மலையக பெருந்தோட்ட மக்களின் நன்மைகருதி கடந்த 2015 ஆம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்படுத்தப்பட்ட ‘10 ஆண்டுகால பெருந்தோட்டங்களுக்கான தேசிய வேலைத்திட்டம்’ தற்போது ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்திருக்கிறார். இத்திட்டம் ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் முறையாக அமுல் படுத்தப்பட்டிருந்தால் கடந்த வருடத்துடன் மலையக அபிவிருத்திப் பணிகள் ஓரளவுக்கு முழுமையாக நிறைவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் குறிப்பிடும்படியாக எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் 2015 ஆம் ஆண்டு வரை நிறைவு பெற்றிருக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட தற்போதைய பெருந்தோட்டங்களுக்கான தேசிய வேலைத்திட்டமானது 2025 ஆம் ஆண்டளவில் நிறைவுபெறக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இவற்றில் வறுமை ஒழிப்பு, ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வி வழங்கல், சுகாதாரம், சிறுவர் போசாக்கு, பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுத்தமான குடிநீர், வீடமைப்பு போன்ற திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வாறாயின் இத்திட்டத்துக்கான காலஅளவு குறைக்கப்பட்டிருப்பதால் 10 ஆண்டுகால திட்டத்தின் தரம் குறைந்ததாக இருக்குமா? அல்லது குறிப்பிட்ட சில திட்டங்கள்தான் நிறைவு பெறுமா என்பதில் இன்னும் போதிய விளக்கமில்லை.
இதுவரை மலையக தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோர் பெரிதாக உட்கட்டமைப்புகளில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதை இன்றும் தோட்டப் புறங்களுக்குச் சென்றால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும். நல்லாட்சி அரசால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு 160,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவருடம் கழிந்துவிட்ட நிலையில் இதுவரை எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்பதை விரல் எண்ணிக்கையில் கூறிவிட முடியும். தற்போதைய சூழ்நிலையில் 160,000 குடும்பங்கள் லயன் அறைகளிலும் வறுமை நிலையிலும் தங்களது வாழ்வை கழித்து வருகிறார்கள் என்பதே உண்மை.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகால வேலைத்திட்டத்தில் எவ்வாறான அபிவிருத்திகள் இதுவரை பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன? ஆனால் தற்போது 10 ஆண்டுகால திட்டம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது மட்டுமே மிச்சம். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 7 பேர்ச் காணியுடனான 377 வீடுகள் அமைக்கும் பணிகளில் ஒருசில வீடுகளே மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை இறுதிவரை அவ்வீடமைப்பு முழுமை பெற்றிருக்கவில்லை. அவற்றிலும் 7 பெருந்தோட்ட பகுதிகளான நுவரெலியா, அட்டன், கண்டி, கேகாலை, பதுளை, இரத்தினபுரி மற்றும் காலியில் ஆரம்பிக்கப்பட்ட 747 வீடுகள் அமைக்கும் பணிகள் கடந்தாண்டு அக்டோபர் இறுதிக்காலப் பகுதிக்குள் முழுமைப்பெற்றுவிடும் என அப்போதைய தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட போதிலும் இன்றுவரையும் அவை நிறைவுபெற்றதாக தெரியவில்லை. மஸ்கெலியா மொக்கா பகுதியில் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தாலும் பால்காமம், காட்மோர் பகுதிகளில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வீடுகள் அமைக்க காணிகள் கூட ஒதுக்கவில்லை.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வறுமை நிலையானது மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருக்கிறது. இலங்கையில் தேசியளவில் வறுமை நிலையானது 6.7 வீதமாக இருக்கையில் தோட்டப் பகுதிகளில் இது 10.9 வீதமாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 5 வயதுக்கும் குறைவான குறைநிறையுடைய குழந்தைகள் தோட்டப்புறங்களில் 30 வீதமாக இருக்கின்றனர். பிறக்கின்ற 1,000 குழந்தைகளில் 29 குழந்தைகளுக்கு மேல் இறந்து பிறக்கும் நிலை காணப்படுகிறது.மலையக பெருந்தோட்டங்களில் வசிப்பவர்களில் 52 வீதமான மக்களே சுத்தமான குடிநீரை பெறுகின்றனர். 73 வீதமான மக்களே தேகாரோக்கியமுடையவர்களாகவும் இருக்கின்றனர். கடந்த 150 வருடகாலமாக இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் 22 வீதத்தை பூர்த்தி செய்துவரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே இருக்கின்றன. உலகிலேயே உழைக்கின்ற இனம் தாழ்ந்திருப்பது இலங்கையில் அதிகம். மலையக அரசியல் தலைமைகளின் நோக்கற்ற அரசியல் நிலைமைகள், பேரம்பேசும் சக்தியற்ற கட்சி பிளவுகள் என்பன மலையக மக்களை இவர்களின் அரசியலுக்கு பலிக்கடாவாக்கியிருக்கின்றன.
இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு உருவாக்கப்பட்ட 100 நாள் செயற்றிட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளே இன்னும் முழுமை பெறவில்லை. கடந்தாண்டு உருவாக்கப்பட்ட 10 ஆண்டுகாலத் திட்டமும் 5 ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. திட்டத்துக்கான கால அளவை குறைப்பது திட்டத்தின் செயற்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் என்பது அரசியல்வாதிகளின் கணக்கு. ஆனால் அமைச்சு பொறுப்பேற்று ஒருவருட காலப்பகுதியில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சு சாதித்தது என்ன?
தற்போது பெருந்தோட்டங்களின் சனத்தொகையானது 1.5 மில்லியனாக காணப்படுகிறது. இவற்றில் ஒரு மில்லியன் மக்கள் தோட்டப்புறங்களிலேயே குறிப்பாக லயன் அறைகளிலேயே வசிக்கின்றனர். தொழிலாளர்கள் மட்டுமல்ல அவர்களின் தலைமுறைகள் கூட இதுவரை முழுமையான அடிப்படை வசதிகளைக் கொண்டமைந்த சூழலுக்குள் நுழையவில்லை. மலையக மக்கள் ஒன்றுசேர்ந்து அரசியல் உரிமைகளுக்காக போராடும் அளவுக்கு தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக போராடும் நிலை மந்தமாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக