2019.01.29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைவாக மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள் குடியமர்த்தல் பணிகளை நிரந்தர குடியிருப்புகள், துப்பரவேற்பாட்டு வசதிகள், நீர் வழங்கல், பாதைகள், மின்சார இணைப்புகள் போன்ற பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி உட்பட சுகாதார வசதிகளை ஸ்தாபித்து துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க வீட்டின் உரிமையாளர்களினால் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 4750 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கும், இந்த பிரதேசத்திற்குத் தேவையான பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கும் பனை சார்ந்த கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக திக்கம வடிசாலை நிறுவனத்தை விருத்தி செய்வதற்குமாக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கமைவாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றங்கள், அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? அதன் மூலம் மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதா, புனர்வாழ்வுக்குப் பின்னரான மக்களின் நிலை என்ன என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் பயன்படுத்தி தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சிடம் விண்ணப்பித்து (பதிவு இலக்கம் . 145) சில தகவல்களை பெற்றுக் கொண்டோம். அத்தகவலுக்கமைய வட மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 170,754 குடும்பங்களைச் சேர்ந்த 556,675 பேர் மீள்குடி யேற்றப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 91,275 குடும்பங்களைச் சேர்ந்த 337,085 பேரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் யுத்தத்துக்குப் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டோர் தொகை 12,191 ஆவதுடன் புனர்வாழ்வுக்காக ஒருவரே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு 120,000 வீடுகள் தேவைப்படுவதாகவும் வட,கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களுக்கு 16,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்திருந்தது. கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக 7346 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை, அம்பாறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களும் அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இடம்பெயர்ந்த மற்றும் அகதிகளாக மீள குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக 1772 வீடுகள் நிர்மாணிக்கவுள்ளதாகவும் அதற்காக 722 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக 920 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவ்வாறு குறிப்பிடப்பட்ட செயற்றிட்டங்கள் ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட்டனவா என்பதுவே தற்போது பலரின் கேள்வியாக இருக்கின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பலருடைய வாழ்வாதாரங்கள் இன்றும் குறைமட்டத்திலேயே இருப்பதும் அதற்காக தினந்தோறும் போராட்டங்கள் நடப்பதும் வழமையான விடயமாகவே போய்விட்ட நிலையில் வடகிழக்கு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் வெற்றியளித்துள்ளதெனக் கொள்ளமுடியாது. வடகிழக்கில் யுத்தத்துக்குப் பின்னர் காணாமலாக்கப்பட்டோர், அகதிகளாகச் சென்றோர் மீளத்திரும்புதல், அவர்களுக்கான மீள்குடியேற்றம், தடுத்துவைக்கப்பட்டுள்ளோர், காணிகள் விடுவிக்கப்படாமை, தொழில் மற்றும் வருமானப்பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதியின்மை என இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தற்போதும் முகம் கொடுத்துவரும் நிலையில் , வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்மைப்பு வசதிகளில் திருப்தி கொள்ளமுடியாது. அட்டவணை 01 இல் வடக்கு , கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்டோருக்காக 2015 2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சில சந்தர்ப்பங்களில் மீள்குடியேற்றம் என்பது காணிகளை பெற்றுக் கொடுத்தலும் அல்லது தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதாக மட்டுமே இருக்கின்றது. அதன்பின்னர் அம்மக்கள் குடிநீர் உட்பட ஏனைய சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பாரிய சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, காஞ்சுரமோட்டையில் குடியேற்றப்பட்ட 46 குடும்பங்கள் இதுவரையில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றன. இதில் 17 குடும்பங்கள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதி தமிழ் கிராமங்களில் சுமார் 8000 வரையிலான தமிழ்க் குடும்பங்கள் மீளக்குடியேறி வாழும் நிலையில் அவர்களுக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றே கூறப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் வனவளத் திணைக்களத்தின் கெடுபிடிகள் காரணமாக 278 தமிழ்க் குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு யுத்தத்துக்குப் பின்னர் கிளிநொச்சி கரியாளை நாகபடுவான் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறி 10 வருடங்கள் கடக்கின்றபோதும் எவ்வித அடிப்படை வசதிகளும் பூர்த்திசெய்யப்படாத நிலையில் அன்றாட வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படுகின்றனர். இக்கிராம மக்களுக்கான போக்குவரத்து வசதிகள், சுகாதார வசதிகள் எவையும் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்படவில்லையெனவும் அதேநேரத்தில் தரம் 5 வரை மாத்திரமே பாடசாலை காணப்படுவதால் அதற்கு மேற்பட்ட வகுப்புக்களில் கல்விகற்க வேண்டுமாயின் 10 கிலோமீற்றருக்கு மேற்பட்ட காட்டுப்பாதையூடாகப் பயணித்தே பாடசாலைக்குச் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட இரணைதீவில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 28 வருடங்களின் பின்னர் 2018, மே மாதம் முதலாம் திகதி தங்களது சொந்த நிலங்களில் குடியேறி ஒன்றரை வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் எவ்விதமான அடிப்படை வசதிகள் இல்லாமலும் வீட்டுத்திட்டங்கள் இல்லாமலும் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 320 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் மருத்துவ வசதிகளின்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அம்மக்கள், அண்மையில் இரணைத்தீவுப் பகுதியில பாம்புக்கடிக்கு இலக்கான ஒருவரை கடற்படையினரின் உதவியுடன் இரணைதீவிலிருந்து முழங்காவில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திலே ஜெயபுரம் கிராமத்தில் வாழுகின்ற சுமார் 135 குடும்பங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்ட நிலையில் பரிதவித்துக் கொண்டிருப்பதாகவும் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியவர்களில் சுமார் 2400 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், வவுனியா வடக்கு உள்ளிட்ட பிரதேச பிரிவுகளில் மீளக்குடியேற்றப்பட்டிருந்தும் ,அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே இருக்கின்றனர். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றத்திட்டத்துக்காக அமைச்சால் எவ்விதமான காணிகளும் சுவீகரிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 14000 க்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக பதிவு செய்துள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுவும் மீள்குடியேற்றத்துக்கு தடையான ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது. வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியினால் அனைத்து வசதிகளையும் கட்டங்கட்டமாக அமையப் பெறக்கூடிய கிராமமாக அந்த இடம் உருவாக்கம் பெறுகின்றது. வடக்கு அபிவிருத்தி அமைச்சினூடாக யாழ். மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 1500 வீடுகள், இரண்டாம் கட்டமாக 1000 வீடுகள், தற்போது 300 வீடுகள் இவ்வருடம் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
யாழ். மாவட்டத்தில் அரச காணியென்பது மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிலேயே காணப்படுகின்றது. காணியில்லாதவர்கள் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் குடியமர்ந்தால் காணிகளும் வீடுகளும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ள போதும், 99 வீதமானோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்றக்காணிகள், தொழில்நுட்பக் கல்லூரிக்குரிய காணிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குரிய காணிகள் போண்றவற்றில் இடம்பெயர்ந்த மக்கள் குடியமர்ந்திருந்த நிலையில் , தற்போது நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால் அவ்விடயங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் நீதிமன்ற காணிகளிலிருந்த 30 குடும்பங்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் காணியற்றிருந்த 20 குடும்பங்கள் ஆகியவற்றுக்கு கல்லுண்டாய்வெளியில் 50 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றமை, வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமை, கட்டிடங்கள் மட்டும் கொடுக்கப்படுகின்றமை, தொழில் பேட்டைகள் அமைக்கப்படாமை போன்ற பல காரணங்கள் மக்களின் வறுமை நிலையினை மேலும் அதிகரிக்கின்றன. கிராமப்புறங்களில் அரசாங்கத்தால் உருவாக்கப்படுகின்ற குடியேற்றங்கள் சகல வசதிகளையும் கொண்டுள்ளதுடன், பொருளாதார ரீதியிலான உதவிகள் மற்றும் இலகுகடன் உதவிகள் என்பன கூட வழங்கப்படுகின்றன. பெரும்பான்மையின கிராம மக்களுக்கு மாத்திரம் எப்படி அவை சாத்தியமாகின்றது. அவ்வாறெனில் பல அரசாங்கங்கள் ஆட்சியமைப்பதற்கு உதவிய ஆட்சியாளர்களையும் மக்களையும் கொண்ட வடகிழக்கு மாகாணத்தில் இத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு ஏன் முடியாமல் இருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு சக்திகள் மூலமான யுத்த வெற்றியை கொண்டாடி வந்தாலும்கூட அவற்றால் பாதிப்படைந்த மக்கள் இன்னும் மீளமுடியாத நிலையிலேயே இருந்துவருவது அரசாங்கத்தினதும் ஆட்சியாளர்களினதும் தோல்வியையே வெளிப்படுத்துகின்றது. காலங்காலமாக ஆட்சிக்குவரும் அரசாங்கங்களிடம் பேச்சுவார்த்தைகளையும் இனப்பிரச்சினையையும் முன்வைக்கும் ஆட்சியாளர்கள் மக்களுடைய உடனடித் தேவைகளையும் அத்தியாவசியத் தேவைகளையும் கவனத்தில் கொள்வதில்லை. காணாமல் போனோரை பெற்றோரும் உறவினர்களும் எவ்வாறு தேடியலைகின்றார்களோ அதேபோலவே அவர்களுடைய வாழ்வாதாரமும் தேடிவேண்டிய பிரச்சினையாகவே இருக்கின்றது. இதற்கு தீர்வுதான் என்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக