கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 ஜனவரி, 2019

காதலால் கொலையுண்ட தமையன்

நமது வாழ்க்கையில் எது  இல்லையென்றாலும்  குடும்பத்துக்கு நான்கு ஆண் பிள்ளைகள்  இருப்பது எவ்வளவு  பெருமை  தெரியுமா? அவ்வாறே அதிர்ஷ்டம் என்று கூட சொல்லலாம்.  இது தனது 4 பிள்ளைகளையும் பார்த்து தனது மனைவி நெலுமிடம்  சந்தன சொன்ன   வார்த்தைகளாகும். இந்த உரையாடல்  இடம்பெற்று பல வாரங்கள் ஆகிவிட்டன. நான்கு ஆண் பிள்ளைகள்  குடும்பத்தில் இருப்பது  பெற்றோருக்கு எவ்வளவு பாக்கியம் தெரியுமா? அவ்வாறு எந்தவொரு பெற்றோரும்  நினைப்பதில் தவறில்லை என்றே கூற வேண்டும். நான்கு  பிள்ளைகளும்  வளர்ந்து ஆளாகும் போது பெற்றோர்  அடையும் சந்தோஷத்துக்கு அளவே   இல்லை. இந்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த அழகான குடும்பத்துக்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை..... அன்றிரவு ஆந்தையின் அலறல் சத்தம் கிராமத்துக்குள் ஏதோ அசம்பாவிதமொன்று இடம்பெறப்போகிறது என்ற முன்னறிவித்தலை  வழங்கிற்று .  அடுத்த நாள் காலை , தனது  நான்கு பிள்ளைகளில்  ஒரு பிள்ளை தங்களை விட்டு நிரந்தரமாக பிரியப்போகிறது என்பதை சந்தனவும்  நெலும்  குமாரியும்  கனவில்  கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.


கடந்த 24 ஆம் திகதி மாத்தறையில் பாடசாலை மாணவனொருவன் கத்தியால்  குத்தப்பட்டு  கொலை செய்யப்பட்டிருந்தான். மாத்தறை பொலிஸ் நிலையத்துக்கு,  காதலுடன் தொடர்புடைய நிறைய பிரச்சினைகள் அடிக்கடி வருவது இயல்பே. அதுமட்டுமன்றி குற்றங்களுக்கு குறைவில்லாத பிரதேசமாகவும் மாத்தறை விளங்குகிறது. இளவயது காதல் ஜோடிகள்,  திருமணமானவர்கள் மற்றும் கள்ளக்காதல் காரணமாக இவர்களுக்கிடையில்  அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு  பொலிஸ் நிலையம் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த சந்தர்ப்பங்களில் வெட்டிக் குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் ஏராளம் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால்  பாடசாலை காலத்தில் ஏற்படும் காதல்  பிரச்சினைகள் நீண்டு கொண்டு சென்று இன்னொரு பாடசாலை மாணவன்  கொலை செய்யப்பட்ட சம்பவம்  இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த துரதிர்ஷ்ட  சம்பவமானது தம்பிக்காக  அண்ணன் கொலை செய்யப்பட்டமையாகும். தனது தம்பியின் காதல் விவகாரத்தில் தலையிட்டமையால்  பட்டப்பகலில் பெருமளவானோருக்கு மத்தியில்  கத்தியால்  குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையாகும். இந்தச் சம்பவம்  முழு மாத்தறை பிரதேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சித்திஜ சௌந்தர்ய என்ற பாடசாலை  மாணவன் மாத்தறை , இஹல விட்டியல பிரதேசத்தில் வசித்துவந்தவர். பாடசாலை செயற்பாடுகளில்
சிறந்து விளங்கிய இம்மாணவர் எல்லா ஆசிரியர்கள் மனதிலும்  இடம் பிடித்திருந்தான்.  கல்வியால் மட்டுமன்றி  விளையாட்டிலும்  திறமையானவன் . அவ்வாறே தான் மட்டுமே  எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என முரண்டுபிடிப்பவன் . இதை ஆசிரியர்கள் மட்டுமன்றி பெற்றோரும் அறிந்து  வைத்திருந்தனர். யார் தவறு செய்தாலும்  பார்க்கமாட்டான். சின்ன விடயத்துக்கும்  பொங்கி எழுவான். ஒரு நிமிடத்தில் ஆர்ப்பாட்டம்  செய்து ஊரையே கூட்டி விடுவான். இம்மாணவன் திஹகொட ,  கித்தலகம பிரதேச பாடசாலையொன்றில் ஆரம்பக் கல்விக்காக சேர்க்கப்பட்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் காரணமாக மாத்தறை பாடசாலையில் சேர்க்கப்பட்டான். அங்கு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த அப்பாடசாலை மாணவத்தலைவனை  தாக்கியமை காரணமாக மீண்டும் ஆரம்பக் கல்வி கற்ற பாடசாலைக்கே செல்ல வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது.  அங்கும் ஆசிரியரொருவரை  அடித்த காரணத்துக்காக பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால்  சாதாரணதர பரீட்சை  எழுத இரண்டு மாதங்களே இருப்பதாலும் இவ்வளவு  காலம்  கற்றவை வீணாகிவிடும் என்ற  காரணத்தாலும் குறித்த ஆசிரியர்  இம்மாணவனுக்கு மன்னிப்பு வழங்கியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது. பின்னர் இம்மாணவன்  சாதாரண தரப் பரீட்சையில்  சிறந்த பெறுபேறு பெற்று மாத்தறை  நகரில் உள்ள தேசிய பாடசாலையொன்றில் உயர்தரம்  கற்பதற்காக அனுமதிக்கப்பட்டான்.

இந்த சந்தர்ப்பத்தில்  மாத்தறை , திஹகொட தனியார் வகுப்பொன்றில் வைத்து , திஹகொட  பலொல்பிடிய பிரதேசத்தில் வசிக்கும் இம்முறை சாதாரண தரத்திற்கு தோற்றும்  மாணவியுடன் காதல் ஏற்பட்டது. இன்னொரு உலகம் இல்லையென்ற அளவுக்கு இருவரும் காதலித்தனர்.
இந்தவேளை இப்பாடசாலை மாணவியொருவரை இறந்து போனவரின்  இளைய சகோதரர்  ஏசிய குற்றச்சாட்டில்  சித்திஜவும் ரசிந்து என்ற மாணவனும்  வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். ரசிந்துவின் இளைய  சகோதரன் நிசந்து கவிஷ்க (18 வயது) திஹகொட தேசிய பாடசாலையில் கணிதப் பிரிவில் 2020 ஆம் ஆண்டு  உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுபவன்.  இவனுக்கு  திஹகொட தனியார் வகுப்பில்  வைத்து சித்திஜவின்  பாடசாலைக் காதலியைக்  சந்திக்க கிடைத்த போது அவளை ஏசியமை காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக நிசந்து கவிஷ்க தெரிவித்திருந்தார். ஆனால் நிசந்துவின் நண்பர்களோ  நிசந்து சித்திஜவின்  காதலியுடன்  அடிக்கடி முரண்பாடு ஏற்படுத்திக் கொள்வதாலேயே சித்திஜ தினம் தினம்  வைராக்கியத்தின் உச்சத்துக்குச்  சென்றான் என தெரிவித்தனர். சித்திஜவும் நிசந்தவும் சுமார்  இரண்டு  மாத காலமாக அடிக்கடி முரண்பட்டுக் கொண்டனர்.  இவ்வாறிருக்கையில்  ஒருநாள் சித்திஜ நிசந்துவை   அடித்துவிட்டதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த  ரசிந்து பொதுப் பாதையில் காத்திருந்து சித்திஜவை  தாக்கியிருப்பதாக பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர்  தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை முற்றிய நிலையில் கடந்த 24 ஆம் திகதி  சித்திஜ மற்றும் அவனது நண்பர்கள்  இருவர் சேர்ந்து  மாத்தறை பஸ் தரிப்பிடத்துக்கு அண்மையில் வைத்து ரசிந்துவை தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலை  அயலில்  இருந்தவர்கள் தலையிட்டு  தடுத்துள்ளனர். மீண்டும் மாத்தறை விகாரைக்கருகில்  கபடா வீதிக்கருகில் இவ்வாறான சண்டைகள் ஏராளமாக இடம்பெற்றிருந்தன.  பின்னர் மாத்தறை  -  எலவேல்ல  பாதையில் தனியார் வகுப்பொன்றுக்கருகில்  ரசிந்து மற்றும் சித்திஜ அடங்கிய  மூன்று நண்பர்களுக்கிடையில்  அடிதடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  இதில் ரசிந்து அப்பாடசாலை மாணவனொருவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டான். அதற்கு பின்னர் ரசித்துவின் உடலை மாத்தறை - எலவேல்ல பாதையில் போட்டுவிட்டு  அவர்கள் தப்பிச் சென்றனர்.  சந்தேக நபர்கள் மூவரும்  மோட்டார்  சைக்கிளில் தப்பிச் சென்ற காட்சி  அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி.  கமராவில் பதிவாகியுள்ளது.  ரசிந்துவின் உடலிலிருந்து வெளியான இரத்தம் மாத்தறை வீதி எங்கும் பரவிக்கிடந்தது. பின்னர்  ரசிந்துவைக்  கண்ட ஆட்டோ  சாரதி  ஒருவர் ரசிந்துவை  மாத்தறை  பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்த போதும் அவன் உயிரிழந்திருந்தான்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் , மாத்தறை  , திஹகொட , நாயிம்பலவில் வசிக்கும்  மாத்தறை சாந்த தோமஸ்  குமர வித்தியாலயத்தில்  உயர்தர விஞ்ஞானப் பிரிவில் தோற்றவிருந்த ரசிந்து கிம்ஹான என்ற 19 வயது பாடசாலை மாணவனாவான். ரசிந்துவை கொலை செய்தவர்கள்  பிரதேசத்திலிருந்து  தப்பிச் சென்றிருந்தனர். இங்கு காணப்பட்ட பாதுகாப்புக் கமராவின்  காட்சிகளுக்கேற்ப விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் வலய புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சம்பவத்தின் முதல் சந்தேக நபரான சித்திஜ சௌந்தர்யவின் வீட்டுக்குப் பொலிஸார் சென்று சோதனை  மேற்கொண்டதில்  அவனின் பெற்றோர் இது தொடர்பில் தங்களுக்கு தெரியாதென பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளனர்.  இவ்வாறான சம்பவமொன்று மாத்தறையில்  இடம்பெற்றிருப்பதாக தொலைக்காட்சியில் பார்த்தே தாம்  தெரிந்து கொண்டதாகவும் தனது மகனே  இக்கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு தெரியாதெனவும் ஊர் இரண்டுபட கத்தி அழுதார் சித்திஜவின் தயார். தனது மகன் இருளுக்கு பயப்படுபவன்  என்றும் இரவு  நேரத்தில் வீட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டான் என்றும் தாய் வீறிட்டு அழுது  புலம்பினாள் . திஹகொட  நாயிம்பல கிராமத்தில்  மகனை இழந்த  தாயொருவரின்  அழுகைச் சத்தமும்  திஹகொட இஹல  விடியல கிராமத்தில் தனது மகன் செய்த குற்றத்தை எண்ணி புலம்பும்  இன்னொரு தாயின் அவலமும் ஊர் மக்களை  கவலையில் ஆழ்த்தியது.  பின்னர்  கடந்த 26 ஆம்  திகதி சட்டத்தரணி   தசராஜ தசநாயக்கவுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றில்  சித்திஜ  ஆஜராகினான் .  இந்தச் சம்பவத்துடன்  தொடர்புடைய 2 ஆவது மற்றும் 3 ஆவது சந்தேக  நபரான  துருணு  விமுக்தி , மாத்தறை -  காளிதாச  வீதியிலுள்ள  பொலிஸ்  விசாரணை அலுவலகத்துக்கு ஆஜராக வந்த நிலையில் கைது செய்யப்பட்டான். 17 வயதுடைய இம்மாணவன்  மாத்தறை , நாவிமனவில் வசிப்பவனாவான். மூன்றாவது   சந்தேக நபரும் கடந்த 27 ஆம் திகதி மாத்தறை நகரில் வைத்து  மாத்தறை வலய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தான்.  இவன் 18 வயதுடைய மாத்தறை வல்கம பிரதேசத்தில் வசிக்கும் குசான் நிம்னஜித்  சமரசிங்க ஆவான். இவர்கள் கடந்த 3 ஆம் திகதிவரை மாத்தறை  நீதவான் நீதிமன்ற நீதிபதியின்  உத்தரவுக்கிணங்க  விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  இந்தக் கொலைச் சம்பவத்தால் மிகவும்  சோகத்தில் ஆழ்ந்து  போய் ஒரே இடத்தையே பார்த்துக் கொண்டு புலம்பிய  ரசிந்துவின் தாயான ஜீ. பீ. நெலும் குமாரி (42 வயது)க்கு தனது மகனுக்கு ஏற்பட்ட அநியாயத்தை நினைத்தும் பார்க்க முடியாத சூழ்நிலையே காணப்பட்டது. இது கனவாக இருக்கக் கூடாதா என  தினம்  தினம் கடவுளை வேண்டி நிற்பவளாக காணப்பட்டாள். என்ன செய்ய அதுவே விதி .  எனது மகனின் கொலையால்  மாத்தறை நகர்  மட்டுமல்லாது முழு  திஹகொட  நாயிம்பல கிராமமுமே வெள்ளைக் கொடிகளால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏன்  என் மகனுக்கு இப்படியொரு தண்டனையை கொடுத்தீர்கள்? ஏன் மகனின் வாழ்க்கையை இல்லாமலாக்கினீர்கள் ? கை , காலயாவது வெட்டிவிட்டு இருந்திருந்தால் உயிருடனாவது என்னுடனேயே இருந்திருப்பானே? நான் நன்றாகப் படித்து வைத்தியராவேன் . வைத்தியராகி அம்மாவையும்  அப்பாவையுடம்  சந்தோஷமாக வைத்திருக்க இன்னும்  கொஞ்ச நாட்களே இருக்கின்றன. அப்பாவை  இரவு வேலைக்கு அனுப்பமாட்டேன். இன்னும் சில வருடங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் அப்பா என சொல்லிச் சொல்லி பாடம்  படிப்பான். இவன்தான்  அண்ணனுக்கும் இரண்டு தம்பிமார்களுக்கும் புத்திமதி  கூறுவான் . ஏனப்பா என் தங்க மகனை  கொலை செய்தீர்கள் என கத்திக் கதறி அழுதாள் நெலும் குமாரி.

தனது இரண்டாவது  மகனின் மரணத்தைத் தாங்க  முடியாது ஊர் இரண்டுபடக் கத்திக் கதறிய ரசித்துவின் தந்தையான சந்தன புஷ்பகுமார (43 வயது) ஏன்  இந்த அநியாயம்  செய்தீர்கள் ? என்ற கேள்வியை மட்டுமே கேட்டார். இவர்  , மாத்தறை பம்புரண பிரதேசத்திலுள்ள ஐஸ் தொழிற்சாலையொன்றில்  இயந்திர  பழுதுபார்ப்பவராக தொழில்  புரிபவர் . எத்தனையோ  கஷ்டங்களுக்கு மத்தியில்  தான்  நான்கு பிள்ளைகளையும்  வளர்த்தெடுத்தோம்.  ஆனால்  எனக்கு  அந்தக் கஷ்டம்  என் பிள்ளைகள்  வளர்ந்து ஆளாகும் போது தெரியவில்லை.  நான் தெற்கு அதிவேகப் பாதையில் சில  காலம்  வேலை செய்தேன் .  பின்னர்  திக்வெல்ல , தெவினுவர  மாத்தறை  நகர் போன்ற பல்வேறு இடங்களிலும்  ஐஸ்   தொழிற்சாலையில் வேலை செய்தேன்.  நான் இரவு  வேலைக்குச் செல்வதில்  மகனுக்கு விருப்பமில்லை.  நீங்கள்  கஷ்டப்படுவதை  என்னால்  பார்க்க முடியவில்லை என  ரசிந்து  அடிக்கடி என்னிடம்  சொல்வான்.  நான் வைத்தியராகி முழுக் குடும்பத்தையும்  நல்ல நிலைக்குக் கொண்டு வருவேன்  எனத் தெரிவித்தான்.  உண்மைதான்  அவன் குடும்பத்தினர் மீது அலாதிப் பிரியம்  கொண்டிருந்தான். அண்ணன் மீதும்  தம்பிமார் இருவர்   மீதும்  அளவுகடந்த அன்பு  கொண்டவன்.  எனது  மூத்த  மகன் தியத்தலாவை இராணுவ முகாமில்  சேவை  செய்கிறான். நலிந்து நதுஷான் (21 வயது ) . எனது  மூன்றாவது மகன் நிசந்து கவிஷ்க  (18 வயது) உயர்தரம் கற்பவன். எனது  நான்காவது  மகன் மியுர ஹிமல்க (16 வயது) இவ்வருடம்  சாதாரண தரப் பரீட்சையில்  தோற்றுகின்றான். கடவுளே எனது குடும்பத்துக்கு என்ன நடந்தது?  அவரும்   மனைவிக்குச் சமாந்தரமாக பிரேதப் பெட்டிக்கருகில் அமர்ந்து கொண்டு அழுது புலம்பிக் கொண்டிருந்தார்.

மிதல்வெல பிராதன விகாரை அறநெறிப் பாடசாலையில்  கல்வி கற்ற ரசிந்து  கிம்ஹான  பிரதேசத்திலுள்ள அனைவரினதும்  அன்பைப் பெற்ற மாணவனாவான். விகாராதிபதி உட்பட  அறநெறிப் பாடசாலை  ஆசிரிய குழாமும்  பாடசாலையின் பொறுப்பு மட்டுமன்றி தலைமைத்துவத்தையும் வழங்கின. இவை  எல்லாவற்றையும்  கடமையுணர்ச்சியுடன்  செய்து நன்மதிப்பைப் பெற்றவன். முழு மாத்தறை  நகர மக்களினதும்  அழுகுரல்களுக்கு மத்தியில்  மாத்தறை  சாந்த தோமஸ்  வித்தியாலய மாணவர்களின் தோள்மேல்  ரசிந்து  கிம்ஹானவின் இறுதி ஊர்வலம்  இடம்பெற்றது.  தனது வயதையொத்த மாணவனொருவனின் கத்திக்குத்துக்கு இலக்காகியே பலியானான் என்பது  வேதனைத் தரும் விடயமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக