கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 ஏப்ரல், 2019

போதை ஏற்படுத்திய விபத்து

நவிந்து ரத்னாயக்க கொழும்பிலுள்ள பிரசித்திபெற்ற பாடசாலையொன்றில் கல்வி கற்றவர். பாடசாலை கல்வியை முடித்துக்கொண்ட அவர் மேலதிக கல்வி கற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார். இவரின் தந்தை பொலிஸ் அதிகாரியாவார். அவர் பிரதீப் ரத்னாயக்க. இவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து சேவையாற்றுபவர். கடந்த இருவாரங்களுக்கு முன்னர் நவிந்து மீண்டும் இலங்கைக்கு வந்தான். விடுமுறை நாட்களை கழிக்கவே இலங்கைக்கு வந்திருந்தான். அப்படி வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான். 6 நண்பர்கள் மிகவும் நெருக்கமாக அவனுடன் பழகுபவர்கள். இவர்களெல்லோரும் ஒரே பாடசாலையில் ஒரு வகுப்பில் ஒன்றாக கல்வி கற்றவர்கள் என்பதே இதில் விசேடமாகும். பாடசாலைக் கல்விக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டாலும் அவர்களது நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

ஒருவருக்கொருவர் சகோதரர் போல் பழகினர். இவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இவர்களது பந்தம் நன்கு தெரியும். இதில் இன்னொரு விசேட அம்சமும் உள்ளது. அதாவது இந்த 7 பேரினதும் தந்தைமார்களும் நண்பர்களாவர். இவர்களும் பாடசாலைக் காலம் முதலே நெருஙங்கிய நண்பர்களாகவே பழகிவந்தனர். இதன் காரணமாக இந்த 7 குடும்பங்களுக்குமிடையில் மிகவும் நெருங்கிய உறவே காணப்பட்டது. அமைச்சர்  மகிந்தானந்த அளுத்கமகே, பொலிஸ் அதிகாரி பிரதீப் ரத்னாயக்க மற்றும் நம்நாட்டு பிரபல வியாபாரிகளே இந்த 7 நண்பர்களினதும் தந்தைமாராவார். அதனால் சமூகத்திற்குள் அரசியல், நீதிச் சட்டம் மற்றும் பண பலத்துக்கு இவர்களுக்கு குறைவே இருக்கவில்லை. கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நவிந்து மிகவும் நெருங்கிப் பழகிய நண்பரொருவரின் பிறந்த நாள். அதற்காக பிறந்தநாளைக் கொண்டாடும் முகமாக வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரவு களியாட்ட  ஹோட்டலொன்றில் விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவிந்து உட்பட 7 நண்பர்களும் அந்த விழாவில் கலந்து  கொண்டனர். இவர்களோடு நண்பனொருவனின் காதலியும் விழாவில் கலந்துகொண்டாள். அதற்கிணங்க நவிந்துவின் குழுவில் 8 பேர் அடங்கியிருந்தனர். அவர்கள் அவ்விடதுக்கு டிபென்டர் மற்றும் பிராடோ ரக ஜூப் வண்டிகளிலேயே சென்றிருந்தனர்.


வருகை தந்திருந்த பிரதம விருந்தினர்களின் ஆசீர்வாதத்துடன் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு , விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. விலையுயர்ந்த மற்றும் விதவிதமான மதுபானப் போத்தல்கள் உணவு வகைகள் மற்றும் புகைத்தல் ரகங்களுக்கு குறைவிருக்கவில்லை.  மேலும் அதிரடியாக ஒலித்துக்கொண்டிடிருந்த ஈ.ஒ இசை நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டு அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். நேரம் அதிகாலை 2மணியை தாண்டிவிட்டது. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் மது அருந்திக் கொண்டேயிருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அநேகமானோர் சுயநினைவின்றியே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதிக போதையே இதற்குக் காரணமாகும். நவிந்து உள்ளிட்ட குழுவினரும் அதிகமாக மது அருந்தி மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

பொலிஸ் பரிசோதகர் சரத்சந்ர பொரளை மோட்டார் வாகனப் பிரிவின் தலைமையதிகாரியாவார். கடந்த சில வாரங்களுக்கு முன்னரே அவர் அங்கு தனது கடமைகளை öõபாறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன்னர் அவர் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவில் கடமையாற்றியிருந்தார். 3 பிள்ளைகளின்  தந்தையான இவர், இதற்கு முன்னர் இதய சத்திர சிகிச்சை செய்தவராவார். கடந்த 24 அம்  திகதி அதிகாலை 2.30 மணியளவில் பொரளை பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல வீட்டிலிருந்து கிளம்பினார் சுமார்  3 மணிதயளவில் அவர் பொரளை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றார். அன்றைய தினம் அவருக்கு வேலைப்பளு நாளாகும். ”அயன் மேன்” என்ற தேசிய போட்டிகளின் வேலை காரணமாகவே அன்றைய நாள் அவருக்கு  வேலைப்பளு மிகுந்த நாளாக விளங்கக் காரணமாகும். பொலிஸ் சீருடையை அணிந்து கொண்ட அவர் தனது பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிளில் ஏறி பம்பலப்பிட்டி பகுதியை நோக்கி தனியாக பயணம் செய்தார். தனது கடமைகளை நிறைவேற்றும் பொருட்டே அப்பகுதி நோக்கிச் சென்றார். அந்த நேரம் அதிகாலை 4 மணியைத் தாண்டியிருந்தது.


அயன் மேன்’ பெயர் கொண்ட தேசிய போட்டிகளுக்காக கொழும்பு நகரம் தயாராகிக் கொண்டிருக்கையில், பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அதிக போதையில் இருந்து நவிந்து உள்ளிட்ட 8 பேரும் வீடுகளுக்குச் செல்லத் தயாராகினர். அந்த நேரத்தில்  அதிக போதை காரணமாக அனைவரும் சுயநினைவின்றியே காணப்பட்டனர். சுயநினைவின்றி காணப்பட்ட நவிந்து ”நாங்கள் போவோம். பொலிஸார் கேள்வி கேட்டால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என தனது நண்பர்களிடம் தெரிவித்தான். முதலில் டிபென்டர் வாகன சாரதி ஆசனத்தில் நவிந்து ஏறிக்கொண்டான். பிறகு அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் மகனும் மேலும் இருவரும் அதில் ஏறிக்கொண்டனர். யுவதி உள்ளிட்ட நான்கு பேரும் பிராடோ ரக ஜீப் வண்டியில் ஏறிக்கொண்டனர். பின்னர் நவிந்துவும் ஏனைய வாகனத்தைச் செலுத்தும் நண்பனும் அதிக வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.  தங்களது வீடுகளை நோக்கியே அவ்வாறு வேகமாக பயணம் செய்தனர்.  அதிகமாக மது  அருந்தியதால் நவிந்துவால் சீராக வாகனத்தை ஓடிச் செல்ல முடியவில்லை. அதனால் அதிக வேகமாகவும் கவனமும் இன்றியே வாகனத்தை நவிந்து  ஓட்டிச் சென்றான். இந்த நிலமையிலேயே பிராடோ வாகனத்தை ஓட்டிச் செல்லும் அவனது நண்பனும் காணப்பட்டான். அவனோ நவிந்துவை முந்திச் செல்லும் நோக்கில் அதிக வேகமாக வாகனத்தை செலுத்திச் சென்றான். வாகனங்களுக்குள்ளிருந்தவர்களுக்கோ இது தொடர்பில் எந்õ சஞ்சலமும் காணப்படவில்லை. அந்த நிலைமையில் அவர்கள் இல்லையென்றே கூறவேண்டும். சேவையிலிருந்து பொலிஸ் பரிசோதகர் சரச்சந்தர தனது மோட்டார் சைக்கிளை பம்பலப்பிட்டி , டுப்ளிகேஷன் சந்தியில் வீதி சமிக்ஞை விளக்குக்கு அருகே நிறுத்தி வைத்திருந்தார். சிவப்பு நிற விளக்கு எரிந்தமையாலேயே நிறுத்தி வைத்திருந்தார். சில விநாடிகளே சென்றன. பச்சை நிற விளக்கு ஒளிர்ந்தது. தனது மோட்டார் சைக்கிளை சற்று தூரம் முன்னுக்கு செலுத்தினார். திடீரென பிரதேசத்தை இரண்டாக்கி பாரிய சத்தமொன்று கேட்டது. அவ்வளவுதான் பொலிஸ் பரிசோதகருக்கு ஞாபகம் இருந்தது. அவர் முன்னுக்கு சென்ற உடனே வீதி சமிக்ஞையை கவனத்தில் கொள்ளாது வேகமாக வந்த நவிந்துவின் டிபென்டர் வாகனம் அந்த மோட்டார் சைக்கிளோடு மோதியது. அத்ன போது மோட்டார் சைக்கிள் கீழே விழந்ததோடு , பொலிஸட பரிசோதகர் மேலே தூக்கி வீசப்பட்டு வீதியோரத்தில் விழுந்தார். அதிக போதையில் இருந்து நவிந்துவால் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. அதனால் பொலிஸ் பரிசோதகரின் உடலின் மேல் டிபென்டர் வாகனத்தை அவன் ஏற்றிவிட்டான். நவிந்துவுக்கு ஓரளவுக்கு தெளிவும் ஞாபகமும் வரும் போது அனைத்தும் நடந்தேறிவிட்டன. என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினான். ஏதோ விபத்தொன்று ஏற்பட்டுவிட்டதென்பது சற்று ஞாபகத்தில் இருந்தது. மதுபோதையில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றால் சரிவராது என அவன்  தெரிந்துகொண்டார். அதனால் விபத்துக்குள்ளான பொலிஸ் பரிசோதகரை கவனியாது அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றான்.

கடுங்காயங்களுக்காகியிருந்த பொலிஸ் பரிசோதகர் வாழ்க்கையோடும் மரணத்தோடும் போராடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவ்விடத்துக்கு வந்த சிலர் விரைந்து அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் அவ்வாறு பொலிஸ் பரிசோதகரை கொண்டுசென்றிருக்காவிட்டால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்திருக்க நேரிட்டிருக்கும். அந்த வேளையில் பாரியளவு இரத்தம் அவரது உடலிலிருந்து வெளியேறியிருந்தது. போதையில் இருந்து தெளிந்த நவிந்து உள்ளிட்டவர்களுக்கு தாங்கள் செய்த குற்றத்தின் பாரிய நிளைவு நன்றாகத் தெரிந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சமூக ஊடகங்கள் மூலம் இந்தச் சம்பவம் தொடர்பில் பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நவிந்து உள்ளிட்ட குழுவினர் முதலாவதாக  செய்தது விபத்துக்குள்ளான குறித்த டிபென்டர் வாகனத்தை மறைத்து வைத்ததாகும். இந்தக் குற்றச்சாட்டிலிருந்து பெரும்பாலும் மறைந்திருக்கலாமென்றே அவர்கள் நினைத்தனர். இருப்பினும் அவ்வாறு நடக்கவில்லை. சம்பவம் இடம்பெற்று 3 மணித்தியாலங்கள் செல்ல முன்னர் பொலிஸார் குற்றவாளிகளைக் கண்டுப்படித்தனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா பதிவுகள் மூலமே அவர்களை கண்டுப்பிடிக்க முடிந்தது.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் முதலாவது காரியமாக பெலவத்த பிரதேத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டிபென்டர் வாகனத்தை கண்டுபிடித்தமையாகும். இந்த கண்டுப்பிடிப்பின் பின்னர் இந்தக் குற்ற சம்பவத்திலிருந்து தங்களுக்கு தப்பித்துக்கொள்ள முடியாதென்பதை நவிந்து உள்ளிட்ட குழுவினர் விளங்கிக் கொண்டனர். அதனால் நவிந்து உள்ளிட்ட மூவர் பம்பலப்பிட்டி பொலிஸில் சரணடைந்தனர். பின்னர் மற்றைய 5 பேரும்  ஆஜராகினர். சந்தேகநபர்கள் , கொலை செய்ய முன் வந்தமை , தகவல்களை மூடி மறைத்தமை , விபத்தொன்றை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லல், மதுபோதையில் வாகனம் செலுத்தியமை , அதிவேகமாக வாகனம் செலுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அங்கு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார , வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்துச் சென்ற டிபென்டர் வாகனத்தைஓட்டிச் சென்ற சந்தேக நபரை நாளை 11 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு மேலதிகமாக அந்த சந்தேக நபரை  அடையாளம் காணும் பொருட்டு அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் கட்டளை பி>றப்பித்தார். மேலும் யுவதி உள்ளிட்ட 7 சந்தேக நபர்களையும் 5 இலட்சம் ரூபாப்படி 14 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவு வழங்கினார். என்னதான் பல்வேறு விதமான தண்டனைகள் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்டாலும்  3 பிள்ளையின்  தந்தையான பொலிஸட பரிசோதகர் எந்தக் குற்றமும் புரியாது வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருப்பது அநியாயத்திலும் அநியாயமானது. இவ்வாறான ஒரு சில பணக்காரர்களின் போதை மயக்கத்துக்கு அப்பாவி மக்கள் சிக்குவதே காலத்தில் கொடுமை. இவ்வாறானவர்களுக்கு கடுமையான சட்டம் வழங்கப்பட வேண்டுமென்றே பொதுமக்களும் விரும்புகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக