நாட்டின் பொது நிதிக்கு பங்களிப்பு செலுத்தும் முக்கிய கடமையை அரச நிறுவனங்கள் (State-Owned Enterprises - SOEs) செயற்படுத்துகின்றன. இவற்றில் திணைக்களங்கள், அதிகாரசபைகள், சபைகள், கூட்டுத்தாபனங்கள் என்பன முக்கியமானவை. அரசுக்குச் சொந்தமான 527 அரச நிறுவனங்கள் காணப்படுகின்ற போதும் நிதி அமைச்சினால் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றை நிதியமைச்சின் கீழுள்ள அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் நிர்வகித்து வருகின்றது.நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் தேசிய கடன் வளர்ச்சி என்பவற்றை கருத்தில் கொண்டு அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அவற்றுக்கு அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நட்டங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. நிதியமைச்சின் கீழுள்ள அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் நிர்வகிக்கும் சுமார் 20 நிறுவனங்கள் தொடர்ச்சியான நட்டத்தை எதிர்கொள்வதாக அத்திணைக்களத்தின் தரவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
இவற்றில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கையில் நட்டத்தை எதிர்கொள்ளும் முக்கிய அரச நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் முக்கிய வலையமைப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ள நிலையில், அந்த நிறுவனம் எதிர்கொள்ளும் நட்டம் இலங்கையின் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியுள்ளது. அத்துடன் எரிபொருள் இறக்குமதிக்காக உள்ளூர் வங்கிகளிடம் அதிகளவும் கடன் கடிதங்களை பெற்றுள்ள நிலையில் அதனை ஈடுசெய்வதற்கு பொது மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
எரிபொருள் இறக்குமதி கப்பல்களுக்கு அதிக தாதமக்கட்டணங்கள்
இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகளை போலவே எரிபொருளை கொண்டு வரும் கப்பலுக்கான தாமதக் கட்டணங்களையும் (demurrage charges) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தியுள்ளது. இலங்கை துறைமுகத்துக்கு வந்தடையும் எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணத்தை உடன்படிக்கைக்கு அமைவான காலப்பகுதியில் செலுத்தி எரிபொருளை இறக்குமதி செய்யாமையால் இவ்வாறு அதிகளவில் தாமதக் கட்டணங்களைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்கும் நிறுவனங்களில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு இராச்சியம், தென்கொரியா, இந்தியா, தென்னாபிரிக்கா, இந்தோனேசியா, ஓமான் ஆகிய நாடுகளை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் முக்கியமானவை. இவற்றில் 2015 ஆம் ஆண்டு முதல் 7 வருடங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்திய மொத்த தாமதக் கட்டணத்தில் அரைவாசிக்கும் மேலான கட்டணத்தை சிங்கப்பூர் நிறுவனம் மாத்திரமே கோரியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனமான கோரல் எனர்ஜி, 2015 முதல் 7 ஆண்டுகளில் அதிக தாமத கட்டணத்தை கோரியுள்ளது. இது 5 மில்லியன் டொலர் அல்லது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மூன்று டொலரில் ஒரு டொலரை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு மூன்று நாடுகள் 10 மில்லியன் டொலர்களை தாமதக் கட்டணமாக பெற்றுள்ளது. இதில் சிங்கப்பூர் விநியோகத்தர்கள் மாத்திரம் மொத்த தாமதக் கட்டணத்தில் 50 வீதத்தை உரிமை கோரியுள்ளனர்.
2015 முதல் 7 ஆண்டுகளில் இலங்கைக்கு 116 கப்பல்கள் மூலம் எரிபொருள் விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் M.T.MARVEL கப்பலில் இருந்து தாமதக் கட்டணத்துக்கான அதிக மொத்த உரிமை கோரல்கள் கிடைத்துள்ளன. இது இரண்டு தடவைகளில் 1.2 மில்லியன் டொல்களுக்கும் மேல் உரிமை கோரலை முன்வைத்துள்ளது. (2022 ஆம் ஆண்டுகளிலே இரண்டும் இடம்பெற்றுள்ளது) ஒரு உரிமை கோரலுக்கு அதிகபட்ச தொகை M.T.GHAUSTIN என்ற கப்பல் பெற்றுள்ளது. இது 2022 இல் 1.17 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு உரிமைக்கோரலை மேற்கொண்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ள நட்டம்
நாட்டின் எரிபொருள் விநியோக வலையமைப்புக்கு முக்கிய பங்காற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் மூலம் அறிய முடிகின்றது. 2018 ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு வருடங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சராசரி வருமானத்தை விடவும் செலவு 22 வீதத்தால் அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் எரிபொருள் விலைகள் திடீரென அதிகரிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய முகாமைத்துவ செலவுகள் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் எரிபொருள் விநியோக்கத்தர்களின் உடன்படிக்கையை மீறி கொடுப்பனவுகளை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிபொருள் இறக்குமதி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டமையால் கப்பல்களுக்கு அதிக தாமதக்கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2022 இல் அதன் அதிகூடிய நட்டத்தை சந்தித்தது, அங்கு தான் ஈட்டிய ஒவ்வொரு ரூபாவிற்கும் பதிலாக ஒன்றரை ரூபாவை செலவிட வேண்டியிருந்தது. 2018 ஆம் ஆண்டை விடவும் 2022 இல் எரிபொருளின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ள அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமான இழப்பு 6 மடங்காக அதிகரித்துள்ளது.
இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் நட்டம் மற்றும் எரிபொருள் இறக்குமதியின் போது அதிகம் செலுத்தப்பட்ட தாமதக் கட்டணம் என்பவற்றுக்கு மத்தியில் இலங்கையில் எரிபொருளின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்புக்கு உட்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் நெருக்கடி
இலங்கையில் நிலவிய கொவிட் தொற்று பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன இலங்கையின் கடன் வரம்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி, இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன் வழங்குபவர்களுக்கு இன்னும் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளது.
இந்நிலையில் அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நட்டங்கள் மற்றும் அவற்றை ஈடுசெய்வதற்காக பொது மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுவது என்பவற்றால் இலங்கையின் கடனை மீளளிப்புச் செய்வதில் தடையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வருமானத்தை விடவும் செலவு பல மடங்கு அதிகரித்தமையால் நிலைமையை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய தேவை இலங்கைக்கு ஏற்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையின் பிணையெடுப்பு தொடர்பான அதன் சமீபத்திய மதிப்பாய்வில் சர்வதேச நாணய நிதியம் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தீர்வு நடவடிக்கை என்ன?
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்குப் பின்னரும் கடன் செலுத்தும் காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையாலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் தற்காலிக மீட்பு இடம்பெற்றுள்ளது. இதனால் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கேனும் மக்கள் பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது. இருப்பினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்ட நட்டம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டமை தொடர்பில் நிதி குற்ற விசாரணப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் தடயவியல் அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்ட நட்டம், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான விடயங்களுக்கு தெளிவு கிடைக்கப்பெறலாம்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏனைய எரிபொருள் இறக்குமதி மற்றும் விற்பனை நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் காரணமாக எரிபொருள் விலைகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் முன்னைய அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
விலைச்சூத்திரத்தை முறையாக நடைமுறைப்படுத்தியதன் மூலம் கடந்த வருடம் 120 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாகவும் இதுவரையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 27 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் 2025 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான முன்னைய ஒப்பந்தங்களை தொடர்வதற்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் அரச வங்கிகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்த வேண்டிய 3 பில்லியன் ரூபா கடனையும் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கையின் எரிபொருள் விலையில் அதிக வரிகள் தாக்கம் செலுத்துவதால் மக்கள் குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது சவாலாகியுள்ளது. மேலும் முன்னைய காலப் பகுதியில் எரிபொருள் இறக்கும் கப்பல் நிறுவனங்களுக்கு அதிக தாமதக் கட்டணங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தியிருந்தமையும் முக்கிய காரணமாகும். தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதற்கான வேலைத் திட்டத்தை தயாரிக்க வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக