உலகை காலத்திற்கு காலம் ஏதோவொரு தொற்றுநோய்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன. அதிலும் நுளம்புகளினால் ஏற்படுத்தப்படும், நோய்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தவும் இலகுவில் கட்டுப்படுத்த முடியாததாகவும் இருக்கின்றன. ஏற்கனவே ஆபிரிக்க நாடுகளை எபோலோவும், ஆசிய நாடுகளை மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் தாக்கி வரும் நிலையில் மிக கொடியதான, வாழ்நாள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான ஷிகா வைரஸ் தற்போது லத்தீன் அமெரிக்க, அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பிறக்கும் குழந்தைகள், சிறுவர்கள் எதிர்காலத்தை மிக மோசமான சூழலில் கழிக்க வேண்டிய நிலையேற்படும்.
அமெரிக்க விஞ்ஞானிகள் ஷிகா வைரஸ் தாக்கத்தை குறைக்க உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார மையத்தை அறிவுறுத்தியுள்ளனர். தற்போது தொற்றுக்குள்ளாகியுள்ள ஷிகா வைரஸ் நோயாளர்கள் அதிகமாக பிரேசிலில் இனங்காணப்பட்டுள்ளனர். பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெப், லத்தீன் அமெரிக்க நாடுகள் உடனடியாக இவ்வைரஸ் தாக்கத்திற்கெதிராக செயற்பட அழைப்பு விடுத்திருப்பதை இனங்காண முடிகிறது. இவ்வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரை குணமாகக்கூடிய மருத்துவ வசதிகள் தற்போது கைவசம் இல்லாத நிலையில் இந்நோய் பற்றிய ஆராய்ச்சிக்காகவும் அதன் மாதிரிகளை பெற்றுக்கொள்ளவும் அமெரிக்காவில் மிகவும் உயர்தர பாதுகாப்பு
வசதிகளைக் கொண்டே டெக்ஸாஸ் மாநில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பிரேசிலுக்கு விரைந்துள்ளனர். ஆபிரிக்க நாடுகளில் பல மனித உயிர்களை பலிகொண்டதும் பல குழந்தைகளை அநாதைகளாக்கிய எபோலோ வைரஸ் தொற்றுக்கான மருந்துகள் தற்போதே பயன்பாட்டிற்கு வந்து ஆபிரிக்க நாடுகளை கொஞ்சம் ஆறுதல்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் ஷிகா வைரஸ், ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளை தாக்க தொடங்கியுள்ளது. இவ்வைரஸை மருத்துவர்களே மிகவும் ஆபத்தானது என விபரிக்கின்றனர். நுளம்பினால் ஏற்படக்கூடிய ஒரு தொற்று என்பதால் இது சர்வதேச நாடுகளையும் இலகுவில் சென்றடையலாம்.
இலங்கையில் ஏற்கனவே டெங்கு மிக ஆபத்தான நிலையினை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது நுளம்பினால் ஏற்படுகின்ற ஷிகா வைரஸ் தாக்கங்கள் கூட இலங்கைக்கும் பாதிப்பினை ஏற்படுத்துமா என்பதில் அவதானமாக இருக்க வேண்டும். ஏற்கனவே ஆபிரிக்காவில் தோற்றம் பெற்ற எபோலா வைரஸ் இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்ததை குறிப்பிடலாம். எதிர்வரும் காலங்களில் பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. எனவே, சர்வதேச வீரர்கள், பார்வையாளர்கள் பிரேசில் செல்லும் அறிகுறியிருப்பதால் அவர்கள் மூலமும் இவ்வைரஸ் தொற்று சர்வதேசமளவில் விஸ்தரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மிக குறைந்த காலத்தில் அதற்கான நிவாரணிகளை கண்டுபிடிக்க வேண்டிய தேவை சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 1947ஆம் ஆண்டு உகாண்டா காடுகளில் உள்ள குரங்குகளில் இவ்வைரஸ் இனங்காணப்பட்டிருந்தது. இருப்பினும் முதலாவது மனித தொற்று 1954இல் நைஜீரியாவில் பதிவானது. இதற்கான அறிகுறிகளை பொதுவாக சிறுவர்கள், குழந்தைகளிடம் இனங்காண முடிகிறது. கண்வீக்கம், மூட்டு வலி, காய்ச்சல் என்பவற்றை இதன் மூலம் அதிகமாக உணரும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக