கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 ஜனவரி, 2019

போலிக் கம்பனியால் பணமிழந்த மக்கள்


அசங்க பிரேமச்சந்திர  , தொடன்கொட பிலிமினாவத்த  பிரதேசத்தை  வசிப்பிடமாகக் கொண்ட இளைஞனாவான்  .  அப்பிரதேச  பாடசாலையிலேயே  கல்வி கற்ற அவனுக்கு க.பொ.  சாதாரணதரப் பரீட்சையில்  சித்தியெய்த முடியாமல்  போய்விட்டது.  சரியாக  படிக்காத  காரணத்தால்  நல்ல  வேலையொன்றை  அவனால்  தேடிக்கொள்ள முடியாமல் போயிற்று.  அதனால் தச்சு வேலை செய்பவர்  ஒருவரிடம்  உதவியாளராக  சேர்ந்து  கொண்டான் அத்தொழிலை பல  வருடமாக  செய்து  வந்தான். அந்தப்  பழக்கம்  காரணமாக  தச்சனாக  புலமை பெற்றுக்கொண்டான்.  அசங்க. தச்சுத் தொழிலை  செய்தாலும்   அத்தொழிலில்  அவனுக்கு அவ்வளவாக ஈடுபாடு  இருக்கவில்லை. செய்ய வேறு ஒரு தொழிலும்  இல்லாத காரணத்தாலேயே மேற்கொண்டு அத்தொழிலை  செய்து வந்தான்.

இந்தக்  காலக்கட்டத்தில்  தனக்குத் தெரிந்த  யுவதியை அசங்க திருமணம்  செய்து கொண்டான் . அதன் மூலம்  இரு பிள்ளைகளுக்கு தந்தையானான்  .   அசங்க  தினந்தோறும்  இந்த  தச்சுத் தொழிலிலிருந்த எப்படியாவது விடுதலை  பெற வேண்டும்  என்றெ  நினைப்பான்.  அந்தளவுக்கு அந்தத் தொழில்  அவனுக்கு வெறுத்துப் போய் இருந்தது.  இறுதியில்  இது  தொடர்பில் தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு தச்சுத் தொழிலில் ஈடுபடுவதிலிருந்து ஓய்வு  பெற்றுக்கொண்டான்.  அதற்குப் பின்னர்  சீட்டு விளையாடும் இடங்களுக்குச்  சென்று வட்டிக்கு பணம் கொடுப்பதை  தொழிலாக  மேற்கொண்டு  வந்தான். முதலில்  சிறிய தொகையில் ஆரம்பித்தான்.  சில  மாதங்கள்  சென்ற பின்னர்  வெற்றிகரமாக அத்தொழிலை  முன்னெடுத்துச் சென்றான்.  இவ்வாறு சில  காலம்  சென்ற போது  கிராமத்தில்  வட்டிக்கு பணம்  கொடுக்கும்  அளவுக்கு பிரசித்தமானான் அசங்க .


தனது  நண்பனொருவன் மூலம்  பிரபல  அமைச்சரொருவரின்  தொடர்பு  அசங்கவுக்கு கிடைத்தது. இந்தச் சந்திப்பின்  மூலம் 2010 ஆம் ஆண்டிலிருந்து  5  வருடங்களுக்கு  அசங்க அந்த  அமைச்சரின்  உதவியாளனாக சேவை புரிந்தான்.  இவ்வாறு சேவை  செய்து  கொண்டிருக்கும்
சந்தர்ப்பத்தில் அசங்கவுக்கு வியாபாரிகள் உள்ளிட்ட சமூகத்தில் முக்கியமான  பல பெரும்புள்ளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு  கிட்டியது.
குறித்த  அமைச்சரின்  கீழ் அசங்க சேவை  செய்தாலும்  சீட்டு விளையாடும்  இடங்களுக்குச் சென்று  வட்டிக்கு பணம்  கொடுக்கும்  வேலையையும்  செய்து  வந்தமை குறிப்பிடத்தக்கது.  அந்த நேரத்தில்  அவனது  கையில்   அதிக பணம் புழங்கி கொண்டிருந்தது. ” எந்த நாளும்  இப்படி  செய்து  கொண்டிருந்தால் சரிவராது  . சாதாரணமாக   சமூகத்தில்  தனியாக தெரியக்கூடியவாறு   நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்”  என  அசங்க  அடிக்கடி யோசனை செய்வான்.  அதற்கேற்ப  தலைமைக் காரியாலயமொன்றை அமைக்கும்  தேவை சிலகாலமாகவே  இவனது மனதில்  ஓடிக் கொண்டிருந்தது.  அதற்குத் தேவையான  வேலைகளை இவன் படிப்படியாக  மேற்கொண்டு  வந்தான்.  அதற்கிணங்க 2015 ஆம் ஆண்டு  இவனது  இலக்கு சாத்தியமானது . ” சென்ஹிரு லேன்ட் என்ட்  கிரடிட் ” என்ற  பெயரில் தலைமைக் காரியாலயமொன்றை அசங்க தொடங்கினான்.  ஆயிரம்  கனவுகளை  மனதில்  சுமந்த  வண்ணமே  இக்காரியாலயத்தை  இவன் ஆரம்பித்தான்.  இந்தக் காரியாலயத்தை  மத்துகம  ,  தொடன்கொட  நகரத்தில்  மனித நடமாட்டமுள்ள  இடத்தில்  நிறுவினான். அந்தக் காரியாலயத்தின்  முகாமையாளராக அசங்கவே  செயற்பட்டான்.  இதற்கு மேலதிகமாக  இரு ஆலோசகர்கள் செயற்பட்டனர். அவர்கள் கெலும்  தர்ஷன  மற்றும்  சுரங்க ஹதெல்ல ஆராச்சி  ஆவார்கள்  . இவர்களுள்  சுரங்க   பிரசித்தி பெற்ற ஒருவராவார். இவர்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை  மாவட்ட  உறுப்பினரொருவராவார். இவ்வாறு பிரசித்தமான  ஒருவரை அசங்க  தனது  காரியாலயத்தில்  வைத்திருந்தது  மக்களின்  நம்பிக்கையை மேலும்  அதிகப்படுத்துவதற்காகும்.

இந்தக் காரியாலயம்  ஆரம்பிக்கப்பட்டு  சில  மாதங்கள் கடந்துவிட்டன.  களுத்துறை , மத்துகம  மற்றும்  அளுத்கம  பிரதேசங்களிலுள்ள  பெருமளவான வாடிக்கையாளர்கள் இந்தக் காரியாலயத்தில்  அங்கம்  வகித்தமை குறிப்பிடத்தக்கது. பணம்  வைப்பிலிடுவதற்கு ஏனைய அரச  , தனியார்  வங்கிகளுக்கும் பார்க்க  அதிக  வட்டித் தொகையை இந்த  தலைமைக் காரியாலயம் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது இதனால்  நாலா திசைகளிலும் உள்ள மக்கள்   இந்தக் காரியாலயத்தில் பணத்தை வைப்பிலிட்டனர் .

களுத்துறை மாவட்டத்தில்  கறுப்புப் பணம் வைத்திருந்த  அநேகமானோர்  கோடிக்கணக்கில் இந்த தலைமைக் காரியாலயத்தில்   பணத்தை வைப்பிலிட்டனர்.  இவர்களுள்  வியபாரிகள்  , அரசியல்வாதிகள்  , பாதாளக்  குழு உறுப்பினர்களும்  அடங்குவர்  . பணம் சேமிப்பு மட்டுமன்றி கடன்  கொடுப்பதிலும்  இந்தக் காரியாலயத்தின் நடவடிக்கைகள்  அமோகமாக இடம்பெற்றன.

ஒரு சில  வாடிக்கையாளர்களுக்கு பிணையாளி  வைத்தும் இன்றும்  சிலருக்கு  பிணையாளி இல்லாமலும்  அசங்க  கடன்களை பெற்றுக்கொடுத்தான்.  அவ்வாறே இந்தக் கடன்  தொகைக்காக அரச  மற்றும்  தனியார் வங்கிகளிலும்  பார்க்க  அதிக  வட்டியும்  பெறப்பட்டது. வட்டித் தொகை  அதிகமாயினும்  கடன் தொகையை எந்தவித தொந்தரவுமின்றி  பெற்றுக்கொள்ளலாம் என்பதால்  பெருமளவான  வாடிக்கையாளர்கள்  அந்த  நிறுவனத்தில் கொடுக்கல்  வாங்கல்  செயற்பாடுகளில்  ஈடுபட்டனர். இப்படியே சில காலம்  சென்றது.  எதிர்பார்த்ததிலும்  அதிக தொகை  நிறுவனத்தில்  வைப்பிலிடப்பட்டிருந்தது. அதன்  காரணமாக  கம்பனியின் முகாமையாளரும்  சொந்தகாரருமான அசங்க  இதுபோன்ற மேலும் நான்கு நிறுவனங்களை  ஆரம்பித்தான். அந்த நேரத்தில்  இவனுக்குக் கீழ்  54 பணியாளர்கள் சேவையாற்றினர்.

பணத்தொகை அதிகமதிகமமாக  அசங்கவும்  மாறத் தொடங்கினான். அவனுக்கு தேவைப்பட்டதெல்லாம்  , சமூகத்துக்கு தான் ஒரு கோடீஸ்வரர் என்று காட்டிக்கொள்வது  மட்டுமேயாகும். அதனால் பணத்தை தாராளமாக  அள்ளி  வழங்கினான்.     நவீனரக  வாகனங்களை  கொள்வனவு  செய்தான். கொழும்பில் ஆடம்பர வீடொன்றை  வாங்கினான். விலையுயர்ந்த  ஆடைகளை  அணிந்தது மட்டுமல்லாமல்  விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களையும் பாவிக்கத் தொடங்கினான்.  இவை  எல்லாவற்றையும்  தலைமைக் காரியாலய  பணத்தின் மூலமே  நிறைவேற்றிக் கொண்டான்.

சச்சினி , பயாகல  பிரதேசத்தில்  வசித்துவருதம்  யுவதியாவார் .  23 வயதேயுடைய அவள்  தந்திரமான கள்ளத்தனமுடைய பெண்ணாவாள்  . அவள்  அசங்கவின் கம்பனியிலேயே சேவைபுரிந்தாள். வேலைக்கு வந்த  சிறிது  காலத்திலேயே   கம்பனி உரிமையாளரான  அசங்கவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினாள் .  அவள் அசங்கவை  விட  20 வயது  குறைந்தவள்  . எனினும் பணத்துக்கு முன்னால் வயது  ஒரு தடையாக  அவளுக்கு தென்படவில்லை. அசங்கவும்  அந்தப் பெண் மீது அதீத காதல் கொண்டான். அதுவரை அசங்கவின் சட்டபூர்வ  மனைவி  தனது இரு பிள்ளைகளுடன் நுகேகொட  பிரதேசத்தில்  வசித்து வந்தாள்.  அதனால்  எந்தவித இடையூறுமின்றி அந்தப் பெண்ணுடன்  அசங்க  கள்ளத்தொடர்பை  ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தான். இவ்வாறு காலம்  நகர்ந்து கொண்டிருக்கையில் ,  கம்பனியின்  சில தீர்மானங்கள்  இவளைக் கேட்டே  முடிவெடுக்கப்பட்டன.  கள்ளத் தொடர்பு  அந்தளவுக்கு பலமானதாக இருந்தது என்றே கூற வேண்டும்.  அதேபோல்  அந்தப்  பெண்ணுக்கு கை  நிறைய செலவு  செய்தான்.  அசங்கவின்  பணம் பெருமளவு  செலவிடப்பட்டு விட்டது.  அசங்கவின்  கள்ளக் காதலியும்  தனக்குத்  தேவையான  பணத்தை  கம்பனியிடமிருந்தே பெற்றுக்கொண்டாள்.  இதனால்  கம்பனியும்  மூடிவிடும்  நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது.  கம்பனியின் தலைமைச் செயலாளராக செயற்பட்டவர்  தனியார்  வங்கியொன்றின்  அதிகாரியொருவராவார். அவரும் எத்தனையோ  தடவை  அசங்க  உள்ளிட்ட  செயற்பாட்டுக் குழுவிடம்  தேவையில்லாமல்  செலவு  செய்ய வேண்டாம்  என தெரிவித்திருந்தார்.  இவ்வாறு வீண்விரயம்  செய்து கொண்டிருந்தால்  நீண்டகாலத்துக்கு  கம்பனியை  நடத்திச் செல்ல முடியாமல்  போய்விடும்  என  உரிய  தகவல்களுடன் நிரூபித்துக் காட்டினார்.  எனினும்  அசங்க  உள்ளிட்ட  குழுவினர்  சதத்துக்கேனும்  அவரது  பேச்சை  கேட்கவில்லை.  பழக்கத்தின் னடியே  கை  நிறைய செலவு  செய்தான்.  இவ்வாறு போய்கொண்டிருந்தால் குறித்த  கம்பனி பாரிய  நஷ்டத்துக்கு உள்ளாகிவிடுமென்பதை தலைமை  அதிகாரி  புரிந்து கொண்டார்.  இது தொடர்பில்  இறுதி முடிவை  அசங்க  உள்ளிட்ட செயற்பாட்டுக் குழுவிடம்  அவர்  தெரிவித்தார்.  இருப்பினும்  அவர்கள் அது  தொடர்பில்  கண்டுகொள்ளவில்லை.  ஆதலால்  தலைமைச் செயலாளர்  உத்தியோகபூர்மாக  தனது பதவியிலிருந்து ராஜினமா செய்து கொண்டார். தலைமைச்  செயலாளர்  விலகியது  பற்றி அசங்கவுக்கு துளியும் கவலையில்லை. களுத்துறை  மற்றும்  மத்துகம  ஆகிய தனியார் வங்கிகள் பலவற்றின் முகாமையாளர்களுடன் அசங்க  நெருங்கிய  தொடர்பை  ஏற்படுத்திக் கொண்டான்.  அதன் மூலம் சலுகைகளை  அசங்க  பெற்றுக்  கொண்டான்.  சில  வங்கிகளின் முகாமையாளர்கள்  தங்கள் வாடிக்கையாளர்களை  சென்ஹிரு  தலைமைக் காரியாலயத்துக்கு கொடுக்கல் - வாங்கல்களை  மேற்கொள்ள  திசைதிருப்பிவிட்டிருந்தனர்.  களுத்துறை  மாவட்ட  தனியார்  வங்கியொன்றின் முகாமையாளர்  ஒருவர்  தமது  வாங்கியின்  வாடிக்கையாளர்கள்  சிலரின்  கணக்குகளை  வங்கியிலிருந்து நீக்கிவிட்டு  சென்ஹிரு தலைமைக் காரியாலயத்துக்குச் சென்று பணத்தை  சேமிப்பிலிடுமாறு உத்தரவு பிறப்பித்தார்.  அதற்கிணங்க  கோடிக்கணக்கான  ரூபாவை  வைப்பிலிட்டிருந்த பல  வாடிக்கையாளர்கள் உரிய வட்டி காரணமாக சென்ஹரு  கம்பனியில்  வைப்பிலிட்டனர். இவ்வாறு குறிப்பிட்ட சில  வங்கி முகாமையாளர்கள் அசங்கவுக்கு ஒத்துழைப்பு  வழங்கியது அவனிடமிருந்து  கிடைக்கப்பெற்ற பணத்தினாலேயாகும்.  மேலும் அசங்கவின் பல கணக்குகள் அவ்வங்கிகளில் காணப்பட்டன. அதனால்  ஏனைய  வாடிக்கையாளர்களுக்கு வாங்காத  பல  சலுகைகளை  அவ்வங்கி  முகாமையாளர்கள்  அசங்கவுக்கு  பெற்றுக்கொடுத்தனர். இதன் போது  எந்தப்  பொறுப்புமின்றி  அந்த வங்கிகளின் கொடுக்கல்  - வாங்கல்களில்  அசங்க  செயற்பட்டான்.  நாட்கள் செல்லச் செல்ல அசங்க  நஷ்டத்துக்காளாக்கினான்.  இருப்பினும்  யாரிடமும்  அவன்  இது  தொடர்பில்  காட்டிக்கொள்ளவில்லை.  அதுபற்றி  கவலைப்படவுமில்லை.  அங்க  தனது  தலைமைக் காரியாலயம்  ஊடாக இன்னுமொரு வியாபாரத்தை தொடங்கினான்.    வாடிக்கையாளர்களுக்கு வாகனம் பெற்றுக்கொடுப்பதே  அத்  தொழிலாகும்.  அசங்கவும் அவனது நண்பர்களும்  அதை  இவ்வாறே  செய்தனர்.

அவர்கள்  தங்களது வாடிக்கையாளர்கள்  மற்றும்  நெருங்கியவர்களுக்கு சந்தைப்  பெறுமதியை விட  குறைந்த  விலைக்கு வாகனங்களை  பெற்றுக்கொடுப்பதாகவே  தெரிவித்தனர்.  உதாரணத்துக்கு 30 இலட்சம் ரூபா  பெறுமதியுடைய காரொன்று 20 இலட்சம் ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்படும். அது  இவ்வாறே  நடைபெறுகிறது.  முதலாவது  படிமுறையாக  வாடிக்கையாளரொருவர்  30 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த  வாகனமொன்றுக்கு 20 இலட்சம்  ரூபாவை  கொடுக்க வேண்டும். அதன் பின்னர்  வாடிக்கையாளரிடம் வாகனம்  தரப்படும்  . ஆனால் வாகனப் புத்தகம் 5 வருடங்களுக்குப் பிறகே  வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்  அதுதான்  அவர்களின்  சட்டம்.  இதற்கு ஏமாந்துபோன வாடிக்கையாளர்கள் சென்ஹிரு கம்பனியிடமிருந்து  வாகனங்களை  பெற்றுக்கொள்கின்றனர்.  அசங்க குறைந்த விலைக்கு வாகனங்களை  பெற்றுக்கொடுக்கும்  முறை  இதுவாகும்.  அதாவது  , அவன்  வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணத்தில்  ஒரு  தொகையை செலுத்திவிட்டு மிகுதித் தொகையை  தவணை அடிப்படையில்  செலுத்த  ,  சென்ஹிரு  கம்பனியின் பெயரில்  வாகனத்தை  கொள்வனவு  செய்கின்றனர். பின்னர்  மிகுதித்  தொகையை ஏனைய  தேவைகளுக்கு   பயன்படுத்தினான். இதற்கிடையில்  தவணைப்  பணத்தையும்  செலுத்திக் கொள்வான் . அவன்  அவ்வாறு செய்வது  சென்ஹிரு  தலைமைக் காரியாலயம்  முகம் கொடுத்திருக்கும் பொருளாதாரப்   பிரச்சினையை வெளியில்  தெரியாதபடி  பாதுகாத்துக் கொள்ளவதற்கேயாகும்.  இந்த வியாபாராத்துக்கு  தனியார்  குத்தகைக் கம்பனிகளின் சில  முகாமையாளர்களும்  அசங்கவுக்கு உதவி புரிந்தனர்.  இவையெல்லாம் பணத்துக்காகவே  இடம்பெற்றன.  இதன்படி  50 க்கும் மேற்பட்ட  வாகனங்களை  வாடிக்கையாளர்களுள் கொள்வனவு  செய்திருந்தனர்.  இந்த  வியாபாரத்துக்கு   மேலதிகமாக  காணி  விற்பனையையும்  இந்த கம்பனி மேற்கொண்டு  வந்தது.  அது  பாரிய மோசடியாகும்.  சில  காணிகள்  , வாடிக்கையாளர்களுக்கு போலி  உறுதிப்பத்திரம் தயாரித்து விற்கப்பட்டுள்ளன.  எனினும்  கம்பனியை சரிவிலிருந்து  மீட்டுக்கொள்ள முடியாமல்  போனது  . எந்தவொரு தினத்திலும் இது தொடர்பில்  வாடிக்கையாளர்களுக்கு அசங்க தெரியப்படுத்தியிருக்கவில்லை. இருப்பினும்  சிலரின் காதுகளுக்கு இச்செய்தி எட்டத் தொடங்கியது. சிலர்  தங்களது  பணத்தை  மீளப் பெற்றுக்கொண்டனர்.  அதுவரையிலும்  அக்கம்பனி  100 கோடிக்கும்  அதிகமான  தொகையை இழந்திருந்தது.  நிலைமை வர வர  மேலும் மோசமாகிச்  செல்வதை அசங்க  உணர்ந்து கொண்டான்.  கம்பனியை மீண்டும்  உயர்  நிலைக்கு ஒருநாளும்  கொண்டுவர முடியாதென்பதையும்  உணர்ந்து கொண்டான். அதனால்  தனது குடும்பத்துக்காக  வேண்டி ஒரு தொகை  பணத்தை  ஒதுக்கிக் கொண்டான்.  அதற்கு மேலதிகமாக  தனது கள்ளக் காதலிக்கு 3 கோடி  ரூபாவைக் கொடுத்து அவளை வெளிநாட்டுக்கு  அனுப்பி வைத்தான்.  சென்ஹிரு கம்பனி அடியோடு  இல்லாமல்  போனது . வாடிக்கையாளர்களின் வைப்பிலிட்ட பணம் மற்றும் அதற்குரித்தான  வட்டித் தொகையைக் கூட கொடுப்பதற்கு முடியாத ஒரு சூழ்நிலை  ஏற்பட்டுவிட்டது இதன்போது குத்தகை அடிப்படையில்  கொள்வனவு  öய்யப்பட்ட  வாகனங்களுக்கு தவணைப் பணம் செலுத்தாத நிலையில்  அவ்வாகனங்களை  மீண்டும்  ஒப்படைக்கக்கூடிய  நிலைமை  ஏற்பட்டு விட்டது.

என்றோ  ஒருநாள்  இப்படியொரு நிலைமை தனக்கு ஏற்படுமென  அசங்க  ஏற்கனவே  அறிந்து வைத்திருந்தான்.  அதனால்  எதற்கும் முகங்கொடுக்க அவன் தயாராகியே இருந்தான். இறுதி சில  நாட்களில்  வங்கிக் கணக்கிலிருந்த  சகல  பணத்தையும்  அசங்க  மீளப்  பெற்றுக்கொண்டான்.  மேலும்  காணிகளையும் திருட்டுத்தனமாக  விற்று பணத்தை  பெற்றுக்கொண்டான்.  இறுதியாக  அனைத்து வாடிக்கையாளர்களையும்  நடுத்தெருவில்  நிறுத்திவிட்டு அசங்க  அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டான். அசங்க செனஹிரு  லேன்ட் என்ட்  கிரடிட் நிறுவனத்தின்   முகாமையாளர்  அசங்க  பிரேமச்சந்திர  பணத்தையெல்லாம்  எடுத்துக்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்ற  செய்தி தீ போல வாடிக்கையாளர்களிடம்  சென்று சேர்ந்தது. ஐயோ  எங்களுக்கு நடந்ததைப் பாருங்கள்  எனக் கூறிக்கொண்டு கம்பனியை வாடிக்கையாளர்கள் சுற்றிவளைத்தனர். இருப்பினும்  எந்தப்  பயனும்  இல்லை. அதுவரையிலும்  அவன்  தப்பிச்  சென்றிருந்தான்.  கடுங்கோபத்துக்காளான  சிலர்  கம்பனியின் கதவு  ஐன்னல்களை  கழற்றி கொண்டு சென்றனர்.  சிலர் அங்கு நின்றிருந்த வாகனங்களை  எடுத்துச்  சென்றனர். இன்னு  சிலர் கம்பனியின் ஆலோசகராக  செயற்பட்ட கெலுமின்  வீட்டை உடைத்து பாரிய நட்டத்தை  ஏற்படுத்தியதோடு  மட்டுமல்லாமல்  அவரை அடித்து பலத்த  காயங்களுக்குள்ளாக்கியிருந்தனர்.  இன்னும்  சிலர் மேலுமொரு  ஆலோசகராக செயற்பட்ட  சுரங்கவின்  வீட்டைக்கூட எழுதி வாங்கியிருந்தார்கள்.  இதற்கும் மேலாக  அசங்கவுடன் சட்டபூர்வமற்ற  முறையில்  கொடுக்கல்  - வாங்கல்களை  மேற்கொண்ட தனியார் வங்கி  முகாமையாளர்களடில்  பெருமளவானோர்  பாதிக்கப்பட்டிருப்பதாகவும்   தெரியவந்துள்ளது.  இவர்கள் சம்பந்தமாக  வங்கியளவில்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.  மேலும்  பணத்தை வைப்பிலிட்ட வாடிக்கையாளர்கள் பணத்தை   எவ்வாறு பெற்றுக்கொள்ளப் போகிறோமென  உண்ணாமலும்  உறங்காமலும்  யோசித்துக் கொண்டிருந்தனர்.  இந்த  சந்தர்ப்பத்திர்  கோடிக்கணக்கான  ரூபா கறுப்புப் பணத்தை  வைப்பிலிட்டவர்கள் எந்தவித  ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக  இருந்ததாகவும்  கூறப்படுகிறது.

இவற்றையெல்லாம்  தவிர்த்து  கணக்கு பார்க்கும்  போது குறித்த கம்பனியானது  சுமார்  200 கோடி ரூபாவை  வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு மோசடி  செய்துள்ளமை தெரியவந்துள்ளது. விசாரணைகளில்  பின்னர்  மோசடி தொகை  மேலும் அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுகிறது.

நடைமுறைக் காலத்தில் இவ்வாறான  பல கிளைகள் நாட்டில் உருவெடுக்கத் தொடங்கியுள்ளன.  அத்தோடு  வாடிக்கையாளர்களை  சிலகாலம்  சென்ற பின்னர்  அதலபாதாளத்துக்குள் தள்ளிவிடும்  .  முயற்சிகளும் இக்கம்பனிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.  இவ்வாறான   கிளை நிறுவனங்கள் தொடர்பில்  பெரிய  வங்கிகள் கவனம் செலுத்துவது அவசியம் இல்லாவிடில்  இவ்வாறான  போலிக் கம்பனிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க முடியாமல் போய்விடும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக