வால் பகுதியிலேயே கறுப்பு பெட்டி (Flight data recorder or Black Box) இருக்கும் என்பதால் 30 மீற்றர் கடலாழத்திலிருந்து பாகங்கள் மீட்கப்பட்டதுடன், வால் பகுதியின் உட்பகுதியென சந்தேகிக்கப்பட்ட பகுதிகளும் மீட்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கடின இலக்குகளின் தேடுதல் முயற்சியின் விளைவாக கடந்த திங்கட்கிழமை, விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது இக்கறுப்பு பெட்டியினை ஆய்வு செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர். 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவிலிருந்து மலேசியாவிற்குச் சென்ற எயார் ஏசியா விமானம் ஜாவா கடலில் விபத்துக்குள்ளானது, மோசமான காலநிலையே விபத்துக்கான காரணமாக இருக்கலாமென கூறப்பட்ட போதும், ஏற்கனவே மாயமான மலேசிய விமானத்தை போலவே ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக தற்போது கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
கறுப்பு பெட்டியிலிருந்து சுமார் 30 நாட்களுக்கு சமிக்ஞை வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். கறுப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், விபத்துக்கான இயந்திரக் கோளாறு தொடர்பான தரவுகளை கண்டறிய முடியும். மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி ஆய்வுக்காக ஜகார்ந்தா நகருக்கு அனுப்பப்பட்டதோடு, இந்த ஆய்வு முடிவுகளுக்கு இரண்டுவார காலமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தொடர்ந்தும் விமானத்தின் உட்பகுதிகளில் சடலங்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுமென கூறப்படுகிறது.
இவ்விபத்தினைத் தொடர்ந்து உலகில் இயங்கும் அனைத்து விமானங்களிலும் ஆடோமெடிக் டிரக்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. சில விமானங்கள் மாயமான நிலையில் இருப்பதும் விபத்துக்கள் ஏற்பட்டாலும் கறுப்பு பெட்டி கிடைத்தாலே விபத்திற்கான காரணத்தை அறியக்கூடிய நிலை காணப்படுவதால் இவ்வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்டார் எயார் வேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இம்முறையின் மூலம் விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கும் வரை தானாகவே தன்னிடத்தை அறியும் வகையில் இத்தொழில்நுட்பம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே தடுக்க முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத விபத்துக்களாக விமான விபத்துகள் காணப்படுகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு ஏராளமான விபத்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு சில விமானங்களின் நிலையை இன்னும் அறியமுடியவில்லை. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அதிகமாகும். எனவே, இம்முறைமையானது விமான விபத்தின் கோரத்தன்மையை குறைக்க ஓரளவுக்கு உறுதுணையாக அமையும் என நம்பலாம்.பறிபோன உயிர்களின் உடல்களைக்கூட உறவினர்களால் மீட்கமுடியாத நிலை காணப்படுகின்ற சூழ்நிலையில் எயார் ஏசியா விமான நிறுவனம், உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் தலா 1 இலட்சம் அமெரிக்க டொலர்கள், நிவாரணமாக வழங்கப்படுமென அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே 24,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென உறுதியளித்திருந்த நிலையிலேயே மீண்டும் இவ்வறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் பலியான அனைவரின் பாதுகாப்பையும் அவர்களது உடல்களை மீட்கவும் இந்தோனேஷிய அரசும் ஏனைய மீட்பு படைகளும் அதிகமாகவே கஷ்டப்பட்டிருந்தனர். ஆயினும், கடலின் ஆழம், அலையின் வேகம் என்பவற்றால் இவற்றை துரிதமாக செயற்படுத்த முடியவில்லை. தேடுதல் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் நிலையில் முடிவுகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.
க.பிரசன்னா
18/01/2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக