உலகளவில் பெண்கள் தங்களை அழகுபடுத்துவதற்காக அதிக தொகையினை தமது வாழ்நாள் பூராகவும் செலவளித்து வருகின்றனர். அதன்மூலம் ஆபத்துகளையும் வாங்கிக் கொள்கின்றனர். எமது தாய்மார் இவ்வாறு அழகு சிகிச்சைகளுக்காக இவ்வளவு செலவழித்ததை நாம் காணவில்லை. மஞ்சள், குங்குமம் என்பனவற்றோடு தம்மை அழகுபடுத்துவதை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் இப்போதும் ஆபத்தில்லாமல் இயங்குகின்றார்கள். ஆனால் இன்றைய நவீனகாலம் பெண்களை அழகுசிகிச்சைக்கு அடிமைப்படுத்திவிட்டது. முகம், மார்பு, பின்னழகு என தினம் தினம் சத்திர சிகிச்சையின் கத்திகளுக்கு அவர்களது உடல் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் கூட அழகு சிகிச்சை விடயங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றதென்பதை மறுக்க முடியாது.
பிரேஸிலைச் சேர்ந்த மொடல் அழகி, தேசிய அழகுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவரான 28 வயதுடைய ரகுல் சன்டோஸ், சுருக்கங்களை மறைப்பதற்காக மேற்கொண்ட அழகு சிகிச்சையானது, இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறப்பதற்கு வழிவகுத்துவிட்டது. இவர் முகத்திலுள்ள சுருக்கங்களை அகற்ற அசிட் ஊசிகளை ஏற்றிக் கொண்ட சில நிமிடங்களில் இதயத்துடிப்பு குறைவு, சுவாசிப்பதில் சிக்கல், ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். பிரேஸிலில் கடந்த 2 வருடங்களில் இச்சிகிச்சையை 2,000 பேர் மேற்கொண்டுள்ள போதும் இவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகளவில் பிரேஸில், அழகு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதில் இரண்டாமிடத்திலிருக்கின்றது. 2011 ஆம் ஆண்டு உலகளவில் 15 மில்லியன் மக்கள் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கின்றனர். உலகளவில் தென்கொரிய மக்களே இச் சிகிச்சையை அதிகம் விரும்புபவர்களாக இருக்கின்றனர். ஆனால் உலகளவில் 20,000 பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையாளர்களே அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆதலால் போலி பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையாளர்களுக்கு இவ்வுலகில் பஞ்சமில்லை. ஆனால் இக்காலத்துப் பெண்கள், குறைந்தளவு ஆண்கள் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளை அதிகளவுக்கு விரும்புபவர்களாக இருக்கின்றனர்.
ஆண்கள் பெண்களாக மாறுவதையும் தாம் நினைத்த, பிடித்த நபரின் தோற்றத்துக்கு மாறுவதையும் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் பெண்கள் தங்களுடைய தோற்றத்தை மீண்டும் மீண்டும் மெருகேற்ற முயற்சிக்கின்றனர். கண்ணிமை, உதடுகள், முகச்சுருக்கம், மார்புப்பகுதி, பின்னழகு என்பனவற்றை அதிகமாக இயல்பான அளவைவிட பெரிதாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர். இதனால் பெண்களை இலக்காகக் கொண்டே சர்வதேசளவில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹொலிவுட் நடிகைகளில் பெரும்பாலானவர்கள் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையால் தமது அழகை மெருகேற்றியவர்களே தவிர, இயற்கை அழகு படைத்தவர்கள் அல்லர். ஆனால் இதை பெரும்பாலான பெண்கள் உணர்ந்து கொள்வதில்லை.
இன்று பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்பவர்களில் அதிகமானோர் மொடல் அழகிகளாகவும் திரைப்பட நடிகைகளாகவும் இருக்கின்றனர். அதிக பணம் கொழிக்கும் துறையாக இவை இருப்பதுவும் இதற்கு மூலதனமாக நாம் இடவேண்டியது அழகை மட்டுமே என்பதாலுமே அதிகமான பெண்களும் ஆண்களும் பிளாஸ்டிக் மற்றும் அழகு சத்திரசிகிச்சைகளை நாடுகின்றனர். இவர்கள் 50 வயதாக இருந்தாலும் கூட தமது இளமையை 20 வயதாக காட்ட முனைகின்றார்கள். இவ்வாறு தமது மார்புப் பகுதிகளை அழகாக்க பொருத்திக்கொண்ட சிலிக்கன்கள் வெடித்ததில் தமது மார்புகளை இழந்தவர்களும் உயிரையே இழந்தவர்களும் இவ்வுலகில் அதிகம் என்பதை மறக்க முடியாது.
ஐக்கிய அமெரிக்காவில் இந்நடைமுறை அதிகமிருந்தாலும் தென்கொரியா, சத்திரசிகிச்சை செய்யும் அளவில் முதலிடத்தில் இருக்கின்றது. ஆசிய நாடுகளில் அதிகமானோர் இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களாக இருக்கின்றனர். 77 பேருக்கு ஒருவர் கத்திரிக்கும் ஊசிக்கும் இலக்காகுபவராகவே இருக்கின்றார். கடந்த வருடம் 20 வீதமான 19- 49 வயதிற்கிடைப்பட்ட பெண்கள், தலைநகர் சியோலில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவற்றில் அதிகமானோர் இரட்டை கண்ணிமையை அகலப்படுத்துவதற்கான சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இச்சிகிச்சை கண்களை பெரிதாக காட்டுவதோடு, மேற்கத்தேய தோற்றத்தை கொடுப்பதாக இருப்பதால் அதிகமானோர் விரும்புகின்றனர். அதிகமான தென்கொரியாவினர் கிளினிக்குகளுக்குச் சென்று அமெரிக்கர்களைப் போன்ற மூக்கு மற்றும் கண்களை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். பிரேஸில் அதிகளவு கடற்கரை கலாசாரத்தைக் கொண்டுள்ளதால் ஆண்கள் தமது மார்புப் பகுதிகளை விரிவுபடுத்தவும் அதற்குக் கீழான பகுதிகளை மெருகேற்றவும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளை அதிகம் நாடுகின்றனர். ஆசியாவில் மூக்கு சம்பந்தமான அறுவை சிகிச்சை பிரபலமானது. சீனா, ஜப்பான், தென்கொரியா என்பன இம்மூக்கின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கு மிகப் பிரபலமான நாடுகளாகும். மார்பக விரிவாக்கம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவே பிரபலமானது. இதற்கடுத்ததாக பிரேஸில், மெக்ஸிக்கோ, இத்தாலி மற்றும் சீனா என்பன இருக்கின்றன.
கண்ணிமை தொடர்பான அறுவை சிகிச்சையில் அமெரிக்கா மற்றும் பிரேஸில் என்பன முதலிரு இடங்களில் இருக்கின்றன. அறுவை சிகிச்சை அதிகம் மேற்கொள்ளப்படும் நாடுகளில் பிரிட்டன் 16 ஆவது இடத்தில் இருக்கின்றது. இத்தரவுகள் மூலம் உலகளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் அழகை மெருகேற்ற கொடுக்கும் முக்கியத்துவத்தை உணரமுடிகின்றது. ஆனாலும் இது நீடித்து நிலைக்கக்கூடிய சிகிச்சையல்ல. இவ்வாறான சிகிச்சையை எவருமே நினைத்தவுடன் மேற்கொள்ள முடியாது. இதற்கு பணம் ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நாம் வாழும் சூழல், செய்யும் தொழில் என்பன செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே அழகு சிகிச்சை என்பது மருத்துவ உலகில் ஒரு சாதனையாக இருந்தாலும் கூட மனிதர்களுக்கு இது ஆபத்து நிறைந்த ஒரு கட்டமாகவே இன்னும் இருக்கின்றது.
அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 14.6 மில்லியன் அழகு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சிகிச்சையில் மிகப்பெரிய பிரச்சினையாக அமைவது ஒவ்வாமையாகும். அலர்ஜி, சருமத்திற்கு கீழான இரத்தக்கட்டிகள், இரத்த அழுத்தம் மிகவும் குறைதல், என்பனவற்றோடு சரும இறப்பு அல்லது செல்கள் சேதமடையும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. இவை அழகு சத்திரசிகிச்சைகளில் காணப்படும் பொதுவான பிரச்சினைகளாக இருக்கின்றன. அண்மைக்காலங்களில் 60 வீதமான மக்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களாக இருப்பதுடன் குடும்ப வருமானத்தில் வருடமொன்றுக்கு 90,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்கின்றனர். இவர்களில் 10 வீதமானோர் ஆண்களாக இருக்கின்றனர்.
வருடமொன்றுக்கு 44,000- 98,000 வரையான அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சையின் விளைவாக வைத்தியசாலைகளில் உயிரிழக்கின்றனர். உலகில் மருத்துவத் துறையில் அதிகமான முன்னேற்றங்களைக் கொண்ட மேற்குலக நாடுகளிலேயே இவ்வாறான அறுவை சிகிச்சைகள் உயிராபத்துகளை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படும் நிலைமையில் இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இவை எவ்வாறு சாத்தியப்படும்? 2014 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட முகச் சுருக்கத்துக்கான அழகு சிகிச்சையின் போது, பெண் வைத்தியரொருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாகவே இம்மரணம் ஏற்பட்டது. இதேபோலவே 2001 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த பிரபல பாடகியாகவிருந்த மாலினி புலத்சிங்ஹள, தலைமயிருக்கான ரையை உபயோகப்படுத்தியதால் ஏற்பட்ட ஒவ்வாமையின் காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்திருந்தார். இவ்வாறு இலங்கையில் இச்சிகிச்சையினை மேற்கொள்வோரின் தொகை குறைவாக இருப்பதனாலேயே இழப்புகளும் குறைவாக இருக்கின்றன.
இன்று கடவுள் தந்த அதுவும் தாய், தந்தையினரின் நிழலில் உருவான உடலமைப்பையே இன்றைய இளம் சமுதாயம் மாற்றியமைக்க விரும்புகிறது. அந்தளவிற்கு அவர்களை பிறரின் அழகு கவர்ந்திருக்கிறது. நாம் பிறரை விட அழகாக வேண்டும் என்று நினைக்கின்ற ஒவ்வொருவரும் இன்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையையும் அழகு சிகிச்சையையும் விரும்புகின்றனர். மேற்கத்தேய கலாசாரம் அவர்களை அப்படி வளைத்துப் போட்டிருக்கிறது. இன்றும் கிராமங்களில் வசிக்கும் ஆண்களும் பெண்களும் எந்தவித சத்திரசிகிச்சையிலும் ஈடுபடாமல் இயற்கை முறைகளை பயன்படுத்தி பொலிவுடன் இருப்பதை அவதானிக்க முடிகையில், நகரத்துப் பெண்கள் தமது அழகில் நம்பிக்கையில்லாமல் வெட்டும் கத்திகளுக்கும் குத்தும் ஊசிகளுக்கும் அடிமைப்பட்டு விட்டார்கள்.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக