அறிவியலை புரட்டிப்போடும் செயற்பாடுகளை மனிதன் இன்று முன்னெடுத்து வருகிறான். அதிலும் விண்வெளி ஆராய்ச்சியில் சகல நாடுகளுக்கும் சவால் விடக்கூடிய திறமை அமெரிக்காவின் நாசாவுக்கு மட்டுமே இருக்கிறது. கோள் மண்டலத்தில் ஒன்பதாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது கைவிடப்பட்டிருக்கும் புளூட்டோ கிரகத்தையே 9 1/2 வருட பயணங்களின் பின் நாசா தொட்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இதுவொரு புதிய சாதனை. புவியிலிருந்து 500 கோடி கிலோ மீற்றர் தூரத்தை மனிதனே இல்லாமல் இயந்திரத்தை வைத்து மட்டும் கடக்கும் திறமை இவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
சூரிய குடும்பத்தை சுற்றிவரும் இரண்டாவது பெரிய குறுங்கோளாக புளூட்டோ இருக்கிறது. 1915ஆம் ஆண்டு கணிக்கப்பட்டு 1931ஆம் ஆண்டு கிளைடு டோம்பே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோவானது சூரியனின் ஒன்பதாவது கோளாகவே வகைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைபர் பட்டையில் பழம்பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ என கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோளாகவும், புளூட்டாய்டாகவும் வகைப்படுத்தப்பட்டது.
புளூட்டோவிற்கு சரோன் என்ற பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்களை கொண்டுள்ளது. இத்தனை அம்சங்களை கொண்ட புளூட்டோவை கடந்த 2006ஆம் ஆண்டு நாசாவால் ஏவப்பட்ட நியூஹொரைசன்ஸ் விண்கலம் 9 1/2 ஆண்டுகால பயணத்தின் பின்பு கடந்த செவ்வாய் நெருங்கியுள்ளது. மணிக்கு 31,000 மைல் வேகத்தில் புளூட்டோவை கடந்துள்ள விண்கலம் அங்கிருந்து நாசாவுக்கு முதல் சமிக்ஞையை வெளியிட்டுள்ளது. இந்த சமிக்ஞையானது 4.7 பில்லியன் கிலோ மீற்றர் கடந்து 4 மணி 25 நிமிடங்கள் கழித்தே பூமிக்கு கிடைக்கிறது. எனினும், புளூட்டோவை பற்றி இதுவரை அறிந்திராத பல புதுமையான தகவல்களை உலகிற்கு அறிவிக்க நாசா முயற்சித்து வருகிறது.
ஆனால், நியூ ஹொரைசன்ஸ் விண்கலமானது 9 1/2 வருடங்களை இலகுவாக கடந்து விடவில்லை. புளூட்டோவுக்கும், அதன் நிலவான சரோனுக்கும் இடையில் காணப்படும் விண்கற்களின் மூலம் இதற்கு ஆபத்து நெருங்கிய வண்ணமே இருந்தது. தற்போது விண்கலம் பயணிக்கும் வேகத்திற்கு சிறிய பொருள் மோதினாலும் வெடித்து சிதறும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு 10,000 இல் ஒரு வாய்ப்பு மாத்திரமே இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
நியு ஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை கடந்து 8 மணி நேரங்களுக்கு பிறகே திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதுடன் அதன் இரவு நேரக் காட்சியையும் பதிவு செய்யும், இந்த வெற்றியின் மூலம் புளூட்டோவின் சுற்றளவை கணிப்பதில் காணப்பட்ட மிகப்பெரிய சிக்கல் நிலை தீர்ந்துள்ளது. தற்போது புளூட்டோவின் சுற்றளவு 2370 கிலோ மீற்றர் என கணிக்கப்பட்டுள்ளது. நாசா கடந்த 1960ஆம் ஆண்டு தொடக்கம் 1977 வரையான காலப்பகுதியில் சூரிய குடும்பத்திலுள்ள பிரதான கோள்கள் பற்றிய அவதானிப்புகளுக்கு விண்கலங்கள் அனுப்பப்பட்ட நிலையிலேயே கடந்த 2006ஆம் ஆண்டு ஒன்பதாவது கோளாக கருதப்பட்ட புளூட்டோவுக்கு நியு ஹொரைசன்ஸ் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்விண்கலம் செலுத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்பே புளூட்டோ பிரதான கிரகங்களின் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டது. புளூட்டோவை பற்றி அறிவதற்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக விண்கலத்தில் 7 அறிவியல் கருவிகள் காணப்படுவதுடன் புளூட்டோவின் தரையின் அறிவியல் பெறுபேறுகளை பெறுவதற்கான இலக்கில் அவை செயற்படுகின்றன.
புளூட்டோவின் முதன்மை ஆராய்ச்சியில் பனி அதிகம் இருப்பதாகவும், பனித்துருவம் காணப்படுவதாகவும் நைதரசன் மற்றும் மீதேன் வாயு அதிகளவில் காணப்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. தற்போது புளூட்டோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நியு ஹொரைசன்ஸ் விண்லகத்தில் புளூட்டோவை 1931ஆம் ஆண்டு கண்டுபிடித்த கிளைடு டோம்பேவின் அஸ்தியும் இடம்பெற்றுள்ளது. இது அவருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. தனது பல வருட கடுமையான முயற்சியின் பின் நாசாவின் சாதனை உலகை ஆட்கொண்டிருக்கும் நிலையில், புளூட்டோ மற்றும் அதன் நிலாக்கள் பற்றிய மேலதிக தகவல்களை எதிர்வரும் நாட்களில் எம்மால் அவதானிக்க முடியும்.
அநகன்
19.07. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக