செல்ஃபி (Selfie) என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. அவை பற்றி விளக்கம் பெற வேண்டுமானால் உங்களுடைய ஸ்மார்ட்தொலைபேசி அல்லது கமராவை எடுத்து அதிலுள்ள முன்பக்க கமராவை இயக்கி உங்களுடைய அழகே உருவான முகம் அல்லது அழகிய செயலை படம் பிடிக்கவும் பதிவு செய்த படத்தை என்ன செய்வது என்று தெரியாதவர்கள் முகப்புத்தகம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் அவ்வளவுதான் செல்ஃபி என்கின்றனர் நவீன இணைய உலாவிகள். கல்வி, வேலை, திருமணம், விளையாட்டு என்று எல்லா இடத்திலும் இந்த செல்ஃபி புகுந்து கொண்டுள்ளது.
நம்மை நாமே நம்முடைய கமராவில் ஸ்டைலான செயற்பாட்டையோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களோடு சேர்ந்து கொண்டு படம் எடுத்துக் கொள்வதைத்தான் இந்த உலகம் செல்ஃபி என்று அர்த்தப்படுத்தியுள்ளது. இதை 'அகப்படம்' என்கின்றனர் தமிழ் இணையக்காரர்கள். ஒவ்வொரு நாளும் உலகெங்கும் இருபத்தைந்து இலட்சத்துக்கும் அதிகமான செல்ஃபி புகைப்படங்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுவதாக ஸ்டைல் கேஸ்டர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எதேர்ச்சையாக ஆரம்பமான இந்த செல்ஃபி மோகம் இன்று விபத்துகளையும் விலைக்கு வாங்கிக் கொடுக்கிறது. ரயில் தண்டவாளம், மலை உச்சி, வீதிப் போக்குவரத்து, சுற்றுலா என தன்னுடைய செயற்பாடுகளை பிறருக்கு வெளிப்படுத்த நினைக்கும் சிலரே இவ்வாறு ஆபத்தான தருணங்களையும் எதிர்நோக்குகின்றனர். சிலவேளை தமது உயிரையும் பறிகொடுத்து விடுகின்றனர். அரச தலைவர்கள் தொடங்கி அகோரிகள் வரை இன்றைய செல்ஃபிக்கு அடிமை. இதை சாதகமாக பயன்படுத்தும் கைத்தொலைபேசி நிறுவனகங்ளும் தங்களது சந்தை மதிப்பை உயர்த்திக்கொள்ள தமது தயாரிப்பு தொலைபேசிகளின் முன்பக்க கமராவின் தரத்தினை உயர்த்தி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்றையகால திருமண ஜோடிகளின் தேனிலவு கொண்டாட்டங்கள் கூட செல்ஃபியாக மாறிபோய் விட்டது.
இவ்வாறு இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் செல்ஃபியை ஆராய்ந்த அமெரிக்காவின் லைப்ரரி ஒப் காங்ரஸ் குழுவினர் உலகில் முதல் செல்ஃபி புகைப்படத்தை பதிவு செய்தவர் ரொபர்ட் கார்னீலியஸ் என்ற புகைப்படக் கலைஞர் தான் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். இவர் 1839 ஆம் ஆண்டு தன்னுடைய கமராவால் தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
அப்புகைப்படத்திற்கு பின்பக்கம் 'கூடஞு ஊடிணூண்t ஃடிஞ்டt ணீடிஞிtதணூஞு உதிஞுணூ கூச்டுஞுண' என்ற வாசகம் அப்புகைப்படக் கலைஞரால் எழுதப்பட்டுள்ளது. இதை எடுப்பதற்காக கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அசையாமல் நிற்க வேண்டி இருந்ததாகவும் தன்னுடைய குறிப்புகளில் எழுதியுள்ளார். இவை தானாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடயமல்ல. அவர் தன்னுடைய கமரா லென்லை சரி செய்யும் போது ஏற்பட்ட விபரீதமே. இவ்வாறு செல்ஃபி எடுத்ததற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காரணத்தை ஆராய்ந்த போது இவர் ஒவ்வொரு நாளும் விடாது ஆயிரக்கணக்கான செல்ஃபி புகைப்படங்களை எடுத்தவாறே இருந்துள்ளார்.
இவ்வாறு செல்ஃபி மோகம் இன்று உலக புதுமை விரும்பிகளை ஆட்கொண்டுள்ளது. 1900 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகே செல்ஃபி புகைப்படங்களின் நவீன உத்திகள் கையாளப்பட்டிருந்தன. ரஷ்யாவைச் சேர்ந்த அனஸ்டஸ்யா என்ற 13 வயது சிறுமியே முதன்முதலாக கண்ணாடியை பயன்படுத்தி செல்ஃபி புகைப்படத்தை பதிவு செய்து தனது நண்பிக்கு 1914 ஆம் ஆண்டு அனுப்பி வைத்திருந்தார். இதுவே உலகின் முதலாவது பதின்மவயது பெண்ணொருவர் பதிந்த முதல் செல்ஃபி புகைப்படம். என்னுடைய சுயமுயற்சியில் கண்ணாடி மூலம் பெறப்பட்டது. இதை எடுக்கும் போது எனது கைகளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.எனினும் 2001 ஆம் ஆண்டே முதல் முறையாக குழு முறையிலான செல்ஃபி புகைப்படங்கள் அவுஸ்திரேலியர்களால் பெறப்பட்டது. ஆனால் 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகே செல்ஃபி என்ற வார்த்தையை அவுஸ்திரேலிய இணையத்தள முகவரமைப்பு (அஆஇ Oணடூடிணஞு ) கண்டுபிடித்திருந்தது. இருப்பினும் 2 3 அவுஸ்திரேலிய (18 35 வயதுடைய) பெண்கள் செல்ஃபி புகைப்படங்களை முகப்புத்தகத்தில் முதலில் பதிவேற்றியிருந்தனர். சம்சுங் நிறுவனத்தின் கணிப்பின்படி 30% மானோர் 18 24 வயதுடையவர்களாக காணப்பட்டனர். 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகே பரவலாக செல்ஃபி என்ற வார்த்தை உச்சரிக்கப்பட்டதுடன் ஒக்ஸ்போர்ட் அகராதி அதனை 'ஙிணிணூஞீ ணிஞூ tடஞு தூஞுச்ணூ' என்றும் அறிவித்திருந்தது.
86 ஆவது அக்கடமி விருது வழங்கல் விழாவில் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படம் அதிகமான டுவிட் செய்யப்பட்ட செல்ஃபி புகைப்படமாக இருந்தது. ஆனால் 18 ஆவது ஒஸ்கார் விழாவின்போது ஹொலிவூட் நடிக, நடிகையரால் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படமானது முந்தைய டுவிட் சாதனையை 40 நிமிடங்களில் உடைத் தெறிந்தது. ஸ்ட்ரிப்ட், ஜுலியா ரொபேர்ட், டடும், கூப்பர், கெவின், ஏஞ்சலினா ஜோலி, பிராட்பிட், லுபிட்டா, ஜார்ட் மற்றும் ஜெனிபர் லோரன்ஸ் ஆகியோர் இப்புகைப்படத்தில் காட்சி தந்திருந்தனர். டுவிட்டரில் பதிவேற்றிய முதல் மணித்தியாலத்தில் இப்புகைப்படம் 1.8 மில்லியன் தடவை டுவிட் செய்யப்பட்டது. ஒஸ்கார் விழா நிறைவு பெறும் போது 2 மில்லியன் டுவிட்களையும் 24 மணித்தியாலத்தின் பின் 2.8 மில்லியன் டுவிட்களை பெற்றதோடு முந்தைய சாதனையான ஒபாமாவின் 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் போதான டுவிட்டை 778801 டுவிட்களால் கடந்திருந்தது. இதுவே இன்றுவரையும் அதிகமாக டுவிட் செய்யப்பட்ட செல்ஃபி புகைப்படமாக இருக்கிறது.
அத்தோடு தொலைபேசி நிறுவனங்களான ஹுவாவி குருஃபி (எணூணிதஞூடிஞு) மற்றும் சம்சுங் விஃபி (ஙிஞுஞூடிஞு) போன்ற நுட்பங்கள் உடனான தொலைபேசிகளை தற்போது பாவனைக்கு விட்டதுள்ளது. இவ்வாறு மகிழ்ச்சியின் விளைவாக தோன்றிய செல்ஃபி இன்று பல்வேறு உயிராபத்துகளை தோற்றுவிக்கும் எமனாகவும் மாறியுள்ளது. ஐரோப்பாவில் மலை உச்சியில் செல்ஃபி எடுத்த கணவன் மனைவி தவறிவிழுந்த சம்பவம், புகையிரத நிலையத்தில் செல்ஃபி எடுத்து தண்டவாளத்தில் தவறிவிழுந்து இறந்த சம்பவம், தன்னைத் தானே சுட்டுக் கொல்வது போல செல்ஃபி எடுத்தவர் உண்மையிலேயே இறந்த சம்பவம் என்பன இவற்றுக்கான சான்றுகள்.
அத்தோடு பிரிட்டிஷ் பிரதமர், பின்லாந்து பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர் மண்டேலாவின் மரணச்சடங்கில் இணைந்து எடுத்த புகைப்படம் என செல்ஃபியின் சர்ச்சைக்கு அளவே இல்லை. இவ்வாறு செல்ஃபி மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தாலும் அவற்றால் ஏற்படப்போகும் விளைவுகளை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். செல்ஃபி வரலாறு எதேச்சையாக இடம்பெற்ற விடயமாக இருக்கும் போது இன்று உயிரை பணயம் வைத்தான செல்ஃபிகளை வலைத்தளங்களில் பதிவேற்றுவதற்கு இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர். எனவே செல்ஃபி மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். இது செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பும் இளம் தலைமுறையினரின் கவனத்திற்கு...
க. பிரசன்னா
20/08/2014

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக