கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 மார்ச், 2015

பிரபலங்களுக்கு வரும் ஆபத்து





பிரபலங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால் அவர்களுக்கு ஆபத்து அருகில் வந்துவிடும். அவ்வாறானதொரு சோதனையே தற்போது பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கிற்கு ஏற்பட்டுள்ளது. மத அவதூறு குற்றச்சாட்டில் அவருக்கு 26 ஆண்டுகால சிறையும் 1.3 மில்லியன் பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது நடிகைகளுக்கே வந்த உச்சகட்ட தண்டனையாக பார்க்கப்படுகின்றது. அவ்வாறே இந்தியாவின் பொலிவூட் நடிகர் சஞ்சய் தத் விலங்குவதை தடுப்புச் சட்டத்தில் சிறைவாசம் அனுபவிப்பதே இதுவரை பேசப்பட்டு வந்தது.

தற்போது வீணா மாலிக் அதனோடு இணைந்து கொண்டுள்ளார். இதற்கு முன்னும் இவர் மீது பலக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. காரணம் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களும் திரைப்படங்களுமேயாகும். பாகிஸ்தானின் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் இவ்வாறு நடிப்பது இஸ்லாமியர்களிடையே பாரிய எதிர்ப்பை சம்பாதித்திருந்தது. இருப்பினும் பொலிவூட்டின் வெற்றி நாயகியாக துணிச்சலோடு வலம் வந்தார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ராவல்பிண்டியில் முஸ்லிம் குடும்பத்தில் 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி பிறந்தார். இவரின் இயற்பெயர் ஷஹிடா மாலிக் , ஆரம்பம் முதல் நடுத்தர கிராம வாழ்க்கையை தன் பாட்டியுடன் வாழ்ந்த மாலிக், தனது 6 ஆம் வகுப்பில்  தந்தையை இழந்த சோகத்தில் யாருடனும் பழகாமல் இருந்த அவர், பின் அதிலிருந்து மீண்டுவர நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பள்ளி கல்வியை முடித்த வீணா சமூகவியல் மற்றும் உளவியல் பட்டதாரிக் கல்வியை முடித்துள்ளார்.



 தொலைக்காட்சி வாழ்க்கை
தனது முதலாவது தொலைக்காட்சி அறிமுகம் வங்கியொன்றின் விளம்பர முகவராக அமைந்திருந்தது. இதுவே அவரின் தொழில் ரீதியான அறிமுகமாகும். இதற்காக அவர் பெற்ற சம்பளம் 5000 ரூபா. அதில் 2000 ரூபாவை தனது நண்பர்களுக்காகவும் 3000 ரூபாவை தனது தாயிற்குப் பரிசளித்து அன்பை பகிர்ந்து கொண்டார். பின் 2002 ஆம் ஆண்டு பிரைம் டிவியல் பல்குரல் கலைஞர்களுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு லக்ஸின் அதிக ஸ்டைலிஸான பெண்ணுக்கான விருதினைப் பெற்றார்.
அக்டோபர் 2010 ஆம் ஆண்டு இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் தோன்றிய அவர், 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பின்பு  ஐட்ச்ஞ்டிணஞு கூங நடத்திய போட்டியில் 71,000 நபர்களிடமிருந்து திருமண அழைப்பினை பெற்று சாதனை படைத்திருந்தார்.

சினிமா வாழ்க்கை
ஒரு தொகுப்பாளினியாக நகர்ந்த இவரது வாழ்க்கையில் 2000 ஆம் ஆண்டு சான் சாராசேக் நடித்த 'டெரே பெயார் மெய்ன்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் துணை பாத்திரமாக நடித்தார். இப்படம் வசூலில் சாதனை படைத்தது. பின்பு 70 மில்லியன் ரூபா செலவில் தயாரான பஞ்சாப் மொழி படத்தில் நடித்தும் அப்படம் தோல்வியுற்றது. பின்பு வாய்ப்புகளை இழந்த அவர் 2008 ஆம் ஆண்டு நடித்த 'பஞ்சாபி' திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 2012 இல் பொலிவூட் திரைப்படத்தில் ஒரு மசாலா பாடலுக்கு மாத்திரம் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு தனது முதலாவது ஹிந்தி திரைப்படமானது இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.


பின்பு ஹிந்தியில் வெளியான 'டர்டிபிச்சரின்' கன்னட ரீமேக்கில் நடித்த இவர் 2013 ஆம் ஆண்டு சுப்பர் மொடல் திரைப்படத்துடன் விடை பெற்றார்.
2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானிய தொழிலதிபரை திருமணம் செய்த மாலிக், செப்டெம்பர் 23, 2014 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மாலிக் இரண்டு வருடங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பதில் தூதுவராகவும் பதவி வகித்துள்ளதுடன் வறுமையான பாகிஸ்தானிய குழந்தைகளுக்கு உதவியும் வருகின்றார். அத்தோடு ஒரு நிமிடத்தில் அதிக முத்தங்கள் பெற்றோர் வரிசையில் முதலிடம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் பொலிவூட் நடிகர் சல்மான்கானை பின்தள்ளி இச்சாதனையை படைத்துள்ளார். 2012 ஆம் ஆண்டு உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் வரிசையில் 26 ஆவது இடத்தைப் பெற்றார். ஏஞ்சலினா ஜோலி, மேகன் பொக்ஸ், பாரிஸ் ஹில்ட்டன், கிம் கிர்திர்ஷியன், சில்பாஷெட்டி, சோனம் கபூர் ஆகியோரோடு தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் ஊஏM ஐணஞீடிச் சஞ்சிகையின் முன்பக்க அட்டைக்கு வழங்கிய நிர்வாணப் படம் மூலம் இவர் பாகிஸ்தானியர்களிடையே பலத்த எதிர்ப்பை பெற்றார்.

அந்த இதழுக்காக அவர் கொடுத்த நிர்வாணப் படமும் தோள்பட்டையில் பொறித்திருந்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முத்திரையும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தன. ஏற்கனவே கலர்ஸ் டிவி நடத்தியிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமாக பழகுவதால் முஸ்லிம் மத குழுக்கள் அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்நிலையிலேயே பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சியில் கடந்த மே மாதம் கணவர் பஷிர் மற்றும் வீணா மாலிக் நடித்த நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பப்பட்டது. இதில் இருவரும் திருமணம் செய்து கொள்வதான காட்சியின்போது பின்னணியில் இஸ்லாமிய மத பாடலொன்று இடம்பெற்றது. இதனால் நீதிமன்றில் மத அவமதிப்பு குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பில் தொலைக்காட்சி உரிமையாளர் கணவர் பஷிர், வீணா மாலிக், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிய நால்வருக்கும் 26 வருட சிறையும் 7 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் இத்தீர்ப்புச் சட்டங்கள் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் செல்லாது என்பதால் 26 ஆண்டுகால சிறைவாசத்திற்கு வாய்ப்பில்லை என்று அரபு நாடுகளின் 'கல்ப் நியூஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. 1.3 மில்லியன் பாகிஸ்தான் ரூபாக்களும் வீணா மாலிக்கின் சொத்துகளை விற்ற பணமும் அவருடைய அனைத்துலக கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சினிமாக்களில் நடித்துவந்த இவர், கவர்ச்சியின் உச்ச காரணமாக அங்கு தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நிழல் உலக தாதாக்களும் மிரட்டி வந்தனர். இதனால் பாகிஸ்தானில் இருந்து மும்பையில் தஞ்சமடைந்த அவர், பொலிவூட் உலகை கவர்ச்சியால் கலக்கி வந்தார்.
நடிகை வீணா மாலிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகரும் பாடகருமான ஆசாம் பஷிர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி காதல் திருமணம் செய்து கொண்டனர். டுபாயில் இரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தின் போது வீணா மாலிக் கர்ப்பமாக  இருந்ததாக சர்ச்சை ஏற்பட்டது. பஷிரும் வீணாவும் காதலிக்கும் போதே கர்ப்பமடைந்ததாக கூறப்பட்டது. இதனை வீணாவும் எதிர்க்கவில்லை. கர்ப்பமாக இருந்தபோதும் 'மும்பை 125 கி. மீற்றர்' என்ற படத்தில் வீணா மாலிக் நடித்தார். படம் வெளியாகும் நிலையில் பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையே அமெரிக்காவில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர் தற்போது டுபாய் வந்தடைந்துள்ளார்.  அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்ததால்  ஓய்வில் இருக்கின்றார். இம்மாதம் மேன் முறையீட்டுக்காக அவர் பாகிஸ்தான் செல்லவுள்ளார். இதன் பின்பே அவர் மீதான தீர்ப்புகள் தொடர்பான உண்மைத் தன்மை வெளிவரும்.

க. பிரசன்னா
03/12/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக