சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு மிகவும் முக்கியமான தகவலொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அத்தகவலில் , கொழும்பு நகருக்கு அண்மித்த பிரதேசமொன்றில் தலைமறைவாகி வாழ்ந்துவரும் பங்களாதேஷ் நாட்டின் சிலர் பாரியளவான தொகையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பேருவளை கடற்பிரதேசத்தில் வைத்து வரலாற்றிலேயே பாரிய தொகையான அதாவது 210 கிலோ ஹெரோயின் இரண்டாவது முறையாக கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் பாரிய தொகை ஹெரோயினை கைது செய்வதற்கான திட்டத்தை இரகசியமாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்ததுதான் விசேட அம்சமாகும்.
தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனைத்துப் புலனாய்வுத் தகவல்களையும் தங்களது தலைமையதிகாரிக்கு தெரிவிக்க பொலிஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கிணங்க பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கட்டளை அதிகாரியும் தலைமையதிகாரியுமான பொலிஸ் மா அதிபர் எம். ஆர் . லதீப் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமையதிகாரி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த ஆகிய அதிகாரிகளின் பூரண மேற்பார்வை மற்றும் வேண்டுகோளின் கீழ் இந்த பாரியளவான ஹொரோயின் விற்பனையாளர்களை கைது செய்வதற்கான திட்டத்தை ஆரம்பித்தனர். இந்த திட்டத்துக்காக வேண்டி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மிகவும் திறமையான 10 அதிகாரிகளும் அதேபோன்று பொலிஸ் விசேட அதிரடிப் படைப் பிரிவின் அதிகாரிகள் எட்டு பேரும் ஒன்றிணைந்தனர். இந்தத் திட்டத்துக்கு தேவையான சகல உதவிகளையும் விபரங்களையும் பெற்றுக்கொடுக்க பொலிஸ் மா அதிபர் லதீப் மற்றும் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த ஆகியோர் முன்வந்தனர். கைது நடவடிக்கைகளுக்காக வேண்டி பொலிஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் மாறு வேடம் போட முடிவு செய்தனர். அதற்கிணங்க ஆட்டோ சாரதிகளாக சிலரும் தனவந்தர்களாக சிலரும் வேலைத் தேடி அலையும் பாணியில் சிலரும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்காக வேண்டி தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தனர். குறித்த பொலிஸ் அதகாரிகளின் நோக்கமாகக் காணப்பட்டது, கூடிய சீக்கிரம் இந்தப் பங்களாதேஷ் வியாபாரிகள் குழுவை சட்டத்தின் முன் நிறுத்துவதாகும். இரண்டு கிழமைகள் இரவு - பகல் பாராது மிகவும் கஷ்டமான இந்தச் செயலை மேற்கொண்டு தகவல்களைத் திரட்டிக் கொண்டனர். அதற்காக வேண்டி வித்தியசமான வழிமுறைகளைக் கையாண்டும் புதிய புதிய உபாயங்களைப் பயன்படுத்தியும் தமது உயிரை பயணம் வைத்தும் செயற்பட்டனர். தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயற்பாடு கடந்த 31 ஆம் திகதி மாலையே முடிவுக்கு வந்தது.
தொகையாக ஹெரோயினை கொண்டு சென்று விற்பனை செய்யும் பங்களாதேஷ் பிரஜைகள் தங்கியிருக்கும் இடங்களை பொலிஸார் தேடிக் கண்டுப்பிடித்தனர். கல்கிஸ்ஸ , பன்சல வீதியில் அமைந்துள்ள வீட்டுக் குடியிருப்புத் தொகுதிக்கு முன்னால் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் மாறு வேடம் தரித்திருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தனர். யாருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் அவ்வதிகாரிகள் இருவரும் அடிக்கடி குடியிருப்புத் தொகுதியின் கீழ் மாடியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர் சார் நமக்குக் கிடைத்த தகவல்களின் படி அவர்களிருவரும் வெளியே வர வேண்டும் எனக் கூறினர். எமது திட்டம் தோற்றுப்போகாது. இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் என மற்ற பொலிஸ் அதிகாரி பதில் வழங்கினார். இரு பொலிஸாரும் பொறுமைக்காக் முடியாமலேயே இருந்தனர். சில நிமிடங்ளே சென்றன. கீழ் மாடியில் காணப்படும் வாகனத் தரிப்பிடம் நோக்கி இரு இளைஞர்கள் வருவதை பொலிஸார் கண்டனர்.
இளைஞர்கள் கைகளில் பெரிய 4 பொதிகள் காணப்பட்டன. அவர்கள் இருவரும் சற்றுத் தடுமாறுவதை பொலிஸார் கவனிக்கத் தவறவில்லை. இரு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் தனது தொலைபேசி மூலம் அழைப்பொன்றை எடுத்தார். அவ்வழைப்பில் சார் நமக்குத் தேவையான இருவரும் வந்துவிட்டார்கள். இப்பவே குடியிருப்புத் தொகுதிக்கு வாருங்கள் நேரம் போனால் இருவரும் சென்று விடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. பொலிஸாரின் தகவலுக்கு பின் சில நிமிடத்திலேயே வானொன்று அப்பகுதியை நோக்கி வந்தது. இந்த வானுக்குள் சிவில் உடை தரித்த பொலிஸ் அதிகாரிகள் இருப்பதை யாரும் காணவில்லை. வானிலிருந்து இறங்கிய இரு பொலிஸாரும் விரைந்து சென்று அந்த இளைஞர்கள் இருவரையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்தனர். ”நாங்கள் பொலிஸார். ஓட முயற்சி செய்ய வேண்டாம் இந்த இடத்தை கலவர பூமியாக்க வேண்டும்” எனக் கூறிய பொலிஸ் அதிகாரிகள் இளைஞர்களிடம் காணப்பட்ட பெரிய 4 பொதிகளையும் கைப்பற்றினர். இளைஞர்களிடமிருந்து கைப்பற்றிய பயணப் பொதிகள் நான்கிலும் பிரசித்த வியாபாரப் பெயரைக் கொண்ட கேக் பெட்டிகளே காணப்பட்டன. கைது செய்த இளைஞர்களை அவர்களுக்குச் சொந்தமான வீட்டுக்குப் பொலிஸார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இளைஞர்களிடமிருந்து கைப்பற்றிய கேக் பெட்டியை பரிசோதிக்க பொலிஸார் முடிவு செய்தனர். மிகவும் சூட்சுமமான முறையில் கேக் பெட்டிகளில் விலையுயர்ந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட ஹெரோயின் வியாபாரிகள் இருவரும் பங்களாதேஷ் நாட்டுக்காரர்களாவர். அவர்கள் 30 மற்றும் 40 வயதுகளையுடையோராவர். சுற்றுலா விசா பெற்றுக்கொண்டே அவர்களிருவரும் எமது நாட்டுக்கு வந்திருந்தனர். பல மாதங்களாக இலங்கையில் மறைந்து வாழ்ந்து வந்த பங்களாதேஷ்காரர்கள் சரளமாக ஆங்கிலம் பேசினர்.
பல வழிகளிலும் இருவரும் தப்பிச் செல்ல முயற்சித்த போதும் அவர்களது முயற்சி கைகூடவில்லை. பொலிஸ் குழு இவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை செய்த போதிலும் அவர்கள் உண்மையை மறைத்தனர். ஒரு வியாபாரியின் வீட்டில் பல சாவிகளுடன் சாவிக்கொதொன்று காணப்பட்டது. இந்த சாவிகள் யாருடையவை? எதற்குரியவை ? என பொலிஸார் கேட்டனர். கொஹுவல கவுடான வீதியில் எமது நண்பரொருவரின் வீடுள்ளது. இந்த சாவிக் கொத்து அந்த வீட்டினுடையது. நாங்கள் அந்த வீட்டுக்கே இளைப்பாறச் செல்வோம். அதனாலேயே இந்த சாவிகள் எங்களிடமுள்ளன. வியாபாரியொருவர் பொலிஸாரின் கவனத்தை திசைத்திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார். கல்கிஸ்ஸ வீட்டைப் பரிசோதித்த பொலிஸ் அதிகாரிகள் வியாபாரிகளையும் அழைத்துக்கொண்டு கொஹுவல - கவுடான வீதியில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றனர். வீட்டை திறந்த போது பொலிஸார் அதிர்ச்சிக்குள்ளாகினர். தன் கண்களால் நம்ப முடியாத நிலையில் பொலிஸ் அதிகாரிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அந்த வீடானது முழுதும் ஹெரோயினால் நிரப்பப் பெற்றிருந்தது. ஹெரோயினை அளக்கும் உபகரணம் , ஹெரோயின் கலக்கும் உபகரணம் மற்றும் அவற்றை பொதி செய்யப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பன அந்த வீட்டுக்குள் காணப்பட்டன. பிரசித்தம் பெற்ற பெருந்தொகையான கேக் பெட்டிகள் வீட்டுக்குள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் இந்த கேக் பெட்டிக்குள் மறைத்து வைத்தே ஹெரோயினை விநியோகம் செய்தனர். இந்த வீட்டிலிருந்து 270 கிலோ ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதன் பெறுமதி 4000 மில்லியனாகும்.
இந்த ஹெரோயின் கைப்பற்றலானது வரலாற்றிலேயே கைப்பற்றப்பட்ட பாரிய தொகையாகும். பொலிஸாரின் விசாரணையிலிருந்து , மேற்படி வீட்டில் காணப்பட்ட ஹெரோயின் களஞ்சியசாலையானது நாடு பூராகவும் ஹெரோயின் விநியோகம் செய்யும் மத்திய நிலையமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கை முழுவதும் விநியோகம் செய்வதற்கப்பால் வெளிநாடுகளுக்கு ஹெரோயினை அனுப்பும் பணியும் இந்த வீட்டுக்குள் இடம்பெற்றிருப்பதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது. நம் நாட்டுக்குக் கேக் பெட்டிகள் மூலம் ஹெரோயினை விநியோகித்து வந்த அதேவேளை ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு ஹெரோயினை விநியோகம் செய்வதற்கு பாரியளவான பயணப் பொதிகளை பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறான பெருந்தொகையான பயணப் பொதிகளை அவ்வீட்டிலிருந்து பொலிஸார் கைப்பற்றினர்.
கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி 32 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் யுவதியொருவர் இரத்மலானை பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டமை தெரிந்ததே . குறித்த ஹெரோயின் களஞ்சியப்படுத்தும் வீட்டிலிருந்தே யுவதிக்கு ஹெரோயின் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஹெரோயின் வியாபாரத்தை முழுதும் வெளிநாட்டுக்காரர்களே முன்னெடுத்து நடத்திச் சென்றிருந்தனர். பாகிஸ்தான் , பங்களாதேஷ் மற்றும் டுபாய் நாடுகளில் தலைமறவாகி வாழ்ந்து வரும் பெரிய ஹெரோயின் வியாபாரிகள் மூலம் இந்த ஹெரோயின் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பரிவு மூலம் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல உண்மைகள் வெளிவந்தன. இந்த பெருந்தொகையான ஹெரோயின் பாகிஸ்தானிலிருந்தே அனுப்பப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலுள்ள பிரதான சந்தையிலிருந்து ஹெரோயின் தயாரிப்பவர்களால் மூன்று முறைகளில் இந்த ஹெரோயின்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன.
பெரிய ரோலர் படகுகள் மூலம் கடல் வழியில் கொண்டுவரப்படும் ஹெரோயின் தொகை இலங்கைக்கு அண்மித்த மீன்பிடியாளர்களின் சிறிய படகுகளில் ஏற்றவப்படும். பின்னர் இந்தப் படகுகள் மூலம் கொண்டுவரப்படும் ஹெரோயின், வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களால் கொஹுவல - கவுடானவில் அமைந்துள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்படும். மேலும் வெவ்வேறு இலத்திரனியல், மின் உபகரணங்களில் ஹெரோயினை பொதித்து மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கும் மேலாக விமானம் மூலமும் சூட்சுமதமான முறையில் களஞ்சியசாலைக்கு ஹெரோயினை கொண்டு வந்திருப்பதாகவும் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. இந்த ஹெரோயின் தொகையை தயாரிக்கும் பாகிஸ்தான் நாட்டுக்காரர்களுக்கு ஒரு கிலோவுக்கு 25 இலட்சம் ரூபா செலுத்தப்படுகிறது. இந்த பெருந்தொகையான ஹெரோயினுக்கு இரு சொந்தக்காரர்கள். அவர்கள் டுபாயில் வசித்து வருகின்றனர். முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இந்த இரு கோடீஸ்வர வியாபாரிகள் மூலம் கொள்வனவு செய்யப்படும் ஹெரோயின்கள் மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கவுடான பிரதேசத்திலுள்ள ஹெரோயின் களஞ்சியசாலைக்கு பத்திரமாக அனுப்பப்படும். இந்த ஹெரோயினை விற்கும் பொறுப்பு இரு பங்களாதேஷ் பிரஜைகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொழிலாகவே இதனைச் செய்கின்றனர். ஒரு கிலோ ஹெரோயினை விற்பனை செய்தால் அவர்களுக்கு அதற்காக வேண்டி இரண்டு இலட்சம் ரூபா செலுத்தப்படும். இந்த ஹெரோயின் கும்பலோடு பங்களாதேஷ் நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இங்கு ஹெரோயின் விற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது இந்த கோடீஸ்வர பெண் வியாபாரியேயாவார். மேலும் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு வீடுகளை தேடிக் கொடுத்தல், தேவையான வாகனங்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் யார் யார் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் போன்ற தீர்மானங்களை குறித்த கோடீஸ்வர பெண்ணே தீர்மானிப்பதாக பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ள சகல வசதிகளும் கொண்டமைந்த வீடும் குறித்த பெண்ணாலேயே வாடகை மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் விற்பனை
செய்பவர்கள் மாதத்துக்கு இரு முறை இப்பெண்ணால் மாற்றப்படுகின்றனர். அவள் அப்படி செய்ததற்கு காரணம் தொடர்ந்து ஒருவரே வியாபாரத்தில் ஈடுபடுவாராயின் ஏதாவது விபரீதம் ஏற்படக்கூடும் என்பதாலேயாகும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்ட இரு பங்களாதேஷ் பிரஜைகளும் விற்பனைக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் வருவதற்கு முன்னர் வேறு பங்களாதேஷ் பிரøறுகளே இந்த வீட்டில் மறைந்திருந்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். பாகிஸ்தானில் ஹெரோயின் தயாரிப்பாளர்களிடம் ஒரு கிலோ ஹெரோயினை 27 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் டுபாயில் வசித்து வரும் முஸ்லிம் வியாபாரிகள் இருவர் இங்கு 53 இலட்சம் ரூபாவுக்கே ஒரு கிலோ ஹெரோயினை விற்பனை செய்கின்றனர். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் ஹெரோயின் பெரசிட்டமோல் மாத்திரைகளோடு கலக்கப்பட்டு ஒவ்வொரு எடைப் பிரமானத்தில் விற்கப்படுகிறது. . ஒரு கிலோ ஹெரோயின் சில்லறை விலையில் விற்கப்படுமிடத்து அதன் பெறுமதி 1 கோடியே 20 இலட்சம் ரூபாவாகும்.
ஹெரோயின் களஞ்சியசாலையில் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பொலிஸாருக்குத் தெரியாமல் மிகவும் சூட்சுமமாக ஹெரோயினை விநியோகம் செய்து வந்தமையால் பொலிஸாரிடம் சிக்காமல் நீண்ட நாட்கள் வியாபாரம் செய்ய முடியுமாகவிருந்தது. இருப்பினும் பொலிஸ் அதிகாரிகளின் பிடியிலிருந்து அவர்களால் தப்பித்துக்கொள்ள முடியாமலிருந்தது. இங்குள்ள ஹெரோயின் வியாபாரிகள் டுபாயில் வசித்து வரும் தனவந்தர்களிடமிருந்தே ஹெரோயினை கொள்வனவு செய்கின்றனர். கவுடான ஹெரோயின் களஞ்சியசாலைக்கு தேவையான ஹெரோயினை குறித்த இரு முஸ்லிம் வியாபாரிகள் மூலம் பாகிஸ்தானிலிருக்கும் ஹெரோயின் தயாரிப்பாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர் என பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டுக்குள் 742 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கிட்டதத்தட்ட ஒரு தொன் அளவாகும். இதிலிருந்து இலங்கையானது தொன் கணக்கில் ஹெரோயின் கொடுக்கல் - வாங்கல் செய்யும் குடுகாரர்கள் இருக்கும் இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசேட அதிரடிப் படை மற்றும் பொலிஸார் இணைந்து தொன் கணக்கில் ஹெரோயினை கைப்பற்றினாலும் சந்தையில் ஹெரோயினுக்கு குறையிருக்கவில்லை. குடுக்காரர்கள் மிகவும் இலகுவான முறையில் இலகு விற்பனைக்கு ஹெரோயினை பெற்றுக்கொள்கின்றனர். எவ்வளவுதான் ஹெரோயின் விற்பனையை இல்லாது செய்தாலும் ஏதோ ஒரு வழியில் நாட்டுக்கு ஹெரோயின் வந்து கொண்டுதான் இருக்கின்றது. மேலும் குடக்காரர்களுக்கு மிகவும் இலகுவான முறையில் கைகளுக்கு கிடைக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 500 கிலோ ஹெரோயின் நாடு முழுவதிலும் இருந்து பொலிஸ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன.
தேசிய போதைப்பொருள் வியாபாரிகள் தங்களுக்கெதிராக செயற்படும் அதிகாரிகளை இவ்வுலகத்தைவிட்டு அனுப்பியோ அல்லது பணத்தால் அவர்களை தம்பக்கம் இழுத்துக்கொண்டோ தங்களது வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். யுத்தத்தால் அழிக்கப்பட்ட உயிர்களை விட போதைப்பொருள் பாவனையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே தற்போது அதிகமரித்துவருகிறது. பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறும் இரகசியத் தகவலடிப்படையிலேயே இவ்வாறான பாரிய தொகை ஹெரோயின் கைப்பற்றப்படுகின்றன. இல்லாவிடில் இவ்வாறான சுற்றிவளைப்ப>களை மேற்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. திரைமறைவில் இருந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவிசெய்யும் இவ்வாறான சமூக சேவையாளர்கள் போற்றப்படக் கூடியவர்களே . சிலர் தங்களது உயிரைப் பணயம் வைத்தே இவ்வாறான சேவையில் ஈடுபடுகின்றனர். அவ்வாறே இவ்வாறானவர்களைப் பாதுகாத்து சான்றிதழ்கள் கொடுப்பது அவசியமாகும். இல்லாவிடில் போதை ஒழிப்புப் பிரிவுக்கோ அல்லது விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாருக்கோ இவ்வாறான போதை ஒழிப்பு முறியடிப்புகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக