சமீப தினங்களாக இலங்கையின் குடிமக்களை அதிகம் பாதித்த ஒருவிடயம் மதுபானங்களுக்கான விலையுயர்வாகும். இதற்காக தனது உழைப்பிலிருந்து ஒருதொகையை ஒதுக்குபவர்கள் கடந்த சிலதினங்களாக அதிகம் உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இந்தக் கடின உழைப்பை தனது குடும்பத்திற்காக அவர்கள் இதற்குமுன் வெளிப்படுத்தியிருந்தாலும் அவர்களது குடும்பமாவது முன்னேறியிருக்கும். இன்று மதுபான விலையுயர்வால் கொழுத்த மதுபான கடை உரிமையாளர்கள் இன்னும் அதிகமாக கொழுக்கப் போகிறார்கள். ஆனால் நாம்... இதற்கு பதில் குடிமக்களிடமே இருக்கிறது. அதேபோலவே காலம் காலமாக மேற்கொள்ளும் சில விடையங்களை நினைத்தால் அரசாங்கமும் போதையில் இருக்கிறதோ என எண்ணவைக்கிறது.
இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரட் வகைகளுக்கான விலையினை அதிகரிப்பதனால் இவற்றைப் பாவிப்பவர்களின் தொகையினை குறைத்து விடமுடியுமா? அரசாங்கம் மதுபானங்கள் மூலம் வருடத்திற்கு பல மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்கிறது. ஆனால் அதைப்போல பலமடங்குத் தொகையை மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட நோய்களுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்காக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய விலையதிகரிப்பும் அரசுக்கு இன்னும் இலாபத்தை அள்ளித் தருமே தவிர இலங்கையில் மதுபானத்திற்கும் அடிமையானவர்களை குறைத்துவிடமுடியாது.
தமிழ்நாட்டைப் போல இலங்கையில் இதுவரைக்கும் மதுவிலக்குக்காக பாரிய புரட்சி ஏற்பட்டதில்லை. ஆனால் அவ்வப்போது எங்கேயாவது பார்களை மூடக்கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும். அவ்வாறுதான் அண்மையில் ஹட்டன் செனன் தோட்டத்தில் இவ்வாறானதோர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோடு அரசியல்வாதிகள் கூட ஆதரவு தெரிவித்து வீதிமறியலில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் நடந்தது என்ன? இன்றும் அதிகபார்களில் மக்கள் மதுபானம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசாங்கம் கடந்த ஒரு மாதகாலத்தை (செப்டெம்பர் 3)- அக்டோபர் 3) மது ஒழிப்பு மாதமாக பிரகடனப்படுத்தியிருந்தது. ஆனால் இம் மாதப்பகுதியில் இலங்கையில் நடந்தது என்ன?
மாதத்தின் ஆரம்பநாளும் இறுதிநாளும் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. இவை ஒன்றால் மட்டும் மதுபாவனையை குறைத்து விடமுடியும். இலங்கையில் மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. அரசாங்கத்தின் வருமானத்தில் கணிசமான பங்கு இவற்றுக்குண்டு. ஆனால் இன்று வளர்ந்துவரும் இளம் தலைமுறையினரில் அதிகமானோர் மிகமோசமான குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதே மதுவிலக்கு என்பதைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது. ஆனால் இலங்கையில் அது சாத்தியமில்லையென்பதால் இளம் தலைமுறையினரை காப்பதற்கான திட்டங்களை அமுல்படுத்துவது முக்கியமாகவிருக்கிறது. வருடக்கணக்காக இழுபட்டு வந்த சிகரெட் பெட்டியில் புகைத்தல் தொடர்பான புகைப்பட விவகாரமே இப்போதுதான் அமுலுக்கு வந்துள்ளது. ஆனால் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்றால் ஒன்றுமில்லை.
இலங்கையில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 35.6 வீதமானோர் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 15- 24 வயதிற்கிடைப்பட்டோர் 27.3 வீதமானோர். இத்தொகையில் அதிகளவில் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். தமது பாடசாலைக் காலத்திலேயே குடிப்பழக்கத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். இதற்கு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வியாபாரமும் ஒரு காரணமாகும். இவர்கள் போதை கலாசாரத்தினையே விரும்புவதால் சகல போதைவஸ்த்துகளுக்கும் அடிமையாகும் சூழல் காணப்படுகிறது. மேலும் 25- 39 வயதுக்கிடைப்பட்டோர் 41.2 வீதமானோராக இருக்கின்றனர். இவர்களில் அதிகமானோர் குடும்பத்தலைவர்களாக இருப்பதால் அவர்களின் குடும்பத்தில் இயல்பு நிலை மிகமோசமான நிலையினை எட்டுகிறது.
இதனால் அவர்களின் பிள்ளைகள் தவறான பாதைகளை நாடவேண்டியுள்ளதுடன் சில குடிகார தந்தையர் தமது பிள்ளைகளுக்கே பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் மேற்கொள்வதையும் காணமுடிகிறது. அத்தோடு 40 வயதுக்கு மேற்பட்டோரில் 41 வீதமானோரும் இலங்கையில் குடிப்பழக்கத்துக்குள்ளாகியுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கையில் 15 வயதுக்கு மேற்பட்ட 33.2 வீதமானோர் கட்டாய புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களில் 15- 24 வயதுக்குட்பட்டோர் 26.6 வீதமானோரும், 25- 39 வயதுக்குட்பட்டோர் 36.9 வீதமானோரும் , 40 வயதுக்கு மேற்பட்டோரில் 38.9 வீதமானோரும் இப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.
இவ்வீதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் வெற்றியெதனையும் அரசாங்கம் மற்றும் அரச திணைக்களங்கள் சந்தித்திருக்கின்றனவா? சிகரெட் பெட்டிகளில் புகைப்படங்களை அச்சிடுவதாலும் புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கான வசதிகளை அதிகரிப்பதன் மூலமும் சுகாதாரத்தினை பேணமுடியுமா? இப்பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளோரை குறைத்து விடமுடியுமா? இதற்கான திட்டங்கள் பாடசாலை கல்வியிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். காரணம் பல மாணவர்களே இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையில் மதுபான விற்பனையானது சடுதியாக அதிகரித்த வண்ணமுள்ளது. இவ்வருடம் முதல் நான்கு மாதங்களில் மதுபான விற்பனை மூலம் பெறப்பட்ட தொகை 33,505 மில்லியன்களாகும். இது கடந்த வருடத்தை விட 32 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் கடந்தாண்டு பெறப்பட்ட தொகை 24,504 மில்லியன்களாகும். குடிப்பழக்கம் இவ்வாறு பல்கிப் பெருகுவதற்கு சட்டவிரோத தவறணைகள் மற்றும் சட்டவிரோத விற்பனையும் காரணமாகும். அரச விடுமுறை தினங்களில் கூட அதிக தொகைக்கு வெளியிடங்களில் மதுவகைகள் விற்கப்படுகின்றனை குறிப்பிடத்தக்கது. இதில் பொலிஸாருக்கும் அதிக பங்குண்டு. இவ்வாறான சம்பவங்களை தலைநகரங்கள் மற்றும் தோட்டப்புறங்களில் அதிகம் காணமுடிகிறது.
மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் அதிக மதுவகைகளை விற்கும் மாவட்டங்களில் முதலிரு இடங்களிலும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் முதலிடத்திலும் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது இலங்கையில் சிகரெட் விற்பனையானது 45 வீதமாக அதிகரித்திருக்கிறது. இவ்வருடம் முதல் 4 மாத காலப்பகுதியில் சிகரெட் விற்பனை மூலம் பெறப்பட்ட வருமானம் 25,491 மில்லியனாகும். கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட தொகை 17,524 மில்லியன்களாகும். இவ்வாறு வருடா வரும் இலங்கை அரசு பெற்றுக்கொள்ளும் பாரிய தொகையினை அவ்வளவு எளிதாக இழக்கவிரும்பாது. இருப்பினும் மதுவிலக்கு அமுலிலுள்ள நாடுகளும் பிரதேசங்களும் முன்னேற்றங்களை கண்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
அத்தோடு இலங்கையில் குடிப்பழக்கம் உள்ளோர் குறைவதால் அரசுக்கு வருமானமிழப்பு ஏற்படும் என்று அரசு கருதுவதாலோ என்னவோ இதுவரையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. சமூகமும் அதில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. ஆனால் நாம் குடிப்பழக்கத்தால் பெரியதொரு வருமானமிழப்பை மறைமுகமாக சந்திக்கிறோம் என்பதுடன் காசு கொடுத்து நோய்களையும் பெற்றுக்கொள்கிறோம். இலங்கை கல்லீரல் நோய் அதிகமுள்ளவர்களில் முதலிடம் பெற்றுள்ளது. இது மதுவருந்துவதால் நாம் பெற்றுக்கொண்ட நிலை. ஆனால் இதெல்லாம் குடி மகன்களால் மாத்திரம் தான் ஏற்படுகிறதென்று நினைத்துக் கொண்டால் அது தவறு.
இலங்கையில் தற்காலத்தில் சாராயம் மற்றும் பியர் அருந்தும் பெண்களின் தொகை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் கடந்த பத்து ஆண்டுகளில் இவ் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. படித்த, மத்தியதர மற்றும் மேற்தட்டு பெண்களிடையே இவ் ஆபத்தான பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே மது நாட்டை மட்டுமல்ல, வீட்டையும் கெடுத்தே வருகிறது. எனவே உலகம் போதை கலாசாரத்தை அணுகாதிருக்க இலக்குகள் வகுக்கப்பட்டு விட்டனவா? இலங்கை இவ்விடயத்தில் என்ன செய்யப்போகிறது.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக