இன்றைய பொழுதுபோக்குத் துறையில் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் அதிகளவாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொலைக்காட்சித் தொடர் குடும்பப் பெண்களையும் திரைப்படங்கள் சிறுவர், குழந்தைகளையும் இலக்குவைத்து இயக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் இவ்விடயங்களை நாம் நேரடியாக அவர்களிடம் சொன்னால் நாம் அவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாகிவிடுவோம். இவர்கள் தொலைக்காட்சி மூலமாகத்தான் இவற்றைப் பார்த்து பழக்கப்படுகிறார்கள் என்பதில்லை. ஸ்மார்ட் போன்கள், கணினிகள் என இலத்திரனியல் சாதனங்கள் இவற்றை அதிகம் ஊக்குவிக்கின்றன. சிலர் அலுவலகங்களில் கூட தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கு அலுவலகங்கள் அனுசரணை வழங்குகின்றன.
ஆனால் எமது பிரச்சினை அதுவல்ல, இன்றைய குழந்தைகள், சிறுவர்கள் எவ்வாறு இதற்கு அடிமையாகிச் செல்கிறார்கள் என்பதே எமது பிரச்சினை. இன்று 2 - 2 1/2 வயது குழந்தைகளே ஒருவரின் குரல் , நடை, உடை பாவனையை மிகச் சரியாக பிரதிபலிக்காவிட்டாலும் பிறரால் அனுமானிக்கக்கூடிய வகையில் பிரதிபலிக்கின்றன. இவர்களே 5 வயதை எட்டுகின்றபோது முழுமையாக அவர்களுடைய நடவடிக்கைகளை பின்பற்றுபவர்களாக மாறிவிடுகிறார்கள். இதற்கு அவர்களின் கண்முன் தினமும் வெளிப்படுகின்ற தொலைக்காட்சி மற்றும் ஏனைய திரைகளே காரணமாகின்றன.
சில பெற்றோர் தங்களுடைய கடமையை இலகுவாக்கிக் கொள்வதற்காகவும் அவர்களின் குறும்புகளை தவிர்த்துக் கொள்வதற்கும் தொலைக்காட்சிக்கு முன் குழந்தைகளை அமரவைத்துவிடுகிறார்கள். பின் அக்குழந்தை ஒரு நடிகரின் அல்லது நடிகையின் சாயலை வெளிப்படுத்தும் போது கைகொட்டிச் சிரிக்கிறார்கள். அது பிள்ளையின் திறமையாகவும் அவர்கள் இனங்காண்கிறார்கள். ஆனால் பெற்றோர் ஒன்றை மறந்து விடுகிறார்கள். தாம் வாழ்கின்ற சூழலில் வளரும் பிள்ளைகள் எம்மை போலவே, எம்மை முன்மாதிரியாக கொண்டு செயற்படுவதை விடுத்து போலி காட்சிகளில் தம்மை முதன்மைப்படுத்துவதை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். இதனால் தொலைக்காட்சிகள் அவர்களுடைய படைப்பாற்றலை மந்தமாக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது.
இந்திய தமிழ் சினிமாக்களும் தொலைக்காட்சித் தொடர்களும் அதிகளவில் குழந்தைகளையும் சிறுவர்களையும் பாதிக்கின்றன. அவர்களை இலக்குவைத்து இலாபமீட்டும் முயற்சியில் திரைத் தயாரிப்பாளர்கள் அதிகளவான முதலீடுகளை மேற்கொள்கின்றனர். யுனிசெப் மற்றும் யுனெஸ்கோவின் ஆதரவுடன் வழக்குரைகள் மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், ஒருநாளில் 7 மணித்தியாலங்களை குடும்பப் பெண்கள் தொலைக்காட்சிகள் முன் செலவிடுகின்றனர். 2- 11 வயதான பிள்ளைகள் வாரத்தில் ஒரு நாளை முழுமையாக தொலைக்காட்சியின் முன் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கணிப்பு சகலருக்கும் பொருந்தாது எனினும் பெரும்பான்மையானோரின் நேரசெலவு இதுவாகவே இருக்கையில் இதைப் பற்றி பேசுவதில் தவறேயில்லை. இளைஞர்களை இந்த வரையறைக்குள் கொண்டுவரமுடியாது. அவர்கள் முழுநேரமும் இணையங்களுக்குள் மூழ்கிக் கிடக்கிறார்கள். கணவன்மார்களில் அல்லது ஆண்களில் பெரும்பாலானோர் தொழிலுக்குச் சென்று விடுவதால் மீதமிருப்பது குடும்பப் பெண்களும் பாடசாலை செல்லும் சின்னஞ்சிறுசுகளுமே. இவர்களே தமது வாழ்க்கையை இவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்களில் சிறுவர்களே அதிக பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள். திரைப்படங்களில் வருகின்ற வல்லுறவுக் காட்சிகள், கணவன் - மனைவி உறவு, விபசாரம், வன்முறை, மிரட்டல் என்று ஏராளமான காட்சிகள் அனைவருக்கும் பொதுவானவையல்ல. இதனை நாம் நேரடி வாழ்க்கையில் வெளிப்படையாக முயற்சி செய்துபார்க்க முடியாது.
இதனை குழந்தைகள் உணர்ந்து கொள்ளுமளவில் அவர்களது வயதில்லை. ஆழமாக அவர்களுடைய மனதில் பதிவதே உண்மையென உணர்ந்து கொள்வார்கள். சினிமாவும் இதனையே முயற்சிக்கிறது. சினிமாத்துறையும் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இன்று அதிகமான திரைப்படங்கள் குழந்தைகளை மையப்படுத்தியதாக இருக்கின்றன. இலாபங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயற்படாமல், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
வன்முறைகள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன?
பிள்ளைகள் பார்க்கின்ற வன்முறை நிறைந்த திரைப்படங்கள் மற்றும் கார்டூன்கள் உள்ளுறை சக்திக்கு கேடுவிளைவிப்பதாக அமைகின்றது. அவ்வாறே பின்வரும் விடயங்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்முறை நிறைந்த திரைப்படங்கள்/ தொலைக்காடசி தொடர்களினால் பிள்ளைகளின் நடத்தைகள், நுண்ணறிவு, கிரகித்தல் என்பன மனதளவில் பாதிப்படைகின்றன. உங்களுடைய பிள்ளைகளின் அன்றாட நடத்தைகளில் அல்லது உளவியல் ரீதியில் ஏற்படும் மாற்றங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் அல்லது திரைப்படங்கள் மூலம் ஏற்பட்டவை என்பதை அறியாதிருத்தல். குழந்தைகள் அதிகம் பார்வையிடுகின்ற வன்முறைகள் நிறைந்த திரைக் காட்சிகள் பிற்காலத்தில் உலகில் உண்மையான வன்முறையை தோற்றுவிக்க உதவுகின்றது.
பொதுவாக கார்ட்டூன்களில் பாத்திரங்களுக்கிடையிலான வேகம், கதாபாத்திரம், கிராபிக் முறைமைகள் என்பன குழந்தைகளை இலகுவாக கவர்கின்றன. இதில் காட்டப்படும் அகோரமான முகங்கள், சுடுதல், தள்ளுதல், அடித்தல் மூலம் அவர்களும் அதற்கு அடிமைப்படுகின்றனர். அதிகமான குழந்தைகள் இந்திய தொலைக்காட்சி சனல்கள், மேற்குலக மற்றும் ஆசிய சனல்களில் பரிச்சயமுள்ளவர்களாக இருக்கின்றனர். சிலர் அக்கதாபாத்திரங்களை தத்ரூபமாக வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.
குழந்தைகளும் சிறுவர்களும் இலகுவாக அடிமையாவதேன்?
குழந்தைகளுக்கு திரையில் காண்பிக்கப்படும் காட்சிகள் உண்மையானதா? என சந்தேகம் எழாத வகையில் இருப்பதும் உண்மைக்கும் பொய்க்குமான காட்சிகளை அவர்களால் இனங்காண முடியாதிருப்பதுமே இதற்குக் காரணம். பெரும்பாலான சிறுவர்கள் திரையில் காண்பிக்கப்படும் கதாபாத்திரங்கள் தொலைக்காட்சிக்குள்ளேயே இருப்பதாக நம்புகின்றனர். வன்முறைச் சம்பவங்கள் மற்றும் திரைப்படங்கள் போலியான சம்பவங்கள் என்பதை உணராது ஆக்ரோஷமான நடத்தைகளை இவர்கள் அதிகமாக உள்வாங்கிக் கொள்கின்றனர். உதாரணமாக, அனுமன் திரைப்படம் வெளியான போது அதை பார்வையுற்ற சிறுவர்கள் அனுமனைப் போன்று முகமூடி மற்றும் கதாயுதத்தினை பெற்றுக் கொண்டதனை குறிப்பிட முடியும்.
சிறுவர்கள் பார்க்கின்ற நிகழ்ச்சிகளிலுள்ள புரளுதல், தாக்குதல் சம்பவங்களை வேறு சிறுவர்களுடன் விளையாடும் போது முயற்சித்துப் பார்க்கின்றனர்.
அத்தோடு அவற்றில் பயன்படுத்தப்படும் கொச்சையான பேச்சு மொழிகளையும் கையாள்கின்றனர். திரைப்படங்களில் கூறப்படுகின்ற செய்திகளின் உள்நோக்கம் மற்றும் விளைவுகள், முடிவு என்பவற்றை நியாயமானது என்றே இவர்கள் உணர்கின்றனர். அதனைப் பின்பற்றியே இவர்கள் நடக்கப்பழகுகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளின் மல்யுத்தப் போட்டிகளை திரையில் காணும் சிறுவர்கள் தமக்குப் பிடித்த ஒருவரை பாவனை செய்து பிறரிடம் வெளிப்படுத்தும் குணத்தை நாம் வெகுவாக அவதானித்திருப்போம். அது ஆபத்தானதொரு சண்டை என்பதை அவர்கள் அறிந்திராமல், அதனை தன் நண்பர்களுடன் இணைந்து முயற்சிக்கின்றனர்.
இவற்றைத் தடுப்பதற்கு பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்?
தொலைக்காட்சிகளைப் தவிர்ப்பது என்பது முடியாத காரணியெனினும் ஒருசில நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். பிள்ளைகள் தொலைக்காட்சியை பார்வையிடும் நேரங்களை குறைக்க முடியும். அவர்களது வயதுக்கேற்ற நிகழ்ச்சிகளை பார்வையிட அனுமதிப்பதுடன், நாளைக்கு ஒரு மணித்தியாலம் என்ற நடைமுறையைப் பின்பற்றலாம். நடனம் மற்றும் பாடல் என்பன சிறந்த பொழுதுபோக்காக அவர்களுக்கு அமையலாம். அத்தோடு உங்களது பிள்ளைகள் எதை பார்வையிட விரும்புகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது என்று கூறலாம்.
மேலும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருத்தல் வேண்டும். அதற்கு உங்களுடைய குறைகளை நிவர்த்திக்க பழக வேண்டும். உங்களுக்கு தொலைக்காட்சி பார்ப்பது அவசியமெனில் பிள்ளைகளின் நித்திரை நேரங்களை பயன்படுத்தலாம். உங்களுடைய பிள்ளைகளுடன் உரையாட அதிகளவு நேரங்களை ஒதுக்கலாம். அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக கூட மாறலாம். இவ்வாறான விடயங்களில் பெற்றோர் அதிக அக்கறை கொள்ளுதல் அவசியம். அதைவிடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுகின்ற பிள்ளைகளுடன் உங்களுடைய குழந்தைகளை ஒப்பிட்டு வழிநடத்துவதால் ஒன்றையும் சாதிக்கமுடியாது. அவ்வாறு நடக்க முற்படும் போது அவர்கள் உங்களுக்கு எதிரானவர்களாக மாறலாம். பெரும்பாலான பெற்றோர் தமது தொழிலை மாத்திரம் கருதி செயற்படுகின்றனர். பிள்ளைகளுடன் கலந்துரையாட, நேரத்தை செலவிட முடியாதவர்களாக உள்ளனர். அது தவறு. பிள்ளைகளின் நேரங்களை சிறந்த பொழுதுபோக்கு விடயங்களாக மாற்றியமைப்பதில் பெற்றோருக்கு அதிக பங்குண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக