கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 மார்ச், 2015

வல்லரசுகளால் கூட தடுக்க முடியாத சமூக சீரழிவுகள் ....



உலக வல்லரசுகளால் கூட இன்று சமூக சீரழிவுகளின் விளைவுகளை தடுக்க முடியாதுள்ளது. அதுபோலவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கல்லூரிகள் மற்றும் இராணுவ முகாம்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்படும் மனிதஉரிமை மீறல்களுக்கு தீர்வுகாண நினைக்கும் அமெரிக்கா, தனது சொந்த நாட்டில் பெண்களின் நிலை மிக மோசமாகியிருப்பதை தடுப்பதில் தோற்றுப்போய் இருக்கிறது என்றே கூறவேண்டும்.
தற்போது அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்
 மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கல்லூரிகளில் கடந்த  10 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றங்கள் 2,200 ஆக காணப்பட்டிருந்த நிலையில்  2012 ஆம் ஆண்டில் 3300 ஆக அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல்  2011ஆம் ஆண்டு வரை 30400 குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பாலியல் என்பது  கல்வி ரீதியாகவும் போதிக்கப்படுகின்றது. ஆசிரியர்களே மாணவர்களுக்கு தொலைபேசிகள் மூலம் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி மாணவர்களை தமது இச்சைக்குப் பயன்படுத்தும் நிலை தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலை மேலும் தொடருமாயின் மேற்படி புள்ளி விபரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் உயரவே வாய்ப்புள்ளது.

ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 2010 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2012 ஆம் ஆண்டு ஜூன் வரை 31 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கப் பெண்களில் ஐவரில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகள் மற்றும் இனத்தைச் சேர்ந்த பெண்கள் வாழும் அமெரிக்காவில் சகல இன பெண்களும் இப்பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது. அண்மைய புள்ளி விபரங்களின் படி அமெரிக்க  வாழ் இந்தியப் பெண்கள் மற்றும் அலாஸ்கா பழங்குடியின பெண்கள் 27 வீதத்தினரும், கறுப்பின பெண்கள்  22 வீதத்தினரும், வெள்ளை இன பெண்கள்  19 வீதத்தினரும், ஸ்பானிஷ் பெண்கள் 15 சதவீதமும்  இவ்வாறு வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பாலியல் உரிமை அனைவருக்கும் காணப்படினும் அவை வேற்று இன பெண்களையே அதிகமாகப் பாதிப்பதாக  இருப்பதைக் காணமுடிகிறது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கே உயர்கல்வி, தொழில் போன்ற காரணங்களுக்காக அதிகமான பெண்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த அமெரிக்கப் பெண்களில் 2.2 கோடி பேர் ஏதோவொரு பலாத்காரத்தினால் பாதிக்கப்படுவதுடன் ஐந்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் அவர்களில்  18 வயதுக்கும் குறைந்த சிறுமிகளின்  தொகை அதிகமெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதேவேளை அமெரிக்க ஆண்களில்  16 இலட்சம் ஆண்கள்  தன்பாலின வன்புணர்ச்சியினால் அதிகமாக பாதிக்கப்படுவதுடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து வரும் பெண்களே இவ்வாறு பாலியல் வன்கொடுமையினால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்தோடு அமெரிக்காவில் காணப்படும் பலமான இராணுவ துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்  சடுதியாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினரிடம் பாலியல் வன்முறை குற்றங்கள் என்பது  2008 ஆம் ஆண்÷ டாடு ஒப்பிடும் போது  2009 ஆம் ஆண்டு 11 வீதம் அதிகரிப்பை கொண்டிருந்தது. பின்னர்  2010 ஆம் ஆண்டு  சடுதியான அதிகரிப்பை கொண்டிருந்ததுடன்  19,000 பேர் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த ஆண்டை விட இவ்வாண்டு இராணுவத்தில் ஏற்படும்  பாலியல்  வன்கொடுமைகள்  50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும்  பென்டகன் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் தொடக்கம் இவ்வாண்டு  அக்டோபர் வரையுமான காலப்பகுதியில்  5000 பாலியல் புகார்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டை விட இவ்வருட 9மாதங்களில் 46 வீதம் அதிகரிப்பை கொண்டுள்ளது. பெரும்பாலான பெண் படையினர் இராணுவ உயரதிகாரிகளின் அத்துமீறல்களுக்கே உள்ளாகியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தி நியாயம் கிடைக்காது என்பதால் பல சம்பவங்கள் வெளிவருதில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தங்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாக சக இராணுவத்தினர் மீதே  பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் போது  பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானதாக  1/3 பகுதியினர் தெரிவித்துள்ளனர். இத்தொகையானது அமெரிக்காவின் சிவில் சமூகத்தில் ஏற்படும் வன்கொடுமைகளை விட அதிகமாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அமெரிக்காவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தங்களினால் அதிகமான தொகையினர் இராணுவத்துக்குத் தேவைப்படுவதாகவும் இதனால் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வட அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் வன்கொடுமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல ஏனைய உலக நாடுகளிலும் இவ்வாறான கொடுமைகளுக்கு காரணம் இணையம் என்றே கூறப்படுகிறது. இணையங்களில் போர்னோ வீடியோக்களை அதிகம் பார்ப்பதாலும் மட்டுமல்லாது, சிலர் அவ்வாறு அரங்கேற்றும் வன்கொடுமைகளை தொலைபேசிகளில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில்  பதிவேற்றுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாகவும்  இருக்கின்றனர். போர்னோ தளங்களில்  உண்மையான பாலியல் காட்சிகளை பதிவேற்றுவதால் அதன் சேவை பல்கிப் பெருகின்றது. இதற்காக அமெரிக்காவில் சக நண்பர்களே இலக்காகின்றனர். அதேபோல் இந்தியாவில் சக நிறுவன இளவயது பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இவற்றை முழுமையாக தடைசெய்வது என்பது இயலாது போயினும் கட்டுப்படுத்துவது அவசியம். இன்று எத்தனையே õ குடும்பங்கள் மேற்கத்திய
நாடுகளில் பாதுகாப்பு கருதி வசிக்கும் நிலையில் அங்கு பெண் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்  நிலை தோன்றினால் அவற்றை எவ்வாறு சமாளிப்பது? இதற்காக   எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு பெண்கள் செல்வதை தடை செய்ய முடியுமா? மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறான செயற்பாடுகள்  இடம்பெறுவது ஏதோவொரு வழியில் வெளிப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இவற்றின் கோரம் அதிகமென்பதுடன் தொகையும் அதிகமாகும். எனவே அமெரிக்காவின் கழுகுப்பார்வை இவ்விடயத்திலும் படருமா?

க.பிரசன்னா
22/10/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக