் பின்னர் பாதாளக் குழுவின் விருப்பத்தின் பேரிலோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்தால் எதிர்காலத்தை தீர்மானிப்பது பாதாளக் குழுவினரே என்பதை மறுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக