கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜூலை, 2019

பெருந்தோட்டம் சார்ந்த தொழிற் சங்கங்கள் என்ன செய்கின்றன?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் இன்றும் தீர்க்கப்படாத பிரச்சினையாக மாறியிருக்கிறது. அத்தோடு 1000 ரூபா சம்பளவயர்வு கோரிக்கையும் கூட்டு ஒப்பந்தத்தில் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் பெருந்தோட்ட மக்களின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு ஆறு மாத காலத்திலும் தொழிலாளர்களை தோட்டத் தலைவர்கள் நாடிச்செல்வது உண்டு. அதேவேளை தொழிற்சங்க பலத்தை மக்கள் கட்டாயப்படுத்தி ஏற்கவைக்கப்படுவதால் ஏதாவதொரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெறவேண்டியுள்ளது.

இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டனவோ இல்லையோ  அவர்களை ஆள்வதற்கும் அவர்களுக்கு பலர் தலைவராக இருக்க முயற்சித்ததன் விளைவாக இன்று பெருந்தோட்டத்துறை தொடர்புடையதாக 32 தொழிற்சங்கங்கள் இருப்பதாக அறிந்துகொள்ள முடிகின்றது. தெகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தொழில் திணைக்களத்தில் பெருற்தோட்டத் தொழிலாளர்களை
அங்கத்தவர்களாக கொண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகள் தொடர்பான விபரங்களை 2018.11.21 ஆம் திகதி கோரிய நிலையில் தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டு கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் 2019.06.07 ஆம் திகதி (03/01/11) தொழில் திணைக்களத்தினால் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தும்ரூபவ் கோரப்பட்ட
மொழியில் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

இந்தியாவிலிருந்து இறக்குமதி தொழிலாளர்களாக இலங்கை வந்தவர்கள் இன்று இலங்கை பெருந்தோட்டங்களில் நிரந்தர தொழிலாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியாவிலிருந்து எப்படி வந்தார்களோ அதே போலவே இன்னும் முன்னேற்றமில்லாமல்  உரிமைகளுக்காகவும் நியாயமான சலுகைகளுக்காகவும் போராடிக்
கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் இன்றுவரையும் அவர்களுக்குத் தலைமைத்துவம் வழங்கிய கட்சிகள் அல்லது தலைவர்கள் (ஒரு சிலவற்றைத் தவிர்த்து) எதை முழுமையாகப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு இன்று தலைமைத்துவம் வழங்க 32 தொழிற்சங்கங்கள் அல்லது கட்சிகள் களத்தில் நிற்கின்றன என நினைத்தால் வேடிக்கையாகவே இருக்கிறது.

இருப்பினும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொழிற்சங்க கூட்டு கமிட்டி மற்றும் 22 பெருந்தோட்ட கம்பனிகளாகவே இருக்கின்றன. பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி 32 தொழிற்சங்கங்கள் இருந்தாலும் கூட அவர்களால் என்ன செய்துவிட முடிகின்றது. போட்டி அரசியலை மட்டுமே இன்று மலையகத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடிய நிலைமை இருக்கிறது.

பெருந்தோட்டங்களுடன் தொடர்புடைய 32 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்திருந்தால் கூட ஒருகூட்டு சக்தியாக உருவெடுத்திருக்க முடியும். ஆனால் அரசியல் நோக்கங்களுக்காகவும் கௌரவத்துக்காகவும் இன்று தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் பெறவைக்கும் நிலை காணப்படுகிறது. அத்தோடு பெரும்பாலான தொழிற்சங்கங்களின் நோக்கம் தேர்தலாக மட்டுமே இருக்கின்றன. இவ்வாறான நிலையில் எம்மைவைத்து எத்தனைபேர் அரசியல் செய்கிறார்கள் சமூக சேவை மற்றும் பல நோக்கங்களை யார் நிறைவேற்றுகிறார்கள் என்பதை பலரும் அறிந்து கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. எமக்கு கிடைத்த தகவல்களில் 32 தொழிற்சங்கங்களின் உறுப்புரிமை இலக்கம் பெயர் அங்கத்துவ வருடம் மற்றும் அங்கத்துவ உறுப்பினர்களின் தொகை என்ற அடிப்படையில் பின்வரும் பட்டியலை அனைவரும் தெரிந்துகொள்ளும் பொருட்டு பின்வருமாறு இணைத்துள்ளேன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக