கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 ஜனவரி, 2019

பழிக்குப் பழி

கொஸ்கொட சுஜி மற்றும் கொஸ்கொட தாரக ஆகிய இருவரும் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகளாவர். ஒரு காலத்தில்  இருவரும் சமூக சேவை செய்யும் இளைஞர்களாகவே இருந்தனர். கொஸ்கொட நதுன் தர்மகீர்த்தி (இப்போது இத்தாலியில் இருக்கும் நிலையில் , மாகந்துர மதுஷûடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாக பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் கொள்கின்றனர்.)யுடன் கொஸ்கொடையில் அமைந்துள்ள மக்கள் வங்கி கொள்ளைச் சம்பவமொன்றில் சிறையில் வைக்கப்பட்டுள்ள சுஜியும் தாரகவும் விளக்கமறியலில் இருந்தவாறே பாதாளக் குழுவில் எவ்வாறு காலடி எடுத்து வைக்கலாம் எனத் திட்டம் தீட்டியிருந்தனர். அந்தத் திட்டத்தின் பின்னர் வங்கிக் கொள்ளையில் கிடைத்த அரைவாசிப் பணத்தையும் கொஸ்கொட தாரக மற்றும் நதுன் திட்டமிட்டு தன்னிடமிருந்து கொள்ளையடித்துவிட்டதாகவே சந்தேகம் கொண்டான்.

அந்த சந்தேகத்தின் பேரில் செயற்பட்ட கொஸ்கொட சுஜி தனக்கென தனியான பாதாளக் குழுவொன்றை உருவாக்கிக் கொண்ட நிலையில் , அதன் தலைவராக ரத்கம பிரதேச சபைத் தலைவர் மனோஷ் புஷ்பகுமாரவின் கொலைச் சந்தேக நபரான தெல்வத்தை பொடி லெசியே செயற்பட்டான். பொடி லெசியை தலைமையாகக் கொண்டு கொஸ்கொட சுஜி பாதாளக் குழு  செயற்பாடுகளை செவ்வனே நிறைவேற்றிக்கொண்டான். சுஜியின் தெற்கு பாதாளக் குழு செயல்களால் தாரக நிலை குலைந்து போனான். அதனால் தனது பாதுகாப்புக் கருதி கொழும்புக்கு வந்து சேர்ந்தான். அதன் பின்னர் ஹபரகட வசந்த ஊடாக கொழும்பு பாதாள உறுப்பினர்களை தெரிந்து கொண்ட தாரக , அந்த பாதாளக் குழுக்களில் சிறந்த துப்பாக்கிதாரியாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்தான். அங்கொட லொக்காவின் குழுவினரால் ரணால சமயங் கொலை செய்யப்பட்டான். அதற்குத் தேவையான  அனைத்து உதவிகளையும் மாகந்துர மதுஷே செய்து கொடுத்தான். அதன் பின்னர் தனது பாதாளக் குழுவுக்கு தாரகவை இணைத்துக்கொண்டான். காரணம் , தனது தெற்கு எதிராளியான சுஜியை இல்லாதொழிக்கும் பொருட்டு தனது கொழும்பு பாதாள செயற்பாடுகளுக்கு உதவி புரிய உகந்தவன் என்று தெரிந்து கொண்டதன் காரணமாகவே தனது பாதாளக் குழுவில் தாரகவை இணைத்துக்கொண்டான்.


சமயங் மற்றும் அங்கொட லொக்காவின் இடையேயும் அதே போன்று மேல் மாகாணத்தில் மனோஜ் மென்டிஸ் மற்றும் பொடி லெசி இடையே தென் மாகாணத்தில் இடம்பெற்றிருந்த பாதாளக் குழு முரண்பாடுகளால் கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதி 6 மாத காலத்திலிருந்து தற்போது வரை 11 மனிதக் கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவையாவும் ஒருவருக்கொருவர் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கொலைகளில் இறுதியானது மிகவும் சூடானதுமான கொலை கொழும்பில் பதிவாகியுள்ளது. அதாவது மாகந்துர மதுஷவின் ஹெரோயினை கொழும்பில் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மொஹமட் ரிஸ்வானின் கொலையே அதுவாகும். இந்தக் கொலையின் சந்தேக நபராக கொஸ்மல்லி காணப்படுகின்றான்.   இவன் அங்குனு கொலபெலஸ்ஸவில் øவைதத்து கொலை செய்யப்பட்டான். அதன் எதிரொலியாக அத்துருகிரிய - கல்வாருவ வீதியில் வைத்து பொடி சுது கொலை செய்யப்பட்டான். மீண்டும் இக்கொலைக்கு பிரதியுபகாரமாக மாகந்துர மதுஷவால் கொஸ்கொட தாரகவுக்கு ஹபரகட வசந்தவுக்கும் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அதாவது தெல்வத்தை பொடி லெசி  காலி விளக்கமறியலில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் ரணால சமயங் உள்ளிட்ட ஏழு பேரை சிறை பஸ்ஸுக்குள் வைத்துக் கொன்றது போல கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர். அதற்குத் தேவையான துப்பாக்கிதாரியை கொஸ்கொட தாரக ஏற்பாடு செய்திருந்தான். அந்தச் சந்தர்ப்பம் கை நழுவிச் சென்றுவிட்டது. பின்னர் கொஸ்கொட தாரக , ஹபரகட வசந்த , மாளிகாதென்ன சாமர ஆகியோர் தங்க நகை கொள்ளையொன்றில் ஈடுபடத் தீர்மானித்தனர்.   அந்த சம்பவத்துக்குப் பின்னர் அங்குனு கொலபெலஸ்ஸ சிறைக்கு கொஸ்கொட தாரக மற்றும் அவனது சகோதரனான மதுக ஆகியோர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களை வரவேற்கும் பொருட்டு சிறைச்சாலைக்குள் விழாவொன்றை ஏற்பாடு செய்கின்றனர். இவ்விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் மாகந்துர மதுஷே செய்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொஸ்கொட சுஜியின் குழுவில் போதிய ஆட்கள் இல்லாமை காரணமாக அந்தப் பாதாளக் குழு முடங்கிபோனது. அதுமட்டுமன்றி மாகந்துர மதுஷின் தந்தையின் இறுதிச் சடங்கின் போதும் பின்னரும் மாதக்கணக்கான துப்பாக்கிச் சத்தமும் முடங்கிப்போனது . இதன் பின்னரே கொலை செய்யப்பட்டு தலை துண்டாக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின. இதன் முதலாவது கொலையாக வெலி சரத்தின் தலை துண்டாடப்படுகிறது. இரண்டாவது கொலை அரங்கேற்றம் கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமானது. ஊறுகஸ்மங் ஹந்திய , ரன் தொடுவில பிரதேசத்தில் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு வெட்டிக் குத்திக் கொண்டு உயிரிழந்தனர்.  இந்த இரு கொலைகளும் அன்றிரவு சுமார் 7.30 - 8.00 மணியளவில் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. ஊருகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவிலுள்ள குமாரகே மற்றும் துஷயா ஆகிய 37,30 வயதுடைய இருவரே கொலை செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குமாரகே திருமணம் முடிக்காதவர். இவர் கொலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் இவரின் தாய், தந்தை மற்றும் தங்கை பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தனர். பக்கத்து வீட்டிலுள்ள துஷயா குமாரகேயின்  வீட்டுக்குச் சென்றிருந்தான். இவர்கள் இருவரும் வீட்டின் முன் காணப்பட்ட வாடியில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தனர்.  இங்கு வைத்தே இருவரும் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தோடு நிறையப் பேர் தொடர்புபட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காரணம் கொலை செய்யப்பட்ட இருவர் உடம்பிலும் 35க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டன. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 26 வெற்று ரவைகள் காணப்பட்டதை வைத்து நாலா புறத்திலும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ரவைகள் அனைத்தும் விசேட புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகள் பாவிக்கும் ரவைகள் ஆகும்.  இவைகளை  வைத்துப் பார்க்கும் போது குறைந்தது அந்த  வகையைச் சேர்ந்த இரு துப்பாக்கிகளாவது  பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் குறித்த இருவரும் கீழே விழுந்த பின்னர் மன்னா கத்தி மற்றும் கூரிய கத்தியால் இரு உடல்களும் வெட்டப்பட்டுக் காணப்பட்டன. கொலை செய்யப்பட்ட பின் குமாரகேயின் தலையானது உடலிலிருந்து வேறாக்கப்பட்டு இஹல மாலவல  , ரன்தொட்டுவில கூட்டுறவு நிலையத்துக்கு அருகாமையில் வீசப்பட்டுக் கிடந்தது. இந்தச் சம்பவமானது ஏற்கனவே இடம்பெற்றகொலைச் சம்பவத்துக்கு  பழி தீர்க்கும் முகமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குமாரகேயின் தலையை உடலிலிருந்து வேறாக்க கொலையாளிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைகள் மிக நீண்ட காலமாக இரு பாதளக் குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் பிரதிபலனாக இடம்பெற்றவையாகும். நிகழ்காலத்தில் இவ்வாறான கொலைகள் இடம்பெறுவது மாகந்துர மதுஷவின் குழுவினருக்கும் கொஸ்கொட சுஜியின் குழுவினருக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக என்றே கூற வேண்டும். இந்த முரண்பாடுகளால் இந்த இரு கொலைகள் உட்பட இதுவரை 5 கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் பற்றி நாம் சற்று நோக்குவோம்.

குடா ஊரகஹ , ஊரகஹ என்ற முகவரியில் வசிக்கும் இந்திக்க மஹேஷ் ரணவீர (32 வயது) மற்றும் மாலவல , ரன்ததொடுவிலவில் வசிக்கும் துஷயா ஹேவகே சமன் சுரேஷ் (30 வயது) ஆகிய இருவரும் ஊருகஸ் மங்ஹந்திய பொலிஸ் பிரிவிலிருந்து 5,6 டுட் தூரத்தில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்களாவர். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த இருவருக்கிடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இருக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு சிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் அதே மாதம் 16 ஆம் திகதி ஊருகஸ் மங்ஹந்திய , நூபுடுவல்லவில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவிலேயே இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டனர். இங்கு சமன் சுரேஷால் பற்றவைக்கப்பட்ட பட்டாசொன்று  சீறிப்பாய்ந்து முரண்பாடொன்று ஏற்படக் காரணமாகிவிட்டது. அங்கு ஏற்பட்ட பேச்சுவார்த்தை இறுதியில் கைகலப்பாக மாறி நீண்ட நேரம் இழுபட்டுச் சென்று பின்னர். பிரதேச மக்களின்  தலையீட்டினால் முடிவுக்கு வந்துள்ளது. 2015 நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இந்திக்க  மகேஷின் குடா ஊரகஹ வீட்டிற்கு மோட்டார்  சைக்கிளில் வந்த அவனின் இரு சகாக்கள் ’இந்திக்க அண்ணா அவர்கள் எங்களை அடித்து விட்டார்கள்’ எனக் கூறியுள்ளனர். இந்திக்க தனது சகாக்களுடன் 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியொன்றை இடுப்பில் சொருகி கொண்டு சென்றுள்ளான். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு இந்திக்க செல்லும் வேளை அடித்ததாகக் கூறப்பட்ட இருவரும் அங்கு நின்றிருந்தனர். இந்திக்கவின் கையிலிருந்த துப்பாக்கியில் உள்ள குண்டு உஷான் ரன்திக என்பவரின் காலைப் பதம் பார்த்தது. அதனால் கிழே  விழுந்த உஷான் அருகே சென்ற இந்திக்க அவனது தலையில் சுட்டு கொலை செய்துவிட்டான். அத்தோடு அங்கு நின்றிருந்த சுரேஷை ஓடுமாறு தெரிவித்தும் அந்த இடத்திலேயே தலையை கீழே சாய்த்தபடி நின்றிருந்த அவனையும்  இந்திக்க சுட்டான்.

இந்தச் சம்பவங்களில் ஊருகஸ்மங்ஹந்திய , இஹல மாலவல , ரன்தொடுவிலவில் வசிக்கும் குமாரகே உஷான் ரன்திக (26 வயது) மற்றும் துஷயா ஹேவகே சுரங்க சுரேஷ் (வயது 27)  ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் உஷான் என்பவர் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்ட சமில தீபாலின் உறவுக்கார சகோதரரொருவரெனவும் சுரங்க சுரேஷ், சமன் சுரேஷின் இளைய சகோதரரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரு கொலைகளுக்குப் பின்னரே அடுத்தடுத்து பழிவாங்கும் படலம் ஆரம்பமாகியது எனலாம். இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியானது, குடா ஊரகஹ , ஊரகஹவில் வசிக்கும் பொஸ் சரத் என்பவரின் வீட்டிலிருந்தே கொண்டு செல்லப்பட்டதாக சமன் சுரேஷûக்குத் தகவல் கிடைக்கப் பெற்றது. இந்திக்கவை கொலை செய்வதே தனது இலக்காகக் காணப்பட்ட போதிலும் அந்தக் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதற்குத் தூண்டுகோலாக இருந்த பொஸ் சரத்தே சுரேஷ் மற்றும் சமில தீபாலின் குறிக்கோளாக இருந்தான். அதற்கிணங்க இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகாத நிலையில் 2015 டிசம்பர் 4 ஆம் திகதி பொஸ் சரத் கொலை செய்யப்பட்டான். இது பழிக்கு பழி வாங்கும் செயற்பாடாகவே காணப்பட்டது. பொஸ் சரத்தின் தலை உடலிலிருந்து வேறாக்கப்பட்டு இஹல மாலவில , ரன் தொடுவில கூட்டுறவு நிலையத்துக்கருகில் கொண்டு சென்று போடப்பட்டது. அவ்வாறே கடந்த 30 ஆம் திகதி கொலை செய்யப்படட சமன்  சுரேஷின் தலையும் இதே இடத்தில் கொண்டு சென்று போடப்பட்டுள்ளது. இவ்வாறு கொலை செய்த சமன் தேயிலைத் தோட்டமோன்றிலிருந்த ஆள் நடமாட்டமில்லாத வீடொன்றில் மறைந்து வாழ்ந்து வந்தான்.

சுரங்க சுரேஷ் மற்றும் உஷான் ரன்திக ஆகியோரை கொலை செய்தமைக்காக இந்திக்க மஹேஷ் பொலிஸில் சரணடைந்தான் மேலும் பொஸ் சரத்தை கொலை செய்ததற்காக சமன் சுரேஷ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டான். இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்னரே பிணையில்  வெளியே வந்தனர். சாதாரண கிராம சண்டியனாக விளக்கமறியலில் இருந்த இந்திக்க , மாகந்துர மதுஷவின் சகாவாகவும் பாரியளவான ஹெரோயின் விற்பனையாளராகவும் பிணையில் விடுதலையாகி வெளியே வந்தான் பாரிய தொகை  ஹெறோயினை ஊருகஸ் மங்ஹந்திய பிரதேசத்துக்கு கொண்டு வந்து ஈசிகேஷ் முறையில் விநியோகித்துவந்த பிரதான வியாபாரியாக இந்திக்க மகேஷ் காணப்படுவதாக பாதுகாப்பு பிரிவால் தெரிவிக்கப்படுகிறது.  இந்திக்க என்பவன் ,மாத்தறை கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு பட்டு வைத்தியசாலையில் இருக்கும் வேளை கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரக மற்றும் அவனது சகோதரன் மதுக நிர்மல்கேவின் நெருங்கிய நண்பனாவான். சிறையில்  இருக்கும் சந்தர்ப்பத்தில் சுரேஷ் , கொஸ்கொட சுஜியின் சகாக்களுடன் மேலும் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டான். கடந்த 30 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட குமாரகேயின் பாட்டனாரும் 6 ஆம் கட்டை ,ஹிப்பன்கந்த , நவந்தகலவில் வசித்த மைக்கல் என்பவரின் பாட்டனாரும் சகோதரர்களாவர். அதற்கிணங்க குமாரகே மைக்கலின் சித்தியின் மகனாவார். மைக்கல் கொஸ்கொட  சுஜியின் விசுவாசம்மிக்க நண்பனாவான். 2011 ஜனவரி 4 அம் திகதி அம்பலாங்கொட அரலிய ஹோட்டலுக்கு முன்னால் இலக்கம் 10 /ஆ , மானிமுல்ல , அம்பலன் கொட என்ற முகவரியில் வசித்து வந்த மாதுவகே யசரத்ன (53 வயது) என்பவரை  கொலை செய்தது மைக்கலே . இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொஸ்கொட சுஜி, மைக்கல் ,  கொஸ்ஸா ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இக் கொலைச் சம்பவம் இல்லாமல் 2016 .04.11 ஆம் திகதி ஊருகஸ் மங்ஹந்திய , மீகஸ்பிட்டிய சந்தீப வீட்டில் வசித்து வந்த திஸ்ஸ கொமசாரு என்பவர்  சுட்டுக் கொல்லப்பட்டமை, அஹுன்கல்ல ரயில் கடவை அருகாமையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை  மற்றும் ஊருகஸ்மங்ஹந்திய ஹிப்பன் கந்தவில்  வைத்து நபரொருவர்  சுட்டுக்கொல்லப்பட்டமை போன்ற குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சமில தீபால் ரணசிங்க மீது , எல்பிட்டிய , பிடகலயில்  அமைந்துள்ள நகைக்கடையில் கொள்ளையிட்டமை , கைக்குண்டொன்றை அருகில் வைத்திருந்தமை மற்றும் பலப்பிட்டியவில் ப்ரீத்தி குமார என்பவர் காரில் சென்று கொண்டிருந்த போது காதுக்குள் வைத்தே கொலை செய்தமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.  இறந்து போன சமில தீபால் மற்றும் சமன் சுரேஷ் என்போரின் இறுதிக் கிரியைகள் கடுமையான பொலிஸ் பாதுகாப்புடனும் கொஸ்கொட  சுஜியின் சகாக்களின் பாதுகாப்புக்கு மத்தியிலும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. பாதாளக் குழுவினரின் பெரும்பாலான திட்டமிடல் செயற்பாடுகள் சிறைக்குள்ளேயே இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சில தீய சிந்தனை கொண்ட சிறையதிகாரிகளாலேயே இவர்களின் பலம் மேலும் அதிகரிக்கப்படுகிறது  எனலாம். இவர்களுக்கு பணம் கிடைத்தால் போதும். எவ்வாறான  திட்டங்களுக்கும் துணைபோவார்கள். அதனால் இவர்களுக்கும் எந்தவித பிரச்சினையும் கிடையாது. எனினும் சிறையிலடைக்கப்பட்ட பாதாளக் குழு பெரும்  புள்ளிகள் என்னென்ன திட்டங்களை தீட்டுகின்றார்களோ.... கடவுளுக்கே வெளிச்சம். இதனால் எதிர்காலம் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

எல்பிட்டிய பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவவின் வேண்டுகோளுக்கிணங்க உதவிப் பொலிஸ் அதிகாரி மஹேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையில் ஊருகஸ்மங்ஹந்திய பொலிஸ் தலைமையதிகாரி , பொலிஸ் பரிசோதகர் விஜித் ஐயந்த , எல்பிட்டிய பொலிஸ் பிரிவு குற்ற விசாரணை திணைக்கள அதிகாரி , பொலிஸ்  பரிசோதகர் பிரசாத் சந்திமால் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல்களாள கொடிதுவக்கு , தனபால ஆகிய பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பழிவாங்கல் எண்ணம் இருக்கும் வரை இவ்வாறான கொலைகளை யாராலும் தடுக்க முடியாது..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக