கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 ஜனவரி, 2019

வடக்கை மிரட்டும் ஆவா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது போதைப் பொருள் , வாள் வெட்டுக் குழுத் தாக்குல் மற்றும் பொல்லுத் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட 8 குழுக்கள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.  இக்குழுக்களில் ஐந்து குழுக்கள் பிரதான இடத்தைப் பிடிப்பதுடன் இவைகளுள் தற்போதும் முதலாவதாகக் காணப்படுவது ஆவாக் குழுவாகும்.  இக்குழுவானது யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் செயற்படும் முதலாவது குழுவாகும். யுத்தம் காரணமாக சுவிற்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்த குடும்பமொன்றின் மூத்த மகனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆவாக்குழுவில் தற்போது அவர் இல்லை. அவருக்குப் பதிலாக ”சொலெக்ஸ்”  என்பவர் தற்போது இந்தக் குழுவை வழிநடத்திச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆவா குழுவானது மீண்டுமொரு முறை யுத்தம் ஏற்படக் காரண கர்த்தாவாக அமைந்து விடுமோ என்பதில் தெற்கு மக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையிலும் கடந்த சில வாரங்களாக எந்தவொரு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆவாக் குழு மேற்கொண்டிருக்கவில்லை என்றே கூறலாம். எந்தவொரு மனிதக் கொலையுடனும் இதுவரை இந்தக் குழு  தொடர்புபட்டிருக்கவில்லையென்பதும் அதிசயமான விடயமொன்றாகும். இருப்பினும் இந்த ஆவாக்குழுவால் யாழ். மக்கள் அனுதினமும் பல துன்பங்களை அனுபவித்து வருவதை சுட்டிக்காட்ட முடியும் .  யாழில் ஒவ்வொரு பிரதேசத்திலும் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கொருவர் வெட்டியும் குத்தியும் கொள்வதால் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சட்டமும் நீதியும் பாதுகாக்கப்படுவது பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.


யாழிலுள்ள இராணுவப் பிரதானிகளும் நாட்டிலுள்ள இராணுவப் பிரதானிகளும் தங்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தால் இரண்டே நாட்களில் யாழில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆவா குழுவின் அட்டூழியங்களை அடியோடு இல்லாமலாக்கிவிட முடியுமென்று தெரிவித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வேக்கு சென்றிருந்த சமயம், அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் அவரிடம் , ஆவாக் குழு பற்றிய விபரங்களைக் கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு பிரதமர் , மிகவும் இளவயதுகளைக் கொண்ட இளைஞர்கள் சிலரால் பல்வேறு நோக்கங்களுக்காக இந்த ஆவா குழு செயற்படுத்தப்படுவதாகப் பதிலளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களைக் கட்டுப்படுத்தவும் மாகாணத்தின் சட்டம் மற்றும் சமாதானத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்துக்கு மிக இலகுவான காரியமாகக் காணப்படுவதாகவும் பிரதமர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

யாழிலுள்ள பொலிஸ் பிரதானிகளுக்கென்றால் இந்த ஆவா குழு பாரிய தலையிடியாகக் காணப்படுகிறது. இந்தக் குழுவின் அட்டகாசத்தினால் அங்குள்ள பொலிஸாருக்கு தங்களது வீடுகளுக்குக்கூட செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் இவர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டன. ஆனால் யாழ். பொலிஸ்  பிரதானிகள் இந்த ஆவா குழு உறுப்பினர்களை திட்டுவதை விட அவர்களைப் பற்றி எழுதும் ஊடகங்களையே திட்டித்தீர்க்கின்றார்கள். இந்த ஆவாக் குழுவைப் பற்றி எழுதி எழுதியே அவர்களை பிரசித்தப்படுத்தியது  ஊடகங்களே என பொலிஸார் குற்றம் சுமத்துகின்றனர். அண்மையில் வவுனியாவில் ஆவா குழு என்ற பெயரில்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் அவர்கள் தற்போது வவுனியாவில் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்  இவர்களின் ஆட்சியதிகாரம் உச்சமட்டத்தில் இருப்பதாகவும் அந்த சுவரொட்டிகளில்  தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது சம்பந்தமாக ஊடகத் தரப்பால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொலிஸ் பிரதானிகள் பதிலளிக்கும் போது வவுனியாவில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் ஆவா குழவுடன் சம்பந்தப்பட்டவையல்லவெனத் தெரிவித்தினர். மேலும் வேண்டுமென்றே ஒரு தரப்பால் பாதுகாப்புப் பிரிவினரின் கடமைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளுக்கு ஆவா குழுவினருக்கும் தொடர்பில்லையென பொலிஸார் தெரிவித்த கருத்தானது பாரிய சர்ச்சையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் யாழில் செயற்படும் குழுக்கள் தொடர்பில் விரிவான தகவல்கள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்விபரங்கள் வருமாறு;

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற பல்வேறு குற்றச் செயல்களை இதுவரை பொலிஸார் விசேட அதிரடிப்படையினருக்கு தங்களது கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னரை விட தற்போது யாழில் குற்றச்செயல்கள் இடம்பெறுவது குறைவடைந்தே காணப்படுகின்றது. இந்த எல்லா குற்றச்செயல்களும் யாழ்ப்பாணத்தில் காணப்படக்கூடிய 5 பிரதான குழுக்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.  இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் 58 பேர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களுள் 7 பேர் குழுவின் தலைவர்களாகவும் ஏனைய 51 பேர் உறுப்பினர்களாகவும் காணப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட இவர்களுள் 49 பேர்  நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 9 பேர் அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள  பாரிய குற்றங்கள் காரணமாக மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ். பொலிஸார் அங்கு மேலும் குற்றங்கள் இடம்பெறாத வண்ணமும் பிரதேசத்தின் நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் வண்ணமும் பாரிய பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். யாழிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுவும் இந்தத் திட்டங்களுக்காக வேண்டி பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பொலிஸார் மேற்படி தகவல்களை ஊடகங்களுக்குத் தெளிவுப்படுத்தி நான்கு நாட்கள் கூடச் செல்லவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர்களில் சிலர் கத்திமுனையில் ஆசிரிøயை மிரட்டி அவரிடம் காணப்பட்ட 18 பவுண் நகைகளையும் ஒரு தொகைப் பணத்தையும் களவாடிச் சென்றிருந்தனர். இதற்கு முன்னரும் இந்த வீட்டில் ஆவா குழு என்ற போர்வையில் வந்தவர்களால் கப்பம் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பில் வீட்டுரிமையாளராலும் ஊர் மக்களினாலும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் பொலிஸார் அதை நம்பவில்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர் யாழின் இருவேறு பிரதேசங்களில் இரு சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் ஆவா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையென்பதை பொலிஸாரால் மறுத்துகூற முடியாமல் போய்விட்டது. இதில் முதல் சம்பவம் , இம்மாதம் 9 ஆம் திகதி இரவு யாழ். சனசமுக நிலையம் அருகில் ஒருவர் வாளால் வெட்டி படுகாயங்களுக்குள்ளாக்கப்பட்டதன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சம்பவமும் அன்றைய தினமே பதிவாகியுள்ளது. அதாவது இனிப்புப்பண்ட விநியோக கடையொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்குள்ள பொருட்களை நாசம் செய்துவிட்டுச் சென்றிருந்தனர். கிடைத்த தகவல்களுக்கமைய இந்த இரு சம்பவங்களுடனும் யாழில் இயங்கும் ஆவா குழுவினரே சம்பந்தப்பட்டிருப்பதாகப்  பொலிஸார் ஊகித்துக் கொண்டனர். விரைந்து செயற்பட்ட பொலிஸ் பிரதானிகள் சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த குழுவிலுள்ளவர்கள்  மறைந்து வாழும் இடங்களை சோதனை செய்யவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்நாட்களில் யாழில் பல இடங்களில் இவ்வாறான சோதனை நடவைடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ். மக்களுக்கு இந்த சோதனை நடவடிக்கை பழகிப்போன ஒன்றாகக் காணப்பட்ட போதிலும் அவர்களின் மனதில் வித்தியாசமான எண்ணங்கள் இந்த சோதனை நடவடிக்கைகளால் தோன்றக்கூடும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வட மாகாண சபைத் தலைவர் சீ வீ கே. சிவஞானத்திடம் இது தொடர்பில் வினவிய போது யுத்தம்  இன்னும் நிறைவு பெறவில்லை என்றே நினைக்கிறேன் என எடுத்த எடுப்பிலேயே தெரிவித்திருந்தார்.  யாழ்.  மக்களுக்கு ஒவ்வொரு காலத்திலும்   ஏதாவதொரு விடயம் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. யுத்தமோ வந்து போய்விட்டது.  ஆனால் வந்திருக்கும் ஆவா குழு வதந்தது மட்டுமே. மீண்டும்  செல்லவில்லை. மக்கள் இவர்களுக்குப் பயந்தே காணப்படுகின்றனர். பொலிஸார் இவர்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். காலை நேரத்தில் அனைவரும் பொலிஸாரால் சோதனை செய்யப்படுகின்றனர்.

உடம்பெல்லாம் தடவி சோதனை செய்கின்றனர். இவ்வாறு இடம்பெற்ற போதிலும் கூட மாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ எங்காவதொரு இடத்தில் ஒருவர் வெட்டப்படுகின்றார்.  இல்லாவிடில் தாக்கப்படுகிறார். பொலிஸார் மேற்கொள்ளும் இந்த சோதனை நடவடிக்கைக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவ்வாறே யாழ். மக்களுக்கு இது புதுமையான விடயமல்ல . எந்தவொரு செயலுக்கும் முடிவொன்று காணப்பட வேண்டுமென்றே நாங்கள் கூறுகின்றோம். இங்கு பாருங்கள் ஆவா குழு அந்தக் குழு இந்தக் குழுவால் எவ்வளவு பிரச்சினையென்று ? எவ்வளவு நாளைக்குத்தான் கஷ்டங்களை அனுபவிப்பது ? அரசாங்கமோ மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாதெனக் கூறுகின்றது. மக்களை பீதியடைய வேண்டாமெனக் கூறுகின்றது. ஆனால் இப்போது இடம்பெறும் யுத்தம் யாழ்ப்பாணத்துக்குப்  போதுமானது. மக்களும் பயத்துடனேயே அன்றாடப் பொழுதைக் கழிக்கின்றனர்.  காரணம் இவ்வாறான குழுக்கள் மிரட்டிப் பணம் கேட்கின்றனர். கப்பம் பெறுகின்றனர்.இவற்றை வழங்காத சந்தர்ப்பத்தில் ஈவிரக்கம் பாராது வெட்டிப் போடுகின்றனர். வீடுகளுக்குள் குண்டை வீசுகின்றனர். நிலங்களுக்கு சேதங்களை விளைவிக்கின்றனர். இதனால் பொது மக்கள் மத்தியில் பயப்பீதி காணப்படுவது உண்மையே.

வடமாகாண சபைத் தலைவர் தெரிவித்தது போன்று யாழ். மக்கள் பயம்கொள்ளப் பல காரணங்கள் காணப்படுகின்றன. இறுதியாக அவர் கூறியதைப் போன்று நிலம் ,  பணம் கொள்ளையிடப்படுவதே இவர்கள் மத்தியில் பாரிய பயத்தை ஏற்படுத்தியமைக்கான பிரதான காரணங்களாகக் கருதப்படுகின்றன.  மற்றொரு காரணமாகக் கருதப்படுவது யாழில் செயற்படும் இவ்வாறான குழுக்களின் உண்மையான நோக்கம் என்னவென்பது தொடர்பில் யாரும் அறிந்திராமையாகும். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  58 பேரும் யாழில் மக்கள்  மத்தியில் வாள்வெட்டுத் தாக்குதல்  மேற்கொள்வது கொள்ளையடிக்கும் நோக்கில் மட்டும்தானா? என்ற கேள்வியும் எழுகின்றது. தெற்குக் கொள்ளையர்களோ சிறிய நகைக் கடையொன்றை கொள்ளையடிக்க வந்தாலும் சுட்டக்கொன்றோ அல்லது  கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு ஒருவர் அல்லது இருவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு ஒருவர் அல்லது இருவரை கொன்று விட்டு நிலம் , பணம் என்பவற்றை அபகரித்துச் செல்கின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இதுவரை கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்தும் அதற்கு முன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் செயற்பட்ட இந்த குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது  வாளால் வெட்டி பயத்தை ஏற்பத்துவது மட்டுமேயாகும். எனவே  இவ்வாறு யாழ்.  மக்களை பயமுறுத்தி அவர்களிடமிருந்து தங்களைத் அடையாளம் காண முடியாதளவுக்கு தங்களைத் தாங்களே மறைத்துக்கொள்ள முயற்சிப்பதன்  நோக்கம் என்னவென்பதை அறிய இதுவரை பாதுகாப்புப் பிரிவுகளுக்கு முடியாமல் போய்விட்டமை கவலைக்குரிய விடயமாகும். இன்றைய சூழ்நிலையில் ஆவா குழுவினரின் நோக்கம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

காரணம் என்னவென்றால் , பொல்லுகளுடனும் வாள்களுடனும் ஆவா குழுவினர் பொது மக்களை மிரட்டுவது வெறுமனே மக்களை பயப்பீதிக்குள்ளக்குவதற்கு மட்டுமில்லை என்பது அண்மையில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய தெளிவாகத் தெரிகிறது. இதுவரை ஆவாக் குழு உறுப்பினர்கள் பலர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பல பிரதேசங்களில்  துப்பாக்கிப் பயிற்சி  அளிக்கப்பட்டு வருவாதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் துப்பாக்கிப் பயிற்சி பணம் பெற்றுக்கொள்ளப்பட்டே வழங்கப்படுகின்றது.

துப்பாக்கி பயிற்சியை பெற்றுக்கொள்ள அதிக பணம் தேவைப்படுவதாலேயே ஆவாக் குழுவில் உள்ளவர்கள் யாழ். மக்களை அச்சுறுத்தியும் கப்பம் பெற்றும் பணத்தைக் கொள்ளையடித்து சேகரித்து வைத்துக்கொள்வதாக நம்பப்படுகிறது. அந்தப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி அங்குள்ள ஆவா குழு உறுப்பினர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அடுத்ததாக மேலெழும் கேள்வி என்னவென்றால் உண்மையாகவே ஆவா குழுவுக்கு கொள்ளையடிப்பதுதான் நோக்கமாக இருப்பினும் ஏன் இந்தியாவுக்குச் சென்று துப்பாக்கிப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். எமக்கு கிடைக்கப்பெற்ற புகைப்படத்துக்கு அமைய இந்தியாவுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் பயிற்சியானது சாதாரண உடற்பயிற்சியாக நோக்க முடியாது. அப்பயிற்சியானது தானியங்கித் துப்பாக்கிப் பயிற்சியாக இருக்க முடியுமென்றே நாம் கருதுகிறோம்  என மேலும் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆவா குழவினர் ஏன் இராணுவப் பயிற்சியை இவ்வளவு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு  பாதுகாப்புப் பிரிவினரே விடைகாண வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆவா குழுவினால் வவுனியா முழுவதும் ஒட்டப்படட்டிருந்த சுவரொட்டிகளில் ”நாங்கள் பிரபலமானவர்கள்”, ” நாங்கள் வவுனியாவுக்கு வந்திருக்கிறோம்” என்பன  போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த வேளையில் பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் இவை ஆவாக் குழுவினரால் ஒட்டப்பட்ட  சுவரொட்டிகள் அல்லவெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் கூட சிலவேளை இளைஞர்கள் சிலர் விளையாட்டாக துப்பாக்கியை கையில் வைத்திருக்கலாமென பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கக் கூடும். இவை எல்லாவற்றுக்கும் ஊடகங்களே காரணமாக இருக்கக்கூடும்  என்றும் பாதுகாப்புப்  பிரிவினரால் சொல்லப்படலாம். தங்கள் கடமையை சரிவரச் செய்யாவிடத்து இவ்வாறான பழிபோடல் சம்பவங்கள் இடம்பெறுவது வழமையானதொன்றாகவே இருக்கும்.

எனவே பாதுகாப்புப் பிரிவினர் சுயசிந்தனையுடன் சிந்தித்துச் செயற்பட்டால் எதிர்கால சந்ததியையாவது எம்மால் காப்பாற்றிக்கொள்ள முடியுமாகிப் போகும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக