ஒரே குடும்பத்திலுள்ள 5 பேர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளொன்று தெஹியத்தகண்டி , உத்தலபுர பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சோகச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பிரதேச மக்களிடத்தில் ஆழ்ந்த சோகத்தை எழுப்பியுள்ளது. தெஹியத்தகண்டி , உத்தலபுர, இல 82 எனும் முகவரியில் வசித்து வந்த ஆர் எம். நாமல் பிரியந்த (37 வயது ) என்பவரே மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றுள்ளார். மற்றும் அவருடன் பயணித்த அவர்களின் பிள்ளைகளான மூத்த மகன் ஆர்.எம். கவிந்து ருக்ஷான் (14 வயது) , இரண்டாவது மகனான ஆர் .எம். யசிந்த லக்மால் (9 வயது) ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே பலியாகினர். மேலும் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற பினிபா உதயங்கனி (36 வயது) மற்றும் ஆர். எம். பவன் (வயது 5) என்ற இவர்களின் இளைய மகன் ஆகிய இருவரும் கடுங்காயங்களுக்குள்ளான நிலையில் , தெஹியத்தகண்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலனறுவை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு வைத்து குட்டிப் பையன் பவன் இவ்வுலகை விட்டுச் சென்றிருந்தான் . இவை எதுவும் தெரியாத சூழ்நிலையில் இதுவரை அநுராதபுரம் பெரிய ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இவர்களின் தாய் சிகிச்சை பெற்று வருவது மேலும் கவலைக்குரிய சம்பவமாகும்.
ஆர். எம். நாமல் பிரியந்த என்ற இப்பிள்ளைகளின் தந்தை வேல்டிங் வேலையில் பிரசித்தமானவர். மகாவலி ”சி” வலயத்தில் இவரை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. என்றே கூறவேண்டும். மரண வீட்டிற்கு வந்திருந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் இதனை தெரிவித்திருந்தனர். விகாரை , பாடசாலை , கிராம பொதுச் சேவைகளுக்கு பணத்தை வாரி வழங்குவது இவரது பழக்கமாகக் காணப்பட்டது. தனது பிரதேச விகாரையின் பொசன் தன்சலவுக்கு நாமல் பிரியந்தவே தலைமை தாங்கி நடத்திவருவார். அவசரமாக யாராவது உதவி கேட்டால் யோசிக்காது உதவக் கூடிய மனப்பக்குவம் கொண்டவர். தான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சேமித்த பணத்தில் இன்னொருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒருவர். தனது மனைவி பிள்ளைகளிடம் அதீத அன்பு கொண்ட ஒரு நல்ல தந்தை என்றே கூறவேண்டும். இவரின் தாய் கே. எம். அனுலாவதி தனது மகனின் நல்ல குணங்களைப் பற்றி சொல்லி அழுது புலம்புகிறார்.
உத்தலபுர இல 2/83 இல் வசிக்கும் ஆர். எம். அநுராத பிரியந்த , இறந்துபோன நாமலின் மூத்த சகோதரர் ஆவார். தனது சகோதரன் மற்றும் 3 பிள்ளைகளின் திடீர் விபத்து மரணம் தொடர்பில் ஆழ்ந்த கவலையுடன் பின்வருமாறு கூறுகிறார். இறந்து போயிருப்பது எனது தம்பியும் 3 பிள்ளைகளுமே. இவர்கள் இறந்துபோன கடந்த 14 ஆம் திகதி எங்கள் வீட்டில் கூரை போடும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். அன்று மாலை வேளை தம்பி மிகவும் சோர்ந்தே இருந்தார். நான் கேட்டதும் ஒன்றுமில்லையென்றார். வேலை கஷ்டத்தினால் அவ்வாறு இருக்கும் என நான் நினைத்துக் கொண்டேன். தம்பியின் 3 பிள்ளைகளும் அன்றைய தினம் ஆட்டுப்பால் கேட்டார்கள் . நானும் கொண்டு வந்து கொடுத்தேன். அவர்கள் வீட்டுக்குச் செல்ல ஆயத்தமான போது நாளைக்கும் ஆட்டுப்பால் குடிக்க வருவோம் பெரியப்பா என சின்னவன் கூறினார். 5 பேருக்கும் மோட்டார் சைக்கிளில் செல்ல கஷ்டம் என்பதால் மூத்தவன் நடந்து செல்ல தீர்மானித்தான். மழை காரணமாக நடந்து செல்ல வேண்டாமெனக் கூறி அவனையும் ஒருவாறு ஏற்றிக்கொண்டனர். எனது வீட்டிலிருந்து தம்பி வீட்டுக்கு நடந்து செல்லும் தூரமே காணப்படுகின்றது. இந்த கொஞ்ச தூரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், 4 பெட்டிகளுடன் வீட்டுக்கு வருவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை. எனது வீட்டைக் கட்ட தம்பியும் அவரது மனைவியும் சரியாக கஷ்டப்பட்டார்கள். தம்பியின் நல்லமனது காரணமாக கேட்பவர்களுக்கெல்லாம் பணத்தைக் கொடுத்தான். இவர்களின் இறப்புக்குக் காரணமான ரிப்பர் வாகனத்தின் சாரதி சமன் , தம்பியின் நல்ல நண்பன். சமன் கடல் மீன் விற்பனை செய்வதால் தம்பியும் அவருடன் சென்று மீன் விற்பனைக்கு உதவி செய்வான். தம்பிக்கு இப்படியொரு விபரீதம் நடக்குமென்று நாங்கள் நினைக்கவே இல்லை. அதற்கு மேலால் இவரால் ஒன்றும் சொல்ல முடியாது தேம்பித் தேம்பி அழுதார்.
நாமலின் இறப்புக்கு சமனே காரணமென முரண்பாடு தெரிவிக்கப்படுகிறது. சமன், இறந்து போன நாமலிடம் 6 இலட்சம் ரூபாவை பெற்று திருப்பிக் கொடுக்கவில்லையென்று ஊர் மக்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இடம்பெற்ற அன்று லிஹினியாக சந்தைப் பகுதியில் இவர்கள் இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக உத்தலபுர இல 5 என்ற முகவரியில் வசிக்கும் ஆர்.எம். சுனில் என்பவர் தெரிவித்தார். இச்சந்தையிலுள்ள பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்வார் என சுனில் மேலும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
இறந்துபோன நாமல் எனக்கு மிகவும் பழக்கமானவர் . அவ்வாறே பக்கத்து வீட்டுக்காரரும் கூட. நாமல் 14 அம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் லிஹினியாகம சந்தைக்கு வந்திருந்தார். நானும் அங்குதான் இருந்தேன். என் முன்னே சமனிடம் பணத்தை கேட்டார். என்னால் பணம் தர முடியாது..... உன்னால் முடிந்ததைச் செய் என் சமன் தெரிவித்தான். அடுத்த நாளான திங்கட்கிழமை தான் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிடுவதாக என் முன்னே நாமல் கூறினார். வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தியிருந்தால் அவன் நல்லாவே இருக்க மாட்டான் என வேதனையுடன் தெரிவித்தார்.
பிரதேச மக்கள் பலர் இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட குற்றமென்றே தெரிவித்தனர். ஆனால் பொலிஸார் அதை எதிர்த்தே பேசினர். தெஹியத்தகண்டி பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு தலைவர் , உபபொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜபத்திரண வாகன விபத்து மற்றும் மகாவலி வலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளுக்கான பல காரணங்களை தெளிவுபடுத்தினார். இந்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக எந்தத் தகவல்களும் பதிவாகியிருக்கவில்லை. இருப்பினும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ரிப்பர் வாகனச் சாரதியும் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் இனிமேலும் நடக்காதிருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று இந்த மகாவலி வலயத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் மோட்டார் சைக்கிளொன்று காணப்படுகின்றது. பணம் இல்லாவிடினும் தவணைக் கட்டணமாகவாவது கொள்வனவு செய்கின்றனர். இருப்பினும் பயிற்சி பெற்று சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள நிறைய பேருக்கும் ஆர்வமில்லை என்றே கூறவேண்டும். அனுமதிப்பத்திரம் இல்லாத இளைஞர்களே பெரும்பாலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸாரால் மட்டும் இயலாது. கவனக்குறைவாலேயே நிறைய விபத்துகள் இடம்பெறுகின்றன.
சிலர் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதைக்கு அப்பால் சென்று மரங்களுடனும் மின்கம்பங்களுடனும் மோதி விபத்துக்குள்ளாகி இறக்கின்றனர். தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் எவ்வளவு தூரம் எடுத்துக் கூறினாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. வாகனமொன்றை கொள்வனவு செய்து விட்டால் மிக வேகமாகச் செல்லவே பார்க்கின்றனர். அநேக விபத்துக்கள் மரணத்தில் முடிவதையே நான் காண்கிறேன். பிரேத பரிசோதனைகளின் போது எவ்வளவோ சொல்வோம். தெளிவுப்படுத்துவோம். ஆனால் அவையாவும் சில நாட்களிலேயே மறந்து போய்விடுகின்றது. இரண்டு பேர் செல்லக்கூடிய இந்த மோட்டார் சைக்கிளில் ஐவரை ஏற்றும் போது இவர் சற்று சிந்தித்திருக்க வேண்டும். சட்டத்தை கடைப்பிடிக்க முன்னர் தங்களது சுய சிந்தனைகளை பயன்படுத்தி செயற்படுவது சாரதிகளுக்கு மிக முக்கியம். தெஹியத்தகண்டி ஆதார வைத்தியசாலையின் திடீர் சிகிச்சைப் பிரிவு பிரதான வைத்தியதிகாரி தினிந்து ரணசிங்க இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கையில்;
உத்தரபுல சம்பவம் இடம்பெற்றவேளை நான் வேலைபார்க்கும் வைத்தியதிகாரியாக செயற்பட்டேன். இந்த விபத்துச் சம்பவம் எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தலைக்கவசம் அணிந்திருந்தால் இந்த மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் காப்பாற்றியிருக்க முடியும் . விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் தாய் , தந்தை மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்தனர். தந்தையின் மரணம் இதயம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டதாலேயே இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளின் மரணம் தலையில் ஏற்பட்ட பாதிப்பினாலேயே ஏற்பட்டுள்ளது.
தெஹியத்த கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துக்களை பார்க்கும் போது சாரதிகளின் கவனக்குறைவு காரணமாகவே பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளன எனலாம். இதில் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு அரசாங்கத்தால் பாரிய தொகை நிதி செலவிடப்படுகின்றது. அப்பணமும் இவர்களுடையதே. எமது வைத்தியசாலையின் அது தீவிர சிகிச்சைப் பிரிவிவில் தேவையான வசதிகள் இல்லாததால் அம்புலன்ஸ் வண்டிகளூடாக பதுளை , கம்பளை, கண்டி , அம்பாறை ,கல்முனை அநுராதபுரம் போன்ற தூரப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நோயாளர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர். இவர்கள் இயற்கையாக
இடம்பெற்ற விபத்திலோ அல்லது வீதியால் ஏற்பட்ட விபத்திலோ பாதிக்கப்பட்டவர்கள் அல்லர். மாறாக தங்களது கவனயீனத்தினாலேயே விபத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களாவர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களே அதிக .விபத்துக்களை ஏற்படுத்தி நோயாளர்களை வைத்தியசாலைகளில் சேர்க்கின்றன. அதிக வேகமும் அளவுக்கு மீறி ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லல் என்பனவே இவ்வாறான விபத்துக்களுக்கு மூல காரணங்களாக காணப்படுகின்றன. அதிக வேகம் எமனை தன்னுடனேயே வைத்திருக்கும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். இந்த அனர்த்தங்களால் எமக்கு உரித்தாவது எமது நாட்டு இளைஞர் படை இல்லாமல் போதலாகும். பொதுவாக இள வயதினருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களை கொடுக்க கூடாது. தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டாம். அவ்வாறே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதுபானம் அருந்திவிட்டு வாகனங்களை செலுத்த வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
கிழக்கு தமன்கடுவ பிரதேச பிரதான சங்க நாயக்கர் மக்குருப்ப பஞ்ஞாசேகர தேரர் மகாவலி வலயத்தில் இடம்பெறும் வாகன விபத்து பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
இன்று எமது நாட்டில் வளர்ந்துவரும் இளம் சமுதாயம் அநேகமான வாகன விபத்துக்களால் அழிந்து போவது கவலைக்குரிய யோசிக்கக்கூடிய ஒரு விடயமாகும். அவ்வாறே நிறைய பேர் பாதிக்கப்பட்டு அங்கவீனமாகின்றனர். பொதுவாக மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி செல்வோர். விபத்துக்குள்ளாகி கடுங்காயங்களுக்குள்ளாகின்றனர். மோட்டார் சைக்கிளை செலுத்தும் பலர் பொலிஸாரிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலேயே தலைக்கவசம் அணிய வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறே பிரதான வீதியில் சென்றால் மட்டுமே தலைக்கவசம் அணிய வேண்டும் என நினைக்கின்றனர். இவை தப்பான அபிப்பிராயங்களாகும். இந்தப் பிரதேசத்தில் இடம்பெறும் அநேகமான விபத்துக்கள் ஒருவழிப் பாதையிலேயே இடம்பெறுகின்றன. நாங்களும் வாகன விபத்துக்களைத் தடுக்க பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்கின்றோம். வாகன விபத்தொன்றில் தங்களது சொந்தமொன்று இறந்தால் மட்டுமே இவர்களுக்கு அந்த வேதனை புரிகின்றது. அப்படி இடம்பெற்றால் விபத்து பற்றிகேட்டு தெரிந்து கொண்டு அதை மறந்து விடுவார்கள். இதை கட்டுப்படுத்த பொலிஸாரால் மட்டும் முடியாது. இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.
தெஹியத்தகண்டி புதிய நகர் ஏ -16 வீதியில் வியாபாரியாக செயற்படும் எச். டபிள்யூ. ஞானசிறி சமூக சேவையாளராவார். பிரதேசத்தில் இடம்பெறும் பிரச்சினைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்கும் ஒருவராவார். தெஹியத்தகண்டி பிரதேசத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்கள் தொடர்பில் அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
உத்தலபுர விபத்தினால் நாங்கள் இன்னும் சோகத்திலிருந்து மீளவில்லை. அந்த தந்தை 5 பேரை மோட்டார் சைக்கிளில் ஏற்ற முன்னர் சற்று சிந்தித்திருக்க வேண்டும். அநியாயமாக பிஞ்சுக் குழந்தைகள் இறந்துவிட்டன. குறித்த ரிப்பர் வாகனச் சாரதி தவறிழைத்திருந்தால் ஒருநாளும் மன்னிப்பு கிடையாது. இவ்வாறான சாரதிகள் இன்னும் நிறைய பேர் உள்ளனர். அதனால் பாதையில் செல்லும் போது நாம் கவனமாக செல்ல வேண்டும். அவ்வாறே கடந்த மாதங்களில் இளவயது பிள்ளைகள் எத்தனையோ பேர் வாகன விபத்துகளால் இறந்து போயினர். அங்கவீனமானவர்களும் பலர் பாதை சீராக இருப்பதால் வேகமாகச் செல்கின்றனர். அவ்வாறே நம்மவர்கள் பொலிஸார் இருந்தால் மட்டுமே தலைக்கவசம் அணிகிறார்கள். சிலர் தலைக்கவசத்தை மோட்டார் சைக்கிளின் தாங்கி மேல் வைத்துக்கொண்டு பயணிப்பர். அவ்வாறே பெற்றோரும் தங்களது பிள்ளைகளை தலைக்கவசம் அணியாமலேயே கூட்டிச் செல்கின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது பாசம் இருந்தால் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து கூட்டிச் செல்லுங்கள். அவ்வாறே சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பிள்ளைகளுக்கு வாகனங்களை கொடுக்க வேண்டாம். வாகனத்தை கையில் கொடுக்க முன்னர் அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுங்கள். பிள்ளை தனது கல்வியை முழுமையாக முடிக்கும் வரை வாகனத்தை செலுத்த இடமளிக்க வேண்டாம். இதுவே சிறந்த விதிமுறையாகும். பொது மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கினால் வாகன விபத்துக்களிலிருந்து சமூகத்தை பாதுகாக்க எங்களால் முடியும்.
5 பேரை ஏற்றிக்கொண்டு மரக்கறி பொதி மற்றும் தேங்காய் பொதி என்பவற்றுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திச் செல்லும் போது நாமல் பிரியந்த சற்று சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறே இந்த விபத்து தொடர்பில் பிரதேசவாசிகள் வெவ்வேறு காரணங்களை கூறிவருகின்றனர். அவர்களின் இந்தக் கருத்துகள் பதாகைகள் மூலமும் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால் ஊடகங்கள் முன்னால் சொன்ன எந்தக் காரணங்களும் சட்டத்தின் முன் சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆனால் உண்மையை என்றும் மூடி மறைக்க முடியாது. வாகனச் சாரதியோ உரிமையாளரோ குற்றமிழைத்திருந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. தண்டனை கிடைத்தே தீரும். அதை யாராலும் தடுக்க முடியாது. உத்தலபுர பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த வாகன விபத்து மற்றும் ஏனைய வாகன விபத்துகள் மேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமென்றால் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் நாமும் வீதி விதிமுறைகளை கடைப்பிடித்து சுயசிந்தனையுடன் செயற்பட வேண்டும். பொதுமக்கள் பல விடயங்களில் இன்னும் அபிவிருத்தி காண வேண்டும். சட்ட நிறுவனங்களும் தங்களது நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். அப்போதே இவ்வாறான விபத்துக்களிலிருந்து பொதுமக்களை எம்மால் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக