கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 பிப்ரவரி, 2022

இரசாயன உரத்துக்குள் மீண்டும் நுழையும் இலங்கை?


ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கையில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கும் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. சேதன பசளையின் மூலம் பசுமை விவசாயத்தை நோக்கி நகரும் தீர்மானத்தின் விளைவாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் சேதன பசளை தொடர்பாக எவ்வித தீர்மானமும் இன்றிய நிலையில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமையின் விளைவாக நாட்டின் விவசாயத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் சீன சேதன பசளை மற்றும் இந்தியாவின் நானோ நைட்ரஜன் திரவ உரம் என பல பிரச்சினைகள் வந்து சேர்ந்தன. நாடு முழுவதுமான விவசாயிகளின் பல எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டு இரசாயன உர இறக்குமதிக்கான அனுமதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது 12 நிறுவனங்களுக்கு இரசாயன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் இரசாயன உர இறக்குமதி தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இலங்கையில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பாக 49 நிறுவனங்களுக்கு இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் அந்நிறுவனங்களினால் 199 வகையான இரசாயன உர வகைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. 

இலங்கையில் இரசாயன உர இறக்குமதி 

‘இரசாயன உர இறக்குமதிக்காக இலங்கை 2019 இல் 221 மில்லியன் டொலர்களை செலவிட்டது. எண்ணெய் விலை அதிகரிப்புடன், அந்த செலவு 300-400 மில்லியன் டொலர் வரை அதிகரிக்கும். இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றிற்கு பெரும் செலவு செய்த போதிலும், விவசாய உற்பத்தியில் தரமான அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்~ தெரிவித்திருந்தார். 


மண் வளம் குறைந்து விளைச்சல் குறைந்து, பல்லுயிர் அழிவுக்கு வழிவகுத்துள்ளது. இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஆறுகள் மற்றும் நீரோடைகளை மாசுபடுத்துவதுடன், தரமான குடிநீர் விநியோகத்திற்கு கடுமையான சவாலாக உள்ளது. சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான அரசாங்க செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுதல், சுகாதார நிலைமைகள் மோசமடைதல் மற்றும் மக்களின் உற்பத்தித்திறன் குறைதல் ஆகியவை நாடு எதிர்கொள்ளும் சவாலாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் இலங்கையில் இரசாயன உர இறக்குமதிக்கான தடை அமுலுக்கு வந்தது. 

2021 ஆம் ஆண்டு நெல்லுக்காக 382,000 மெட்ரிக் தொன் இரசாயன உரம் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பயிர்களுக்காக 438,666.09 மெ.தொன் உரமும் சிறுதோட்ட பயிர்களுக்காக 59,761 மெ.தொன் உரமும் தானியங்களுக்காக 91,039 மெ.தொன் உரமும் ஏனைய பயிர்களான வெங்காயம், மிளகாய், கிழங்கு, மரக்கறி மற்றும் பழ வகைகள் ஆகியவற்றுக்கு 261,146 மெ.தொன் உரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 2,881,092 ஹெக்டேயர் பயிர்ச்செய்கை நிலங்களுக்காக 1,259,855.09 மெட்ரிக் தொன் உரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2010 - 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 9,455,625.57 மெ.தொன் மானிய உரமும் 3,166,420.94 மெ.தொன் திரவ உரமும் 163,756.44 மெ.தொன் கலப்பு உரமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் இரசாயன உர இறக்குமதி தொடர்பான மேலதிக விடயங்களை வரைபுகளில் காணலாம். 

சேதன பசளைக்கான நகர்வு

நச்சுத்தன்மையற்ற  உணவு உற்பத்தியை நோக்காகக் கொண்ட கமத்தொழிலுக்காகச் சேதன பசளை பயன்பாட்டை பரவலாக்குதலும் எமது கொள்கையில் ஒரு பகுதியாகும். எதிர்வரும் தசாப்தத்தில் இலங்கையில் கமத்தொழிலை முற்றுமுழுதாகச் சேதனப்பசளை பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும். உள்ளுர் ரீதியாக சேதனப் பசளை உற்பத்தியை விருத்தி செய்யும் வேலைத்திட்டமும் இதில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்~வின் கொள்கைப் பிரகடன உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


வுpவசாயிகளிடம் சேதன பசளையை ஊக்குவிப்பதற்காக ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு 18 ஆயிரம் ரூபாவினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதற்காக வருடாந்தம் 3300 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானித்திருந்தது. 

இரசாயன இறக்குமதிக்கான தடை உலகளவில் பாராட்டை பெற்றாலும் எவ்வித திட்டமிடலும் இன்றி திட்டம் நடைமுறைப்படுத்தமை விவசாயிகளிடையே பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் தேசிய தாவர தனிமைப்படுத்தல் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஆபத்தான நுண்ணியிரிகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சீன சேதன பசளைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சீன நிறுவனத்துக்கு ந~;ட ஈட்டினை வழங்க வேண்டி நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. 

அதேவேளை சீன சேதன பசளை தடைசெய்யப்பட்ட பின்னர் இந்தியாவிலிருந்து திரவ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் விவசாயிகள் திரவ உரங்களை பாவிப்பதை விரும்பவில்லை என்பதுடன் குறித்த உரங்களை கமநல சேவை திணைக்களங்களில் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ உரமும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் நாடு மீண்டும் இரசாயன இறக்குமதியினை நோக்கி நகர்ந்துள்ளது. துற்போது 12 நிறுவனங்கள் இரசாயன இறக்குமதிக்கான அனுமதியினை பெற்றுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு 12 நிறுவனங்களுக்கு 193,727.85 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை நெல்லுக்கான உர இறக்குமதிக்கு இலங்கை உரக்கம்பனி மற்றும் கொழும்பு வர்த்தக உர கம்பனிகளுக்கு 116,349 மெட்ரிக் தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சேதன பசளை உற்பத்திக்கான அனுமதி

2020 - 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 29 நிறுவனங்களுக்கு சேதன பசளை உற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் மாதாந்தம் 71,851 உரத்தினையும் 1,502,520 லீட்டர் திரவ உரத்தினையும் உற்பத்தி செய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உரம் தெடர்பிலான தகவல்கள் இல்லையென தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. 


எனினும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் விவசாய பயிர் நிலங்களுக்குத் தேவையான சேதன பசளையினை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இதனால் சேதன பசளையினை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றினால் மண் மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் அபாயங்கள் தொடர்பிலும் நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். அதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ நைட்ரஜன் உரங்களை மண்ணில் சேர்த்;தால் அது மழை அல்லது பாசன நீரில் கசிந்து திடமான கனிம நைட்ரஜன் உரத்தை காட்டிலும் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் வாய்ப்புகள் காணப்படுவதால் அவற்றை 100 வீதம் பாதுகாப்பானது என கூறமுடியாதென பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் று.யு.து.ஆ. டி கொஸ்தா தெரிவித்துள்ளார். சேதன பசளை பயன்பாடு தொடர்பான உடனடி தீர்மானம்

பெரும்பாலான விவசாயிகள் 100 சதவீத இயற்கை விவசாயத்தை கொள்கையளவில் நல்ல முடிவாக ஏற்றுக்கொண்டாலும் செயற்பாட்டு ரீதியில் அவை வெற்றி பெறவில்லையென்பதை அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும் அதனால் ஏற்படும் குறைவான விளைச்சல் மற்றும் உணவு பற்றாக்குறை என்பவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனால் தேசியளவிலான பயிர் உற்பத்தி 100 வீத இயற்கை விவசாயத்தில் சாத்தியமில்லையென தற்போது செயற்பாட்டு ரீதியில் அறிந்துகொள்ள முடிந்துள்ளது. 

பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உள்ளுராட்சி மற்றும் இராணுவம் உள்ளிட்ட பல நிறுவனங்களால் பராமரிக்கப்படும் பண்ணைகளில் திடக்கழிவுகள், காலநடை உரம் மற்றும் பயிர் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உரத்தில் வழங்க முடியுமென கருதப்பட்டது. எனினும் தேசிய தேவைக்கான உரத்தை உற்பத்தி செய்யும் ஆர்வத்தில் உள்ளுர் சேதன பசளை உற்பத்திகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. தற்போதைய மகா பருவத்துக்கு சேதன பசளை உற்பத்திக்கு போதுமானதாக இல்லையென தற்போது உணரப்பட்டுள்ளது. 

அதேவேளை கொவிட் தொற்று காரணமான முடக்க காலப்பகுதியில் இலங்கையின் முக்கிய அந்நிய செலவாணியினை பெற்றுத்தரும் பயிராக தேயிலை காணப்பட்டது. தேயிலை உற்பத்திக்கு இலையின் தரம் முக்கியமாகும். இறக்குமதி செய்யப்படுகின்ற சேதன பசளையினால் தேயிலையின் சுவை மற்றும் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்படுமென ஆய்வாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அரசாங்கத்தின் உடனடித் தீர்மானம் இலங்கையின் விசாயிகளையும் உற்பத்திகளையும் சமீப காலங்களில் கடுமையாகப் பாதித்துள்ளது. விளைச்சல் குறைவு காரணமாக உணவுக்கான பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விலையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது நாட்டில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் மீண்டும் இறக்குமதியில் தங்கியிருக்கும் தேவை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் டொலர் பற்றாக்குறையின் காரணமாக பொருட்களை இறக்குமதி செய்வதிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச அளவில் 100 வீத இயற்கை விவசாயத்துக்கு மாறும் முதல் நாடாக இலங்கையை மாற்றும் அரசாங்கத்தின் தீர்மானம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு தேவையினை கடுமையாகப் பாதித்துள்ளது. இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டாலும் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி உடனடியாக அமுல்படுத்த துணிந்தமை அதன் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது. 

1 கருத்து:

  1. BetMGM Casino & Resort - Jackson County | Mashantucket, CT
    BetMGM Casino & Resort - 창원 출장샵 Jackson County is a casino located in 김포 출장샵 Jackson, Illinois. It's owned by Vici Properties and is 영주 출장샵 open daily 24 hours. Rating: 7.7/10 천안 출장마사지 · ‎15,945 김제 출장안마 votes

    பதிலளிநீக்கு