அம்பேபுஸ்ஸ சின்ஹ ரெஜிமென்ட் முகாமில் கடந்த பல நாட்களாக இடம்பெற்றுவந்த சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் கடந்த 21 ஆம் திகதி அம்பலமானது. அன்று இராணுவ முகாம் காவல் பணியில் ஈடுபட்டிருந்த கேகாலை , புளத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டப்ளியூ .எச். எஸ். என் ஜயரத்ன என்ற இராணுவச் சிப்பாய் கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்த ரி- 56 ரக துப்பாக்கி களவாடிச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த இராணுவ முகாமின் சட்டமானது உயரதிகாரிகளிடமே காணப்பட்டது எனலாம். இந்த உயரதிகாரிகளின் வார்த்தைகளே சட்டமாக அங்கு காணப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் சாதாரண இராணுவ சிப்பாய்கள் கூட உயரதிகாரிகளாகவே செயற்பட்டனர். இவர்களால் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த சாதாரண வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது இப்படியிருக்க , சாதாரண இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவக் கட்டுப்பாடுகள் தொடர்பில் , முகாமிலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் அதிக நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் உயரதிகாரிகளால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கு சாதாரண இராணுவச் சிப்பாய்களால் சவால் விடுவதற்கும் எதிர்த்து நிற்பதற்கு முடியாமல் போனது. காரணம் அவர்கள் சொல்வதே அங்கு சட்டமாகக் கருதப்படுகிறது. இது தொடர்பான மேலதிகத் தகவல்களை மனித கொலை புரியாத ரி- 56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவத்தோடு தொடர்புபடுத்தி தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமின் இலக்கம் 500883 இன் கீழ் ரி- 56 ரக துப்பாக்கியொன்றும் 60 ரவைகளும் காணாமல் போனமைத் தொடர்பில் 2018.08.01 ஆம் திகதி மீரிகம பொலிஸ் நிலையத்தில் மேஜர் ரத்னாயக்க கங்கானம்லாகே தொன் மில்டனால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது. அந்தப் பதிவில் , பிரிகேடியர் அஜித் எல்லாவல நிறைவேற்றதிகாரியாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் முகாமின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட 3 காவலரண்களில் முகாமுக்குள் செல்லவுள்ள பிரதான காவலரண் நுழைவாயிலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவ இலக்கம் 100104 கொண்ட் எஸ்.கே. கருணாதாச என்பவருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி காணாமல் போனதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மீரிகம பொலிஸாரால் அத்தனகல மேலதிக நீதிமன்ற நீதவான் தரங்கா ராஜபக்ஷவிடம் இது தொடர்பான மேலதிக தகவல்கள் முன்வைக்கப்பட்டன. அதில் , காணாமல் போன துப்பாக்கி , குறித்த இராணுவச் சிப்பாய்க்கு இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் சேவை புரியும் கோப்ரல் எச். எச். டி. புஷ்ப குமாரவாலேயே வழங்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் பிரதான காவலரணில் வீரதுங்க , அத்தனாயக்க ஆகிய இரு இராணுவச் சிப்பாய்களே கடமையில் இருந்ததாகவும் காவல் பணியில் சார்ஜன்டுகளான விக்கிரமசிங்க மற்றும் பொடிநிலமே ஆகியோரே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இராணுவ வீரர் கருணாதாச தனது பொறுப்பில் இருந்த துப்பாக்கியை இராணுவ வீரர் விஜேதுங்கவிடம் ஒப்படைத்ததற்கான பதிவும் இருக்கத்தக்கவே இந்த துப்பாக்கி காணாமல் போயுள்ளது. துப்பாக்கி காணாமல் போனதை இரவு 12.20 மணியளவில் அறிந்துகொண்ட முகாம் அதிகாரிகள் எந்தவித பதற்றமோ , பயமோ இன்றி பொறுப்பில்லாத வகையில் எந்தவொரு சோதனையையும் மேற்கொள்ளாது மீரிகம பொலிஸ் நிலையத்துக்கு சென்று
2012.08.02 ஆம் திகதி காலை 8.15 மணியளவில் முறைப்பாடொன்றை செய்தனர்.
துப்பாக்கி காணாமல் போன சந்தர்ப்பத்தில் பாதுகாப்புக் காவலரண்களில் கடமையில் இருந்த அனைவரின் பெயர்களும் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும் துப்பாக்கியொன்று காணாமல் போன பட்சத்தில் முகாமிலுள்ள சட்டத்தின் பிரகாரம் அது தொடர்பாக முகாமுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிக்கு (அந்த நேரம் கடமையில் இருந்தவர் படைப்பிரிவுத் தலைவர் எல். எம். டீ. பண்டார) தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு இடம்பெற்றிருக்கவில்லை. அடுத்த நாள் காலை ரீ- 56 ரக துப்பாக்கி காணாமல் போனதை அறிந்துகொண்ட பொறுப்பதிகாரி, அது தொடர்பில் தனது உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். பின்னர் இது தொடர்பில் மீரிகம பொலிஸ் நிலையத்துக்கு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளும் பொருட்டு முறைப்பாடொன்றை பதிவு செய்ய வேண்டுமென முகாமின் சட்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தங்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைபாட்டுக்கமைய மீரிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்படி அந்த சந்தர்ப்பத்தில் அங்கு கடமையிலிருந்த அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. இருப்பினும் காணாமல் போன துப்பாக்கி தொடர்பில் எந்தவிதத் தகவல்களும் கிடைக்கப்பபெறவில்லையென பொலிஸாரால் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து தனது பொறுப்பில் இருந்த ரி-56 ரக துப்பாக்கியை ஒப்படைத்ததாக தெரிவித்த பதிவு செய்யப்பட்டவரான சிப்பாய் எஸ். ஜீ. கே. சஜித் கருணாதாச , ஏ.ஜீ.சி. குமார திசாநாயக்க , பீ.கே. சுசில் பண்டார பொடிநிலமே மற்றும் ஏ.ஜி. யூ. சாந்த விக்கிரமசிங்க ஆகிய சந்தேகநபர்களை 2018.08.24 ஆம் திகதி நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் , முதற்கட்ட விசாரணை முடிவடைந்த பின்னர் 2018.09.07 ஆம் திகதி அத்தனகல மாவட்ட நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது. 1996 இல. 26 துப்பாக்கிச் சட்டத்தின் (03) 44 44 (அ) பிரிவின் கீழ் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் அந்தச் சட்டத்தின் பிரகாரம் முறையான சாட்சிகள் முன்வைக்கப்படாததால் இவ்வாறு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் மூலம் தெளிவாக விளங்கிக்கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் , குறித்த முகாமில் இராணுவ பரிசோதனையொன்று மேற்கொள்ளப்படாமல் குறித்த குற்றம் மூடி மறைக்கப்பட்டு அந்தக் குற்றமானது பொது மக்கள் மீது சுமத்தப்பட்டு எவ்வாறாவது மூடி மறைத்துவிடலாம் என்ற நோக்கில் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட திட்டமாகக் கருதப்படுகிறது. துப்பாக்கியொன்று காணாமல் போகும் சந்தர்ப்பத்தில் குறித்த இராணுவ முகாமே முதலில் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் சோதனை மேற்கொள்ளும் எந்தவொரு அதிகாரியாலும் எதுவும் மூடி மறைக்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படும். மேலும் சம்பந்தப்பட்ட தகவல்களை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியுமாகிப் போகும். எனவே இவ்வாறான சோதனையொன்றுக்கு முகம் கொடுக்காமல் காணாமல் போன துப்பாக்கி பற்றி காலம் தாழ்த்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமையானது ,ஒரு சில உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை காப்பாற்ற முயற்சிக்கின்றனரோ என் றசந்தேகத்தை ஏறஙபடுத்துவதாயுள்ளது. அது என்னவோ தெரியவில்லை... தான் துப்பாக்கியை இன்னொருவரிடம் கொடுத்ததாக பதிவு இருந்தும். அவரின் வாக்குமூலம் எடுபட்டதாகத் தெரியவில்லை. உயரதிகாரிகளும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாகவும் தெரியவில்லை . அவர்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது முகத்தைப் பார்த்து குற்றவாளியை கண்டுபிடிப்பதேயாகும். பொலிஸ் அதிகாரிகளும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து இராணுவ வீரர்களையும் விசாரணை செய்தனர். இன்றும் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் , உயரதிகாரிகளிடம் முழு விசாரணையை மேற்கொள்ளமுடியுமாகவில்லை. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான பல காரணங்கள் காணப்படினும் அதில் நன்மையும் அதேபோல் தீமையும் இருப்பதால் அதை மேற்கொள்ள முடியாது பொலிஸார் திண்டாடி வருகின்றனர்.
இராணுவ முகாமில் துப்பாக்கி காணாமல் போனமை மற்றும் அதன் பிறகு கொல்லப்பட்ட இராணுவ வீரர் ஜயரத்னவின் மரணம் மற்றும் அவரிடமிருந்த துப்பாக்கி பறிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த முகாமிலுள்ள ஏனைய சாதாரண இராணுவ வீரர்கள் மற்றும் உயரதிகாரிகள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ;
முகாமை கண்காணித்துக்கொண்டது நிறைவேற்றதிகாரியின் நெருக்கமான பாதுகாப்பு வீரர்களேயாவர். இவர்களால் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும் அது தொடர்பில் எவரும் விசாரணை மேற்கொள்வதில்லை. பாதுகாப்புப் அரணில் காவலில் இருந்த இராணுவ வீரரொருவர் கொலை செய்யப்பட்டு , அவரின் துப்பாக்கியையும் எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நிறைவேற்றதிகாரியின் பாதுகாப்பு பிரிவில் சேவை செய்பவர்களாவர். இந்த முகாமுக்குள் அவர்கள் தனியாட்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலை காரணமாக காணாமல் போன மேற்படி துப்பாக்கித் தொடர்பிலும் இவர்கள் மூது சிறு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் முகாமில் ஏற்பட்ட இந்த இரண்டு சம்பவங்களின் போதும் முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை.
மேல் மாகாண வடக்குக்கு பொறுப்பான குற்றவிசாரணைப் பிரிவு அதிகாரிகளின் கைகளுக்கு மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணை இடமாற்றப்பட்டதன் பின்னரே இது தொடர்பான பூரண விசாரø ண ஆரம்பிக்கப்பட்டது எனலாம். இவ்வதிகாரிகளின் முழு அர்ப்பணிப்பு காரணமாக கொலை இடம்பெற்று இரு நாட்களில் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களையும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் இவர்களால் கைது செய்ய முடியுமாகவிருந்தது. முக்கியமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி , உப பொலிஸ் பரிசோதகர் வென்டகர்ட் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டமை சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. இராணுவ வீரர் ஜயரத்னவை கொலை செய்துவிட்டு ரி- 56 ரக துப்பாக்கியை எடுத்துச் சென்றமை தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு தாங்கள் மேற்கொண்ட விசாரணை பற்றி மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவு மேலதிகாரி ஒருவர் கூறுகையில் ;
2018. 09. 21 ஆம் திகதி அதிகாலை அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவ வீரரை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த துப்பாக்கி களவாடிச் செல்லப்பட்டுள்ளது. தலைமையதிகாரிக்கு கிடைத்த தகவலின் படி நாங்கள் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டோம். இது தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவ புலனாய்வு பூரண ஒத்துழைப்பை வழங்கினர். இதனால் சமம்பவம் தொடர்பில் பல தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கிணங்க விசாரணைகளை ஆரம்பித்தோம். அதன்படி முதலாவது விசாரணையாக முகாமிலுள்ள இராணுவ வீரர்களின் தொலைபேசி சுவடுகளை (tணூச்ஞிஞு) அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் , முகாமிலுள்ள வீரர் ஒருவர் மேல் எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் 2018.09.20 ஆம் திகதி விடுமுறை பெற்று வீட்டுக்குச் செல்வதாக கூறி முகாமில் மறைந்து இருந்துள்ளார். யாருக்கும் தெரியாமலேயே இவ்வாறு மறைந்திருந்துள்ளார். தனது தொலைபேசியூடாக முகாமில் கடமையிலிருந்த அதிகாரியொருவரோடு அதிகாலை 2.40 மணியளவில் உரையாடியுள்ளார். இதை வைத்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டோம்.
இந்த தொலைபேசி உரையாடல் மற்றும் அந்த இராணுவ அதிகாரி யாருக்கும் தெரியாமல் முகாமில் மறைந்திருந்தமை என்பனவே சந்தேகம் ஏற்படக் காரணமாய் அமைந்தன. அவருக்குச் சொந்தமான சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் கொலைச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவ முகாமிலிருந்து வெளியேறிச் செல்லும் சி.சி.ரி.வி. காட்சி விசாரணை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எமக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இதை வைத்து குறித்த இராணுவ வீரரே இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரி என்பதை நாம் அறிந்து கொண்டோம். பின்னர் அவரது வீடு அமைந்துள்ள நாரம்மல , போகஹமுல்ல பிரதேசத்தின் கொட்டதெனியாவ கிராமத்துக்குச் சென்றோம். பின்னர் போகஹமுல்ல , கட்டுபொத்த பொலிஸ் நிலையத்தினூடாக அவர் வீட்டில் இருக்கிறாரா என்பதை பார்த்து விட்டு குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியூடாக குறித்த இராணுவ வீரரை கைது செய்தனர்.
பின்னர் அவரைக் கைது செய்ததற்கான காரணங்களைக் கூறிவிட்டு மேலதிகத் தகவல்கள் பற்றியும் சம்பவத்தைப் பற்றியும் தெளிவாக கூறச் சொன்னார்கள். இராணுவ வீரரும் பின்வருமாறு விளக்கமளிக்கிறார். இந்த இராணுவ வீரருடன் நெருக்கமான இன்னொரு இராணுவ வீரருடன் இணைந்தே இந்தச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகவே துப்பாக்கியை களவாட திட்டம் தீட்டியிருந்தனர். பாதுகாப்பு வீரரை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த துப்பாக்கியை களவாடிச் செல்லும் பொருட்டு இவர்களிருவரும் இறுதியாக முகாமிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் வைத்து அதிகாலை 2.46 மணியளவில் தங்களது இறுதி உரையாடலை மேற்கொண்டுள்ளனர். இராணுவ முகாமிலிருந்து சட்டபூர்வமாக வெளியில் செல்வதாக தெரிவித்துவிட்டு இவர் அடிக்கடி பயன்படுத்தப்படாத மைதான வெளியரங்கிலேயே மறைந்திருந்துள்ளார். பின்னர் இவர்களிருவரும் கொலை செய்யப்பட்ட இராணுவ வீரரின் அருகில் சென்று ”தம்பி ஆயுதத்தைத் தாங்கள் ” எனக் கேட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அதைப் பொருட்படுத்தாது திரும்பியுள்ளார். காரணம் சம்பந்தப்பட்ட இரு இராணுவ வீரர்களும் தனக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதாலேயாகும். ”என்ன செய்கிறீர்கள் , என்ன நடக்கிறது இங்கே” என கொலை செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய் கேட்கும் போதே முதலாவது சந்தேகநபர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். அந்தக் கத்தியானது 26 சென்ரி மீற்றர் நீளமுடையது. கத்திக்குத்துக்கு இலக்கானவர் பாதி தூரம் ஓடிச் சென்ற போதும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
முதலாவது சந்தேக நபர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவரின் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியை வைத்துவிட்டு கொலைக்காக பயன்படுத்திய கத்தியுடன் முகாமிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், இரண்டாவது சந்தேக நபர் மீண்டும் முகாமுக்குள் இராணுவ விடுதி நோக்கிச் சென்றுள்ளார். முதலாம் சந்தேக நபர் அதிகாலை 3.7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் முகாமுக்கு வெளியில் சென்றுள்ளார். இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. காணொளியில் பதிவாகியுள்ளது. இவர் அந்தத் துப்பாக்கியுடன் போகஹமுல்ல பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுக்கருகாமையில் ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்தில் காணப்பட்ட பொது மயானத்துக்கே சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் துப்பாக்கியை , சடலம் புதைக்கப்பட்ட குழியொன்றுக்குள் மறைத்து வைத்துவிட்டு அதனருகாமையில் காணப்பட்ட கிணறொன்றினுள் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை வீசி சிட்டு சந்தேக நபர் தனது வீட்டுக்குச் சென்றார். அதிகாலை 4.30 மணியளவிலேயே இது இடம்பெற்றுள்ளது. பின்னர் கொலை செய்யும் போது அணிந்திருந்த ஆடையை வீட்டு பின்புறத்தில் குப்பை போடும் குழி ஒன்றுக்குள் போட்டு எரித்துவிட்டிருந்தார். அவ்வேளை மனைவி வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். இருப்பினும் கணவன் வந்துவிட்டதை அவதானித்திருக்கவில்லை. நாம் காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடித்துவிட்டோம். சந்தேகநபர் தனது சகோதரனின் புதைக்குழிக்குள்ளேயே துப்பாக்கியை மறைத்து வைத்துள்ளார். சந்தேக
நபரின் தகவலுக்கமைய ரி- 56 ரக துப்பாக்கி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி , மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை கைது செய்திருந்தோம். பின்னர் சந்தேக நபர்கள் மீரிகம பொலிஸ் நிலையமூடாக அத்தனகல நீதிமன்றத்துக்கு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சந்தேக நபர்கள் இருவரும் திருமணமான கொட்டதெனிய மற்றும் கன்தல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரியின் தனிப்பட்ட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்களாவர். கட்டளையிடும் அதிகாரி ஓய்வு பெற்றுச் சென்றவுடன் சந்தேக நபர்கள் முகாமுக்குள் தமது கடமைகளை ஒழுங்காக செய்திருக்கவில்லை. இவர்கள் தொடர்பில் உயரதிகாரிகளும் தேடிப்பார்க்கவில்லை. இவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தால் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருக்க மாட்டாது.
இச்சம்பவத்தின் பிரதான இரு சந்தேக நபர்களும் 11 வருடங்கள் மற்றும் 9 வருடங்கள் இராணுவ சேவையில் இணைந்திருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளில், களவாடப்பட்ட துப்பாக்கியை வைத்து வங்கிக் கொள்ளையொன்றையும் மேற்கொள்ளவும் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தெரியவந்தது. இந்த கொள்ளையை புரிய மாதக்கணக்காக திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மேல் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் மேற்பார்வையில் மேல் மாகாண வடக்குக்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் விசேட கட்டளைக்கிணங்க மேல் மாகாண வடக்கு குற்றவிசாரணைப்பிரிவு அத்தியட்சகர் , உப பொலிஸ் அதிகாரி மகேஷ் பண்டாரவின் மேற்பார்வையில் தலைமையதிகாரி , பிரதான பொலிஸ் பரிசோதகர் கயந்த தஹநாயக்கவின் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் வென்டர்கட் , பொலிஸ் கொஸ்தாபல்களான பண்டார , அபேகோன் , விஜேசிங்க மற்றும் மஞ்சுள ஆகிய பொலிஸ் குழுவினரால் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக